Archive for ஜூன், 2011

திராவிட சம்பிரதாயத்தில் சாமி கும்பிடுவதில் “பிராக்ஸி “உண்டா?

ஜூன் 30, 2011

திராவிட சம்பிரதாயத்தில் சாமி கும்பிடுவதில் பிராக்ஸி உண்டா?

 

புகைப்படம் – நன்றி – தினமலர்

கடவுள் நம்பிக்கையுள்ளவர்களும் இல்லாதவர்களும்: இந்தியாவில் செக்யூலரிஸம்என்ற நம்பிக்கை வளர்ந்ததிலிருந்து, “எல்லா மதங்களும் சமம்என்ற நம்பிக்கை உருவாகி வந்தாலும், “எஙள் மத தான் உயர்ந்ததுஎன்று கடைபிடித்துவரும் மதங்கள் தொடர்ந்து இருக்கின்றன. இந்நிலையில், பொதுவாக ஹிந்துக்கள் பெருமளவில் சமரசம் செய்து கொண்டு வருகிறர்கள் ஆனால், அத்தகைய சரசத்தை மறவர்கள் பலவீனமாகவோ இல்லை அது அவர்களது கடமை ஆகவே அவர்கள்ௐ அவ்வாறு செய்கிறார்கள் அதனால் தொடர்ந்து செய்யவேண்டும் என்ற மனப்பாங்கும் வளர்ந்து விட்டது. அதற்கேற்றாற்போல சில முன் உதாரணங்கள் வேறு ஏற்படுத்தியுள்ள நிலையும் உள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால், நம்பிக்கையில்லாதவர்கள், நம்பிக்கையுள்ளவர்களுக்கு, அவர்களுடைய நம்பிக்கைகளுக்குஅறிவுரை கூறுவதுதான்! இந்நிலையில், ஹிந்து முன்னணி தலைவர் ராமகோபாலன், திக, திமுக போன்ற நாத்திகக்கட்சிகளின் தலைவர்கள், தங்களது தாய், மனைவி, சகோதரி, மகள் என்று குறிப்பாக பெண்களை கோவிலுக்குச் செல்லவைத்து சாமி கும்பிட வைப்பார்கள் என்று தமாஷாகப் பேசுவது உண்டு. ஆனால், அது போலவே, அவர்களும் பல நேரங்களில் திருட்டுத் தனமாகவும், வெளிப்படையாகவும் வெவ்வேறு நேரத்தில், வேறுவிதமான முறைகளைக் கையாண்டு வருகிறார்கள்.

காளஸ்தியில் திராவிட அரசியல்வாதிகள் சாமி கும்பிடுவது: திராவிட அரசியல்வாதிகள், பெரியார் சித்தாந்திகவாதிகள் கோவிலுக்கு நேரிடையாகவோ மறைமுகமாகவோச் செல்வது, அதேபோல்லா கடவுளை வழிபடுவது, பலன்களைப் பெற வேண்டுவது, பூஜைகள் செய்வது முதலியன அசிங்கமான செயல்களே. இருப்பினும், திராவிட அரசியல்வாதி செய்தால் கிண்டல், இன்னொரு திராவிட அரசியல்வாதி செய்தால் வேறு விதமாக விமர்சனம் செய்தல் அல்லது அதை மறைக்க முயல்வது அதிலும் அசிங்கமான செயலே.

கருணாநிதியின் மகள் சாமி கும்பிடுவது: ஒரு ஆந்திர மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற காளஹஸ்தி கோயிலில் திமுக தலைவர் கருணாநிதியின் மகள் செல்வி தரிசனம் செய்தார். முன்னதாக, செல்வி மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் திருப்பதி கோயிலில் முக்கிய பிரமுகர்கள் வரிசையில் தரிசனம் செய்ததாகவும், பின்னர் அங்கிருந்து புறப்பட்டு காளஹஸ்தி கோயிலுக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது. தகவல் அறிந்த பத்திரிகையாளர்கள் கோயில் அருகே திரண்டனர். ஆனால், புகைப்படம் எடுப்பதற்கு செல்வியுடன் வந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. காளஹஸ்தி கோயிலில் ராகு, கேது மற்றும் சர்ப்ப தோஷ நிவாரண பூஜைகளை செல்வி குடும்பத்தினர் செய்ததாக தகவல்கள் கூறுகின்றன. எனினும், குடும்பத்தினருக்காக குறிப்பாக கனிமொழி பெயரில் இந்த பூஜைகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது1.

நாத்திகத்தின் அடையாளமாக தங்களைக் கூறிக் கொள்வது திமுக தலைவர் கருணாநிதியின் வழக்கம். ஆனால் அவரது குடும்பத்தினரோ கோவில் கோவிலாக வலம் வருவதைத சமீப காலமாக பகிரங்கமாகவே செய்ய ஆரம்பித்துள்ளனர். தனது கட்சியைச் சேர்ந்த எம்.பி. ஒருவர் நெற்றியில் குங்குமம் வைத்திருந்தார் என்பதால் கோபமடைந்த கருணாநிதி அதை அழிக்கச் செய்தார் ஒரு காலத்தில். ஆத்திகர்களை கடுமையாக சாடுவார். ஆனால் அவரது குடும்பத்தினர் கோவில் கோவிலாக வலம் வருவதையும், குங்குமம் வைத்துக் கொள்வதையும், பூஜைகள் புனஸ்காரங்களில் ஈடுபடுவதையும் தடுக்க மாட்டார், கண்டிக்க மாட்டோர், விமர்சிக்க மாட்டார். அதிலும் கடந்த திமுக ஆட்சிக்காலத்தின்போது அவரது குடும்பத்தினர் தமிழகத்தில் உள்ள முக்கியக் கோவில்களுக்கு அடிக்கடி சென்று பூஜைகள் செய்வதை வழக்கமாக்கிக் கொண்டனர். கருணாநிதியின் குல தெய்வம் கோவிலுக்குத்தான் அதிக அளவில் சென்றனர். இதைப் பற்றியெல்லாம் ஒரு வார்த்தை கூட பேசாமல் இருந்தார் கருணாநிதி.

பரிகார பூஜை, வேத பண்டிதர்களின் ஆசி முதலியவை ஏன் தேவைப் படுகிறது?இந்த நிலையில் கருணாநிதி நலமாக இருக்க வேண்டும் என்று வேண்டி அவரது மூத்த மகள் செல்வி, பேரன் கலாநிதிமாறனின் மனைவி காவேரி இருவரும்2 காளஹஸ்தி கோவிலுக்குப் போய் ராகு கேது சர்ப்ப தோஷ பூஜையை நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்போது தனது சகோதரர் ஸ்டாலின், தங்கை கனிமொழி ஆகியோருக்காகாகவும் இந்த பரிகார பூஜையை நடத்தயுள்ளார் செல்வி. சென்னையிலிருந்து குடும்பத்தினருடன் காரில் திருப்பதி சென்ற செல்வி அங்கு விஐபி வரிசையில் போய் ஏழுமலையானை வணங்கினார். பின்னர் காளஹஸ்தி கோவிலுக்குப் போனார். அங்கு ராகு கேது சர்ப்ப தோஷ பரிகார பூஜையை செய்தார். செல்வியுடன் அவரது குடும்பத்தினரும் இதில் கலந்து கொண்டனர். பின்னர் வாயுலிங்கேஸ்வரர், ஞான பிரசுனாம்பிகா தாயாருக்கு கருணாநிதி, ஸ்டாலின், கனிமொழி பெயர்களில் சிறப்பு பூஜை செய்து பயபக்தியுடன் செல்வி உள்ளிட்டோர் சாமி கும்பிட்டனர். பிறகு வேத பண்டிதர்களை சந்தித்து சிறப்பு ஆசியும் பெற்று வெளியே வந்தனர்3.

கோவிலில் சாமி கும்பிடும் நேரத்தில், புகைப்படம் எடுக்க வேண்டாம்: முன்பு திக்குவலை அங்காள பரமேஸ்வரி கோவிலில், கருணநிதி சாமி கும்பிடும் போது, கோவில் கதவுகளையே மூடுவார்கள். அதாவது, சாமி கும்பிடுவதில் கூட அவ்வளவு ரகசியம் அல்லது வெட்கம்மதுபோல, சாமி கும்பிடுவது என்று கோவிலுக்கு வந்த பிறகு, ஏன் புகைப்படம் எடுக்க வேண்டாம் என்று அடம் பிடிக்க வேண்டும்? மாஜி முதல்வர் கருணாநிதி மகள் செல்வி, காவேரி கலாநிதி மாறன் ஆகிய இருவரும் கோவிலில் சாமி கும்பிடும் நேரத்தில், புகைப்படம் எடுக்க வேண்டாம் என, அவர்களுடன் வந்திருந்த பிரமுகர்கள், பத்திரிகை புகைப்படக்காரர்களை கேட்டுக் கொண்டனர். இதையும் மீறி, சில புகைப்படக்காரர்கள் படமெடுக்க முயன்றதால், அவர்களை விரட்டியடித்தனர். இதெல்லாம் அசிங்கம், ஆபாசம், ஈனச்செயல், …..என அவர்கள் அடுக்கிக் கொண்டு போவது போல அடுக்கிக் கொண்டு சொல்லலாமே? இன்னும் எத்தனை நாட்களுக்கு இப்படி வேடம் போடுவார்களோ? ஜனங்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்!!