Archive for மே, 2016

“திராவிட கட்சிகளுக்கு மாற்று” – வாத-விவாதங்கள் ஏற்பட்டுவிட்டதால் திராவிடத்துவத்தின் ஓலமும், ஒப்பாரியும் மற்றும் கையறு நிலையும் வெளிப்படுகின்றன!

மே 19, 2016

“திராவிட கட்சிகளுக்கு மாற்று” – வாத-விவாதங்கள் ஏற்பட்டுவிட்டதால் திராவிடத்துவத்தின் ஓலமும், ஒப்பாரியும் மற்றும் கையறு நிலையும் வெளிப்படுகின்றன!

Alternative to Dravidian parties - PMK, IJK etc

திராவிட கட்சிகளுக்கு மாற்று நாங்களே[1]: “திராவிட கட்சிகளுக்கு மாற்று” என்று பிஜேபிகாரர்கள் மட்டுமல்ல, மற்ற கட்சியினரும் பேசியுள்ளனர்.  மொடக்குறிச்சி தொகுதி நாம் கட்சி வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து, மொடக்குறிச்சி நால்ரோட்டில் அக்கட்சி தலைவர் சீமான், நேற்று ஓட்டு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது: “கடந்த, 50 ஆண்டு காலமாக திராவிட கட்சிகள் நாட்டை சீரழித்து விட்டன.

  • எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என அனைத்து துறைகளிலும் வந்துவிட்டது. தமிழகத்தில் லஞ்சம், ஊழல்களை ஒழிக்க போராடி வருகிறோம்.
  • ஆட்சிக்கு வந்தவர்கள், தமிழக மக்களை அடிமையாக்கி வைத்துள்ளனர்.
  • குடிக்க குடிநீர், படிக்க பள்ளி, இருக்க வீடு என அனைத்தும் வியாபாரம் ஆகிவிட்டது.
  • திராவிட கட்சிகள் இரண்டுமே, சாராய ஆலை வைத்துள்ளனர். இந்நிலை மாற வேண்டும்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கல்வி, மருத்துவம், விவசாயம், மும்முனை மின்சாரம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிப்போம். திராவிட கட்சிகளுக்கு மாற்று கட்சி நாங்கள்தான், “இவ்வாறு அவர் பேசினார். ஓரளவுக்கு திராவிடகட்சிகளின் ஆட்சியின் விளைவால் ஏற்பட்ட நிலையை, இப்பேச்சில் கண்டுகொள்ளலாம்.

PMK - opined about alternative to Dravidian parties2014லிருந்து ஆரம்பித்துள்ள கருத்து – திராவிட இயக்கங்களுக்கு மாற்று என்பது: ஜி.கே. வாசன்[2], அன்புமணி ராமதாஸ் என்ற மற்ற கட்சியினரும் இதே கருத்தை வெளியிட்டுள்ளனர்[3]. ஜி.கே வாசன் தனது கட்சியைத் துவங்கும் போது நவம்பர் 2014 அத்தகைய கருத்தை வெளியிட்டிருப்பது நோக்கத்தக்கது[4]. காங்கிரஸ்காரர்கள் பிரச்சாரத்தின் மீது இவ்வாறு பேசியுள்ளார்கள். அப்படியென்றால், எம்.ஜி.ஆர் காலத்தில் அதிமுகவுடன் மற்றும் கருணாநிதி காலத்தில் திமுகவுடன் கூட்டு வைத்துக் கொண்டது காங்கிரசுக்கு தெரியாதா என்ன? கூட்டினால் யார்-யார் எப்படி ஆதாயம் பெற்றார்கள் என்பதனையும் அறிந்து கொள்ளலாம். “ஆரிய-திராவிட” கூட்டு என்பதும், நன்றாக தெரிந்த விசயமே. இருந்தும் வைத்துக் கொண்டார்கள். அப்பொழுது, பெரியாரே புலம்பவில்லை. கருணாநிதி-இந்திரா கூட்டை அவர் சுட்டிக்க்காட்டி, இன்னொரு முறை “கண்ணிர் துளிகள்” என்றெல்லாம் சொல்லி ஒப்பாரி வைக்கவில்லை. ஆகவே வீரமணியின் “இப்பொழுதெல்லாம் திராவிட இயக்கத்தைப்பற்றி குறை கூறுவது என்பது ஒரு வகையான ஃபேஷனாகப் போய் விட்டது” முதல் வாக்கியமும் பொய்யாகிறது! ஏனெனில், வாசனை எதிர்த்து ஒன்றும் கூறவில்லை. அப்துல் ஹமீது ஷேக் மொஹம்மது என்கின்ற மனுஷ்யபுத்திரனின் எதிர்வாதத்தை இங்கு காணலாம்[5]. மத்திய அரசில் பங்கு கொண்டு, கோடிகளில் ஊழல் செய்தத்தை மக்கள் அறிந்தே இருக்கிறார்கள். இன்று கோடி கணக்கில் “ஓட்டுக்கு ஆயிரம்” என்று விநியோகம் நடக்கிறது என்று செய்திகள் வந்தபோது, எந்த திராவிடக்கட்சி கொடுக்காதே என்று போதித்தது?

Alternative to Dravidian parties -BJPதிராவிட இயக்கங்களைப் புறக்கணித்துவிட்டு சமுதாயப் பணியாற்ற முடியாது[6]: கருணாநிதி அத்தகைய வாதம் ஏற்புடையதல்ல என்று தனது கருத்தை தெரிவித்துள்ளார்[7]. திராவிட இயக்கங்களுக்கு மாற்று என்ற முன்னெடுப்பு என்ற வாதம் குறித்த உங்கள் கருத்து? கருணாநிதியின் பதில்: “திராவிட இயக்கங்களின் மீது அலுப்பு வருவது நியாயமே இல்லை. ஏனென்றால், திராவிட இயக்கம் ஒரு சமுதாய இயக்கம் என்ற வகையில் தொடர்ந்து சமுதாயத்துக்காக பாடுபடுகிறது, பணியாற்றுகிறது. சமுதாயப் பணிக்கு என்றும் முடிவில்லை, சமுதாயப் பணி என்றும் தொடர்ந்து கொண்டே இருக்கும். நாங்கள் அரசியலிலே ஈடுபட்டிருந்தாலும், அரசியல் மூலமாக சமுதாயப் பணி ஆற்றத்தான் தயாராக இருக்கிறோம். முழுநேரமும் அதைத்தான் எங்களின் கடமையாகக் கருதுகிறோம்.எங்களுடைய சமுதாயப் பணிதான் தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு பெற்றுத் தந்திருப்பது திராவிட இயக்கத்தின் சமுதாயப் பணியின் பெருங்கட்டமாக கருதுகிறேன். திராவிட இயக்கங்களைப் புறக்கணித்துவிட்டு சமுதாயப் பணியாற்ற முடியாது”. ஆக, “திராவிட இயக்கங்களுக்கு மாற்று என்ற முன்னெடுப்பு என்ற வாதம்” கருணாநிதியையும் பாதித்துள்ளது என்று தெரிகிறது. சமுதாயப்பணி, இடவொதிக்கீடு என்றெல்லாம் பேசினாலும், ஆசிரியர், டிரைவர், கன்டெக்டர், எஞ்சினியர் …….வேலைகளுக்கு இரண்டு கட்சிகளும் லட்சங்கள் வாங்கிக் கொள்கின்றான என்று ஊடகங்களில் எடுத்துக் காட்டப்படுகிறதே, அதை ஏன் மறுப்பதில்லை?

பெரியார், லஞ்சம்

பெரியார் லஞ்சம் வாங்கச் சொன்னாரா?: மேற்குறிப்பிட்ட முரண்பாடுகளிலிருந்து, வீரமணி அப்பட்டமான பொய் சொல்கிறார் என்று தெரிகிறது.

  1. “திராவிட தமிழர்கள்” என்ற போதே, தெலுங்கர்கள், கன்னடகாரர்கள், மலையாளிகள் முதலியோர் அந்த “திராவிட சித்தாந்தத்தை”த் தூக்கியெரிந்து விட்டார்கள் என்பதை ஒப்புக்க்கொண்டது தெரிகிறது.
  2. “அப்பழுக்கற்ற தந்தை பெரியாரும், திராவிட இயக்கமும்” என்று வீரமணி குறிப்பிடுவதிலிருந்தே, அத்தகைய நிலையை உணர்ந்த நிலை ஏற்பட்டுவிட்டது.
  3. இதுவரை “அப்பழுக்கற்ற தந்தை பெரியார்” என்று யாராவது குறிப்பிட்டிருக்கிறார்களா என்று தெரியவில்லை.
  4. ஆனால், வீரமணி அவ்வாறு குறிப்பிட்டுள்ளதிலிருந்தே, சந்தேகம் வந்து விட்டது என்று தெரிகிறது. அதாவது, மற்றவர்கள் “அழுக்காறு / அப்பழுக்கு” என்ன என்று சோதிக்க ஆரம்பித்து விட்டனர்.
  5. ஜாதியத்தை முதலியார்கள், செட்டியார்கள், ரெட்டியார்கள், கவுண்டர்கள்……..என்றெல்லாம் வளர்த்தது திராவிட இயக்கம் மற்றும் பெரியார் போன்ற ஜாதியத்துவ தலைவர்கள்தாம்.
  6. பிறகு அவர்கள் ஏதோ, ஜாதியத்தை எதிர்த்தது போல சித்தரிக்கப் பட்டு, ஏமாற்றப்பட்டனர்.
  7. பெரியார், அண்ணாதுரை, கருணாநிதி…..என்று அவரவர் ஆட்சி காலத்தில், அவர்களது ஜாதியினர் உயர்பதிவிகளை அடைந்தனர், அவர்களது வாரிசுகள் எல்லாவற்றையும் குத்தகை எடுத்துக் கொண்டன.
  8. லஞ்சம் வாங்காதே, ஊழல் புரியாதே என்று பெரியாரோ, அண்ணாவோ, கருணாநிதியோ போதித்ததாகத் தெரியவில்லை.
  9. அவர்களது தாசர்களாக, தொண்டர்களாக, ஏன் பக்தர்களாக இருந்து வந்தவர்கள், அதெல்லாம் தவறு, குற்றம்…….என்றெல்லாம் உணரவில்லை.
  10. திமுக அல்லது அதிமுக மாறி-மாறி ஆட்சி செய்தால், இருகட்சிகளிலிருந்தும் ஆதாயம் பெற்றது திராவிடகழகமும், வீரமணியும் தான்.

ஆகவே, கடந்த ஆண்டுகளில் அவதி, கஷ்டம், துன்பம் மற்ற கொடுமைகளை அனுபவித்த மக்களுக்கு, திராவிடத்தின் பாதிப்பு தெரிந்துள்ளது. இது நீடித்தால், சாவைவிட கொடுமையான நிலை ஏற்படும் என்ற நிலையும் உணரப்பட்டது. திமுக-அதிமுக ஒன்றையொன்று குற்றம் சாட்டிக் கொண்டாலும், உள்ளவர்கள் தீராவிடர்கள், தமிழர்கள், தமிழ் திராவிடர்கள், திராவிட தமிழர்கள் தாம்! பிறாகு அவர்கள் எப்படி அவர்கள் மீதே அத்தகைய கொடுமைகளைப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்?

பெரியார், லஞ்சம் வாங்காதே என்று சொல்லவில்லை© வேதபிரகாஷ்

19-05-2016

[1]  தினமலர், திராவிட கட்சிகளுக்கு மாற்று நாங்களே, மே.4, 2016, 05.30.

[2] http://www.vikatan.com/news/article.php?module=news&aid=34576&r_frm=news_related

[3]http://www.dinamani.com/edition_trichy/pudukottai/2016/05/10/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/article3424636.ece

[4] விகடன், திராவிட கட்சிகளுக்கு மாற்று எங்கள் இயக்கம்: ஜி.கே.வாசன் நம்பிக்கை!, Posted Date : 11:05 (09/11/2014).

[5] https://www.facebook.com/manushya.puthiran/posts/1009326045759973?fref=nf

[6] புதியதலைமுறை, திராவிட இயக்கங்களுக்கு மாற்று என்ற வாதம்?: ஏற்புடையதல்ல என்கிறார் கருணாநிதி, பதிவு செய்த நாள் : April 30, 2016 – 11:50 AM; மாற்றம் செய்த நாள் : April 30, 2016 – 01:17 PM.

[7] http://tv.puthiyathalaimurai.com/detailpage/news/politics/20/21895/karunanidhi-exclusive-3

“திராவிட கட்சிகளுக்கு மாற்று” – நீர்த்துப் போய், இறக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்ட திராவிடத்துவத்தின் ஓலமும், ஒப்பாரியும் மற்றும் கையறு நிலையும்!

மே 19, 2016

“திராவிட கட்சிகளுக்கு மாற்று” – நீர்த்துப் போய், இறக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்ட திராவிடத்துவத்தின் ஓலமும், ஒப்பாரியும் மற்றும் கையறு நிலையும்!

பெரியாரும், ஆவியும், ஆத்மாவும்

2016 தேர்தல் நேரத்தில், அதிலும் ஓட்டளிக்கும் தேதியில், வீரமணி அதிகமாக பாதிக்கப்பட்டுவிட்டார் என்ற நிலையில், “திராவிட தமிழர்களே உஷார்! உஷார்!!” என்று தலையங்கம் எழுதியிருப்பது அவரது விரக்தியின் வெளிப்பாடு என்றே புலனாகிறது.  ஏனெனில், இத்தேர்தலில், “திராவிட கட்சிகளுக்கு ஒரு மாற்றம் வேண்டும்” என்ற கருத்து பரவலாக வாத-விவாதங்களுக்கு உட்பட்டு, அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது[1]. குறிப்பாக இளைஞர்கள் அதனை நன்றாகவே உணர்ந்து கொண்டு, திராவிட கட்சிகளின் ஆட்சியைப் பற்றியும் தெரிந்து கொள்ள ஆரம்பித்தனர்[2]. ஏன் அத்தகைய மாற்றம் தேவை என்று யோசிக்க ஆரம்பித்து விட்டனர். மற்ற மாநிலங்கள் எல்லாம் தொழிற்துறை ரீதியில் சிறந்து முன்னேறிக் கொண்டிருக்கும் போது, தமிழ்நாடு ஏன் பின்தங்கி இருக்க வேண்டும்[3], டிவிஸ், லேலேண்ட், அமல்கமேஷன்ஸ் போன்ற குழுமங்களைத் தவிர[4] ஏன் மற்ற குழுமங்கள் கடந்த 50-100 ஆண்டுகளில் சிறக்கவில்ல, வெறும் சினிமா மற்றும் சினிமா சார்ந்த துறைகளில் மட்டும் சிறந்த, மற்றவற்றை பின்தள்ளிய நிலை என்ன போன்ற கேள்விகள் இளைஞர்களின் மனங்களில் எழுகின்றன. அந்நிலையில் அந்த தலையங்கம், அலச வேண்டியுள்ளது. அத்தலையங்கம் ஐந்து பத்திகளாக சேர்த்து, அங்கங்கு, அருகில் கட்டத்தில் விமர்சிக்கப்பட்டுள்ளது. கடைசியில், முடிவாக கருத்து கொடுக்கப்பட்டுள்ளது.

nedunchezhiyan_karunanidhi_mgr-eating-together

nedunchezhiyan_karunanidhi_mgr-eating-together

  1. திராவிட தமிழர்களே[5] உஷார்! உஷார்!![6]: இப்பொழுதெல்லாம் திராவிட இயக்கத்தைப்பற்றி குறை கூறுவது என்பது ஒரு வகையான ஃபேஷனாகப் போய் விட்டது.
1967 முதல் திமுகவும் அ.இ.அ.தி.மு.க.வும் மாறி மாறி ஆட்சிப் பொறுப்புக்கு வந்த நிலையில், இதில் மாற்றம் ஏதாவது நடக்க வேண்டுமானால் திராவிட இயக்கத்தைப்பற்றி ஏதாவது குறை கூறிக் கொண்டே இருக்க வேண்டும். சேற்றை வாரி இறைக்க வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள் – விரக்தியின் காரணமாகவும் இது இருக்கிறது. ஊடகங்கள் பெரும்பாலும் பார்ப்பனர்களின் கைகளில் சிக்குண்டு கிடப்பதால், திராவிட இயக்க எதிர்ப்பு செய்திகளையும் திராவிட இயக்கம் பற்றி கொச்சைப்படுத்தி எழுதுவோர்களையும் முட்டுக் கொடுத்துத் தூக்கி நிறுத்துவது பார்ப்பனீயத்துக்கே உரிய ‘கல்யாண திருக்குணங்களாகும்.

திராவிட ஆட்சியின் மோசடிகள், ஊழல், சீரழிவு மக்களுக்குத் தெரிந்து விட்டதால் தான், அத்தகைய கருத்து வலுவடைந்துள்ளது. வெறும் மேடைப்பேச்சால் மட்டும் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது. ஊடகங்களையும் திராவிட முதலாளிகள் கைகளில் சென்றாதால் தான், இலவச டிவி போன்ற திட்டங்கள் ஆரம்பம் ஆகின. ஏனெனில், நிறையபேர் டிவி-மோகத்தில் வீழ்ந்தால், லாபம் திராவிட முதலாளிக்களுக்குத்தான் என்பது தெரிந்த விசயம்[7]. தங்களது ஊடக ஆதிக்கத்தையும் மீறி அத்தகைய கருத்து வெளிப்பட்டுள்ளது நோக்கத்தக்கது.

அதுவும் பிஜேபி சங்பரிவாரங்கள் தமிழ் மண்ணில் கால் ஊன்ற முடியாததற்குக் காரணம் தந்தை பெரியார் அவர்களின் சித்தாந்தமும், திராவிட இயக்கமும்தான் என்கிறபோது, அந்த இந்துத்துவா அமைப்பு இங்கு காலூன்ற வேண்டுமானால்  திராவிட இயக்கத்திற்கு எதிராகப் பிரச்சாரமும், செயல்பாடும் தவிர்க்க முடியாததாகி விட்டன.

krishna_tn_denigration[1]

கரு-கிருஷ்ணன், ஸ்டாலின்-அர்ஜுனன்!

  1. பிஜேபியும், சங்பரிவாரமும் தமிழ் மண்ணில் பரவ முடியாமல் போனதற்கு திராவிட இயக்கம் தான் காரணம்[8]: மோடி, ராஜ்நாத்சிங், பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்டோர் குழுப் பாடலாக சுருதிப் பேதம் இல்லாமல் பாடுவதையும் கேட்க முடிகிறது.
உண்மையைச் சொல்ல வேண்டுமானால் பிஜேபியும், சங்பரிவாரமும் தமிழ் மண்ணில் பரவ முடியாமல் செய்த இந்த ஒரே ஒரு காரணம்கூட போதுமானது. திராவிட இயக்கத்தின் சாதனைக்கு!  தமிழ்த் தேசியவாதிகளாக இருந்தாலும் சரி, பதவி மேக நோய்கள் படர்ந்து சொரிந்து கொண்டவர்களாக இருந்தாலும் சரி, திராவிடர்கழகம் மற்றும் தி.மு.க. மீது பழி சுமத்திப் பிரச்சாரம், செய்வது யாருக்குப் பயன்படப் போகிறது என்பதுதான் மிக முக்கியம்?

“திராவிடத்தால் வீழ்ந்தோம்” என்று ஆரம்பித்ததே, திராவிட சித்தாந்திகள் தாம். இதெல்லாம் அந்த இந்தி பேசும் அரசியல்வாதிகளுக்குத் தெரியாது. இந்துவிரோத நாத்திகத்தால் தான் திராவிடகட்சிகளின் முகமூடி கிழிந்து, அது “ஆதிபராசக்தி” போன்ற இயக்கங்களில் வெளிப்பட்டு, இன்று, வெளிப்படையாக, பிஜேபி-ஆர்.எஸ்.எஸ் என்று மாறிவிட்டது. இதனால் தான், திராவிட நாத்திகர்கள் அலறுகிறார்கள்.

பார்ப்பனர் அல்லாதார் இயக்கத்தைத் தந்தை பெரியார் தொடங்கிப் பாடுபட்டதன் பலனை பார்ப்பனர் அல்லாதார் இன்று அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

jaya-nakkeeran- மாட்டுக்கறி மாமி கேலி

jaya-nakkeeran- மாட்டுக்கறி மாமி கேலி

  1. பிராமண எதிர்ப்பும், வேலை வாய்ப்பும்: அடி மட்டத்தில் அழுத்தி நொறுக்கப்பட்ட மக்கள் மத்தியில் கல்வியும், வேலை வாய்ப்பும் செழித்துக் குலுங்குகிறது என்றால் அந்தப் பார்ப்பன எதிர்ப்பின் விளைச்சலால்தான்[9].
பார்ப்பன எதிர்ப்பு என்பதே எனக்கு ஏ.பி.சி.டி.யாக இருந்தது என்று தந்தை பெரியார் அவர்களே கூறி இருப்பது கவனிக்கத்தக்கதாகும். இத்திசையில் பார்ப்பனர் அல்லாதார் – தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோர், பெண்கள் சிறுபான்மையினர் பயணிக்க வேண்டிய தூரம் இருக்கத்தான் செய்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது.

வேலை விசயங்களில் இப்பொழுது பார்ப்பனர்களைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை என்பது தெரிந்த விசயமாகி விட்டது. மற்ற ஜாதியினர் தான் முன்னுக்கு வந்துள்ளனர், இதனால், “இடவொதிக்கீட்டில்” தளர்ந்தவர்கள், பிந்தள்ளப்பட்டுள்ளார்கள். இன்றைய போட்டி-உலகத்தில், அவரவர் ஓடவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது.

இன்னும் சொல்லப் போனால் 1928லேயே இடஒதுக்கீட்டை முதன் முதலில் செயல்படுத்தியது திராவிடர் இயக்கம்தான் – இந்திய அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தத்தைக் கொண்டு வருவதற்குக் காரணமாக இருந்ததும் தந்தை பெரியாரும், திராவிட இயக்கமும்தான்[10].

  1. வீரமணி சாதனை என்ற தம்பட்டம்: மத்திய அரசுத் துறைகளில் கல்வி வேலை வாய்ப்புகள் பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் கிடைத்திட மண்டல் குழுப் பரிந்துரைகளை செயல்படுத்துவதற்காக 42 மாநாடுகளையும், 16 போராட்டங்களையும் நடத்தியது திராவிடர் கழகமும் – அதன் ஒப்பற்ற தலைவர் மானமிகு வீரமணி அவர்களும்தான்.
இன்றைக்கு அந்த இடஒதுக்கீட்டைக் கொல்லைப்புற வழியில் நுழைந்து தகர்த்திட பல்வேறு சூழ்ச்சி வலைகள் பின்னப்பட்டு வருகின்றன. அதனுடைய சமீபத்திய நச்சுக் கொடுக்குதான் மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கு அகில இந்திய நுழைவுத் தேர்வு என்பதாகும்.

இப்படி சுய-தம்பட்டம் அடித்துக் கொள்வதில் எந்த் பிரயோஜனமும் இல்லை. “பெரியார்” பெயரில் இயங்கிவரும், வீரமணியின் கல்வி நிறுவனங்களிலேயே, இவர் வெறுக்கும் ஜாதியினர் தான் பணம் கொடுத்து சேர்ந்துள்ளனர். இவர் ஒன்றும், இலவசமாக “திராவிடர்களுக்கு” சீட கொடுத்து படிக்கவைக்கவில்லை.

இந்த வகையில்கூட இந்தியாவிலேயே நுழைவுத் தேர்வை சட்டப்படி ஒழித்ததும் தமிழநாடுதான் – கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சிதான்.

பெரியார் முஸ்லிம்

  1. அப்பழுக்கற்ற தந்தை பெரியாரும், திராவிட இயக்கமும்தான் காரணம்: சமூக சீர்திருத்த திசையில் இந்தியத் துணைக் கண்டத்திற்கே வழிகாட்டியாக இருப்பது தமிழ்நாடு என்பது வரையறுக்கப்பட்ட தெளிந்த உண்மையாகும்.
அந்த சீர்திருத்தத்தை மக்கள் மத்தியில் கொண்டு சென்றதற்கு யார் காரணம்? எந்த இயக்கம் காரணம்? அழுக்காறற்ற[11] முறையில் அறிவைத் தங்கு தடையின்றிச் செலுத்துவோர் யாராக இருந்தாலும் அதற்கான காரணம் அப்பழுக்கற்ற தந்தை பெரியாரும், திராவிட இயக்கமும்தான் என்று எடுத்த எடுப்பிலேயே கூறி விடுவர்.

அழுக்காறற்ற முறையில், அப்பழுக்கற்ற……போன்ற அடைமொழிகள் ஏன் தேவைப்படுகின்றன என்று உபயோகித்த வீரமணியே யோசிக்க வேண்டும். தனக்குத்தானே, யாரும் தர-நிர்ணயம் செய்து “அக்-மார்க்” முத்திரை குத்திக் கொள்ளமாட்டார்கள், அழுக்காறற்ற …….. அப்பழுக்கற்ற……போன்ற சான்றிதழ்களையும் கொடுத்துக் கொள்ளமாட்டார்கள்..

தந்தை பெரியாரால் திராவிட இயக்கத்தால் பயன் பெற்றவர்களே அவற்றின்மீது புழுதி வாரித் தூற்றுவது என்பது வெட்கக் கேடானதாகும்.

தந்தை பெரியாரால் திராவிட இயக்கத்தால் பயன் பெற்றவர்களே அவற்றின்மீது புழுதி வாரித் தூற்றுவது என்பது வெட்கக் கேடானதாகும்: இந்த கடைசி வாக்கியம், வீரமணியை முழுவதுமாக தோலுருத்திக் காட்டுகிறது. பிஜேபி-ஆர்.எஸ்.எஸ் என்று ஆரம்பித்து, பிறகு “தந்தை பெரியாரால் திராவிட இயக்கத்தால் பயன் பெற்றவர்கள்” என்று முடித்திருப்பதிலிருந்தே, “பழி ஓரிடம், பாவம் வேறிடம்” என்றுள்ளது என்றும் தெரிகிறது. ஏனெனில், பிஜேபி-ஆர்.எஸ்.எஸ் முதலியோரை “தந்தை பெரியாரால் திராவிட இயக்கத்தால் பயன் பெற்றவர்கள்” என்றால், சிரிப்பார்கள்! இதில் பல கேள்விகள் எழுகின்றன:

  1. தந்தை பெரியாரால் பயன் பெற்றவர்கள் யார்?
  2. திராவிட இயக்கத்தால் பயன் பெற்றவர்கள் யார்?
  3. அவர்கள் ஏன் பெரியார் மீது புழுதி வாரித் தூற்ற வேண்டும்?
  4. அவர்கள் ஏன் திராவிட இயக்கத்தின் மீது புழுதி வாரித் தூற்ற வேண்டும்?
  5. புழுதி வாரித் தூற்ற வேண்டிய நிலை என்ன?
  6. இப்பொழுது ஏன் அந்நிலை உருவாகியுள்ளது?
  7. உண்மையிலேயே பலன் பெற்றார்களா இல்லையா?
  8. பயன்பெற்றது போதவில்லையா அல்லது அதில் பாரபட்சம் இருந்ததா?
  9. வீரமணி அதனை எப்படி அந்நிலையை இப்பொழுது அறிந்து கொண்டார்?
  10. வீரமணியிடத்திலிருந்து இந்த ஒப்பாரி ஏன் வெளிவர வேண்டும்?

© வேதபிரகாஷ்

19-05-2016

[1] பாமக வெளிப்படையாகவே திராவிட கட்சிகள் ஒழிக்கப்படவேண்டும், மாற்று வேண்டும் என்று பிரச்சாரம் செய்து வருகின்றது.

[2]  தினத்தந்தி போன்ற ஊடகங்களில் வாத-விவாதங்களும் நடத்தப்பட்டன. மக்கள் அவற்றை உன்னிப்பாக கவனித்துள்ளனர்.

[3]  பன்னாட்டு கம்பெனிகள், திராவிடகட்சிகளின் ஊழல் மற்றும் இதர அச்சுருத்தல்கள் காரணங்களினால், விலகி, மற்ற மாநிலங்களில் தங்களது தொழிலைத் தொடங்கினார்கள்.

[4] இவையெல்லாம் “பார்ப்பன” நிறுவனங்கள் என்று சொல்லப்படுவதுண்டு. அப்படியென்றால், மற்றவர்களின் நிறுவனங்கள் ஏன் அவ்வாறு அடையாளம் காணப்படவில்லை என்று விளக்கப்படவில்லை. செட்டியார்கள், ரெட்டியார்கள், முதலியார்கள், கவுண்டர்கள் கூட அத்தகைய நிறுவனங்களை வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதெல்லாம் தெரிந்த விசயமே.

[5] திராவிட சித்தாந்தத்தை ஆரம்பத்திலிருந்தே, மற்ற தென்னிந்திய மாநிலங்கள் ஒப்புக் கொள்ளாததால், “திராவிடஸ்தான்”, தமிழகத்தில் சுருங்கி, மறைந்து விட்டது.

[6] கே. வீரமணி, திராவிட தமிழர்களே உஷார்! உஷார்!!, விடுதலை, தலையங்கம்,, பக்கம்.2, திங்கள், 16-05-2016.

[7]  சன்-டிவி, ஜெயா-டிவி, ராஜ்-டிவி, விஜய்-டிவி, மக்கள் டிவி, என்றுள்ள நிறுவனங்கள் பார்ப்பன நிறுவனங்கள் அல்ல. பச்சையான திராவிடர்களின் நிறுவனங்கள் என்பது தெரிந்த விசயமே.

[8] http://viduthalai.in/page-2/122256.html

[9] அப்படியென்றால், திராவிட முதலாளிகள் நடத்தும் “பார்ப்பனர்-அல்லாத” நிறுவனங்களில் ஏன் இந்த அடக்கப்பட்டோர், நொறுக்கப்பட்டோர், முதலியோர்களுக்கு இடம் கொடுக்கவில்லை என்று தெரியவில்லை.

[10]  இத்தகைய திரிபு விளக்கம் முதலியவற்றைக் கொடுப்பதில் இவர்களுக்கு ஈடானவர்கள் இவர்களே தான். அம்பேத்கர் இவர்களைக் கண்டுகொள்ளவே இல்லை என்பது தான் உண்மை.

[11] இத்தனை அசுத்தங்கள் “அழுக்காறு, அப்பழுக்கு…..” உள்ளன என்றால், அவற்றை முதலில் சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

குங்குமத்தை அழித்து, பெண்மையை பழித்த ஸ்டாலினுக்கு நாட்டை ஆள அருகதை உண்டா – தமிழக பெண்கள் இத்தகைய அநாகரிகமாக காரியங்களுக்கு முடிவு கட்ட வேண்டும்.

மே 13, 2016

குங்குமத்தை அழித்து, பெண்மையை பழித்த ஸ்டாலினுக்கு நாட்டை ஆள அருகதை உண்டா – தமிழக பெண்கள் இத்தகைய அநாகரிகமாக காரியங்களுக்கு முடிவு கட்ட வேண்டும்.

ஸ்டாலின் மூஞ்சில் குங்குமம் வைத்தது.வாக்காளர் ஒருவர் நெற்றியில் வைத்த குங்குமத்தை வேண்டுமென்றே உடனேயே அழித்துவிட்டதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது[1], பரபரப்பு ஏற்பட்டது, சர்ச்சை என்றெல்லாம் நான்கு வரிகளில் விழயத்தை முடித்துக் கொண்டாலும், உடகங்கள் சரியா-தவறா என்று விவாதிக்கவில்லை. சென்னையில், எழும்பூர், தி.நகர், துறைமுகம் உள்ளிட்ட பல தொகுதிகளில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஸ்டாலின் மே 12.2016 அன்று திண்ணை பிரசாரம் மேற்கொண்டார்[2]. மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு நடந்து சென்று கை குலுக்கி, செல்போனில் செல்ஃபிகள் எடுக்க அனுமதித்தார்[3]. எழும்பூர் தொகுதியில் போட்டியிடும் கே.எஸ்.ரவிச்சந்திரன் ஆதரித்து, கே.வி.கார்டனில் ஸ்டாலின் வாக்கு சேகரித்தபோது, அங்குள்ள கோவிலை கடந்து சென்றார். அப்போது, ஸ்டாலின் நெற்றியில், ஒருவர் குங்குமம் வைத்து விட்டார். உடனே கும்பிட்டு, திரும்பி, நெற்றியை தொட்டுப் பார்த்துக் கொண்டார்[4].

ஸ்டாலின் உம்பிட்டு திரும்பியதுவைத்த குங்குமத்தை அழித்த ஸ்டாலின்: அந்த இடத்தை கடந்ததும், ஸ்டாலின் தனது கைக்குட்டையால் குங்குமத்தை அழிக்க தொடங்கினார். முழுமையாக அழியும்வரை மீண்டும் மீண்டும் கர்ஃசீப்பால் அதை துடைத்தார். நான்கு-ஐந்து தடவை துடைத்து, அழித்து, நடந்து சென்றது வீடியோவில் நன்றாகவே பதிவாகியுள்ளது[5].

  1. முதலில் குங்குமம் வைக்கப்படுகிறது.
  2. குங்கும் இருக்கிறதா என்று தொட்டுப் பார்த்துக் கொள்கிறார்.
  3. கைக்குட்டையை எடுக்கிறார்.
  4. கையில் ஓட்டிக்கொண்டிருந்த குங்குமத்தைத் தட்டித் துடைத்துக் கொள்கிறார்.
  5. பிறகு, நான்கு-ஐந்து தடவை துடைத்து, முழுவதுமாக அழிக்கிறார்.

இது அங்கிருந்த டிவி சேனல் வீடியோ கேமராவில் பதிவானது[6]. இதைக் கண்ட பொது மக்கள். என்னடா கோவில் குங்குமத்தை இப்படி உடனடியாக அழிக்கிறாரே என்றூ பெண்கள் முணுமுணுத்தனர். ஸ்டாலினுக்கு அவரது தாயார் குங்குமம் வைப்பது போன்றபுகைப்படங்கள் வெளியாகியுள்ளதால், அவர் இவ்வாறு நடந்து கொண்டது, மக்களின் னமனத்தைப் புண்படுத்துவதாக தெரிந்தது.

ஸ்டாலின் குங்குமத்துடன்குங்குமம் இல்லை என்றால் என்ன அர்த்தம்?: நெற்றியில் குங்குமம் இருப்பதை பார்த்து ரத்தம் வழிகிறதா என்று கருணாநிதி கேலி செய்ததாக கூறப்படுவதுண்டு, என்று தமிழ்.ஒன்.இந்தியா குறிப்பிட்டு நிறுத்தியுள்ளது[7]. இப்போது அதே குங்குமம் சர்ச்சையில் ஸ்டாலினும் சிக்கியுள்ளார். சமூக வலைத்தளங்களில் ஸ்டாலின் செயலுக்கு எதிராகவும், ஆதரவாகவும் கருத்துக்கள் பரிமாறப்பட்டு வருகின்றன[8]. தாய், சகோதரி, மைத்துனி, மனைவி, என்று எல்லோருமே மதம் கிடையாது, கடவுள் கிடையாது என்று பகுத்தறிவு பேசும் திமுக சமீபகாலமாக ஒழுங்காக குங்குமம் வைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். குங்கும் வைத்துக் கொள்ளவில்லை, குங்குமம் இல்லை என்றால் மக்கள் என்ன நினைப்பார்கள், எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்று தெரிந்த விசயம் தான். அதன் கொள்கைகளை மறந்து மதம் போன்ற வழிபாடுகளில் கவனம் செலுத்துவதாக சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்படும் வேளையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது[9] என்று வெப்துனியா சேர்த்துள்ளது.

ஸ்டாலின் கும்பிட்டு திரும்பி தொட்டட்ப் பார்த்துக் கொண்டதுநெற்றியில் குங்கும் என்றால் ரத்தமா?: கடலூர் ஆதிசங்கர் நெற்றியில் குங்குமம் வைத்து கருணாநிதிக்கு முன்னால் காட்சி தந்தார். வியர்வையால் குங்குமம் நனைந்து வடிந்த காட்சி, கருணாநிதிக்கு ரத்தமாகத் தெரிந்தது, “என்ன நெற்றியில் ரத்தம் ஒழுகுகிறதா”, என்று ஹனக்கேயுரிய நக்கலாக கேட்டார். பதறிப்போனவராக ஆதிசங்கரைக் கிண்டல் அடித்தார். ‘உங்களுக்குப் பக்கத்தில் இருக்கும் பி.டி.ஆர். பழனிவேல்ராசன் எப்போதும் குங்குமத்துடன்தானே காட்சி தருகிறார்?’ என்று நிருபர்கள் கேட்டார்கள். ”அது பரம்பரைப் பொட்டு. இது பஞ்சத்துக்கு வைத்த பொட்டு!” என்று விளக்கம் அளித்தார் கருணாநிதி. பயந்து போன அவர், குங்குமத்தை அழித்து விட்டாராம். அதே நேரத்தில், அவரது மனைவி, துணைவி இத்யாதிகள் அப்படி வைத்துக் கொள்வது பற்றி நக்கல், கிண்டல் இல்லை. ஆனால், முன்பு, இந்திராகாந்தியை தாக்கியபோது, நெற்றியில் ரத்தம் வந்தபோது, மிகக்கேவலமாக விமர்சித்தத்தும் தெரிந்த விசயமே.

ஸ்டாலின் குங்குமத்தை அழித்ததுகுங்குமத்தை அதிகமாக நெற்றியில் பூசிக்கொண்டு நின்றதால், அவரை அறநிலையத்துறை அமைச்சராக்கினேன்[10]: “மத்திய அமைச்சர் சிதம்பரம், தன்னை மாப்பிள்ளை வீட்டுக்காரர் என்றார். அதனால், என்னை பெண் வீட்டுக்காரனாக ஆக்கி, இந்த இல்லறக் கூட்டணியின் சார்பாக இருவரும் இணைந்து மணமக்களை வாழ்த்துவோம். பெரியகருப்பனின் பணிகள் என்னை மாத்திரமல்ல, ஆன்மிகவாதிகளையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும். ஒரு கோவில் விழாவில், மற்றவர்களை விட குங்குமத்தை அதிகமாக நெற்றியில் பூசிக்கொண்டு நின்றதால், அவரை அறநிலையத்துறை அமைச்சராக்கினேன். பெயராலும், மீசையாலும் பெரியகருப்பன் அச்சுறுத்தல் தரக் கூடியவர்; ஆனால், உள்ளத்தால் நம் அன்பையெல்லாம் கவர்ந்தவர். அவர் கொண்டிருக்கும் தெய்வ நம்பிக்கையைக் கூட, என் மீது கொண்டிருக்கும் மரியாதையால், அதை கொஞ்சம் மறைத்து திறம்பட பணி புரிகிறார்”. இப்பொழுது அந்த ஆளும் வீடியோ விவகாரத்தில் மாட்டிக் கொண்டுள்ளது கவனிக்கத்தக்கது.

இந்த மூஞ்சிகளுக்கு தேவைப்பட்டதோதமிழக பெண்கள் இவர்களது அநாகரிகமாக காரியங்களுக்கு முடிவு கட்ட வேண்டும்; குங்குமம் அழித்தல் என்பதே அபசகுனமாகக் கருதப்படுகிறது. பெண்களைப் பொறுத்த வரையில், அது அமங்கலமமாகக் கருதப் படுகிறது. தாலியறுத்த கையறுநிலையைக் குறிக்கிறது. அதனால் தான் போலும், தாலியறுக்கும் விழாவிலிஉம் ஈடுபட்டுள்ளனர். இப்படி பெண்களுக்கு, பெண்மைக்கு, பெண்ணின் பாரம்பரியத்திற்கு, தமிழக கலாச்சாரத்திற்கு, மங்கலநாண், மங்க நிலை என்று அனைவற்றிற்கும் எதிராக செயல்படும் இவர்களை தமிழக மக்கள் ஒதுக்க வேண்டும். நாத்திகம், சுயமரியாதை என்றெல்லாம் பேசி, ஏமாற்றி வருவதை ஏற்றுக்கொள்ளக்கூடாது. இப்பொழுது தேர்தல் காலம் என்பதாலும், 60 வருட இந்த திராவிட ஆட்சியில், நன்றாக கஷ்ட பட்டு, மோசமான நிலையில் தள்ளப்பட்டுள்ளதாலும், மக்கள் இவர்களுக்கு, உரிய பாடத்தைக் கற்றுக் கொள்ளவேண்டும். குறிப்பாக தமிழக பெண்கள் இவர்களது அநாகரிகமாக காரியங்களுக்கு முடிவு கட்ட வேண்டும்.

© வேதபிரகாஷ்

13-05-2016

[1] தமிழ்.ஒன்.இந்தியா, நெற்றியில் வைத்த குங்குமத்தை அழித்தாரா ஸ்டாலின்? சென்னை பிரசாரத்தில் சர்ச்சை, By: Veera Kumar, Updated: Thursday, May 12, 2016, 15:50 [IST].

[2] நியூஸ்.7.டிவி, வாக்கு சேகரிப்பின் போது நெற்றியில் இடப்பட்ட குங்குமத்தை அழித்த மு.. ஸ்டாலின், May 12, 2016

[3] வெப்துனியா, நெற்றியில் இட்ட கோயில் குங்குமத்தை உடனடியாக அழித்த மு..ஸ்டாலின் (வீடியோ இணைப்பு), வியாழன், 12 மே 2016 (15:07 IST).

[4] விவேகம்.நியூஸ், ஸ்டாலின் குங்குமத்தை அழித்ததால் பரபரப்பு, மஹா 12/05/2016 02:45 PM; http://www.vivegamnews.com/Page.aspx?id=22581

[5] http://ns7.tv/ta/mk-stalin-destroyed-vermilion-forehead-during-collection-ballot-cast.html

[6] https://www.youtube.com/watch?v=VflEJXwRjJg&sns=fb&app=desktop

[7] http://tamil.oneindia.com/news/tamilnadu/stalin-vanish-kungumam-which-was-applied-a-voter-his-forehead-253467.html

[8] பிபிசி.தமிழ், தேர்தல் பரப்புரையின் போது நெற்றியில் இடப்பட்ட குங்குமத்தை அழித்த மு.க. ஸ்டாலின், பதிவு செய்த நாள்: 12 May 2016 2:02 pm, By : Amuthan.

[9] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/stalin-destruction-vermilion-in-his-forehead-116051200042_1.html

[10] http://www.dinamalar.com/News_Detail.asp?Id=173030