Archive for ஜூலை, 2011

குண்டலினி யோகாசன‌த்‌தி‌ல் து‌ள்‌ளி து‌ள்‌ளி கு‌தி‌‌த்தபடி ர‌ஞ்‌சிதா நடன‌‌ம் ஆடியதை ‌நி‌த்யான‌ந்தா பா‌ர்‌த்து ர‌சி‌த்தா‌ர் அல்லது லெவிட்டேஷன் பெயரில் யோகா தாக்கப்படுவது, கொச்சைப்படுத்தப் படுவது

ஜூலை 17, 2011

குண்டலினி யோகாசன‌த்‌தி‌ல் து‌ள்‌ளி து‌ள்‌ளி கு‌தி‌‌த்தபடி ர‌ஞ்‌சிதா நடன‌‌ம் ஆடியதை ‌நி‌த்யான‌ந்தா பா‌ர்‌த்து ர‌சி‌த்தா‌ர் அல்லது லெவிட்டேஷன் பெயரில் யோகா தாக்கப்படுவது, கொச்சைப்படுத்தப் படுவது

குண்டலினி பெயரில் நித்யானந்தா நடத்திய கூத்து: இந்திய / பாரத மண்ணில் தோற்றுவிக்கப்பட்ட யோகா என்ற அற்புதமான கலை இன்று, உலகம் முழுவதும் யார்-யாராலோ கொச்சைப் படுத்தப் பட்டு வருகிறது. தேனாம் பேட்டையில் பிஷப் இல்லத்திற்குப் பின்பக்கம் உள்ள சொகுசு குடியிருப்புகளில் செக்ஸ்-யோகா நடத்திய அந்நிய பார்ட்டிகள் நடத்திய கூத்து வெளிவந்து, உடனடியாக மறக்க / மறைக்க(?)ப்பட்டு விட்டது. ஆனால் அதற்குள் இந்த “குண்டலினி கூத்து” அரங்கேறியுள்ளது. நடிகை ரஞ்சிதா நடன‌த்தை ர‌சி‌த்த நித்யானந்தா (சனி, 16 ஜூலை 2011): கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே உள்ள பிடரியில் உ‌ள்ள நித்யானந்தா ஆசிரம‌த்‌தி‌ல் ஆண்டு தோறும் குரு பூர்ணிமா விழாவையொட்டி சிறப்பு யாகங்கள் பூஜைகள், குண்டலினி யோகா போன்றவை நடைபெறுவது வழக்கம். அதேபோ‌ல் இந்தாண்டு‌ம் பிடரி ஆசிரமத்தில் குரு பூர்ணிமா விழா நே‌‌ற்று நட‌ந்தது. விழாவில் நடிகை ரஞ்சிதாவும் கலந்து கொண்டார். பட்டுப்புடவை அணிந்திருந்த ர‌ஞ்‌சிதா, நித்யானந்தாவு‌க்கு பாத பூஜை செய்து அவரது முன் மண்டியிட்டார். அப்போது, ரஞ்சிதாவின் தலையை தொட்டு ஆசீர்வாதம் வழங்கிய ‌நி‌த்யான‌ந்தா, ‌பி‌ன்ன‌ர் பெண்கள் அனைவரும் வரிசையில் வந்து அவரு‌க்கு பாதபூஜை செய்து ஆசீர்வாதம் பெற்றனர்.

குண்டலினி சக்தியை எழுப்புவது சாதாரணமான நிகழ்ச்சி அல்ல: பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் குண்டலினி யோகாசன பயிற்சி அளித்த ‌நித்யான‌ந்தா மு‌ன்பு நடிகை ரஞ்சிதா திடீரென எழுந்து துள்ளி துள்ளி குதித்தபடி ஆனந்த நடனம் ஆடினார்[1]. அவரைப் போல் ஏராளமான பெண்களும் உற்சாக நடனம் ஆடினர்[2]. சில பெண்கள் தரையில் படுத்து உருண்டனர். இதை நித்யானந்தா சிம்மாசனத்தில் அமர்ந்தபடி ரசித்து பார்த்துக் கொண்டிருந்தார். குண்டலினி யோகாசன பயிற்சி பற்றி நித்யானந்தா கூறுகை‌யி‌ல், ஒவ்வொரு மனிதனிடமும் குண்டலினி சக்தி உள்ளது. அதை உயிர்ப்பிப்பதற்காக இந்த யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது என்றார்.

இரட்டை வேடம் போடும் நக்கீரன் கோபால் முதலியோர்:  நக்கீரன் பத்திரிக்கை மற்றும் அதனை நடத்தி வருபவர்களுக்கு வியாபாரம் தான் முக்கியம் என்பதனால், அவ்விஷயத்தில் இருகூட்டாத்தார்களுக்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லை எனலாம். குங்குமம் வைப்பதையே அவதூறு பேசிய கருணாநிதியுடன் சேர்ந்து கொண்டு, நெற்றியில் குங்குமம் வைத்துக் கொண்டு கோபால், மறுபக்கம் “ஓம்” என்ற பத்திரிக்கை நடத்துவது, தாமிடர தகடுகளை எந்திரம் என்று சொல்லி விர்ப்பது முதலியனவும் கேட்கெட்ட செயல்கள் தாம்..

தோல்வியில்முடிந்தநித்யானந்தாவின்நிகழ்ச்சி! (Nakkiran version): இவ்வாறு தலைப்பு கொடுத்து நக்கீரன் செய்தி வெளியிட்டுள்ளது.

நித்யானந்தாவை எதிர்க்கும் சாக்கில், ந்தியானந்தாவைப் போலவே நக்கீரன், கோபால், மற்ற ஊடகங்கள் யோகாவை அவதூறு செய்கின்றன என்பதை இந்தியர்கள் கவனிக்க வேண்டும். தாக்கப்படுவது இந்திய கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம் முதலியன.

ஆபாச வீடியோ குற்றச்சாட்டால் சரிந்துபோன தனது செல்வாக்கை சரிசெய்ய, தியானத்தில் இருப்பவர்களை ‘குண்டலினி சக்தி’யின் மூலம் அந்தரத்தில் மிதக்க வைப்பதாக சவால் விட்ட நித்யானந்தாவின் ஆன்மீக நிகழ்ச்சி தோல்வியில் முடிந்தது[3].
நித்யானந்தாவின் வேஷமும், ஆடம்பரமும்: பிடதி நித்யானந்தா தியான பீடத்தில், குரு பவுர்ணமி விழா கொண்டாடப்பட்டது. விழாவை ஒட்டி, 15.07.2011 அன்று காலையிலிருந்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. விழாவை ஒட்டி, ஆசிரமத்தின் பிரதான வாயிலில் இருந்து, ஆனந்தேஸ்வரா கோவில் வரையிலும் நித்யானந்தா ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். ஆசிரமத்திலுள்ள ஆனந்தேஸ்வரா சன்னிதியின் முன், பஞ்சதபா ஆசனம் போடப்பட்டிருந்தது. அதில், நித்யானந்தா அமர்ந்திருந்தார். இந்த குருபூர்ணிமா விழாவில் நடிகை ரஞ்சிதாவும் கலந்து கொண்டார். அவர் நித்யானந்தாவுக்கு பாத பூஜை செய்து அவரது முன் மண்டியிட்டார். அப்போது நித்யானந்தா ரஞ்சிதாவின் தலையை தொட்டு ஆசீர்வாதம் வழங்கினார். அவரைத் தொடர்ந்து பக்தர்களும், ஆசிரம பெண்கள் அனைவரும் வரிசையில் வந்து நித்யானந்தாவுக்கு பாதபூஜை செய்து ஆசீர்வாதம் பெற்றனர்.

அந்தரத்தில் மிதப்பது என்பது சினிமா கூத்தோ, வித்தையோ இல்லை: சிறிது நேரம் ஆசி வழங்கிய நித்தியானந்தா பக்தர்கள் அனைவருக்கும் குண்டலினி யோகாசன பயிற்சி அளித்தார். புவிஈர்ப்பு விசைக்கு எதிராக பக்தர்களை தன்னால் அந்தரத்தில் மிதக்க வைக்க முடியும் என்று சவால் விட்டார். குண்டலினியை எழுப்பி, மந்திரங்களை ஓதி அவர் சைகை செய்ய எம்பியெம்பி குதித்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த நடிகை ரஞ்சிதாவும், நித்தியானந்தாவின் கட்டளையை ஏற்று அந்தரத்தில் மிதக்க முயற்சித்தார். ஆனால் தடுமாறி கீழே விழுந்த அவர் அப்படியே சிரித்தப்படி உட்கார்ந்துவிட்டார். கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று சிரித்த நித்யானந்தாவிடம் ஒருவர் சவால் விட்டார். தன்னை இச்சோதனைக்கு உட்படுத்திக்கொண்ட அவருக்கு எந்த மாற்றமும் ஏற்படாததால் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்[4]. வாக்குவாதத்தில் ஈடுபட்டவருக்கு பதில் சொல்ல முடியாமல் திணறினார் நித்யானந்தா. இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது[5].

லெவிட்டேஷன் பெயரில் யோகா தாக்கப்படுவது, கொச்சைப்படுத்தப் படுவது: லெவிட்டேஷன் பெயரில் இந்திய / இந்து குருக்கள் / யோகா ஆசிரியர்கள் சந்நியாசிகள் உலகம் முழுவதும் தாக்கப்படுவது சாதாரணமான விஷயமாகி விட்டது. முன்பு அமெரிக்காவில் மஹரிஷி மஹேஷ் யோகி மீது ஒரு அமெரிக்கர் தனக்கு “லெவிட்டேஷன்” சொல்லித் தருகிறேன் என்று ஏமாற்றி விட்டார் என்று வழக்குப் போட்டு பிரச்சினை செய்தார். அதே முறைதான், இங்கேயும் கையாளப்படுகிறது. எல்லோரும் நினைப்பது போல, லெவிட்டேஷன் என்ற பூமியிலிருந்து மேலே மனித உடலை எழுப்புவது வேடிக்கையோ, வித்தையோ இல்லை. அதற்கு நெடுங்கால பயிற்சி தேவை. பகுத்தறிவால் வாதம் புரிவதோ, நாத்திகம் பெயரால் கேலி பேசுவதோ அல்ல. உண்மையில் குண்டலினி வேறு லெவிட்டேஷன் என்ற பூமியிலிருந்து மேலே மனித உடலை எழுப்புவது வேறு. சித்தர்கள் என்று தமிழகத்தில் தம்பட்டம் அடித்துக் கொள்பவர்கள் கூட அத்தகைய பயிற்சி இல்லாமல் இதனை செய்ய முடியாது. இருப்பினும் சித்தர்களைப் பற்றி நாத்திகர்கள், பகுத்தறிவுவாதிகள், திகவினர், செக்யூலரிஸவாதிகள் அளந்து கொண்டிருப்பார்கள். ஆனால், அவர்களாலும் இதைச் செய்ய முடியாது.


[2] கிருத்துவர்கள் பேயோட்டும் கூட்டங்களை விட, இது ஒன்றும் பெரிய தமாஷாக இருந்துவிடவில்லை. கிருத்துவர்கள் நிகழ்ச்சிகளில் பெண்கள் இஷ்டத்திற்கும் ஆடுவார்கள், குதிப்பார்கள், கத்துவார்கள். பாதிரிகள் / பாஸ்டர்கள் அப்பெண்களை கண்டபடி பிடித்துக் கொண்டு, பிறகு நெற்றியில் கையை வைத்து அழுத்தித் தள்ளிவிடுவார்கள். அப்பெண்களும் ஏதோ தங்களைப் பிடித்த பேய் போய்விட்டது போல கீழே விழுவார்கள். சிலர் கீழே விழுந்த பிறகு கூட புரண்டு ஆடி, உருண்டு அடங்கிவிடுவார்கள்.

[4] உண்மையில் இந்த ஆளும் ஹெல்மெட் போட்டுக் கொண்டு, கண்களை முடிக்கொண்டு கோமளித்தனமாக குதித்துக் கொண்டிருந்தது வேடிக்கையகத்தான் இருந்தது.

[5] “சமய்” என்ற ஹிந்தி செனல் இதனை தொடர்ச்சியாக, மறுபடி-மறுபடி ஒலி-ஒளிபரப்பு செய்த்து கிண்டலடித்துக் கொண்டிருந்தது. நித்யானந்தா அதில் “பெரட்-ரூம் சாமி” என்றே விளிக்கப்பட்டார்.

சன்டிவி சக்சேனாவுக்கு எதிராக கமிஷனரிடம் நித்யானந்தா, ரஞ்சிதா கொடுத்த புகார்கள் – அரசியலா, ஆன்மீகமா, பகுத்தறிவா!

ஜூலை 17, 2011

சன்டிவி சக்சேனாவுக்கு எதிராக கமிஷனரிடம் நித்யானந்தா, ரஞ்சிதா கொடுத்த புகார்கள் – அரசியலா, ஆன்மீகமா, பகுத்தறிவா!

 

சன் நெட்வொர்க் நிறுவனம் மீதளிக்கப்பட்ட இரண்டாவது புகார்: சென்னையில் கடந்த ஆண்டு 2010ல், நடிகை ரஞ்சிதாவுடன் இருப்பது போன்ற சித்தரிக்கப்பட்ட காட்சிகளை ஒளிபரப்பியதாக் குற்றம்சாட்டி சன் டிவி தலைமை செயல் அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா மற்றும் 8 பேருக்கு எதிராக கிரிமினல் புகார் ஒன்றை சென்னை போலீசிடம் நித்யானந்தா அளித்துள்ளார். இதே குற்றச்சாட்டுகளைக் கூறி சன் நெட்வொர்க் நிறுவனம் மீது ஏற்கனவே நித்யானந்தா சென்னை பீடம் சார்பில் ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டது. தற்போது ஜூலை.13 அன்று, தாக்கல் செய்யப்பட்டுள்ளது 2-வது புகாராகும்[1].

 

ஆட்சி மாற்றத்தினால், இவ்வாறு வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன என்று சந்தேகம் / புகார் வரலாம். ஆனால், சென்ற வருடம் இவர்கள் புகார் செய்தபோது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, புகார் கொடுத்த இவர்கள் மீதுதான் வழக்குகள் போடப்பட்டன. சென்னையில் சில வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுத்தாலும், பிறகு சாமர்த்தியமாக கர்நாடகாவிற்கு மாற்றப்பட்டன. ஆகவே, அப்பொழுது, அரசியல் ரீதியில் அவ்வாறு செய்யப்பட்டனவா என்றும் யோசிக்க வேண்டியுள்ளது.

 

நித்ய ஆத்மபிரபானந்தாவை சந்தித்த வழக்கறிஞர் யார்? நித்யானந்தா தியானபீட அறக்கட்டளையின் மேலாளர் நித்ய ஆத்மபிரபானந்தா இந்த புகாரை அளித்துள்ளார். புகாரில் சக்சேனா, அவரது உதவியாளர் அய்யப்பன் மற்றும் நக்கீரன் வார இதழ் ஆசிரியர் ஆர்.கோபால் ஆகியோருக்கு உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:  “நித்யானந்தா ஆசிரமத்துக்கு உலகம் முழுவதிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் உள்ளனர். எங்களது தலைமை பீட குருவாக நித்யானந்தா உள்ளார். ஏராளமான சமூக பணிகளையும் நாங்கள் செய்து வருகிறோம்.   இந்நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 17-ந்தேதி நித்யானந்தா சாமிகள் கோவையில் பகவத் கீதை சொற்பொழிவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது வழக்கறிஞர் ஒருவர் எங்களது நிர்வாக அதிகாரியை சந்தித்து பேசினார். நித்யானந்தாவை உடனே சந்திக்க வேண்டும் என்று அவர் கூறினார். சாமி பக்தர்களுக்கு ஆசி வழங்கிக் கொண்டிருக்கிறார். சிறிது நேரம் காத்திருங்கள் என்று கூறினோம். பின்னர் 21-ந்தேதி என்னிடம் அந்த வழக்கறிஞர் தொலைபேசியில் பேசினார். என்னிடம் நித்யானந்தா சாமிகள், நடிகை ரஞ்சிதாவுடன் இருப்பது போன்ற ஆபாச வீடியோ மற்றும் படங்கள் உள்ளன. இதனை ஆசிரம சீடர் லெனின் மற்றும் ஆர்த்திராவ் ஆகியோர் கொண்டு வந்து கொடுத்துள்ளனர். நேரில் சென்னைக்கு வாருங்கள் பேசிக் கொள்ளலாம் என்று கூறினார்.

ரூ 60 கோடி மற்றும் இடம் கேட்டு மிரட்டிய வழக்கறிஞர் யார்? “இதையடுத்து நானும் பிடதி ஆசிரம செயலாளர் நித்ய சதானந்தா, நித்ய பக்தானந்தா ஆகியோர் உடனடியாக பெங்களூரில் இருந்து சென்னை வந்து அவரை சந்தித்தோம். அப்போது அவர் இந்த வீடியோ காட்சிகள் வெளி வராமல் இருக்க வேண்டும் என்றால் 60 கோடி ரூபாய் தர வேண்டும். மேலும் ஐதராபாத், சென்னையில் உள்ள ஆசிரமத்துக்கு சொந்தமான 2 இடங்களை எழுதி தர வேண்டும் என்று கேட்டார். இதற்கு நாங்கள் உடன்பட வில்லை.

 

அவ்வாறான சிடிக்கள் உள்ளது, இணைத்தளத்தில் போட்டத்து, பரப்பியது, ஊடகங்களில் அவ்வப்போது அவதூறாக செய்திகள் போட்டது, பேசியது, செந்தமிழ் மாநாட்டில் கூட கோபால், லெனின் பெயர் குறிப்பிட்டு, “நித்தி, நித்தி” என்று பேசியது, முதலியவை சக்சேனா, அவரது உதவியாளர் அய்யப்பன் மற்றும் நக்கீரன் வார இதழ் ஆசிரியர் ஆர்.கோபால், லெனின், குமார், ஆர்த்திராவ், காமராஜ், முதலியோர் சம்பந்தப்பட்டுள்ளாதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது முதலியவை இந்த பின்னணியைக் காட்டுகிறது.

லெனினுடன் சேர்ந்து நக்கீரன் கோபால், காமராஜ் ஆகியோரும் எப்படி மிரட்டினர்?. “இதனால் கோபம் அடைந்த அவர் உடனடியாக அட்வான்ஸ் தொகையாக ரூ. 60 லட்சம் தர வேண்டும். இல்லாவிட்டால் லெனினிடம் அந்த ஆபாச காட்சிகளை வெளியிட சொல்லி விடுவேன் என்று மிரட்டினார்.   நாங்கள் சொல்வதை கேட்கா விட்டால் நித்யானந்தா உள்பட நீங்கள் அனைவரும் சிறைக்கு செல்ல வேண்டும் என்று மிரட்டினார். லெனினுடன் சேர்ந்து நக்கீரன் கோபால், காமராஜ் ஆகியோரும் மிரட்டினர். கேட்ட பணத்தை கொடுக்காவிட்டால் நக்கீரன் பத்திரிகையிலும் இணையதளத்திலும் வெளியிட்டு விடுவோம் என்று மிரட்டினார்கள்.   இதனால் பயந்து போன நாங்கள் 2 மணி நேரம் கழித்து 2 தவணைகளாக ரூ.30 லட்சம் ரூபாயை அந்த வழக்கறிஞரிடம் வழங்கினோம்.

 

ரூ 30 லட்சம் வாங்கிக் கொண்டு வாக்குத்தவறிய லெனின், குமார், ஆர்த்திராவ், நக்கீரன்கோபால், காமராஜ் முதலியோர்: “உடனே வழக்கறிஞர் இந்த வீடியோ காட்சிகள் வெளிவராது என்று உறுதி அளித்தார். ஆனால் மார்ச் 2-ந்தேதி சன் டி.வி.யில் நித்யானந்தா தொடர்பான ஆபாச வீடியோ காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன. இதனால் எங்களது ஆசிரம நிர்வாகிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக சென்னையில் உள்ள வழக்கறிஞரைத் தொடர்பு கொண்டு பேசினேன். சென்னைக்கு புறப்பட்டு வாருங்கள் என்றனர். அவசரமாக சென்னை வந்த நான் அந்த வழக்கறிஞரை சந்தித்து பேசினேன். அவர் நான் வந்திருக்கும் விஷயத்தை லெனின், குமார், ஆர்த்திராவ், நக்கீரன் கோபால், காமராஜ், சன் டி.வி. தலைமை நிர்வாகி சக்சேனா, அவரது நெருங்கிய உதவியாளர் அய்யப்பன் ஆகியோரிடம் தெரிவித்தார்.

புகார் கொடுத்து ஊடகங்களிடம் விஷயத்தைச் சொன்னதால் மறுபடியும் மிரட்டல்: “இதன்பிறகு அய்யப்பன் எங்களை தொடர்பு கொண்டு சன் டி.வி.யில் வெளிவரும் ஆபாச வீடியோ காட்சிகளை நிறுத்த வேண்டும் என்றால் ரூ.60 கோடி தரவேண்டும் என்று கேட்டார். பணத்தை உடனடியாக தரவேண்டும் என்றும் கூறினார். இதையடுத்து ஆபாச சி.டி, வெளியான 2 நாள் கழித்து சென்னையில் எங்களது ஆசிரம நிர்வாகிகள் பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தனர். கடந்த ஆண்டு மார்ச் 5-ந்தேதி பெங்களூரில் உள்ள பிடதி ஆசிரமத்துக்கு அய்யப்பனும் அவருடன் சேர்ந்த சில குண்டர்களும் புகுந்து ஆசிரமத்தில் இருந்தவர்களை அவதூறான வார்த்தைகளால் பேசினர். என்னையும் தாக்கினர்.   அப்போது ஆட்சி அதிகாரத்தில் இருந்த அரசியல்வாதிகளின் செல்வாக்கை பயன்படுத்திக் கொண்டு லெனினை ஆயுதமாக வைத்து இவ்வளவு சம்பவங்களும் நடந்துள்ளன. இதுதொடர்பாக அப்போது நாங்கள் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே லெனின், குமார், ஆர்த்திராவ், நக்கீரன் கோபால், காமராஜ், சன் டி.வி. சக்சேனா, அய்யப்பன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்”, இவ்வாறு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நித்ய ஆத்மபிரபானந்தா அளித்துள்ள புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

ரூ. 100 கோடி வரை மிரட்டிய பேரம்: சன்,”டிவி’யில் ஒளிபரப்பான காட்சிகள் குறித்தும், அதையொட்டி எழுந்த சர்ச்சைகள் குறித்தும், சென்னை எழும்பூரில் உள்ள மெரீனா டவர்ஸ் ஓட்டலில் நித்யானந்தர் இன்று நிருபர்களை நேரில் சந்தித்து விளக்கம் அளித்தார்[2]. அப்போது பேசிய நித்யானந்தா, ஆபாச வீடியோவை ஒளிபரப்பு செய்யாமல் இருக்க வேண்டும் என்றால் ரூ.100 கோடி கொடுக்க வேண்டும் என்று சன் டி.வி., மிரட்டியது. மேலும் எனக்கு கொலை மிரட்டலும் விடுத்தனர் என்று கூறினார்.

 

சன், “டிவி’, தினகரன் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை வேண்டும்: ரஞ்சிதா நம்பிக்கை[3] சென்னை: “”நித்யானந்தாவுடன் இருப்பது நான் இல்லை. அது, “மார்பிங்’ முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது. என்னை பற்றி அவதூறாக சித்தரிக்கப்பட்ட காட்சிகளை ஒளிபரப்பிய சன், “டிவி’ மற்றும் செய்தி வெளியிட்ட தினகரன் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுப்பார் என, எனக்கு முழு நம்பிக்கை உள்ளது,” என, நடிகை ரஞ்சிதா கூறினார்.

இவ்வாறு கோடிக்கணக்கில் பேரம் உயர்ந்து வந்துள்ளபோது, அதிலும் நித்யானந்தா மடத்தின் மூலம் புகார் அளித்தும் ஏற்காதது, மடத்தின் ஆசிரமங்கள், சீடர்கள் முதலியவைத் தாக்கப்பட்டது, முதலியவை கருத்தில் கொள்ளவேண்டியுள்ளது. இரண்டு பக்கங்களிலும் நெருப்பு இல்லாமல் புகையாது என்று மக்களுக்கு நன்றாகவே தெரிந்துள்ளது.

சென்னையில் 13-07-2011 நேற்றிரவு, நிருபர்களுக்குரஞ்சிதாஅளித்தபேட்டி: சில பத்திரிகைகள், மீடியாக்கள் மனசாட்சி இல்லாமல் என்னைப்பற்றி எழுதி, தெருவில் நிற்க வைத்துவிட்டன. இஷ்டத்திற்கு கற்பனையாக எழுதி, என் தனிப்பட்ட வாழ்க்கை சுதந்திரத்தை பறித்துவிட்டன. அருவருக்கத்தக்க, ஆபாச காட்சிகளை, சன் நெட்வொர்க், “டிவி’க்கள், தினகரன் நாளிதழ், தினகரன் வெப்சைட்டிலும், வெளியிட்டனர். இப்படி, என் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட்டு, என்னை மக்கள் மத்தியில் அசிங்கப்படுத்தி விட்டனர். இது தொடர்பாக புகார் கொடுக்க சென்னையில் கால் வைத்தால், உடனே, கைது செய்து உள்ளே தள்ளி விடுவோம் என மிரட்டினர். இதனால், ஒன்றரை ஆண்டுகளாக பாதுகாப்பு கருதி சென்னை வரவில்லை; போலீசிலும் புகார் செய்யவில்லை. அப்போது நான் புகார் கொடுத்திருந்தால், எந்த நடவடிக்கையும் எடுத்திருக்க மாட்டார்கள். அப்போது இருந்த ஆட்சி நிலை வேறு, தற்போது உள்ள ஆட்சி நிலை வேறு. தனி மனித உரிமைகள் பற்றி அப்போது எனக்குத் தெரியாது. தற்போது முழுவதுமாக தெரிந்து கொண்டதால் தைரியம் வந்துள்ளது. தற்போது புகார் கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கையால், சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் செய்துள்ளேன்.

லண்டன் உதாரணத்தைக் காட்டி புகார் கொடுக்கப்பட்டுள்ளது: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதும், போலீஸ் கமிஷனர் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. லண்டனில், 168 ஆண்டு பாரம்பரியமிக்க, “நியூஸ் ஆப் த வேர்ல்டு’ பத்திரிகை, தொலைபேசி ஒட்டுக்கேட்பு குற்றச்சாட்டுக்கு உள்ளாகி, சில தினங்களுக்கு முன் மூடப்பட்டுள்ளது. சித்தரித்த ஆபாச காட்சிகளை வெளியிட்டு, என் கண்ணியத்தைக் காயப்படுத்திய, “டிவி’ பத்திரிகைகள் மீது ஒன்றரை ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சட்ட ரீதியாக நடவடிக்கை கோரியே போலீசில் புகார் செய்துள்ளேன்.

ரஞ்சிதா கொடுத்த அடுத்த புகார்: நித்யானந்தருடன் இருப்பது நான் அல்ல. அது, “மார்பிங்’முறையில் சித்தரிக்கப்பட்வை. எதுவுமே நடக்கவில்லை என்பதுதான் உண்மை. உண்மையை மாற்றி மாற்றி பேச முடியாது. காட்சிகளை வெளியிடாமல் இருக்க பணம் கேட்டு மிரட்டியவர்கள் பற்றிய முழு விவரத்தை போலீஸ் கமிஷனரிடம் தெரிவித்துள்ளேன். இப்போது வெளிப்படையாக சொல்ல நான் விரும்பவில்லை. என் மீது அவதூறாக சித்தரிக்கப்பட்ட காட்சிகளை ஒளிபரப்பிய சன், “டிவி’, செய்தி வெளியிட்ட தினகரன் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. முதல்வரை நேரில் சந்திப்பீர்களா என கேட்கிறீர்கள். நான் உங்கள் மீடியாக்கள் மூலமே முதல்வருக்கு வேண்டுகோள் வைக்கிறேன். இவ்வாறு ரஞ்சிதா கூறினார்.

 

  1. அத்தகைய வீடியோ எடுக்கப்பட்டது / தயாரிக்கப்பட்டது உண்மை
  2. சிடிக்கள் தயாரிக்கப்பட்டது உண்மை. இணைத்தளங்களில் பரப்பியது உண்மை.
  3. நக்கீரன் / தினகரன் இதழில் வெளியிட்டது, சன் டிவியில் ஒலி/ஒளிபரப்பப்பட்டது உண்மை. இவையெல்லாம் தொழிற்நுட்பத்தினால் எளிதாக செய்தவர்கள் யார் என்று கண்டுபிடித்து விடலாம்.
  4. நித்யானந்தா, மடம் மற்ற மடத்தவர் தாக்கப்பட்டுள்ளது உண்மை. பெண்கள் தாக்கப்பட்டபோது கூட, யாரும் கண்டு கொள்ளாமல் நாத்திகம் பேசியது, பகுத்தறிவுவாதம் பேசியது முதலியவை பாரபட்சத்தைத் தான் எடுத்துக் காட்டியது.
  5. நித்யானந்தா, ரஞ்சிதா முதலியோரின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது உண்மை.
  6. நித்யானந்தா கைது செய்யப்பட்டது, சிறையில் அடைக்கப்பட்டது, பைலில் வெளியே வந்தது, தொடர்ந்து ஊடகங்களினால் அவதூறாக்கப்பட்டது முதலியவையும் உண்மை.
  7. அதே காலத்தில் 2-ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை, சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் முதலியவை ஆரம்பித்தது முதலியனவும் உண்மை.
  8. ஆக இருதரப்பிலும் பிரச்சினைகள் உள்ளதால் நெருப்பு இல்லாமல் புகையாது என்று மக்களுக்கு நன்றாகவே தெரிந்துள்ளது.
  9. இதில் நாத்திகர்கள், பலம் பொறுந்திய அரசியல்வாதிகள், செக்யூலரிஸ ஊடகங்கள், இந்து-விரோத சக்திகள் முதலியவை உள்ளதால் தான், அதை கருத்திற்கொண்டு, இவ்விஷயம் அலசப்படுகிறது. குற்றாஞ்சாட்டப்பட்ட நித்யானந்தாவை ஆதரித்து செய்யப்படவில்லை.
  10. இந்து மதம், இந்துமத நிறுவனங்கள், இந்துமத சின்னங்கள், இந்துமத பழக்க-வழக்கங்கள், சம்பிரதாயங்கள், வழிமுறைகள் முதலியவற்றை வாதிகள்-பிரதிவாதிகள் என்ற இரு கூட்டத்தாரும் கேலி செய்வது, அவதூறு செய்வது, தூஷிப்பது, முதலியவற்றை மக்கள் உணர்ந்துள்ளதால், இனி அத்தகைய காரணம் சொல்லி இருகூட்டத்தாரும் தப்பித்துக் கொள்ளமுடியாது.

 

 

 

 


[1] தினமணி, சன்டிவி சக்சேனாவுக்கு எதிராக கமிஷனரிடம் நித்யானந்தா கொடுத்த புகார், Fi rst Published : 13 Jul 2011 05:31:08 PM IST

http://dinamani.com/edition/story.aspx?Title=%…..ID=164&MainSectionID=164&SEO=&SectionName=Latest

தியான பீடம் மீதான தாக்குதல் மத ரீதியானது: நித்யானந்தா பேட்டி!

ஜூலை 17, 2011

தியான பீடம் மீதான தாக்குதல் மத ரீதியானது: நித்யானந்தா பேட்டி

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=274899

நித்யானந்தாவைப் பற்றிய விவகாரங்கள் ஏற்கெனவே பல பதிவுகளில் விவாதிக்கப்பட்டுவிட்டது. மறுபடியும் இப்பொழுது பழைய புகாருடன் வெளிவந்துள்ளார். ஊடகங்கள், டிவிக்கள், போலீஸார் என அனைவரும் பாரபட்சமாக அல்லது ஒருதலைப்பட்சமாகவே அப்பொழுது செயல்பட்டனர்[1]. அதாவது மற்ற மதத்தினர் இதைப்போன்ற அல்லது இதைவிட கொடூரமான குற்றங்கள் செய்திருந்த போதிலும் அடக்கி வாசிக்கப் பட்டன. ஆனால், இவ்விஷயம் பிரபலமாக்கப் பட்டது[2].

பிரச்சினையை அரசியலாக்கித் திசைத் திருப்பும் போக்கில் ஈடுபடவேண்டிய அவசியம் இல்லை. தவறு / குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படவேண்டியவர்களே.

நித்யானந்தாவின் புகார்: முன்னரே இத்தகைய புகார் கொடுக்கப்பட்டுள்ளது, செய்திகளும் வெளிவந்துள்ளன. ஆனால், அப்பொழுது, பிரச்சினையை அரசியல் ரீதியில் திசைத்திருப்ப, வழக்குகளை பெங்களூருக்கு மாற்றி விட்டனர். ஆனால், அதே நேரத்தில் சில வழக்குகள் இங்கேயே பதிவு செய்தாலும், எதிர்-புகார்களைக் கண்டுக்கொள்ளவில்லை. இப்பொழுது நித்யானந்தா சொல்வது, “நில அபகரிப்பில் ஈடுபடும் நோக்கில், “மார்பிங்முறை வீடியோவை ஒளிபரப்பி, என் மீது, சன்,”டிவியினர் பழி சுமத்தினர். அவர்கள் ராட்சதர்கள். தியான பீடங்கள் மீது நடந்த தாக்குதல், தனிப்பட்ட தாக்குதல் அல்ல; மத ரீதியான தாக்குதல். ராட்சதர்கள் மீது, தமிழக முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது,” என, நித்யானந்தா கூறினார்.

இப்படி எதிர்-குற்றச்சாட்டுகளை எழுப்புவதால் மக்களிடம் / பக்தர்களிடம் ஏற்ப்பட்டுள்ள சந்தேகங்கள் நீங்கி விடாது. உண்மையை வெளிக்கொணர்ந்தால் ஒழிய, அந்நிலை மாறாது.

நித்யானந்தா, சென்னையில் நேற்றுநிருபர்களுக்கு அளித்த பேட்டி: சன், “டிவி’யில் வெளியான வீடியோ காட்சிகளில் இருப்பது நான் அல்ல. அது உண்மையானது அல்ல. முற்றிலும், “மார்பிங்’ முறையில் சித்தரிக்கப்பட்ட காட்சிகள் தான். தினகரன் மதுரை அலுவலக எரிப்பு சம்பவத்தில், சன், “டிவி’ எடுத்த காட்சிகள் கொண்ட வீடியோவை சி.பி.ஐ., கோர்ட்டில் தாக்கல் செய்தது. அந்த வீடியோவையே, கோர்ட் தூக்கி வீசிவிட்டது. தயாரித்ததும், ஒளிபரப்பியதும் தான் குற்றம். இது தவிர, எந்த குற்றமும் அதில் இல்லை. அது ஒரு சதி வேலைதான். சமூக விரோத செயல்களில் ஈடுபட்டவர்கள் அதிலிருந்து தப்பிக்க, தங்களைக் காப்பாற்றிக் கொள்ள, மக்களை திசை திரும்பும் வகையில், மீடியாக்களை ஆயுதமாக பயன்படுத்தி, என் மீது பழியைச் சுமத்தினர். அந்த நேரத்தில், மிகவும் சமூகப் பொறுப்போடு, ஆழ்ந்த, தெளிந்த நிலையில், “தினமலர்’ போன்ற நாளிதழ்கள், “டிவி’க்கள் செயல்பட்டன. பழித்தவர்களைப் பார்த்து, சில, “டிவி’க்கள் தங்கள், “ரேட்டிங்’கை கூட்டும் விதமாக செயல்பட்டன. அவ்வாறு பழித்தவர்கள் மீதும் தவறில்லை. அழிக்க நினைத்தவர்கள் சன், “டிவி’ ராட்சதர்கள். வீடியோ காட்சிகளை ஒளிபரப்பக் கூடாது என, ஐகோர்ட் தடை போட்டும், அதன் பெஞ்ச் அதை உறுதி செய்தும், அதைப் பற்றி கவலைப்படாமல், வீடியோ காட்சிகளை வெளியிட்டனர். வீடியோ காட்சிகளை வெப்சைட் மூலம் விற்று, பிழைப்பு நடத்துகின்றனர்.

முன்பு போலீஸ் துறை கருணாநிதியின் கீழ் இருந்ததால், புகார்கள் கொடுக்கப்பட்ட நிலையில் பாகுபாட்டுடன், போலீஸார் செயல்பட்டுள்ளனர் என்றால், அதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், மக்களின் நம்பிக்கை இவ்விஷ்யங்களில் தகர்ந்து விடும்.

சன், “டிவிதரப்பில் 100 கோடிரூபாய்கேட்டனர்: ஊடகங்களுக்கு இருக்கும் மரியாதையை அழிக்கின்ற இவர்கள், மீடியாக்கள் அல்ல. வீடியோவை வெளியிடாமல் இருக்க, சன், “டிவி’ தரப்பில் 100 கோடி ரூபாய் கேட்டனர். பின், 60 கோடி ரூபாய் கேட்டு மிரட்டினர். வார இதழ் ஒன்றின் மீடியேட்டராக சுரேஷ் வந்து மிரட்டினார். சன், “டிவி’ சக்சேனாவின் சார்பில், அவரது உதவியாளர் அய்யப்பனும் பணம் கேட்டு மிரட்டினார்; சக்சேனாவும் போனில் பேசினார். என் ஆசிரம நிர்வாகிகள் அதற்கு அடிபணியாததால், “மார்பிங்’ முறையில் சித்தரிக்கப்பட்ட காட்சிகளை வெளியிட்டனர். அதன் பின்பும் என் பக்தர்களை மிரட்டி, பணம் பிடுங்கிக் கொண்டனர். அப்போது, தியான பீட நிர்வாகிகள் போலீசில் புகார் செய்தனர்; புகார்கள் ஏற்கப்படவில்லை. தமிழகத்தில் 120 தியான பீடங்களை ரவுடிகள், கூலிப்படையினரை வைத்து, அடித்து நொறுக்கினர். அங்குள்ள இந்து விக்ரகங்களை நொறுக்கினர்.

முன்பு போலீஸ் துறை கருணாநிதியின் கீழ் இருந்ததால், புகார்கள் கொடுக்கப்பட்ட நிலையில் பாகுபாட்டுடன், போலீஸார் செயல்பட்டுள்ளனர் என்றால், அதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், மக்களின் நம்பிக்கை இவ்விஷ்யங்களில் தகர்ந்து விடும்.

மதரீதியான தாக்குதல்: இது எங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல; மத ரீதியான தாக்குதல். அமெரிக்காவில் உள்ள, “இந்து பெடரேஷன்’ வீடியோ காட்சிகளை, மத அமைப்புகளுக்கான கூட்டமைப்பிடம் ஒப்படைத்துள்ளது. இதை ஆய்வு செய்த கூட்டமைப்பு, வீடியோ காட்சிகள், உயர்தர யுக்திகள் கையாண்டு, “மார்பிங்’ முறையில், சித்தரிக்கப்பட்ட காட்சிகள் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது. இதனடிப்படையில், கூட்டமைப்பின் மூத்த வழக்கறிஞர், “இந்த புகார்கள் மீதான குற்றப்பத்திரிகை நகல்களை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்’ என, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

 ஆட்சி மாற்றத்தால் குற்றங்கள் மாறிவிடாது. சட்டங்களும் மாறிவிடாது. ஆனால், சட்டங்களும் சட்டங்களை அமூல் படுத்த வேண்டிய துறைகள், அதிகாரிகள், அவற்றை ஆட்டி வைக்கும் அரசியல்வாதிகள் சித்தாந்தங்களால் ஊறி செயல்பட்ட நிலை மாறவேண்டும்.

பெண்-சன்யாசிகளின் புடவைகளை உருவியுள்ளனர்: 17 இடங்களில் பெண் சன்யாசிகளின் புடவைகளை உருவியுள்ளனர். ஏழு இடங்களில் கொலைவெறித் தாக்குதல் நடந்தது. அதற்கான வீடியோ ஆதாரம் உள்ளது. எங்கள் ஆசிரமத்தில் மூன்று சன்யாசிகளை ஒரு அறையில் வைத்து பூட்டி, பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். மற்றொரு புறமாக வந்த பக்தர்கள், கதவை உடைத்து அவர்களை மீட்டுள்ளனர். பெங்களூரில் நடந்த சம்பவத்திற்கு, சென்னை, எழும்பூர் போலீஸ் நிலையத்தில், என் மீது எப்.ஐ.ஆர்., போட்டனர். சம்பந்தப்பட்டவர் பெயர் இல்லாமல் போடப்பட்ட இந்தியாவின் முதல் எப்.ஐ.ஆர்., அதுவாகத் தான் இருக்கும். எங்களிடம் பலவற்றை பறிக்க முயற்சி நடந்தது. நாங்கள் பறி கொடுக்கவில்லை. நீதித்துறை மீதும், தமிழக முதல்வர் மீதும், பத்திரிகைகள் மீதும் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. புகார்கள் மீது முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறேன். ஆளும் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க நேரம் கேட்பேன். அழைப்பு வந்தால் சூழ்நிலைகளைப் பார்த்து முடிவு செய்வேன். முதல்வர் மீது முழு நம்பிக்கை உள்ளது. இவ்வாறு நித்யானந்தா கூறினார்.

இத்தகைய செய்திகள் முன்னரே வெளிவந்தன. அப்பொழுது  போலீஸ் துறை பாரப்பட்சமாகத் தான் செயல்பட்டுள்ளது. குறிப்பாக பெண்ணுரிமைகள் பேசும் கூட்டங்கள் கண்டுகொள்ளாமல் இருந்தது அதிசயம்! ஒரே ஒருமுறை கம்யூனிஸ கட்சி பெண்மணி ரஞ்சிதாவிற்கு ஆதரவாக பேசினார், அறிக்கை விட்டார். புவனேஸ்வரி விஷயத்தில் கொதித்தெழுந்த நடிக-நடிகையர், ரஞ்சிதா விஷயத்தில் அடங்கிவிட்டனர் அல்லது அடக்கப்பட்டனர் போலும்!

நாய்கடித்தால் வைத்தியம் செய்து கொள்ள வேண்டும். திருப்பி கடிக்கக் கூடாது: ஆசிரம், தியான பீடம் மீதான தாக்குதல் குறித்து குறிப்பிட்ட நித்யானந்தா, “என் ஆசிரமம், தியான பீடங்கள் மீது நடந்த தாக்குதலால், என் பக்தர்கள் எந்த அளவுக்கு வேதனைப்பட்டிருப்பர். அவர்கள் உங்கள் சிலைகளை ஆசிரமம் முன் வைத்து, செருப்பால் அடிக்க வேண்டும் என்று துடித்தனர். நான் தான், “நாய் கடித்தால் வைத்தியம் செய்து கொள்ள வேண்டும். திருப்பி கடிக்கக் கூடாது என்று, அவர்களை சமாதானப்படுத்தினேன்’ என்றார்.

கண்டுகொள்ளாத மாஜிமுதல்வர் கருணாநிதி? : அப்போதைய முதல்வர் கருணாநிதிக்கு எழுதிய கடிதம் குறித்து நித்யானந்தா கூறியதாவது: கடந்த ஆண்டு டிச.,29ல், அப்போதைய முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் எழுதினேன். தியான பீடங்கள் மீதான தாக்குதல் குறித்த நடவடிக்கை எடுக்கக் கோரியும், உணர்வளவில் மிகவும் காயப்பட்டு, தமிழக மக்கள் இழந்த மத சுதந்திரத்தையும், மனித உரிமைகளையும் மீட்டுத் தர வேண்டுமென, 60 ஆயிரம் பக்தர்கள் ரத்தக் கையெழுத்துடன், நீதிகேட்டு சந்திக்க வாய்ப்பு கேட்டிருந்தேன். ஆனால், எந்த பதிலும் இல்லை. பின், தேர்தல் பிரசாரத்தின் போது,”நான் ஆன்மிகவாதிகளுக்கு எதிரி அல்ல. நடந்த சம்பவத்திற்கும், எங்களுக்கும் தொடர்பில்லை’ என்று பேசியுள்ளார். இவ்வாறு நித்யானந்தா கூறினார்.

ரூ.35 கோடி கேட்டு மிரட்டிய பிரசன்னா? : நித்யானந்தா தனது பேட்டியின் இடையே பணம் கேட்டு மிரட்டியது தொடர்பாக, ஆடியோ உரையாடல் ஒன்றை நிருபர்களுக்கு போட்டுக் காட்டினார். அதில், லெனின் கருப்பனின் உதவியாளர் பிரசன்னா, ஆசிரம நிர்வாகியுடன் போனில் பேசுகிறார். “டேபிளில் 25 கோடி ரூபாயை தூக்கிப் போட்டால் போதும். அதில் எல்லாவற்றையும் மூட்டை கட்டி தூக்கிப் போட்டு விடுகிறேன். அவர்கள் எல்லாம் சாதாரணமானவர்கள் அல்ல. மற்ற செலவுகள் எல்லாம் சேர்த்து 35 கோடியைக் கொடுங்கள்’ என்கிற ரீதியில் பேச்சு தொடர்கிறது.

நித்யானந்தா ஒன்பதா…? : பேட்டியின் போது, வார இதழ் ஒன்றின் நிருபர், நித்யானந்தரைப் பார்த்து, “ஒன்பது’ என்று கூறி, சைகை காட்டினார். இதைப் பார்த்து சிரித்த நித்யானந்தா, “ஆம்’ என்று கூறிவிட்டு தொடர்ந்தார். “ஆன்மிகத்தில் இருக்கும் எனக்கு பேச வாயும், ஆசிர்வதிக்க கையும் செயல்பட்டால் போதும். நான் ஆண், பெண், அலி, குழந்தை நிலைகளைக் கடந்து, ஆன்மிக மார்க்கத்தில் வாழ்பவன். அதனால் அவர், “ஒன்பது’ என்று சொன்னதால் வருத்தப்படவில்லை. ஆனால், அவர், பாலியல் சிறுபான்மை இனத்தை (அரவாணிகளை) இழிவுபடுத்தியதை ஏற்க முடியாது’ என்றார்.

நான்அவள்இல்லை…! : “வீடியோவில் இருப்பது நான் இல்லை’ என நித்யானந்தா கூறியதும், “அதில் இருப்பது ரஞ்சிதாவும் இல்லையா?’ என நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த ரஞ்சிதா, “வீடியோ காட்சியில் உள்ளது நான் இல்லை என்று, திரும்பத் திரும்ப பலமுறை கூறிவிட்டேன். எத்தனை முறைதான் இதை கேட்பீர்கள். கும்பிடுகிற கடவுளுடன், என்னைச் சேர்த்து கொச்சைப்படுத்தினால் எனக்கு எப்படிப்பட்ட நிலை இருக்கும்’ என்றார்.

 நாத்திகம், இந்து-விரோதம், செக்யூலரிஸம் முதலிய சக்திகள் இவ்விவகாரத்தில் ஈடுபட்டிருந்தால், அத்தகைய சக்திகள் அடையாளங்காணப் படவேண்டும். கிருத்துவர்கள் பின்னணியில் இருப்பது சாத்தியமே, ஏனெனில் அவர்களில் பெரும்பாலோர் அந்நேரத்தில் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு சிக்கினர்.

கருணாநிதி குடும்பத்தினர் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கி விவரங்கள் அப்போது வெளிவர ஆரம்பித்தது உண்மை. அவற்றை செந்தமிழ் மாநாடு, நித்யானந்தா, காஞ்சிபுரம் ஐயர் என்று பரபரப்புகளினால் திசைத் திருப்ப அவர்கள் முயன்றிருக்கலாம்.

ஆனால், இப்படி மற்ற காரணங்களுக்காக, இந்து மதம், இந்துமத நிறுவனங்கள், சின்னங்கள், யோகா முதலியவை கேலிக்குள்ளாவது, கேவலப்படுத்துவது, அவதூறு செய்வது என்ற முறையில் இருந்தால், நிச்சயம் அவை கண்டிக்கப்பட வேண்டும். நடவடிக்கையும் எடுக்கப்படவேண்டும்.