Archive for the ‘கட்டுக்கதை’ Category

ஜான் பென்னிகுக் வைத்து கட்டுக்கதை உண்டாக்குவதேன் – திராவிடத்துவ சிலைஅரசியல் முதல் சமாதி அரசியல் வரை! (3)

ஜனவரி 18, 2022

ஜான் பென்னிகுக் வைத்து கட்டுக்கதை உண்டாக்குவதேன் திராவிடத்துவ சிலைஅரசியல் முதல் சமாதி அரசியல் வரை! (3)

உயிருடன் இருக்கும் போதே சிலை வைத்துக் கொள்ளும் திராவிட சம்பிரதாயத்தை ஈவேரா ஆரம்பித்தார்.

தமிழகத்திற்கு சிலைவைப்பு, சிலையுடைப்பு, சிலைஅரசியல் எல்லாம் புதியதல்ல: ஈவேராவால் தமிழகத்தில் சிலையுடைப்பு அரசியல் ஆரம்பிக்கப் பட்டது. இங்கு பிள்ளையார் / விநாயகர் சிலைகள் தேர்ந்தெடுக்கப் பட்டதால், அது இந்துவிரோதமாகி அந்த போலி நாத்திகர்களை வெளிப்படுத்தியது. உச்சநீதி மன்றம் வரை அவர் மீதான வழஜக்குச் சென்றாலும், ஈவேரா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை, நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டார். இருப்பினும் சிலையுடைப்பு அக்கிரமங்களை செய்து வந்தார். 1968ல் இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டிலிருந்தே சிலைவைத்தல்[1], அதிலும் மெரினா பீச்சில் சிலை வைத்தல் என்ற அரசியல் ஆரம்பித்தது. அப்பொழுதே, அண்ணா பலதரப் பட்ட அழுத்தங்களுக்குட் பட்டார். வெளிநாட்டு, உள்நாட்டு அழுத்தம்-ஆதிக்கங்கள் அதிலிருந்தன. இதனால், சில சிலைகள் தேவையில்லாமல் சேர்க்கப் பட்டன, அதாவது, சில நீக்கவும் பட்டன. 1970களில் ஈவேராவின் பிள்ளையா சிலையுடைப்பு / ராமர் பட அவமதிப்பு உச்சங்களுக்குச் சென்றன[2].

உயிருடன் இருக்கும் போதே சிலை வைத்துக் கொள்ளும் திராவிட சம்பிரதாயத்தை ஈவேரா ஆரம்பித்தார். கருணாநிதியும் அந்த சடங்கை முறையாக செய்தார். ஆனால், அது உடைப்பு கிரியையில் முடிந்ததது. உடைப்பு சம்பிரதாயத்தையும் ஈவேரா தான் ஆரம்பித்து வைத்தார்.

ஈவேராஅண்ணாகருணாநிதி சிலைகள்: அதேபோல, பிறகு மவுண்ட் ரோடில் சிலைவைப்பதில், வைத்துக் கொள்வதில் போட்டி ஏற்பட்டது. ஈவேரா (இந்து அலுவகத்து அருகில்), அண்ணா என்றாகி (மவுண்ட் ரோடு-வாலாஜா ரோட் சந்திப்பு), உயிரோடு இருக்கும் போதே கருணாநிதி தனக்கும் சிலை வைத்துக் கொண்டார் (மவுண்ட் ரோட்-பாட்டுலஸ் ரோட் சந்திப்பு). ஆனால், 1987ல் அது உடைக்கப் பட்டது. அது அரசியலாகி, திராவிடத்துவமாகி, ஒரு நம்பிக்கையாகவும் மாறியது. அதாவது, அது அபசகுனமாகக் கருதப் பட்டது. திமுக ஆட்சி அதிகாரம் இழந்தது. எம்ஜிஆருக்கு ஸ்பென்சர் சந்திப்பில் சிலை வைக்கப் பட்டது. இனி மவுண்ட் ரோடில் எங்கு, யாருக்கு வைப்பார்களோ தெரியாது.

மவுண்ட் ரோடில் முதலில் ஈவேரா, பிறகு அண்ணா, கருணாநிதி என்று வரிசையாக சிலைகள் வைக்கப் பட்டது.

அம்பேத்கர் சிலை வைத்தலும், போராட்டமும்: இதற்குள் அம்பேதகருக்கு சிலை வைக்கும் அரசியல் ஆரம்பித்து, அது தீவிரமாகி, அதிகமாகியது. முதலில் இந்துக்களைத் தாக்க அது உதவும் என்று நினைத்து ஊக்குவிக்கப் பட்டது, ஆனால், அது திராவிட உயர்ஜாதியினருக்கே எதிராக அமைந்தது. இது நிச்சயமாக திராவிடத்துவவாதிகளுக்குப் பிடிக்கவில்லை[3]. அதனால், திக ஈவேரா சிலை வைக்கும் அதிரடியை ஆரம்பித்தது. அந்த தீவிரம் ஶ்ரீரங்கம் கோவில் வாசலுக்குச் சென்ற போது பிரச்சினையாகியது[4]. இடையில் கண்ணகி சிலை வைத்தும் கருணாநிதி அர்சியல் நடத்தினார். ரஜினி 2021ல் பேசியதும் எதிர்க்கப் பட்டது, ஆனால், விவரங்கள் வெளியே வந்து விட்ட போது, திராவிட நாத்திக-இந்துவிரோத முகங்கள் எல்லோருக்கும் தெரிந்து விட்டது.

சிலைகளுக்குப் பிறகு கோவில்களும் கட்டப் பட்டது. இப்பொழுது சமாதிகள் கோவில்களாக மாறி அங்கு தினம்-தினம் பூஜைகள், படையல்கள், ஆராதனைகள், அலங்காரங்கள்-வாத்தியங்கள் சகிதம் நடந்து கொடிருக்கின்றன…

வள்ளுவர் கோட்ட அரசியல்: கடந்த 1971- 76 ல் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, சென்னை நுங்கம்பாக்கத்தில் பிரம்மாண்டமான முறையில் வள்ளுவர் கோட்டம் கட்டினார்[5]. அதன் திறப்பு விழாவை 1976ம் ஆண்டு பிரவரி மாதம் 1,2,3 ஆகிய தேதிகளில் மூன்று நாட்களுக்கு சிறப்பாக நடத்த முடிவு செய்து எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. விழா தொடர்பாக வானொலியில் விளம்பரம்கூட ஒலிபரப்பப்பட்டது. அப்போது இந்திரா காந்தி பிரதமர். நெருக்கடிநிலை (மிசா) அமலில் இருந்தது. நெருக்கடி நிலையை கருணாநிதி கடுமையாக எதிர்த்தார். இதனால் கோபமடைந்த இந்திராகாந்தி, பிப்ரவரி ஒன்றாம் தேதி, 1976 வள்ளுவர் கோட்டம் திறப்புவிழா நடக்க இருந்த நிலையில், ஜனவரி 30ம் தேதி, திமுக அரசை டிஸ்மிஸ் செய்தார்[6]. அப்போதைய குடியரசுத்தலைவர் பக்ருதீன் அலி அகமது வந்து, வள்ளுவர் கோட்டத்தை திறந்து வைத்தார். முன்னாள் முதல்வர் என்ற முறையில், வள்ளுவர் கோட்டம் திறப்புவிழாவில் பார்வையாளராகக் கலந்து கொள்ள கருணாநிதிக்கு அரசு சார்பில் அழைப்பு அனுப்பப்பட்டது. பத்தாவது வரிசையில் அவருக்கு இடம் ஒதுக்கப்பட்டது. விழா நடக்கும் இடத்தில் இருந்து அரை கி.மீ. தூரத்தில் காரை நிறுத்த இடம் ஒதுக்கப்பட்டது. அங்கிருந்து விழாவுக்கு கருணாநிதி நடந்து வரவேண்டும். விழாவைப் புறக்கணித்தார் கருணாநிதி[7].

ஈவேரா இந்த வழக்கில் தான் உச்சநீதி மன்றத்தில் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டார். ஆனால், நாங்கள் பார்க்காத கோர்ட்டா என்றெல்லாம் பேசுவார்கள். ஈவேரா இவ்வழக்கில் கோர்ட்டில் ஆஜராகவில்லை..

முதல்வராக இருந்த கருணாநிதி நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு, கடற்கரைச் சாலையில் சிலை வைத்தார். 2011ல் அந்த சிலை அகற்றப்பட்டு, சிவாஜி மணிமண்டபத்தில் இப்போது வைக்கப்பட்டது. சிலை திறப்பு விழாவின்போது, சிலையின் பீடத்தில் இருந்த கருணாநிதியின் பெயர் பொறித்த கல்வெட்டு, சிவாஜி சிலை பீடத்தில் இப்போது அகற்றப்பட்டது. இது சர்ச்சையை கிளப்பியது.

அங்கில அடிவருடித்தனம் கட்டுக்கதைகளால் இவ்வாறெல்லாம் பகுத்தறிவு திராவிடத்துவ போதை கொண்டு, புதிய பக்தர்கள் உருவாகி வருகிறார்கள்!

எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது, ஒரு போராட்டத்தில் கலந்துகொள்ளும் முன், சென்னையில், அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கச் சென்றார் கருணாநிதி, சிலைக்கு மாலை அணிவிக்க இயலாதபடி, அங்கே வைக்கப்பட்டிருந்த படிக்கட்டை ஆட்சியாளர்கள் அகற்றிவிட்டனர். உலகத்தமிழ் மாநாட்டின்போது, அரசு சார்பில், அண்ணா முதல்வராக இருக்கும்போதே வைக்கப்பட்டதுதான் அந்தசிலை. ஆனால், அந்த சிலை நிறுவுவதற்கான தொகையை நன்கொடையாகக் கொடுத்தவர் எம்ஜிஆர். படிக்கட்டு அகற்றப்பட்டதையடுத்து,சிலையின் பீடத்தில் மாலையை வைத்துவிட்டுச் சென்றார் கருணாநிதி. இந்த நிகழ்வைத் தொடர்ந்து திமுகவுக்கென்று தனியாக அண்ண சிலை நிறுவ முடிவு செய்தார் கருணாநிதி. இதற்காக அண்ணா சாலையில் இடம் ஒதுக்கும்படி அரசுக்குக் கோரிக்கை வைத்தார். எம்ஜிஆர் அரசு மறுத்துவிட்டது. வள்ளுவர் கோட்டம் எதிரே அண்ணா சிலை வைக்க திமுகவுக்கு அனுமதி தரப்பட்டது. இதையும் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டார் கருணாநிதி. வள்ளுவர்கோட்டம் நுழைவாயில் அருகே அண்ணாசிலையை திறந்தார் கருணாநிதி. சிலையின் பீடத்தில், “சிலை திறப்பாளர், வள்ளுவர் கோட்டம் கண்ட கலைஞர் கருணாநிதி” என்று கல்வெட்டில் பொறித்து வைத்தார். வள்ளுவர் கோட்டம் கட்டியது கருணாநிதி என்பதை அங்கே பதிவு செய்தனர். அண்ணா பிறந்த நாளில், இந்த சிலைக்குதான் திமுகவினர் மாலை அணிவிப்பார்கள். அதிமுகவினர், அண்ணா சாலையில் உள்ள சிலைக்கு மாலை அணிவிப்பார்கள்.

கட்டுக் கதையைப் பரப்பும் திராவிடத்துவம், அதை அரசு ரீதியில், 2022ல் முதலமைச்சரே பரப்புகிறார்! சரித்திரம் பற்றி எந்த கவலையும் இல்லை.

1969 முதல் 2018 வரை – மெரினாவில் சமாதி அரசியல்: முதலில் 1969ல் அண்ணா இறந்தபோது, அவருக்கு சமாதி கட்டப் பட்டது. அப்பொழுது, அதைப் பற்றி யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பிறகு, 1987ல் எம்ஜிஆருக்கு சமாதி வைத்த போது, திமுகவினர் சில சலசலப்பு காட்டினாலும், கருணாநிதி சிலையுடைப்பு, வன்முறை முதலியவற்றை கவனித்து அமைதியாகினர். 2016ல் ஜெயலலிதாவுக்கு சமாதி வைக்க்ப்பட்டது. ஜெயலலிதாவுக்குப் பிறகு 2018ல் கருணாநிதி இறந்தபோது, மெரினாவில் சமாதி அரசியலும் உண்டானது. வழக்கும் தொடரப் பட்டது, ஆனால், முடித்து வைக்கப் பட்டது, சமாதி வைக்கப் பட்டது. இனி, திராவிடத்துவவாதிகள், மெரினாவில் தங்களுக்கு சமாதி வைக்க “ரிசர்வ்” செய்துகொண்டு இடத்தைப் பிடித்து வைத்துக் கொண்டாலும் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

Stuart Sampson – ஸ்ய்ரௌட் சாம்ப்ஸன் மதுரையின் பென்னிகுக்கிற்கு வீடு இருந்தற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்றார்.

2021ல் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சிலை அரசியலை ஆரம்பித்து விட்டது: இப்பொழுது 2022ல் திமுக ஆட்சிக்கு வந்தவுடம் அதைவிட தீவிரமான சிலை / மணிமண்டபம் அரசியல் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. அயோத்தி தாசர், வ.உ.சிதம்பரம், ஈவேரா, வள்ளலார், ஜான் பென்னிகுக் என்று நீள்கிறது. இதற்கெல்லாம் கோடிகளில் திட்டங்கள்! பிறகென்ன கட்டுக்கதைகளுக்கு குறைவா? இட்டுக்கட்டுவதில் வல்லவர்களான, தமிழ் செப்படி வித்தை[8] வல்லுனர்கள் சதுரங்க வேட்டையிலும் இறங்கி விடுவர். ஆனால், சரித்திர ஆதாரம் இல்லாத கட்டுக்கதைகளை வளர்க்க முன்படும் போது, உண்மைகள் வெளிவரத்தான் செய்யும். இவ்விதமாகத்தான், இப்பொழுது ஸ்டாலின் மாட்டிக் கொண்டுள்ளார். நிச்சயமாக யாரோ அவருக்கு இந்த ஸ்கிரிப்டை எழுதி கொடுத்துள்ளார்கள். அது நாகநாதன், ஜகதீசன், கருணானந்தம் போன்ற ஆஸ்தான சரித்திராசியர்களாக இருக்கலாம்.

© வேதபிரகாஷ்

18-01-2022.


[1] World Tamil Conference (WTC) என்பது முதலில் 1966ல் கோலாலம்பூர் மற்றும் 1968ல் சென்னையில் நடத்தப் பட்டது.

[2] 1971ல் ராமர் போன்ற படங்களுக்கு செருப்பு மாலை போடப் பட்டது மற்றும் இந்து கடவுளர்களை நிர்வாணமாக, ஆபாசமாகச் சித்தரித்து திக-திமுகவினர் துருச்சியில் ஊர்வலம் நடத்தினர்.

[3] தமிழனே இல்லாத நபருக்கு, தமிழகத்தில் சிலை ஏன் என்று கூட கேள்விகள் எழுப்பப் பட்டன.

[4] One.India, Life-size Bronze statue of ‘Periyar’ was unveiled at Srirangam, By Staff | Published: Monday, December 18, 2006, 3:51 [IST]

https://www.oneindia.com/2006/12/16/life-size-bronze-statue-of-periyar-was-unveiled-at-srirangam-1166394083.html

Srirangam, Tamilnadu, Dec 16 (UNI) In an event preceded by controversy, a life-size bronze statue of late Rationalist leader and Founder of Dravidar Kazhagam (DK) Periyar E V Ramasamy Naicker,was formally unveiled near the Sri Ranganatha temple by DK General Secretary K Veeramani, here .  the statue mounted on a 12-feet high pedestal,was installed near the ‘Rajagopuram’ (temple tower). Union Minister for Environment and Forests A Raja, State Ministers K N Nehru and N Selvaraj, also participated in the event.

[5] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், சிலை அரசியல், Written by WebDesk, Updated: October 2, 2017 11:06:36 am.

[6] https://tamil.indianexpress.com/opinion/statue-politics/

[7] இதில் முக்கியமானது என்னவென்றால், வள்ளுவர் கோட்டத்துக்கு கருணாநிதி அடிக்கல் நாட்டியதற்கான கல்வெட்டு அகற்றப்பட்டதுதான். வள்ளுவர் கோட்டத்தை கருணாநிதிதான் கட்டினார் என்ற தகவல் அங்கு எந்த வகையிலும் இடம் பெறவில்லை. இது இந்திரா காங்கிரஸ்காரர்கள் செய்த வேலை.

[8] பிறரறியாவகை செப்புக்களுள் உருண்டைகள் வந்துபோகுமாறு அவற்றைத் தரையில் அடித்துக் காட்டுவது முதலிய தந்திரவித்தை.

ரஜினியும் இக்கட்டுக்கதை வைத்து படம் எடுத்ததால், இரண்டாம் பெனிகுக் நிலைக்கு உயர்ந்துள்ளாறா அல்லது தள்ளப் பட்டாரா என்று தெரியவில்லை.

ஜான் பென்னிகுக் வைத்து கட்டுக்கதை உண்டாக்குவதேன், சிலைஅரசியல் செய்வதேன்? ஆங்கில அடிவருடித் தனமா? திராவிடத்துவ திசைத்திருப்பு அரசியலா? (2)

ஜனவரி 18, 2022

ஜான் பென்னிகுக் வைத்து கட்டுக்கதை உண்டாக்குவதேன், சிலைஅரசியல் செய்வதேன்? ஆங்கில அடிவருடித் தனமா? திராவிடத்துவ திசைத்திருப்பு அரசியலா? (2)

கருணாநிதி மதுரையில் சிலை வைத்தால், ஸ்டாலின் இங்கிலாந்தில் சிலை வைப்பார்: ஆங்கிலேயே அரசு இத்திட்டத்திற்கு தொடர்ந்து நிதியுதவி செய்ய இயலாத சூழ்நிலையில், கர்னல் ஜான் பென்னிகுயிக் இங்கிலாந்து சென்று தனது குடும்ப சொத்துகளை விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு எத்தகைய தடைகள் வந்தாலும், இந்த அணையை எப்படியாவது கட்டி முடிக்க வேண்டும் என்ற தன்னம்பிக்கையுடனும், மன உறுதியுடனும், விடா முயற்சியுடனும், துணிவுடன் செயல்பட்டு பெரியாறு அணையைக் கட்டி முடித்தார்[1]. அவருடைய பிறந்த நாளான ஜனவரி 15ஆம் நாளை தமிழர்கள் விமரிசையாகக் கொண்டாடுகின்றனர்[2]. தேனி மாவட்ட மக்கள் கர்னல் ஜான் பென்னிகுயிக்கின் தியாகப் பணிகளை நினைவுகூரும் வகையில் அவருடைய பிறந்த தினத்தில் பொங்கல் வைத்து வழிபாடு செய்கிறார்கள். மேலும், அம்மாவட்ட மக்கள் தொடர்ந்து தங்களுடைய குழந்தைகளுக்கு அவருடைய பெயரை வைத்து நன்றி தெரிவித்து மகிழ்ச்சி அடைகின்றார்கள்[3]. கர்னல் ஜான் பென்னிகுயிக் நினைவைப் போற்றும் வகையில், முத்தமிழறிஞர் கலைஞர் மதுரை, தல்லாக்குளம் பொதுப்பணித்துறை வளாகத்தில் 15.6.2000 அன்று அன்னாருடைய திருவுருவச் சிலையை திறந்து வைத்தார்[4]. தமிழக அரசு, தேனி மாவட்டம் கூடலூர் லோயர் கேம்ப் பகுதியில் வெண்கலத்திலான பென்னிகுயிக் உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் ஒன்றை அமைத்தும், தேனி மாநகரப் பேருந்து நிலையத்திற்கு பென்னிகுயிக்கின் பெயரைச் சூட்டியது[5].

பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த நீதிமன்றத்திற்குச் செல்வோம்: தமிழ்நாடு தனக்குள்ள உரிமையை விட்டுக் கொடுக்காமல் தொடர்ந்து உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும், மத்திய அரசின், நீர் ஆணையம் மற்றும் உயர் அமைப்புகளிடம் சட்டரீதியாக நுணுக்கமான கருத்துகளைத் தெரிவித்து, வாதாடி பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடி உயர்த்த நடவடிக்கை எடுத்து வருகிறது[6]. தென் மாவட்ட மக்களின் நீண்டகாலத் தண்ணீர் பிரச்சினையைக் கருத்தில் கொண்டு பெரும் போராட்டத்தில் பல்வேறு இன்னல்களைக் கடந்து கட்டப்பட்ட முல்லைப் பெரியாற்றின் மீதான தமிழ்நாட்டின் உரிமையை எந்நாளும் விட்டுக் கொடுக்காமல் காப்பதற்கு நமது அரசு தொடர் முயற்சி மேற்கொள்ளும் என்பதனையும் தியாகத் திருவுருவமான கர்னல் ஜான் பென்னிகுயிக் பிறந்த நாளில் உறுதி எடுத்துக்கொள்வோம்” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்...

ஆங்கிலேயர் காலத்திலேயே தெரிந்த உண்மைகளை மறைப்பது: ஆராய்ச்சி செய்பவர்களுக்கு இதெல்லாம் நன்றாகவே தெரியும். ஏனெனில், ஆங்கிலேயர் ஒன்று தங்கள் பணத்தைப் போட்டு, எந்த நன்மையினையும் இங்கு செய்து விடவில்லை. பில்லியன்களில் இந்தியர்களிடம் வரிவசூல் மூலம் கொள்ளையடித்ததில்[7], கொஞ்சம் தங்களது போகுவரத்தி, வசதி போன்றவற்றிற்கு செலவிட்டனர். அணைக் கட்டும் விவகாரங்களிலும், தமது மிஷின்கள், பாகங்கள் முதலியவற்றை விற்பத்தில் கமிஷன் பெறலாம் என்ற நோக்கில் தான் செய்து வந்தனர். முன்னர் பழைய வீடுகளில் சாதாரண ஸ்விட்ச், காக்கடை மூடி / காஸ்ட் அயரன் மூடி முதலியவற்றில் “மேட் இன் இங்கிலாந்து,” என்றிருக்கும். அதனால் தான், அந்நிய பொருட்களை புறக்கணிப்போம் என்று பொராட்டம் நடத்தினார். சுவதேசி பொருட்களை வாங்க வேண்டும் என்று எடுத்துக் காட்டினார். ஏ.டி.மெகன்ஸி என்ற இஞ்சினியர், தமது நூலில் “பெரியாறு திட்டத்தைப் பற்றிய வரலாறு” பற்றி குறிப்பிட்டுள்ளார்[8].

2016 இக்கட்டுகதை எடுத்துக் காட்டப் பட்டது: ஆகஸ்ட் 2016லேயே, தீபா கந்தசாமி என்பவர், இதெல்லம் கட்டுக்கதை என்று எடுத்துக் காட்டியுள்ளார்[9]. சொத்தை விற்று அணை கட்டியது – அதெல்லாம் கட்டுக்கதை, அதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று ஸ்ட்ரௌட் சாம்ப்ஸன், பென்னிகுவிக் பேரன் சொன்னதாக, குறிப்பிட்டார். ஆங்கிலேய கருவூல அதிகாரிகளுக்கு இவரது வேலை திருப்தி அளிக்கவில்லை, அதனால், மாவீரர் பட்டம் (knighthood) அந்தஸ்தும் கொடுக்கப் படவில்லை என்றும் பேரன் வருத்தப் பட்டுக் கொண்டார்[10]. ஏ.டி.மெகன்ஸியின் புத்தகத்தில் உள்ள விவரங்களைக் குறிப்பிட்டுள்ளார். ஜான் பென்னிகுவிக்கின் கல்லறை கல்லில் கூட அவர் கிரிக்கெட் ஆடினார் என்று தான் குறிப்பிடப் பட்டுள்ளதேயன்றி, அணைப் பற்றி ஒன்றும் குறிப்பிடப்ப்டவில்லை. ஆகவே, இந்த அணைக்கும், இவருக்கும் ஏதோ பிரச்சினை உள்ளது என்று தான் தெரிகிறது.

2018 – எஸ்.ராமநாதன் பொறியாளர் எடுத்துக் காட்டியது: எஸ். ராமநாதன் FIE, பென்னிகுவிக்கை நினைவு கொள்வோம் என்ற கட்டுரையில், விவரமாக எழுதியுள்ளார்[11]. ஸ்ட்ரௌட் சாம்ப்ஸன், “பெரியாறின் நீரை தடுத்து திசைத் திருப்ப வேண்டும் என்பது பழைய திட்டமே. (ஆங்கிலேயர்களால் முன்னர்) பல ஆய்வுகள் மேற்கொண்டு அது தேவையில்லை, நடைமுறையில் ஒத்துவராது என்றெல்லாம் குறிப்பிட்டுள்ளார்கள்,”  என்றும் ராமநாத குறிப்பிட்டுள்ளார்[12]. அதாவது, பொருளாதார ரீதியில் ஆங்கிலேயர்களுக்கு இதில் விருப்பம் இல்லை என்று தெரிகிறது. இருப்பினும், வலுக்கட்டாயமாக,இதனைக் கட்டியது, இங்கிலாந்திலிருந்து மிஷின்களை வாங்கி இறக்குமதி செய்தது, முதலியன, வேறெதையோ சுட்டிக் காட்டுகிறது. ஒருவேள நிதி விவகாரங்களில் பிரச்சினை ஏற்பட்டிருக்கலாம். அதனால் தான், கருவூல அதிகாரிகள் இவரது செயல்களில் திருப்தியடைவில்லை என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

2022ல் வெண்ணிலா கூறுவது: அ. வெண்ணிலா என்பவர் விகடனுக்குக் கூறியது[13], “முதல்வரின் செய்திக் குறிப்பில்ஆங்கில அரசு தொடர்ந்து நிதி உதவி செய்து அணை கட்ட முடியாத சூழலில், பென்னி குக் தன் சொத்துக்களை விற்று அணை கட்டினார்என்றுள்ளது. பென்னி குக் பற்றி கடந்த 25 ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட அழகிய கற்பனை இது……[14] முதல்வரின் வார்த்தைகள் அரசாங்க சாசனம். அதுவே எதிர்கால உண்மை. மாண்புமிகு முதல்வர் அவர்கள் எந்த வரலாற்று ஆவணத்திலும் இல்லாத ஒரு செய்தியைக் குறிப்பிட்டுள்ளதைக் கவனத்தில் கொண்டு சரிசெய்ய வேண்டுகிறேன்[15]. ஏற்கெனவே பல ஊடகங்களில் பலர் தனக்குத் தோன்றியதையெல்லாம் எழுதி எழுதி முதல்வரே நம்பும் அளவிற்கு உண்மையாக்கப்பட்டுள்ள கற்பனை இது[16]………. பிரிட்டீஷ் இந்தியா நிதி கொடுக்க முடியவில்லை என்றால் திட்டம் தொடருமா? பிரிட்டீஷ் இந்திய கவர்னரின் உத்தரவை மீறி பென்னி அணை கட்டியிருக்க முடியுமா? அணை கட்ட அரசாங்கம் செய்த செலவுக்கு பைசா விகிதம் அணை கட்டிய உதவிப் பொறியாளர் A.T.Mackenzie எழுதிய ‘History of the periyar project’ நூலில் வரவு செலவு கொடுத்துள்ளார். சில கற்பனைகள் இதமானவை. இனியவை. கலைக்க கூடாதவை. ஆனால் அவை எளிய மக்களின் வாய் வார்த்தைகளில் புழங்கும்வரை ரசிக்கலாம்”. இதை இவர் பேஸ்புக்கிலும் பதிவு செய்துள்ளார்.

© வேதபிரகாஷ்

18-01-2022.


[1] NEWS18 TAMIL, தமிழ்நாடு அரசு சார்பில் இங்கிலாந்தில் பென்னிகுயிக்குக்கு சிலைமுதல்வர் மு..ஸ்டாலின் அறிவிப்பு, Published by: Karthick S, First published: January 15, 2022, 20:35 IST LAST UPDATED : JANUARY 15, 2022, 20:35 IST.

[2] https://tamil.news18.com/news/tamil-nadu/chennai-district-chennai-corporation-mayor-post-allocated-to-schedule-caste-woman-skd-667755.html

[3] தினகரன், தமிழ்நாடு அரசு சார்பில் இங்கிலாந்தில் பென்னி குயிக் சிலை நிறுவப்படும்: முதலமைச்சர் மு..ஸ்டாலின் அறிவிப்பு, 12:07 pm Jan 15, 2022 | dotcom@dinakaran.com(Editor)

[4] https://m.dinakaran.com/article/news-detail/735010

[5] நக்கீரன், இங்கிலாந்தில் தமிழ்நாடு அரசு சார்பில் பென்னிக்குயிக் சிலை” – முதலமைச்சர் மு..ஸ்டாலின் அறிவிப்பு, Published on 15/01/2022 (12:30) | Edited on 15/01/2022 (12:33)

[6] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/tamilnadu-government-will-be-set-penny-kwik-statue-england

[7]  தாதாபாய் நௌரோஜி, அம்பேத்கார் முதலியோர் எடுத்துக் காட்டியுள்ளனர். சமீபத்தில் சசிதரூரும் இதைப் பற்றி பேசி-எழுதியுள்ளார்.

[8] A.T.Mackenzie , Executive Engineer , who later wrote the book “ History of the Periyar Project “..

[9] Th Mint, John Pennycuick: The man who built the Mullaiperiyar dam, 11 min read . Updated: 28 Aug 2016, 12:04 AM IST. Deepa Kandaswamy.

 In the popular narrative, many claim that Pennycuick sold his property and his wife’s jewels to fund the dam’s construction. However, his great-grandson, Stuart Sampson, in an email said, “It is a myth. I have no evidence of this.” 

[10] Another common tale is that Pennycuick was subjected to an inquiry commission by the British government. To this, Sampson said, “I am not aware it. It seems clear that he did not make himself popular with the treasury officers of the Indian government. This is probably the reason why he did not receive a knighthood.” Deepa Kandaswamy is an award-winning freelance writer and author based in India.

https://www.livemint.com/Sundayapp/3PeedgK5bx4Z9uPKEE0KPL/John-Pennycuick-The-man-who-built-the-Mullaiperiyar-dam.html

[11] S. Ramanathan, Let us Remember Colonel John Pennycuick : Birthday Tributes , E-News: 31| January 2018, pp.3-5.

[12] He (Stuart Sampson) boldly uttered “ The idea of thus diverting the waters of the Periyar is probably very ancient. Surveys have been made in a some-what half- hearted manner, to condemn the idea as impracticable”.

http://ieimadurailc.org/images/newsletter/E-News__Jan_2018.pdf?fbclid=IwAR3WM28cWfM3wxS2n83UfehJGA6b5cdQmnP8dPctX5Z7076D_Y-UznIOKbA

[13] விகடன், சொத்துக்களை விற்று அணை கட்டினாரா பென்னி குக்? முதல்வர் ஸ்டாலின் சொல்வது சரியா?, யுவநந்தினி சே, Published: 15th Jan, 2022 at 7:37 PM; Updated: 2 days ago.

[14] https://www.vikatan.com/amp/story/news/tamilnadu/article-about-stalins-announcement-on-john-pennycuick-birthday

[15] தமிழ்.ஏபிபி.லவ்,Writer Vennila on Pennycuick : ‘தன் சொத்தை விற்று முல்லை பெரியாறு அணைக் கட்டினாரா பென்னிகுயிக்?’ இல்லை என்கிறார் எழுத்தாளர் வெண்ணிலா..!, By: இராஜா சண்முகசுந்தரம் | Updated : 17 Jan 2022 12:45 PM (IST)

[16] https://tamil.abplive.com/news/tamil-nadu/did-john-pennycuick-sell-his-property-to-build-mullaperiyar-dam-here-is-writer-vennila-explanation-35663

வீரமணி பிறந்த நாளும், திராவிடப் புராணமும், திராவிட வரலாற்றுவரைவியலும் – உண்மையும்-கட்டுக்கதையும்!

திசெம்பர் 4, 2016

வீரமணி பிறந்த நாளும், திராவிடப் புராணமும், திராவிட வரலாற்றுவரைவியலும்உண்மையும்கட்டுக்கதையும்!

inside-periyar-tidal-vepery

பெரியார் திடலில், நான்கு சுவர்களுக்குள் நடக்கும் சித்தாந்த கூட்டங்கள், கருத்தரங்கள் இத்யாதிகள்: திராவிடர் கழகம்-பெரியார் திடலில் நடக்கும், நடத்தப் படும் கூட்டங்கள், கருத்தரங்கள், மாநாடுகள் போன்றவை நான்கு சுவர்களுக்குள் நடக்கும் விவகாரங்களாக இருக்கின்றன. “அகில இந்திய பகுத்தறிவாளர் 7வது மாநாடு” கூட 2009ல் அப்படித்தான் நடந்தது. அவர்களுக்கு வேண்டியவர்கள், அவர்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள், அவர்களது சிந்தாதந்தத்திற்கு ஒத்து ஊதுபவர்களுக்குத் தான் அங்கு இடம் கொடுக்கப்படும்[1]. மற்றவர்களுக்கு அங்கு இடமில்லை. பொதுவாக கேள்விகள் கேட்பது-விவாதிப்பது நடக்காது. அவர்களின் கருத்துகள்: மற்றும் கருதுகோள்கள், சித்தாந்த முதலியவற்றைப் பற்றி கேள்விகள் எழுப்புவது என்பது அறவே நடக்காது. தங்களது கொள்கைகளை, சித்தாந்தத்தை நீர்த்துக் கொண்டு, சமரசம் செய்து கொண்டு, அவர்களை “ஆதரிப்பது” போல அங்கு சென்று கலந்து கொள்ளலாம், அது வேறு விசயம். ஆக தந்தை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், தனயன் அங்கு சென்று வீரமணியைப் பாராட்டுகிறான் என்றால், யோசித்துப் பார்க்க வேண்டும்.

stalin-at-viduthalai-tidal-prasing-veeramani-releases-book-02-12-2016

திமுக ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் பங்கு கொண்டு வாழ்த்தியது (02-12-2016): திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியின் 84–வது பிறந்தநாளையொட்டி அவர் எழுதிய ‘அய்யாவின் அடிச்சுவட்டில்…பாகம் 5’ என்ற புத்தக வெளியிட்டு விழா வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் 02-12-2016 அன்று இரவு நடந்தது[2]. இந்த கூட்டத்திற்கு திராவிடர் கழக துணைத்தலைவர் கலி. பூங்குன்றன் தலைமை தாங்கினார்[3]. இதெல்லாம் அங்கு நடக்கும் சடங்குகள் ஆகும். “தமிழகத்தில் நல்ல எதிர்காலத்தை உருவாக்க அனைவரும் பாடுபட வேண்டும்…., தமிழர்களுக்கு = திராவிட இயக்கத்திற்குப் பொழுதெல்லாம் நெருக்கடி ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் துணை நின்று தாங்கிப் பிடிப்பவர் நம்முடைய தமிழர் தலைவர்[4]. எண்ணிப் பார்க்கிறேன்..., தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி 84ஆம் பிறந்த நாள் விழாவில் அவரை வாழ்த்த எனக்கு வயதில்லை என்றாலும் வணங்கி மகிழ்கிறேன்[5]….”, என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்[6]. நக்கீரன் இதற்கு அதிகமாகவே விளம்பர-செய்திகளைக் கொடுத்துள்ளது, அவர்களது இணைப்புகளைக் காட்டுகிறது[7]. அதன் பொருந்தாத நாத்திக-ஆத்திக வியாபாரத்தையும் வெளிப்படுத்துகிறது[8].  நக்கீரனின் பதிப்புகளை கவனித்தாலே தெரியும். அதனின் குழப்பவாத ஏமாற்றும் சித்தாந்தம் – நக்கீரன், சினிக்கூத்து, பாலஜோதிடம், ஓம், இனிய உதயம், பொது அறிவு, ஹெல்த் சாய்ஸ், ……..என்றுள்ள்ளதை கவனிக்கலாம்.

stalin-at-viduthalai-tidal-prasing-veeramani-02-12-2016-2

குழப்பவாதிகளின் கூடாராமாகி விட்ட திராவிடக் கட்சிகள்: பிறப்பு-இறப்புப் பற்றியெல்லாம் வினோதமான அல்லது மற்றவர்களை விட மாறுபட்ட சித்தாந்தத்தைக் கொண்டுள்ள நாத்திக திராவிட கட்சிகள் பிறந்தநாள்-நினைவுநாள் என்றெல்லாம் கொண்டாடித்தான் வருகிறார்கள். ஆத்மா இல்லை, மறுபிறப்பு இல்லை என்பவர்கள் இவ்வாறு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில், இவர்கள் இறந்தவர்களை எரிக்கவும் மற்றும் புதைக்கவும் செய்கிறார்கள். அதில், இவர்களது போலித்தனம் வெளிப்படுகிறது. நாத்திகக் கருத்துகளைக் கொண்ட இவர்கள் எப்படி, எவ்வாறு தமிழகத்தில் நல்ல எதிர்காலத்தை உருவாக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை[9]. மற்ற வெகுஜன மக்களின் கருத்துகளை, நம்பிக்கைகளை மதிக்கத் தெரியாதவர்களாகவே இவர்கள் இருந்து வந்துள்ளனர். திராவிட கழக வெளியுறவு செயலாளர் குமரேசன் வரவேற்றார்[10]. வக்கீல் அருள்மொழி தொடக்க உரையாற்றினார்.  ஸ்டாலின் வீரமணிக்கு வாழ்த்தும் தெரிவித்தார்[11]. பெரியார் திமுகவை, “கண்ணீர் துளிகள்” என்று விமர்சித்தார், ஆனால், இப்பொழுது, திக-திமுக இவ்வாறு கொண்டாடுவது வியப்புதான்[12].

stalin-at-viduthalai-tidal-prasing-veeramani-02-12-2016

இந்துத்துவவாதிகள் மற்றும் திராவிட சித்தாந்திகளின் குழப்பவாதங்கள் ஒத்துப் போவதேன்?:  “இல்லை” மற்றும் “இருக்கிறது” என்ற முறையில் தான் அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள். “இல்லை” என்று ஒருசாராரும் மற்றும் “இருக்கிறது” என்று எதிர்சிந்தனையாளர்களும் கருத்து மோதல்களில் ஈடுபட்டிருக்கிறர்கள். ஆனால், இரு சித்தாந்த கூட்டங்களும் தமக்கு ஆதாரமாக, ஒரே இரண்டாம் தர மூலங்களைக் காட்டுகின்றன [Secondary sources]. இந்துத்துவவாதிகளின் குழப்பவாதமும் இவர்களுடன் ஒத்துப் போவது வேடிக்கையாக இருக்கிறது. “பெரியாரின் மறுபக்கம்”, “திராவிட மாயை” என்றெல்லாம் புத்தகங்கள் வெளியிடப் பட்டுள்ளன. ஆனால், ஏற்கெனவே இரண்டாம் மூலங்களில் உள்ளவற்றை வைத்து தான் எழுதப் பட்டுள்ளனவேயன்றி, மூலங்களைப் பார்த்து [Original sources] எழுதப்பட்டவைகளாக இல்லை. எல்லாவற்றையும் “இந்துத்துவமாக்க” வேண்டும் என்ற பிடிவாதத்துடன், அவர்கள் அவ்வாறு எழுதி வருகின்றனர். ஒரு தடவையாவது, பெரியார், வீரமணி, ஆனைமுத்து, கலி. பூங்குன்றன் போன்றோரைப் பார்த்து பேட்டி கண்டிருப்பார்களா, குறைந்த பட்சம் ஈரோட்டிற்கு சென்று, பெரியாரின் 70-80-90 வயது நண்பர்களை சந்தித்து விசயங்களை பதிவு செய்திருப்பார்களா [Field study] என்று தெரியவில்லை. அந்த நாளிதழில் உள்ளது, இந்த பத்திரிக்கையில் இருக்கிறது என்று தான் தொகுத்து [compilation] வெளியிட்டுக் கொண்டிருக்கின்றனர். அதாவது, வீரமணி, விடுதலை ராஜேந்திரன் செய்ததை செய்து வருகின்றனர்.

appar-sambandar-dk-propagandist-booklet-1983

மேற்கோள்காட்டும் மேற்கோள் காட்டி ஆராய்ச்சி” [Quoted quote research] தான் நடந்து கொண்டிருக்கிறது: ஒருவர் தனது எழுத்துகளில் குறிப்பிடுவார். அதனை இன்னொருவர், குறிப்பிட்டு எழுதுவார். பிறகு இன்னுமொருவர் அதைக் குறிப்பிட்டு எழுதுவார். அதற்கும் பிறகு, அவ்விசயம் ஏதோ ஏற்றுக்கொள்ளப்பட்ட விசயம் போல எழுத ஆரம்பித்து விடுகிறார்கள். இத்தகைய “மேற்கோள்காட்டும் மேற்கோள் காட்டி ஆராய்ச்சி” [Quoted quote research] தான் நடந்து கொண்டிருக்கிறது[13]. எஸ்.வி. ராஜதுரை-கீதா மாதிரியோ, வெங்கடாசலபதி போன்றோ ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதில்லை. இல்லை கே. வி. ராமகிருஷ்ணா ராவ் போன்று, புதிய விசயங்களை தருவதில்லை. அத்தகையவை, திராவிட சித்தாந்திகளுக்குத் தான் சாதகமாக இருக்கின்றன. அதாவது, அவர்கள் [திராவிட சித்தாந்திகள்] எழுதி வைத்ததை அப்படியே ஏற்றுக் கொண்டு இவர்கள் [இந்துத்துவவாதிகள்] ஆதாரமாகக் காட்டி, எழுதி வருகின்றனர். இது பாரபட்சமற்ற, நடுநிலையான, விருப்பு-வெறுப்பற்ற ஆராய்ச்சி ஆகாது. இரண்டுமே, இருவிதமான எல்லைகளை மீறும் ஆனால், எதிர்நிலை சித்தாந்தங்களாக உள்ளன. இதை விடுத்து, சமகால ஆவணங்களை சரிபார்க்க வேண்டும், மற்ற மொழிகளில் வந்துள்ளவற்றை பார்க்க வேண்டும். 50-100 ஆண்டுகளில் உள்ளவற்றை மறைக்க முடியாது. ஆனால், அவற்றைப் பார்த்து பதிவு செய்யப்படவில்லை என்றால், மறைக்கப்பட்டு விடும், மறைந்து விடும்.

© வேதபிரகாஷ்

04-12-2016

appar-sambandar-denigrated-under-the-guise-of-jains-samanar

[1]  ஒரிசா பாலு போன்றோர் அத்தகையோரே என்று குறிப்பிடத் தக்கது. “குமரிக் கண்டத்தை” ஆதரித்து, திராவிட சித்தாந்தத்தில் ஊறியுள்ளது போலக் காணப்படுகிறார். விவேகானந்த கல்லூரியில் போதித்து, இங்கு இருக்கும் கருணானந்தமும் அதே போலத்தான்.

[2] தினத்தந்தி, தமிழகத்தில் நல்ல எதிர்காலத்தை உருவாக்க அனைவரும் பாடுபட வேண்டும் மு..ஸ்டாலின் பேச்சு, பதிவு செய்த நாள்: வெள்ளி, டிசம்பர் 02,2016, 10:31 PM IST; மாற்றம் செய்த நாள்: சனி, டிசம்பர் 03,2016, 4:30 AM IST

[3] http://www.dailythanthi.com/News/State/2016/12/02223111/Everyone-should-strive-to-Stalins-Speech.vpf

[4] நக்கீரன், தமிழர்களை தாங்கி நிற்கும் உரிமைக்குரல் கி.வீரமணி: ஸ்டாலின் புகழாரம்!, பதிவு செய்த நாள் : 3, டிசம்பர் 2016 (14:14 IST); மாற்றம் செய்த நாள் :3, டிசம்பர் 2016 (15:12 IST)

http://nakkheeran.in/users/frmNews.aspx?N=178857

[5] http://nakkheeran.in/users/frmNews.aspx?N=178857

[6] விடுதலை, தமிழர் தலைவர் ஆசிரியர் 84 ஆம் ஆண்டு பிறந்த நாள், வெள்ளி, 02 டிசம்பர் 2016 17:16, http://www.viduthalai.in/headline/134077—-84—-.html

[7] நக்கீரன், கி.வீரமணி 84ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா, பதிவு செய்த நாள் : 30, நவம்பர் 2016 (14:4 IST); மாற்றம் செய்த நாள் :30, நவம்பர் 2016 (17:34 IST)

[8] http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=178609

[9] http://tamiltvnews-news7.blogspot.com/2016/12/stalins-speech-at-veeramanis-84th.html

[10] http://www.viduthalai.in/headline/134077—-84—-.html

[11] தமிழ்.முரசு, வீரமணி பிறந்த நாள் மு..ஸ்டாலின் வாழ்த்து, டிசம்பர்.3, 2016.

http://www.tamilmurasu.org/latest_news.asp?Nid=20301

[12] http://www.tamilmurasu.org/latest_news.asp?Nid=20301

[13]  கிருத்துவர்களின் ஆராய்ச்சி பெரும்பாலும் இப்படித்தான் இருக்கும். முகமதியர்களைப் பொறுத்தவரையில், அரேபிக், பாரசீகம், உருது தெரியாமல், அவர்களது ஆவணங்களைப் படிக்க முடியாது. இல்லையென்றால், அவற்றைப் படித்துசொல்பவர்களை நம்பத்தான் வேண்டியிருக்கிறது.

பூணூல் அறுப்பில் முடிந்துள்ள தாலி அறுப்பு – பிராமண தாக்குதல், திராவிட இனவெறி, மறைக்கப்படும் இனவெறிக் குற்றங்கள் (2)

ஏப்ரல் 23, 2015

பூணூல் அறுப்பில் முடிந்துள்ள தாலி அறுப்பு – பிராமண தாக்குதல், திராவிட இனவெறி, மறைக்கப்படும் இனவெறிக் குற்றங்கள் (2)

நாடார்கள் பார்ப்பனர்களை ஆதரிக்கிறார்களா அல்லது அரசியல் லாபத்திற்காக பேசுகிறார்களா?; தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது[1]: “நேற்று மாலை 7மணி அளவில் மயிலாப்பூர் கோவிலில் பிரார்த்தனை முடித்துக் கொண்டு மாதவப்பெருமாள் கோவில் தெருவில் உள்ள தன் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த 80 வயது நிரம்பிய பெரியவரான விஸ்வநாத குருக்களைத் தாக்கி துன்புறுத்தி அவரது பூணூலையும் அறுத்தெறிந்து பெரியார் வாழ்க என்று கோஷமிட்டவாறே அராஜகம் செய்துள்ளனர். கொளத்தூர் மணியை தலைவராக கொண்டுள்ள திராவிட விடுதலை கழகத்தினர் இச்செயல் மிக வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்பதில் யாருக்கும் எவ்வித கருத்து வேறுபாடும் இருக்கவியலாது. தமிழக பாரதிய ஜனதா கட்சி இதை மிக வன்மையாக கண்டிக்கிறது. அவரவர் கொள்கைகளை ஓங்கிப்பிடித்து கருத்துக்களை வெளிப்படுத்த அனைவருக்கும் உரிமை உண்டு. அதற்காக ஏதுமறியாத அப்பாவி பெரியவரை அவரது வீட்டிற்கு அருகிலேயே, நடுத்தெருவில் தாக்கியது மிகக் கொடூரமான செயல் என்பதோடு, அனைத்து தரப்பினராலும் வன்மையாகக் கண்டிக்கத்தக்க ஒன்றாகும். விஸ்வநாத குருக்கள், பாரதிய ஜனதா கட்சியின் தென்சென்னை கலை மற்றும் கலாச்சாரப்பிரிவில் பொறுப்பாளராக இருக்கும் மங்கலநாதனின் தகப்பனார் என்பது குறிப்பிடத்தக்கது. சம்பவத்திற்குப் பிறகு, அப்பெரியவர் ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுத் திரும்பியுள்ளார்.

 

தாலி அறுப்பு, இணைதள யுத்தங்கள், நாத்திகம்

தாலி அறுப்பு, இணைதள யுத்தங்கள், நாத்திகம்

பிரதான கட்சிகள் அமைகாக்கும் போதது, உள்ளூர் பிஜேபி மட்டும் கண்டிக்கிறது: கருத்துச் சுதந்திரமும், கொள்கைப்பிடிப்பும் மதம் மற்றும் கடவுள் நம்பிக்கைகளும் அவரவரின் விருப்பு, வெறுப்புக்களைப் பொறுத்தது. இதில் மற்றவர் தலையீடு என்பது தனிநபர் சுதந்திரத்தில் தலையிடுவதற்கு ஒப்பாகும். திராவிடக் கழகத்தினர் இம்மாதிரியான கோழைத்தனமான செயல்களை அரங்கேற்றுவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். மற்றவர்களின் உணர்ச்சிகளுடனும் உரிமைகளுடனும், விளையாடுவதை இனியும் தொடரக்கூடாது என்பதை வலியுறுத்திச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம். மேலும் இதே மாதிரியான பிறிதொரு நிகழ்வு, நேற்று, மேற்கு மாம்பலம் சத்திய நாராயணா கோவில் அருகிலும் நடந்தேறியுள்ளது என்பதை நோக்குகையில், திராவிடக் கழகத்தினர் திட்டமிட்ட முறையில் இம்மாதிரியான நாகரீகமற்ற செயல்களை நடத்தியுள்ளனர் என்பது தெரியவருகிறது. திராவிட விடுதலைக் கழகத்தினர் தமது கருத்துக்களை மற்றவர்கள் மீது நேரடியாகத் திணிப்பதை எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. பொது மக்களின் அமைதிக்கு பங்கம் விளைவித்து குழப்பத்தையும், வேறுபாடுகளையும் தோற்றுவிக்கும் இம்மாதிரியான அராஜக செயல்களை இனியும் அவர்கள் தொடராத வண்ணம் இந்நிகழ்வினை அனைத்துக் கட்சியினரும் வன்மையாகக் கண்டிக்க முன் வர வேண்டும். வன்முறையில் ஈடுபட்டுள்ள திராவிட விடுதலைக் கழகத்தின் 4 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்பது சற்றே ஆறுதல் அளிக்கும் செய்தியாக இருப்பினும் தமிழக அரசு, உடனடியாக நடவடிக்கை எடுத்து இம்மாதிரியான அராஜகங்கள் தமிழ்நாட்டில் தொடராத வண்ணம் சட்டம் ஒழுங்கினைப் பேண வேண்டும். பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பினை வழங்க வேண்டும். வன்முறைச் செயல்களில் ஈடுபட்டோரை சட்டத்தின் முன்பு நிறுத்தி கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது”, இவ்வாறு அவர் கூறியுள்ளார்[2]. இருப்பினும் மற்ற பிரதான அரசியல் கட்சிகள் மௌனமாக இருக்கின்றன[3].

வீரமணி, ஜவஹருல்லா, கம்யூனிஸ்ட் இத்யாதிகள்

வீரமணி, ஜவஹருல்லா, கம்யூனிஸ்ட் இத்யாதிகள்

தாக்கப்பட்டது எத்தனை பிராமணர், அறுக்கப்பட்டது எத்தனை பூணூல்: பூணூல் என்பது பிராமணர்களுக்கு மட்டுமல்ல, மற்ற சமூகத்தினருக்கும் புனிதமாக உள்ளது, எனவே, அதனை அவமதித்தல், அவற்றை அணிந்தவர்களைத் தாக்குதல் முதலியன குற்றம் ஆகும் என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டது[4]. இருப்பினும் பிராமணர்களிடையே இது ஒரு பீதியினையும், பயத்தையும் கிளப்பிவிட்டுள்ளது என்றும் அறியப்படுகிறது[5]. 80லிருந்து 12 வயதுள்ள நான்கு பிராமணர்கள் தாக்கப்பட்டனர் என்று “தி டெலிகிராப்” தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது[6]. மேலே குறிப்பிட்ட இருவரைத் தவிர, திருவல்லிக்கேணியில் ஒரு வயதானவர் மற்றும் 12 வயது பையன் கோவிலுக்குச் சென்று வரும்போது தாக்கப்பட்டு, பூணூல் அறுக்கப்பட்டுள்ளது[7]. அப்படியென்றால், இவர்கள் இருவரும் பயந்துகொண்டு புகார் கொடுக்கவில்லை என்றாகிறது. இத்தகைய நிகழ்சிகள் 1960களிலிருந்தே நடந்து வருகின்றன. பூணூல் அறுப்புகளில் பலியான பிராமணர்கள் நிறைய பேர்கள் உள்ளனர். பொதுவாக பிராமணர்களை பயமுறுத்த அவர்களை “ஏய் பாப்பான்” என்று விளித்து ஏளனம் செய்வது, “என்ன ஐயரே?” என்று அடையாளங்காட்டி பேசுவது, “ஏ குடுமி, பார்த்து போ”, “ஐயரே வீட்ல அம்மா சௌக்கியமா?” என்ற பல தொணியில் கத்திப் பேசி அவர்களை கிண்டல் செய்வது என்பதைவிட, தாக்குதலில் ஈடுபடுவர். ஆனால், 90% பேர் அவற்றை வெளியில் சொல்வதில்லை. செய்திகள் வழியாகத்தான் இப்பொழுது விசயங்களை அறிய வேண்டிய நிலயுள்ளது. ஆனால், சாதாரண மக்கள் இருக்கும் செய்திகளைத் தேடி பிடித்து ஆராய்ச்சி செய்து கொண்டிருக்க மாட்டார்கள். அந்நிலையில் செய்திகளை காலந்தாழ்த்தி வெளியிடுவது, முன்னும்-பின்னுமாக வெளியிடுவது, நடந்த கண்டனத்திற்குரிய குற்றத்தை முதலில் வெளியிடாமல், அதனை கண்டித்த செய்தியை முதலில் போடுவது போன்ற யுக்திகளை சித்தாந்த, பாரபட்ச மற்றும் வியாபார பலன்களை எதிர்பார்க்கும் ஊடகங்கள் கையாளுகின்றன.

பொன்.ராதா, விடுதலை, சுப்ரமணியன் சுவாமி, சங்கராச்சாரியார்

பொன்.ராதா, விடுதலை, சுப்ரமணியன் சுவாமி, சங்கராச்சாரியார்

பொன்.ராதாகிருஷ்ணன், சுப்ரமணியன் சுவாமி, சங்கராச்ச்சாரி படம் போட்டு விடுதலை திரிபுவாதம்: முன்பு பேஸ்புக்கில், ஒரு படத்தில் சங்கராச்சாரிரியார் நாற்காலியில் உட்கார்ந்திருப்பது போலவும், அவருக்கெதிரே, கீழே பொன்.ராதாகிருஷ்ணன், உட்கார்ந்திருப்பது போலவும், இன்னொரு படத்தில் சுப்ரமணியன் சுவாமி அவருக்கிணையாக நாற்காலியில் உட்கார்ந்திருப்பது போலவும் காட்டி, இப்படித்தான் நாடார்கள் நடத்தப்படுகிறார்கள் என்பது போல விவாதித்திருந்தார்கள். இப்பொழுது, பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழிசை சௌந்தரராஜன் பூணூல்-அறுப்பு விசயத்தில் கண்டித்து பேசியிருந்ததால், வீரமணி உடனே அப்படத்தைப் போட்டு, திரிபுவாதம் செய்திருக்கிறார்[8].  “கருங்சட்டை” என்ற பெயரில் பேஸ்புக்கில், சில இந்துக்கள் ஜாதி ரீதியில் விவாதித்தை இங்கு உபயோகப்படுத்தி விமர்சிக்கப்பட்டுள்ளது[9]. இந்துக்கள் தாங்களே பிரச்சினைகளை உருவாக்கக் கூடாது என்பதற்கு இது இன்னொரு உதாரணம். ஏனெனில், அது எதிரிகளுக்கு உபயோகமாகி விடும்.

Attack on temples racial in US and Tamilnadu also

Attack on temples racial in US and Tamilnadu also

இனவெறி குற்றங்கள் இந்தியாவில் ஏன் அடையாளம் காணப்படுவதில்லை?: சமீபத்தில், வெளியில் நடந்த ஒரு நிகழ்சியில், மத்திய அமைச்சர் கிரிராஜ் கிஷோர் என்பவர், “ராஜிவ் காந்தி ஒரு நைஜீரிய நாட்டுப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டிருந்தால், காங்கிரஸ் அவரை தலைவராக ஏற்றுக் கொண்டிருப்பார்களா?”, என்று பேசினார். அதனை, காங்கிரஸ் ஊடகங்களின் உதவியோடு, ஊதி பெரிதாக்கி, அமைச்சர் உடல்-நிறம் பற்றி பேசி, இனரீதியில், பாரபட்சமாக தாக்கியுள்ளார், அதனால், பாராளுமன்றத்தில் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று பிடிவாதம் பிடித்தனர். அவரும் அவ்வாறே, வெளியே-உள்ளே மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். அதேபோல, தமிழகத்திலும், திராவிடக்கழகம் மற்றும் கருப்புப் பரிவார் கூட்டங்கள், மேலே எடுத்துக் காட்டியபடி, பலவிதங்களில் பிராமணர்களைத் தாக்கி வருகிறார்கள். அது இனரீதியில், இனவெறி மனப்பாங்கில் தான் உள்ளது. அத்தகைய இனவெறி மனப்பாங்கை, வார்த்தை தீவிரவாதம் முறையில் பேசி-எழுதுவதை விட, இவ்வாறான “கொலைவெறி” தாக்கிதல்களிலும் வெளிப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் இப்பொழுது இந்து கோவில்கள் தாக்கப்பட்டு வருவதை, “இனவெறி தாக்குதல்” என்றே அடையாளம் கண்டுள்ளனர். அதேபோல, நாத்திகத்தால் இந்து மதத்தை மட்டும் தாக்கி, பிராமணர்களை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப் பட்டுவருவதால், இவர்கள் அத்தகய குற்றங்களை செய்து வருவது கவனிக்கத்தக்கது. நாகரிகத்தில் சிறந்த, வளர்ச்சியில் உயர்ந்த, அதிக முன்னேற்றம் கண்ட ‪அமெரிக்கர் ‪ இனவெறி ரீதியில் இந்து கோவில்களைத் தாக்கி வருகின்றனர்! இங்கு ‪திகவினரும், கடந்த 60 ஆண்டுகளாக அதே குற்றங்களை செய்து வருகின்றனர்! பிறகு எப்படி இவ்விரு கூட்டத்தினரும் ஒரே குற்றங்களை செய்து வருகின்றனர்?

© வேதபிரகாஷ்

23-04-2015.

[1] http://www.maalaimalar.com/2015/04/21133515/Thamizhisai-condemns-Traditiou.html

[2] மாலைமலர், பூசாரிகள் பூணூல் அறுப்பு: தமிழிசை சவுந்தரராஜன் கடும் கண்டனம் , பதிவு செய்த நாள் : செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 21, 1:35 PM IST

[3] The Bharatiya Janata Party’s Tamil Nadu unit president Tamizhisai Soundararajan said she was shocked and condemned the attacks. However, major political parties in the state were silent on the issue.

http://www.business-standard.com/article/news-ians/six-held-for-attacks-on-brahmins-in-chennai-115042101166_1.html

[4] http://newstodaynet.com/chennai/brahmins-attacked-poonool-cut-city

[5] G. C. Sekhar, Attacks fuel Brahmin fears, The Telegraph, Wednesday, April.22, 2015. http://www.telegraphindia.com/1150422/jsp/nation/story_15964.jsp#.VTboMdKqqko

[6]  Four Brahmins, including an 80-year-old and a 12-year-old, were attacked here by suspected activists of a fringe group who snapped their holy threads, the first such assaults in over two decades.

http://www.telegraphindia.com/1150422/jsp/nation/story_15964.jsp#.VTboMdKqqko

[7] A third elderly man and a 12-year old boy were attacked at Triplicane today while on way to a temple. G. C. Sekhar, Attacks fuel Brahmin fears, The Telegraph, Wednesday, April.22, 2015.

[8] http://www.viduthalai.in/page-8/100141.html

[9] கருங்சட்டை, வன்முறையைத் தூண்டுகிறார் மத்திய அமைச்சர்?, http://www.viduthalai.in/page-8/100141.html

பூணூல் அறுப்பில் முடிந்துள்ள தாலி அறுப்பு – பிராமண தாக்குதல், திராவிட இனவெறி, மறைக்கப்படும் இனவெறிக் குற்றங்கள் (1)

ஏப்ரல் 23, 2015

பூணூல் அறுப்பில் முடிந்துள்ள தாலி அறுப்பு – பிராமண தாக்குதல், திராவிட இனவெறி, மறைக்கப்படும் இனவெறிக் குற்றங்கள் (1)

Viswanatha sastri and 5 arrested youth of DK

Viswanatha sastri and 5 arrested youth of DK

பூணூல் அறுப்பு பற்றி தமிழ் ஊடகங்களின் செய்தி வெளியீடுகள்: சென்னையில் 19-04-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று இரவில், இரண்டு இடங்களில் கோவில் அர்ச்சகர்களின் பூணூல் அறுக்கப்பட்டு, தாக்கப்பட்டது தொடர்பாக ஆறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சென்னை மைலாப்பூர் முண்டக்கண்ணியம்மன் கோவில் தெருவில் 4வது தெரு  மாதவப் பெருமாள் அக்ரகாரத்தில் வசிக்கும் விஸ்வநாத குருக்கள் என்பவர் 19-04-2015 அன்று இரவு தனியாக நடந்து வந்து கொண்டிருந்தபோது, கருப்பு சட்டை அணிந்து  3 பைக்குகளில் வந்த “6 பேர்” என்று தினகரனும், மோட்டர் சைக்கிள்களில் வந்த “சிலர்” என்று பிபிசியும் குறிப்பிட்டு, திடீரென அவரைத் தாக்கி, அவரது பூணூலை அறுத்ததாகக் கூறப்படுகிறது[1] என்கிறது தமிழ்.பிபிசி. விஸ்வநாத குருக்களை வழிமறித்து கொலை வெறி தாக்குதல் நடத்தி பூணூலை அறுத்தெறிந்தது. அவர் விழுந்து மயங்கினார் என்றும் தினகரன் கூறுகிறது.  76 வயதாகும் விஸ்வநாதன்[2] காரணீஸ்வரர் கோவிலில் அர்ச்சகராக பணிபுரிந்துவருகிறார், என்கிறது பிபிசி. ஆனால், தினகரன், சிவ விஸ்வநாத குருக்கள் (78) திண்டிவனம் அருகே உள்ள கோயில் ஒன்றின் பூசாரி. இவரது மகனும் பூசாரி.  மயிலாப்பூர் காவல் நிலையத்தில் காரணீஸ்வரர் கோவில் அர்ச்சகர்கள் இந்தச் சம்பவம் தொடர்பாக புகார் அளித்தனர்.  துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவுப்படி இன்ஸ்பெக்டர் ஷியாம் வின்சென்ட் சம்பவ இடத்துக்கு விரைந்தார். அதற்குள் கும்பல் பைக்கில் தப்பியது.  விஸ்வநாத குருக்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

போலிசிடம் புகார் - seythikal.com photo

போலிசிடம் புகார் – seythikal.com photo

பார்ப்பன ஆட்சியில் சூத்திரர்களின் தாக்குதலா அல்லது திராவிடர் கலகமா?: “உள்ள சூத்திர ஆட்சியைக் காப்போம்” என்று கடந்த மாநில தேர்தலுக்கு முன்னர் போஸ்டர்கள் ஒட்டினார்கள், “ஆரிய அம்மையார் ஆட்சிக்கு வந்து விடுவார்”, என்று கருணாநிதியே வெளிப்படையாக பேசினார். அதாவது திராவிடம் பேசி, திராவிடக் கட்சிகளை வைத்துக் கொண்டு, ஆட்சி செய்து கொண்டிருந்தாலும், ஜெயலலிதா ஆண்டால் “பிரமாண ஆட்சி”, கருணாநிதி ஆண்டால் “சூத்திர ஆட்சி” என்றுதான் விளக்கம் கொடுத்து வருகிறார்கள். அதனால் தான் வெளிப்ப்டையாக, “உள்ள சூத்திர ஆட்சியைக் காப்போம்”, “ஆரிய அம்மையாரை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்போம்”, என்றுதான் சுவரொட்டிகள் ஒட்டினார்கள், பேசி வருகிறார்கள். திராவிடத்துனுள் இப்படி நடந்து வரும் ஆரிய-திராவிடம் தமிழ்-மலையாள[3], பார்ப்பன-சுத்திரப் போராட்டங்கள் அலாதியானவை தாம்! குற்றம் புரிய தூண்டும் நோக்கம்-மூலம் (mens rea) எங்கிருந்து வந்துள்ளது, பாதுக்காக்கப்படுகிறது என்பதனை, “இந்துக்கள்” கண்டு கொள்ள வேண்டும்[4]. வீரமணி, ஜெயலலிதா முதலில் ஆட்சிக்கு வந்தபோது, “ஆரிய-திராவிட யுத்தம் தொடர்கிறது” என்ற சிறுபுத்தகத்தை வெளியிட்டார், பிறகு மறைத்துவிட்டார். இப்பொழுது, இத்தாக்குதல் கடந்த ஆண்டுகளில் பிரமண துவேசத்தில், அவர்கள் இலக்கானது நினைவுகூற வைக்கிறது[5] என்று “பிசினஸ் ஸ்டான்டெர்ட்” என்ற ஆங்கில நாளேடு குறிப்பிடுகிறாது. இதை எழுதி முடிக்கும் வேளையில், “தி இந்து”வின் செய்தி ஏனோதானோ என்ற விதத்தில் “BJP condemns attack” வந்துள்ளது[6].  அதாவது இச்செய்தி, செய்தி இல்லையா அல்லது அறிவிக்கப்பட வேண்டிய அவசியல் இல்லையா அல்லது மறைக்கப்பட வேண்டிய தேவையா?

jaya-nakkeeran- மாட்டுக்கறி மாமி கேலி

jaya-nakkeeran- மாட்டுக்கறி மாமி கேலி

திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் கைது: இந்த சம்பவம் நடந்து சிறிது நேரம் கழித்து, இரவு 8.30 மணியளவில் மேற்கு மாம்பலத்தில் வசிக்கும் சந்தான கோபாலன் என்ற 69 வயது முதியவர் ஒருவரும் தாக்கப்பட்டார்.  அவர் அணிந்திருந்த பூணூலை பைக்கில் வந்த கும்பல் அறுத்து வீசியது. அங்குள்ள சத்திய பெருமாள் கோயிலில் பஜனை பாடும் சந்தான கோபால் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று இன்னொரு நாளேடு குறிப்பிடுகிறது. இந்தச் சம்பவங்கள் தொடர்பாக திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த நான்கு பேர் [ Dravidar Viduthalai Kazhagam (DVK)] முதலில் கைது செய்யப்பட்டனர். பிறகு இருவர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது கும்பலாகக் கூடுதல், அவதூறாக பேசித் தாக்குதல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது[7] என்று பிபிசி கூறுகிறது. போலீசார் இரவோடு இரவாக விசாரணை நடத்தி, திராவிடர் விடுதலை கழகத்தை சேர்ந்த ராயப்பேட்டை நந்தகுமார், பிரபாகரன், திவாகர், பிரதீப்,  ராவணன் ஆகிய 5 பேரை கைது செய்தனர். இவர்கள் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் புழல் சிறையில் அடைத்தனர். மேலும் திருவல்லிக்கேணியை சேர்ந்த அருண் குமார் என்பவரையும் போலீசார் கைது செய்தனர் என்று தினகரன் கூறுகிறது[8].

2006ல் தாக்குதல் - அயோத்தியா மண்டபம்- விழுப்புரம் கோவில்

2006ல் தாக்குதல் – அயோத்தியா மண்டபம்- விழுப்புரம் கோவில்

குற்றங்களில் ஈடுபட்டவரை, மறுபடிமறுபடி குற்றங்களில் ஈடுபடுத்தும் போக்கு: கைது செய்யப்பட்டவர்களுள் இருவர் ஏற்கெனவே 2013ல் பெட்ரோல் குண்டு எறிந்த வழக்கில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பிடிக்கப்பட்டவர்கள் என்பது கவனிக்கத்தக்கது[9] என்று “பிசினஸ் ஸ்டான்டெர்ட்” எடுத்துக் காட்டிட்டியுள்ளது. இவ்வாறு, குற்றங்களில் ஈடுபட்டவரை, மறுபடி-மறுபடி குற்றங்களில் ஈடுபடுத்தும் போக்கு (habitual offenders), ஜிஹாதிகள், அல்-உம்மா-சிமி கோஷ்டிகளின் போக்கைக் காட்டுகிறது.  குற்றங்களை கூட்டி-ஒன்றக்கும் (Compunding of offences) முறையில் தண்டனை கொடுப்பதால், அதே குற்றத்தை மறுபடி-மறுபடி செய்து கொண்டிருக்கிறார்கள். அதாவது, ஒரு கொலை செய்தாலும் கொலை, ஒன்றிற்கு மேற்பட்ட கொலைகள் செய்தாலும் கொலை தான் என்று கொலைக்குற்றத்திற்கு தண்டனைக் கொடுக்கப்படுகிறது. இதே நிலை தான் குண்டுவெடிப்பில் ஈடுபட்டு, நூற்றூக்கணக்கான அப்பாவி மக்களைக் கொள்ளும் கிராதகர்களுக்கும் இருக்கிறது! “காலையில் கைது, மாலையில் விடுதலை” என்ற பாரம்பரியமும் தமிழகத்தில் பின்பற்றப்பட்டு வருகிறது. இதனால், இவர்களும் தொடர்ந்து, அதே குற்றங்களை செய்து வருகின்றனர்.

வீரமணி, ஜவஹருல்லா, கம்யூனிஸ்ட் இத்யாதிகள்

வீரமணி, ஜவஹருல்லா, கம்யூனிஸ்ட் இத்யாதிகள்

பிராமணர்களின் எதிர்ப்பும், உள்ளூர் பிஜேபி ஆதரவும்: இந்தத் தாக்குதல் சம்பவங்களையடுத்து, காரணீஸ்வரர் கோவில் அர்ச்சகர்கள், சிவாச்சாரியார் சங்கங்களைச் சேர்ந்தவர்கள், பாரதீய ஜனதாக் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆகியோர் மைலாப்பூரில் பிற்பகலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்[10]. இதுதொடர்பாக, தேசிய அகில பாரத பிராமணர் சங்க கொள்கை பரப்பு செயலாளர் ராமசுப்பிரமணியன் கூறும்போது, ‘விசுவநாத குருக்களை தாக்கி பூணூலை அறுத்த செயலை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இதுபோன்ற செயல்களில் ஈடுபடும், பெரியார் கொள்கைகளை பின்பற்றும் அமைப்பை தடை செய்ய வேண்டும். நாங்கள் ஒன்று சேருவோம். பொங்கி எழுவோம்’ என்றார்[11]. திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட கட்சிகளைத் தடைசெய்ய வேண்டுமென்றும் அவர்கள் கோரினர். ஆனால், இவர்கள் எல்லோருமே, மற்ற நேரங்களில் அமைதியாக இருந்து கொண்டிருக்கிறார்கள் என்பதனை கவனிக்க வேண்டும். திராவிட சித்தாந்திகளின் தொந்தரவுகள், தாக்குதல்கள் மற்றும் குற்றங்கள் தொடர்ந்து இருப்பதை கண்டும் காணாமல் இருக்குக் போது, குற்றங்கள் பெருங்குற்றங்கள் ஆகும் மற்றும் திட்டமிட்ட குற்றங்களாகவும் (organized crimes) வெளிப்பட்டு பாதிக்கும்.

thamizh mithran photo- thread cut

thamizh mithran photo- thread cut

தாலி அறுப்பு, பூணூல் அறுப்பாக மாறியுள்ளது: சில நாட்களுக்கு முன்பு வேப்பேரி பெரியார் திடலில் திராவிடர் கழகம் சார்பில் தாலி அகற்றும் போராட்டம் நடந்தது. அப்போது திராவிடர் கழகத்தினருக்கும் சிவசேனா தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரையும் சேர்ந்த 26 பேர் கைது செய்யப்பட்டனர். பெண்களின் தாலியை அகற்றிய திராவிடர் கழகத்தினரின் கறுப்பு சட்டையை அகற்றுவோம் என்று பாஜக எச்சரிக்கை விடுத்தது. மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசும் போது, “கருப்பு சட்டை அணிவது அவர்கள் உரிமை என்றால் தாலி அணிவது இவர்கள் உரிமை”, என்று பேசினார். இந்நிலையில், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் “திராவிடர் கழகத்திற்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேட்டி அளித்தார்”, என்கிறது இன்னொரு நாளேடு! “கருப்பு துணி என்பது துக்க நிகழ்ச்சிக்கு அடையாளமாக அணிவது திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் கருஞ்சட்டை அணிந்து பங்கேற்க கூடாது என்று பெண்கள் வெகுண்டெழுந்தால் இவர்கள் என்ன செய்வார்கள்? நம்பிக்கை சார்ந்த விசயங்களில் தலையிட்டால் தமிழகம் முழுவதும் கருஞ்சட்டை அகற்றும் போராட்டம் வெடிக்கும்”, என்று எச்சரிக்கை விடுத்தார்[12]. எச். ராஜா கூறுகையில், ‘‘இந்துக்களின் நம்பிக்கைகளை அவமானப்படுத்தும் திராவிடர் கழகத்தினரின் வாசகங்களை அழிப்போம்’’, என்றார். இதற்கு பழிவாங்கும் செயலாக பூணூல் அறுப்பு செயல் நடந்து இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள்[13]. இதற்கிடையே பாஜவின் கலை கலாசார அணி சார்பில் லஸ் கார்னரில் தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது[14]. இது தொடர்பாக திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் அருள், ஊடகங்களிடம் பேசிய போது, பாஜகவின் எச். ராஜா போன்றவர்கள் பெரியார் குறித்து அவதூறாகப் பேசுவதுதான் இது போன்ற சம்பவங்களைத் தூண்டிவிடுகிறது என்று குறிப்பிட்டார்[15]. ஆனால், இந்த மெத்தப் படித்த வழக்கறிஞர், பெரியார் இந்துக்களைப் பற்றியும், இந்து மதம், மத-கடவுளர்கள் பற்றியும் அவதூறாக, ஆபாசமாக தூஷித்து பேசி-எழுதியதை சிறு-குறும்புத்தகங்களாக வெளியிட்டதை, வெளியிட்டு வருவதை கண்டுகொள்ளவில்லை.

© வேதபிரகாஷ்

22-04-2015.

[1] பிபிசி.தமிழ், கோவில் அர்ச்சர்களின் பூணூல் அறுப்பு: ஆறு பேர் கைது, 21-04-2015

[2] இவரது வயதும் 76, 78, 80 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 80 என்று குறிப்பிட்டால், இரக்கம் அதிகமாகும் என்று 70களிலேயே போட விரும்புகிறார்கள் போலும்!

[3] எம்ஜியார் ஆட்சியின் போது, அவரை “மலையாளத்தான்”, “தமிழன்” அல்ல, அதனால், “தமிழ் நாட்டை தமிழன் தான் ஆளவேண்டும்”, என்ற கோஷத்தை வைத்தார்கள்.

[4] https://dravidianatheism.wordpress.com/2010/10/23/jayalalitas-arayan-rule/

[5] The attacks were reminiscent of the hatred towards Brahmins in Tamil Nadu that prevailed many decades ago.

http://www.business-standard.com/article/news-ians/six-held-for-attacks-on-brahmins-in-chennai-115042101166_1.html

[6] The BJP on Tuesday strongly condemned the attack on priests carried out by workers of the Dravidar Viduthalai Kazhagam (DVK) and urged the State government to take stern action to put an end to such incidents. In a statement, BJP leader, Subramanian Swamy, said there were reports that miscreants entered houses of several Brahmin priests and attacked them violently. Their sacred threads were also cut. “These wanton attacks are because of the incompetent administration in Tami Nadu, which is today unable to maintain law and order or act in any way which is required of them under the Constitution,” he alleged. Reacting to the development, BJP Tamil Nadu president, Tamilisai Soundararajan, said the attacks were cowardly. One of the victims, Vishwanatha Gurukkal of Mylapore, was the father of a BJP functionary. “No one can accept the DVK imposing its views on others. In order to ensure they do not continue such divisive activities, all political parties should condemn these attacks,” she said. The State should ensure protection for the people against such attacks and stern punishment should be awarded to the perpetrators of such violence, she said.

http://www.thehindu.com/news/cities/chennai/bjp-condemns-attack/article7127944.ece

இதற்கான பதிலை ஏற்கெனவே, அங்கு இவ்வாறு பதிவு செய்து, “When Churches were targeted for petty theft or otherwise, the media hype created would be phenomenal, but when Brahmins attacked and their sacred threads cut, it has been very slow to report. Incidentally,  One of those held included a man detained in 2013 under the National Security Act for allegedly hurling a petrol bomb. In other words, the habitual offenders are used to commit such crimes targeting Brahmin community. Then what is the difference between the racial attacks on Hindu temples there in US and here on the Hindus? By the way how is Ganapathy, your reporter was attacked and his sacred threat cut some 35 years ago?”, பேஸ்புக்கில் ஷேரும் செய்து விட்டேன்.

[7] All those arrested have been booked under several sections of IPC, including rioting, wrongful restraint, promoting enmity on grounds of religion or caste and causing public mischief.

http://www.business-standard.com/article/pti-stories/priest-bhajan-singer-attacked-sacred-threads-cut-115042101204_1.html

[8] தினகரன், கோயில் குருக்கள் பூணூல் அறுப்பு தி.வி.கழகத்தினர் 6 பேர் கைது, 22-04-2015: 02:01:14.

[9] While five of the attackers, belonging to Dravidar Viduthalai Kazhagam and aged between 25 to 30, were arrested and remanded to judicial custody, police said they are on the lookout for the other two.  One of those held included a man detained in 2013 under the National Security Act for allegedly hurling a petrol bomb, police said.

http://www.business-standard.com/article/pti-stories/priest-bhajan-singer-attacked-sacred-threads-cut-115042101204_1.html

[10] http://www.dailythanthi.com/News/Districts/Chennai/2015/04/22042018/Hindu-organizationsDemonstration.vpf

[11] தினத்தந்தி, பூணூல் அறுப்பு சம்பவத்துக்கு எதிர்ப்பு: இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம், மாற்றம் செய்த நாள்: புதன், ஏப்ரல் 22,2015, 4:20 AM IST; பதிவு செய்த நாள்: புதன், ஏப்ரல் 22,2015, 4:20 AM IST

[12] http://tamil.oneindia.com/news/tamilnadu/dvk-cadres-misbehave-with-archakar-chennai-225168.html

[13] http://www.ptinews.com/news/5944477_Priest–bhajan-singer-attacked–sacred-threads-cut.html

[14] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=142158

[15] http://www.bbc.co.uk/tamil/india/2015/04/150421_punool

கால்டுவெல் சிலை ஊழியம் செய்யும் கிறிஸ்தவராலேயே சேதப்படுத்தப்பட்டது!

மே 6, 2013

கால்டுவெல் சிலை ஊழியம் செய்யும் கிறிஸ்தவராலேயே சேதப்படுத்தப்பட்டது!

ஞாயிற்றுக்கிழமைதிருப்பலி நாள்: தூய திரித்துவ ஆலயத்தில் ஆராதனை நடந்து கொண்டிருந்தது. “யூகேரிஸ்ட்” அந்த பலியில் அப்பம் மற்றும் சாராயம் ஏசுகிருஸ்துவின் மாமிசம் மற்றும் ரத்தமாக மாற்றி உண்மை கிருத்துவனுக்கு ஞானத்தைக் கொடுக்கும். அத்தகைய பலியில் பங்கு கொண்டிருந்தபொழுது அருள்ராஜின் மனதில் என்ன எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன என்பது கர்த்தருக்கும், ஏசுவிற்கு, பரித்த ஆவிக்கும் தான் தெரியும். அந்த திரியேகத்துவ சர்ச், கால்டுவெல் நினைவிடத்திற்கு முன்னால் தான் இருக்கிறது. ஆராதனை முடிந்ததும், வெளிவந்த அருள்ராஜுக்கு கால்டுவெல்லின் சிலை தெரிகிறது. ஏதோ தீர்மானம் செய்தது போல வேகமாக நடந்தான்.

கால்டுவெல் சிலையைத் தாக்கி சேதப் படுத்தியது: முன்னர் குறிப்பிரடப்பட்டபடி, காலை 11 மணியளவில் நினைவு இல்லத்தின் முன்பகுதியில் உள்ள தூய திரித்துவ ஆலயத்தில் ஆராதனை நடந்தது. அப்போது இடையன்குடி சேகரம் இலக்கரிவிளையை சேர்ந்த சவரிமுத்து மகன் அருள்ராஜ் (29) என்பவர் நினைவு இல்லத்திற்குள் நுழைந்தார். இந்நிலையில் இடையன்குடி அருகே உள்ள இலக்கரிவிளையை சேர்ந்த சவரிமுத்து மகன் அருள்ராஜ் (29) நேற்று காலை சுமார் 10.15 மணிக்கு பிஷப் கால்டுவெல் சிலையின் பின்புற தலைப்பகுதி, இடது தோள்பகுதி, சிலையின் பீடம் ஆகியவற்றை சுத்தியலால் சேதப்படுத்தினார்[1]. திடீரென சம்மட்டியால் பிஷப் கால்டுவெல் சிலை யின் பக்கவாட்டு பகுதி மற்றும் தலையின் பின்பகுதியை சேதப்படுத்தினார். பீடத்தில் பதிக்கப்பட்ட கிரானைட்டையும் உடைத்தார்.

கிருத்துவமதம் பரப்பிய கால்டுவெல் சிலையை உடைக்கத் தூண்டியது என்ன?: இவர் கிறிஸ்தவ ஊழியம் செய்து வருகிறார். ஆகவே, கிருத்துவமதம் பரப்பிய கால்டுவெல் மீது, கிறிஸ்தவனான அவனுக்கே ஏன் அத்தகைய கோபம் வந்தது, உணர்ச்சி மேலிட சிலையை சேதப்படுத்த, எது தூண்டியது என்று யோசிக்கும் போது வியப்பாக இருக்கிறது. ஆனால், சாணர்களுக்கு, இவர் மீது நிச்சயம் கோபம் இருக்கிறது. ஏனெனில், தனது புத்தகத்தில் அவர்களைப் பற்றி மிகவும் இழிவாக எழுதியிருக்கிறார் தமிழுக்காக பாடுபட்ட கால்டுவெல்.

தானாகவே சுத்தியுடன் சென்று போலீஸில் சரணடைந்தது: சிலை சேதபடுத்தப்பட்டதற்காக, உவரி இடையன்குடி பஞ்சாயத்துத் தலைவர் மற்றும் சி.எஸ்.ஐ. சேகர செயலர், ஜேகர் உவரி போலீசில் புகார் செய்தார்[2]. ஆனால், அருள்ராஜ் தானாகவே உவரி போலீசில் சென்று சுத்தியலுடன் சரணடைந்தார். ஏதோ சாதித்து விட்டது போல, சுத்தியலை வைத்து சரணடைந்தது கண்டு, போலீஸாரே வியஎது போயினர். அவரை உவரி இன்ஸ்பெக்டர் சிவராஜ்பிள்ளை விசாரணை நடத்தி கைது செய்தார்[3]. இந்த சம்பவம் அப்பகுதியில்  பரபரப்பை ஏற்படுத்தியது.

கால்டுவெல் நினைவிடம் வந்த விதம்[4]: இடையன்குடியில் தமிழுக்கு ஓப்பிலக்கணம் எழுதிய பிஷப் கால்டுவெல் (1814–1891) வாழ்ந்த இல்லம் உள்ளது. “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்ற நூலை எழுதியவருமான பிஷப் கால்டுவெல்லின் தமிழ்த் தொண்டைப் பாராட்டி, திசையன்விளை அருகே இடையன்குடியில் அவர் வசித்த வீட்டை தமிழக அரசு நினைவிடமாக அறிவித்தது.  இந்த இல்லத்தில் பிஷப் கால்டுவெல்லுக்கு அரை உருவ வெண்கல சிலை மற்றும் 19 லட்சம் ரூபாய் செலவில் பல்வேறு பணிகள் நடந்தன. கடந்த 2011ம் ஆண்டு அரசு நினைவில்லமாக முன்னாள் முதல்வர் கருணாநிதியால் வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைக்கப்பட்டது[5].

மூத்த, முதிய தமிழ் பண்டிதர்களை ஒதுக்கிய கருணாநிதி: அப்பொழுதே, உண்மையான, நேர்மையான தமிழ் பண்டிதர்களுக்கு மனம் கஷ்டப்பட்டது. ஆனால், 60-90 வயதானவர்கள் இப்பொழுதெல்லாம் ஒன்றும் பேசுவதேயில்லை. அவர்களது கருத்துகளையும் யாரும் கேட்பதில்லை. கருணாநிதியைப் புகழ்ந்து, பாராட்டிப் பேசினால் தான் கௌரவம், பாராட்டு, பட்டம், பதவி என்ற நிலை வந்த பிறகு, அவர்கள் மௌனிகளாக ஆகிவிட்டனர். ஆனால், கால்டுவெல் அப்படியொன்றும் தமிழைக் காக்க வரவில்லை, கெடுக்கவே வந்தான்[6].

சாணார்களை இழிவுபடுத்தி எழுதிய புத்தகங்களைப் பற்றி மறைத்தது: சாணார்களுக்கு அறிவில்லை, மந்தமான புத்தி உடையவர்கள், அவர்கள் படிப்பதர்கு லாயக்கில்லை…..என்றெல்லாம் ஒரு புத்தகத்தில் எழுதினார்[7]. பிரச்சினை எழுந்தவுடன், அப்புத்தகத்தைத் திரும்பப் பெற்றதாக, ஆங்கில அரசு அரிவித்தது. ஆனால், விரிவான மற்றொரு புத்தகத்தை, லண்டனில் வெளியிட்டது. அதாவது, இந்தியாவைப் பொறுத்தவரைக்கும், அது திரும்பப் பெற்றதாக இருக்கலாம், ஆனால், உலகத்தைப் பொறுத்த வரைக்கும், அக்கருத்துதான், படித்தவர்கள் எல்லோரும் கொண்டிருப்பர். கருணாநிதி, நிச்சயமாக, வேண்டுமென்றே அமைதியாக இருந்திருக்கிறார். சாணர்களை இழுவு படுத்திய புத்தகம் முதலில் சென்னையில் 1849ல் வெளியிடப்பட்டது[8]. அப்பொழுதே அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப் பட்டது. அதனால், பிரதிகளை ஆங்கில அரசு பதுக்கிவிட்டது. ஆனால், மறு வருடமே, அதாவது 1850 லண்டனில் அதனை விரிவாக்கி வெளியிடப்பட்டது[9].

© வேதபிரகாஷ்

06-05-2013


[4] வேதபிரகாஷ், கால்டுவெல்வாழ்ந்தவீடுநினைவிடமாகமாற்றம், https://dravidianatheism.wordpress.com/2010/01/30/house-of-caldwell-converted-to-memorial/

[5] வேதபிரகாஷ், சரித்திரத்தைமறைத்தகிருத்துவபாதிரிக்குகருணாநிதி கௌரவம்!, https://dravidianatheism.wordpress.com/2010/01/29/caldwell-honured-without-anyy-remorse-by-tn-government/

[6] வேதபிரகாஷ், கால்டுவெல்புராணம்தொடர்கிறது……………, https://dravidianatheism.wordpress.com/2010/01/30/caldwell-purana-continues/

[7] வேதபிரகாஷ், கால்டுவெல்லைவைத்துக்கொண்டு, தமிழர்களைஇழிவுபடுத்தும்செயல்கள், https://dravidianatheism.wordpress.com/2011/02/18/denigrating-tamils-with-robert-caldwell/

[8] Robert Caldwell, The Tinnevelly Shanars: A Sketch of Their Religion and Their Moral Condition, and Characteristics as a Caste. With Special Reference to the Facilities and Hindrances to the Progress of Christianity Amongst Them, London, 1849.

[9] Michael Bergunder, Heiko Frese, and Ulrike Schröder (Edited by), Ritual, Caste, and Religion in Colonial South India, Verlag der Franckeschen Stiftungen zu Halle, 2010, p.139

திராவிடக் குடும்பத்தின் பிரச்சினை – தமிழர்கள் கற்றுக் கொள்ள பாடமா, பகுத்தறிவை பிரித்தறிய சந்தர்ப்பமா?

ஏப்ரல் 30, 2013

திராவிடக் குடும்பத்தின் பிரச்சினை – தமிழர்கள் கற்றுக் கொள்ள பாடமா, பகுத்தறிவை பிரித்தறிய சந்தர்ப்பமா?

கருணாநிதி குடும்பம் பெரியது: திராவிடத் தலைவர் கருணாநிதி குடும்பம் பெரியது, அதனல், அவரின் குடும்பப் பிரச்சினைகளும் அதிகமாகவே இருக்கும். மகன்கள்-மகள்கள்; பேரன்கள்-பேத்திகள் என்று வளர்ந்து விஸ்தரிக்கப்பட்டுள்ள குடும்பம். ஆசியாவிலேயே மிகவும் செழிப்பான, வளமான, செல்வமிக்கக் குடும்பங்களில் ஒன்று புகழும் பெற்றுள்ளது[1]. அந்நிலையில், அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகள் தவிர, இவ்வாறான சொத்துப் பிரச்சினைகளும் வருவதுண்டு. ஆனால், அதன் பின்னணியில் உள்ள பண்பாடு, கலாச்சார காரணிகளைப் பற்றி கவனிக்க வேண்டியுள்ளது. ஏனெனில், கருணாநிதி ஒரு ஆட்சியாளர், சக்தி படைத்தவர், பேச்சால் மக்களைக் கவர்ந்தவர், இன்றும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய அரசியல்வாதி. இவரது அரசியலை விரும்பாதர்கள் கூட, இவரது பேச்சை விரும்பிய காலம் உண்டு. அந்நிலையில், இவரத் குடும்பச் சண்டைகளும் திராவிட சமுதாயத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும், என்ற நிலையில் இப்பிரச்சினை நோக்கப்படுகிறது.

மு..முத்துவின் மனைவி கூறும் புகார்: ஜெ. சிவகாமசுந்தரி தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மூத்த மகன், மு.க.முத்துவின் மனைவியும், மறைந்த திரைப்பட பின்னணி பாடகர் சிதம்பரம் ஜெயராமனின் மூத்த மகளும் ஆவர்[2]. அவர் கூறுவதாவது, “எனக்கு அறிவுநிதி என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு, திருமணமாகி விட்டது. அவரும், அவர் கணவரும், எங்களுக்கு பல்வேறு வகையில் உதவி செய்கின்றனர். சென்னை, கோயம்பேட்டில், என் பெயரில் உள்ள கடை மூலம், மாதந்தோறும், 40,000 ரூபாயும்; என் கணவருக்கு, மாதந்தோறும், 75,000 ரூபாயும் வருமானம் வருகிறது. இதை கொண்டு மருத்துவம் மற்றும் அன்றாட செலவுகளை செய்து வருகிறோம்”.

கார் கூட இல்லை: “என் மாமனார் கருணாநிதி, எங்களுக்கு பல்வேறு வகையில், தொடர்ந்து உதவி புரிந்து வருகிறார். அவர் தான், எங்களுக்கு கார் வாங்கி கொடுத்தார். தற்போது, அந்த காரும் பழுதடைந்து விட்டது[3]. மருத்துவமனைக்கு கூட, ஆட்டோவில் சென்று வருகிறோம். இன்று புகார் கொடுக்க கூட, ஆட்டோவில் தான் வந்துள்ளேன். வயதான நிலையில், உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள எங்களுக்கு, உதவி செய்யாமல், அறிவுநிதி உபத்திரவம் செய்து கொண்டு இருக்கிறார். அறிவு நிதிக்கு, சென்னையில், மூன்று வீடுகளும், கோவையில் ஒரு வீடும் உள்ளன. இது தவிர, பல்வேறு தொழில் செய்து வருகிறார். அவரால் எங்களுக்கு, ஒரு பைசா கூட பிரயோஜனம் இல்லை. அதைப்பற்றி நாங்கள் கவலைப்படவும் இல்லை. நல்லபடியாக இருந்தால், அதுவே எங்களுக்கு மகிழ்ச்சி தான். நாங்கள், கோபாலபுரத்தில் வசித்த வீட்டையும், எங்கள் காலத்துக்கு பின், அறிவுநிதி தான், அனுபவிக்க போகிறார்.

என் மகன் என்னைக் கொடுமைப் படுத்துகிறான்[4]: திமுக தலைவர் மு.கருணாநிதியின் மூத்த மகன் முத்துவின் மனைவி சிவகாமசுந்தரி சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகார் மனு அளித்தார்[5].  அதில் சொத்துக்காக மகன் தன்னை மிரட்டுவதாக கூறியுள்ளார். அவரது புகார் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: “கானத்தூரில் ஒரு வாடகை வீட்டில் நான் இப்போது வசித்து வருகிறேன். வயதாகிவிட்டதால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளேன். எனக்கு, இரண்டு முறை, தலையில், அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. தற்போது நான், மேலும், உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளேன். இந்நிலையில் எனது மகன் மு. . மு. அறிவுநிதி, அவரது மனைவி பூங்கொடி, மாமியார் யோகமங்களம் ஆகியோர் சொத்துக்காக எனக்குத் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகின்றனர். மேலும் அவர்கள், ஆள் மூலமாகவும் என்னை மிரட்டி வருகின்றனர். “ஆள் வைத்து அடித்து, எல்லாவற்றையும் பிடுங்கி விடுவேன்’ என, மிரட்டுவதுடன், தகாத வார்த்தைகளால், பேசி வருகின்றனர்.

 கோபாலபுரம் வீட்டிலிருந்து விரட்டப் பட்டேன்: “சில ஆண்டுகளுக்கு முன்புவரை சென்னை கோபாலபுரத்தில் எனக்கு வீடு இருந்தது. ஆனால் அந்த வீட்டில் இருந்து என்னையும், என் கணவர் முத்துவையும் அறிவுநிதி விரட்டி அனுப்பிவிட்டார். இதன் பின்னர் அந்த வீட்டை அவர் வாடகைக்கு கொடுத்துள்ளார்[6]. இதனால் வேறுவழியின்றி நாங்கள் இங்கு வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறோம். அறிவுநிதி தொடர்ந்து மிரட்டி வருவதால் எங்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறது. மேலும் எங்கள் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே காவல்துறை எங்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும். மேலும் எங்களை மிரட்டும் அறிவுநிதி, பூங்கொடி,யோகமங்களம் ஆகியோர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மு..முத்து மறுக்கும் புகார்: சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மு.க. முத்து புகார் மனு கொடுத்த நிலையில் இந்த புகார் மனுவை மறுத்து மு.க. முத்து சார்பில் திங்கள்கிழமை இரவு ஓர் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் தனது மனைவியை யாரோ தூண்டிவிட்டு இந்த புகார் மனுவை கொடுக்கச் செய்துள்ளதாகவும் தனக்கும் மகனுக்கும் எவ்விதப் பிரச்னையும் இல்லை என்றும் கூறியுள்ளார். எங்களது குடும்பப் பிரச்னைக்கு நானும், எனது மனைவியும், மகனும் பேசி தீர்வு காண்போம் என்றும் கூறியுள்ளார்[7].  மு. க. முத்து கருணாநிதியின் முதல் மனைவியான பத்மாவதிக்குப் பிறந்த மகன். ஒருகாலத்தில் அதிமுகவில் இருந்தவர்[8].

மன்னன் எவ்வழி, மக்கள் அவ்வழியா அல்லது மாற்றுவழியில் செல்வார்களா?: திராவிடப் பாரம்பரியம் வளர்ந்ததிலிருந்து, தமிழக மக்கள் பேச்சில் வல்லவர்களாகி விட்டார்கள். இப்பொழுதே கேட்கவே வேண்டாம், சினிமாவின் போக்கை தமது போக்காக மாற்ரிக் கொண்டுள்ளனர். இந்நிலையில், மன்னன் எவ்வழி, மக்கள் அவ்வழியா அல்லது மாற்றுவழியில் செல்வார்களா என்று பார்க்க வேண்டியுள்ளது. கடந்த 60-70 ஆண்டுகளில் தமிழகத்தில் ஏன் குடும்பம் சார்ந்த முரண்பாடுகள், பிரழ்சிகள், குற்றங்கள்னாதிகமாக நடக்கின்றன, பெருகி வருகின்றன, அதற்கும் திராவிட சித்தாந்தத்திற்கும் தொடர்பு உண்டா இல்லை நாடெங்கிலும் நடப்பது தான் இது என்று ஒதுக்கிவிடலாமா?

இல்லை, நிச்சயமாக,

  • தமிழகத்தில் “திருமண முறிவு விழாக்கள்” இப்பொழுது தான் நடத்தப் பட்டன;
  • தாலி தேவையில்லை என்ற ரீதியில் விஜய் தொலைக் காட்சியும் தமிழகத்தில் நடத்தியுள்ளது;
  • தாலி அறுக்கும் தமிழர்களும் உருவாகி இருக்கிறார்கள்;
  • அது மட்டுமல்ல, கோயிலில் அம்மன் தாலிகளையும் திருட ஆரம்பித்துள்ளனர்.
  • அம்மனின் முன்பு கால் தூக்கி உட்கார்ந்த நடிகை குஷ்பு தான் கற்பின் விலைய பேசியுள்ளாள்.
  • ஆனால், இந்திய பெண்மையை விலைபேசி வரும் ஆங்கில ஊடகங்கள், இவளின் கற்பழிப்புப் பற்றி கருத்துக் கேட்கின்றனர்.
  • யார் வேண்டுமானாலும், யாருடைய மனைவியை கூட்டி வைத்துக் கொள்ளலாம், என்று நாத்திகம் பேசும் பிரபல நடிகனும் – கமல்ஹஸன் இங்குதான் இருக்கிறான்.
  • கணவனை தூரத்தில் வைத்து விட்டு, இந்த கேடு கெட்ட நடிகனுக்கு முத்தம் கொடுக்கும் தமிழச்சிகளும் உருவாகி இருக்கிறார்கள்.

ஆக இதெல்லாம் திராவிட சித்தாந்தத்தின் சாதனைகள் அல்ல; பெண்மையை சீரழித்த சித்தாந்தம்; அதனால் தான் கற்பை விலை பேசும் குஷ்பு போன்ற நடிகைகளும் இருக்கிறார்கள்.

வேதபிரகாஷ்

30-04-2013


[4] The Hindu, Karunanidhi’s eldest son alleges ill-treatment by heir,
CHENNAI, April 30, 2013, http://www.thehindu.com/news/cities/chennai/karunanidhis-eldest-son-alleges-illtreatment-by-heir/article4667607.ece

[6] “A few years ago, our son chased away us from our house in Gopalapuram. He has now rented it out while we stay in a rented, dingy house in Kanathur. This continuous mental torture by our son has been unbearable and due to this, our health also deteriorated,” said Ms. Sivagamisundari in her complaint.

http://www.thehindu.com/news/cities/chennai/karunanidhis-eldest-son-alleges-illtreatment-by-heir/article4667607.ece

[8] Karunanidhi married Dayaluammal four years after his first wife, Padmavathi, died in 1944, leaving behind a son, M.K. Muthu, a singer-actor who defected to the AIADMK. http://www.outlookindia.com/article.aspx?240630

மணல் மேடு, ராமர் பாலம், ரோமிலா தாபர், கருணாநிதி – சரித்திரத்தைப் புரட்டும் வித்தகர்கள் – உடன் பிறப்புகளுக்கு எச்சரிக்கை!

பிப்ரவரி 28, 2013

மணல் மேடு, ராமர் பாலம், ரோமிலா தாபர், கருணாநிதி – சரித்திரத்தைப் புரட்டும் வித்தகர்கள் – உடன் பிறப்புகளுக்கு எச்சரிக்கை!

வயதாகியும் புத்தி மாறவில்லை என்பது கருணாநிதி விஷயத்தில் மெய்யாகிறது. நாத்திகம் என்ற “லைசென்ஸ்” இருந்தால் இந்துக்களைபற்றி எதுவேண்டுமானாலும் பேசலாம், இந்துமதத்தைப் பற்றி என்ன வேண்டுமானாலும் எழுதலாம், இந்துமதநம்பிக்கைகளைப் பற்றி எப்படியும் விவாதிக்கலாம் என்ற எண்ணம், தைரியம் மிகவும் மோசமானது, கேவலமானது. ஏனெனில், “விஸ்வரூபம்” இவர்களின் போலித்தனத்தை முழுவதுமாகத் தோலுறுத்திக் காட்டி விட்டது. நாத்திக உடையை அவிழ்த்து நிர்வாணமாக்கி விட்டது. பகுத்தறிவை ரணகளமாக்கி விட்டது, இருப்பினும் வெட்கம், மானம், சூடு, சுரணை மேலாக “சுயமரியாதை” கூட இல்லாமல் பேசுகிறார்கள், எழுதுகிறார்கள்.

அன்று மணல்மேடு என்று சொன்னவர்கள் இன்று ராமர் பாலம் என்று சொல்லுவதா? கலைஞரின் அறிவார்ந்த வினாவிடுதலை[1], திங்கள், 25 பிப்ரவரி 2013 15:52

சென்னை, பிப்.25-  அன்று வெறும் மணல் திட்டு என்று சொன்னவர் இன்று ராமர் பாலம் என்று முரண்படுவது ஏன் என்று அறிவார்ந்த வினாவை எழுப்பினர் தி.மு.க தலைவர் கலைஞர். முரசொலியில் இன்று அவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:-

உடன்பிறப்பே, இந்திய  உச்சநீதி மன்றம் 2007ஆம் ஆண்டு  செப்டம்பர் முதல் தேதியன்று சேது சமுத்திரம் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு இடைக்காலத் தடை விதித்ததோடு, மாற்றுப் பாதை பற்றிப் பரிசீலிக்க வேண்டுமென்று மத்திய அரசை அறிவுறுத்தியது.   அதன்படி 20.7.2008 அன்று  டாக்டர் ஆர்.கே. பச்சௌரி தலைமையில்  வல்லுநர் குழு ஒன்றினை மத்திய அரசு அமைத் தது.   வல்லுநர் குழு 12-2-2012 அன்று தனது அறிக்கையை மத்திய அரசுக்கு வழங்கியது. 11 மாதங்கள் கழித்து, இப்போது மத்திய அரசு பச்சௌரி குழு வழங்கியுள்ள  அறிக்கையின் மீது  தனது  கருத்துக் களைத் தெரிவித்து, உச்சநீதி மன்றத்தில் 23-2-2013 அன்று  பதில் ஒன்றினைத் தாக்கல் செய்துள்ளது.   அந்தப் பதிலில், ஆதாம் பாலம் வழியாக மட்டுமே சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற முடியும் என்றும், மாற்றுப் பாதையில் இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவது சாத்தியமில்லை என்றும் பிரபல சுற்றுச்சூழல் நிபுணர் ஆர்.கே.பச்சௌரி தலைமை யிலான குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு தெரிவித்துள்ளது. பச்சௌரி  குழுவின் அறிக்கையை உச்சநீதிமன்றத் திடம் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் ரோகின்டன் நாரிமன்  தாக்கல் செய்தார்.

அதில், சேது சமுத்திர திட்டத்தை செயல் படுத்த மாற்றுப் பாதையை தேர்ந்தெடுப்பது பொருளாதார ரீதியாகவும், பூகோள ரீதியாகவும் சாத்தியமற்றது என்று கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பச்சௌரி கமிட்டியின் அறிக்கையை மத்திய அமைச்சரவை இன்னும் ஆராயவில்லை என்பதால், இதன் மீது முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை என்றும் மத்திய அரசு உச்சநீதி மன்றத்திடம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள இந்தப் பதிலைப் பற்றி பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் திரு. ரவிசங்கர் பிரசாத் என்பவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, சேது சமுத்திரத் திட்டத்திற்காக எந்தவொரு சூழ்நிலையிலும் ராமர் பாலத்தை அழிக்கும் முடிவினை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவித்திருக்கிறார். ஆர்.எஸ்.எஸ். மற்றும் பல்வேறு இந்து மத அமைப்புக்களும்,  சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசும், பா.ஜ.க.வைப் பின்பற்றி இதே கருத்தைத்தான்  உச்சநீதிமன்றத்திலே  வலியுறுத்தி இருக்கின்றது.

8.5.2002 அன்றே நான் அன்றைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் பிரதமர் திரு. வாஜ்பாய் அவர்களுக்கு  எழுதிய கடிதத்திலேயே  சேது சமுத்திரத் திட்டம் பற்றிய விவரங்கள் எல்லாம் அடங்கியிருக்கின்றன.   23.7.1967 அன்று சேது சமுத்திரத்தின் ஒரு பிரி வாக உள்ள தூத்துக்குடித் துறைமுகத் திட்டம், சேலம் இரும் பாலைத் திட்டம்  ஆகியவற்றை நிறைவேற்றக் கோரி அறிஞர் அண்ணா அவர்கள் எழுச்சி நாளை அறி வித்தார்.

தேசிய ஜனநாயக கூட்டணி அரசால் 6 எண் பாதை முடிவு

இத்திட்டம் உலகளவில் உள்ள சூயஸ் கால் வாய், பனாமா கால்வாய் போன்று சிறப்பினைப் பெறும் என்பதை அறிந்து இத்திட்டத்தை ஆராய பல குழுக்கள் அமைக்கப்பட்டும் நீண்ட நாட்களாக கிடப்பிலே போடப்பட்டது.  மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட் டணி அரசு அமைந்ததும்,  சேது சமுத்திரத் திட்டம் பற்றிய சாத்தியக் கூற்றினை ஆராய  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.  சேது சமுத்திரக் கால்வாய் அமைய வேண்டிய வழித்தடம்  மற்றும் அதற்கான விவரங்கள் பா.ஜ.க. பிரதமரான  திரு. வாஜ்பாய் அவர்கள் தலை மையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசினால் பரிசீலிக்கப்பட்டு ஆறாவது எண்  பாதை (ஆடம்ஸ் பாலம் அதாவது பாஜக தற்போது ஏற்க முடியாது என்று கூறுகின்ற  ராமர் பாலம்) முடிவு செய்யப் பட்டது.  இவ்வாறு பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசால் எந்தப் பாதையில் திட்டம் நிறைவேற்ற வேண்டும் என்று ஒப்புதல் அளிக்கப்பட்டதை மறந்து இன்றைக்கு  அது ராமர் பாலம் உள்ள இடம் என்றும், அங்கே திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்றும் பா.ஜ.க. வினர் தற்போது கூறுவது எத்தகைய முரண்பாடு என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

பா.ஜ.க. மட்டுமல்ல;  இங்கே தமிழகத்தில்  ஆளு கின்ற அ.தி.மு.க. வின் சார்பில்  2001  தேர்தல் அறிக்கையில்;  இந்திய தீபகற்பத்தைச் சுற்றி இதுவரை தொ டர்ச்சியான கப்பல் போக்குவரத்திற்கு ஏற்ற பாதைகள் இல்லை.  மேற்கிலிருந்து கடல் வழி யாகக் கிழக்கு நோக்கிக் கப்பல்கள் செல்ல வேண்டுமானால்,  இலங்கையைச் சுற்றிக் கொண்டுதான் செல்ல வேண்டியுள்ளது. இதற் குத் தீர்வாக அமைவதுதான், சேது சமுத்திரத் திட்டம்.  இத்திட்டத்தின்படி ராமேசுவரத்திற்கும், இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையில் ஆடம்ஸ் பிரிட்ஜ் பகுதியில் கப்பல் போக்குவரத் திற்குத் தடையாக உள்ள மணல் மேடுகள் மற்றும் பாறைகளை அகற்றி ஆழப்படுத்தி கால்வாய் அமைப்பது சேதுசமுத்திரத் திட்டத்தின் தலையாய நோக்கம் என்று  ஆடம்ஸ் பாலம் அமைந்துள்ள பகுதியில்,  ராமர் பாலம்  என்று இப்போது சொல்கிறார்களே, அதே இடத்தில் அங்கே இருக்கும் மணல் மேடுகள், பாறைகள் ஆகியவற்றை அகற்றி விட்டு கால்வாய் அமைப்பதுதான் தலையாய நோக்கம் என்று சொன்னவர்கள், இன்று ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டுமென்று சொன்னால்  அது எத்தகைய முரண்பாடு என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.   தி.மு. கழகத்தின் முயற்சி யினால் இந்தத் திட்டம் வந்து விடக் கூடாது என்ற உள் நோக்கம் தானே காரணம்?

தேர்தல் அறிக்கையில் சொன்னது மாத்திரமல் லாமல், அ.தி.மு.க. தலைவி  ஜெயலலிதா  26.6.2005 அன்று விடுத்த நீண்ட அறிக்கை ஒன்றில் என்னுடைய வற்புறுத்தலின் பேரில்தான் 1998ஆம் ஆண்டில் இத் திட்டம் ஒரு முன்னுரிமைத் திட்டமாக மேற் கொள்ளப்பட்டு, தொடக்கச் சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு ஆய்வுப் பணி;  தேசிய சுற்றுச் சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்திடம் 1998ஆம் ஆண்டு மார்ச் திங்களில் ஒப்படைக்கப்பட்டது.  இந்நிறுவனத்தின் அறிக்கையும்,  1998ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்களில் அளிக்கப்பட்டது.  இவ்வாறாக, சேது சமுத் திரக் கால் வாய்த் திட்டம் நனவாவதை உறுதிப்படுத்து வதற்கு நான் முக்கியக் காரண மாக இருந்திருக்கிறேன்” என்று அன்றைக்கு இத்திட்டத்திற்கே தான்தான் காரணம் என்பதைப் போலச் சொல்லிக் கொண்ட வரும் இதே ஜெயலலிதா தான் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். சேது திட்டம்  நிறைவேற்றப் படுமானால், அதன் மூலம் தமிழகத்தில் தொழில், வர்த்தகம் பெருகும்; நாட்டின் அன்னியச் செலாவணி வருவாய் அதிகரிக்கும்; கப்பல்களின் பயண தூரம், நேரம் பெருமளவு குறையும்; தமிழகம் மற்றும் அண்டை மாநிலத் துறைமுகங்களில் சரக்குகள் கையாளும் திறன் அதிகரிக் கும்; ராமேசுவரம் அல்லது மண்டபத்தில் புதிய சிறு துறைமுகம் உருவாகும்; சேதுக் கால்வாய் திட்டத்தின்கீழ்  மீன் பிடித் துறைமுகங்கள் மேம்படுத்தப்படுவதால் கடல் சார் பொருள் வர்த்தகம் பெருகி மீனவர்களின்  பொருளாதாரம், வாழ்க்கைத்தரம் உயரும்; மன்னார் வளைகுடாவிலிருந்து பாக் கடல் சென்று வர மீனவர்களுக்கு இக்கால்வாய் வசதி அளிக்கும்;

இத்திட்டத்தால் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு

இலங்கை உள்ளிட்ட வேறு நாடுகளின் துறை முகங்களில் இந்தியச் சரக்குகள் பரிமாற்றம் செய்யப் படுவது தவிர்க்கப்படும்; நாட்டின் கடலோரப் பாதுகாப்பு வலுப்படுத்தப்படும்; இத்திட்டத்தால் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நேரடி, மறைமுக வேலை வாய்ப்பு தொடர்ந்து கிடைக்கும்; சேது சமுத் திரத் திட்டத் தின் மூலம் ஆண்டுக்கு  8 கோடி மனித நாள் வேலை வாய்ப்பு உருவாக்கப்படும். ஏராளமான நேரடி மற்றும்  மறைமுக வேலை வாய்ப்புகள் உருவாக் கப்படும்;

ராமேஸ்வரம், மற்றும் நாகப்பட்டினம்  துறைமுகங்கள் மேம்படுத்தப் படுவதன் வாயிலாக  சுமார் 10 ஆயிரம் பேருக்கு நேரடி வேலை வாய்ப்பு கிட்டும்; சேது சமுத்திரக் கால்வாயை  பயன்படுத்து வதன்  மூலம்  இந்தியா வின் கிழக்கு மற்றும் மேற்கு  கடல் பகுதி களுக்கு  இடையேயான கப்பல் போக்குவரத்து தூரம்  சுமார் 424 மைல் அளவுக்கு குறையும்.  இதன் மூலம் கப்பல்களின் பயண நேரம் 30 மணி அளவிற்கு குறையும் வாய்ப்புள்ளது.  கணிசமான எரிபொருள் சேமிப்பும், அன்னியச் செலாவணி  சேமிப்பும் ஏற்படும். கப்பல் வாடகை கட்டணத்தில் கணிசமான சேமிப்பு ஏற்படும். பயண நேரம் குறைவதால் கப்பல்கள் கூடுதல் பயணங்களை  மேற்கொள்வதன் மூலம் கூடுதல் சரக்குகளை கையாள இயலும்; தென்னிந்தியாவின் கிழக்கு கடற்கரை துறைமுகங்களில் ஒன்று சரக்கு பெட்டக போக்குவரத்திற்கென  ஒருங்கிணைப்புத் துறை முகமாக மேம்படுத்தப்படும்; தூத்துக்குடி துறை முகமாக பெருமளவில்  வளர்ச்சி அடை யும்; கடற் படை மற்றும் கடலோரப் படை கப்பல்கள் கிழக்குப் பகுதியிலிருந்து மேற்கு பகுதிகளுக்கு அதி விரைவில் செல்ல இயலும்.   இதன் மூலம் இந்தியப் படைத் திறன் பெருமளவில் மேம்படுத்தப்படும்; ராமனாதபுரம், நாகப் பட்டினம், தூத்துக்குடி மாவட்டங்களில் கட்டமைப்பு வளர்ச்சி பெருகும்.

தமிழகத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் துணைபுரியும் இத்தகைய  ஏராளமான பயன் களைக் கருத்திலே கொண்டுதான்,  அய்க்கிய முற்போக்கு கூட்டணி அரசு மத்தியில் உரு வானபோது அதன் குறைந்தபட்சச் செயல் திட்டத்தில் தி.மு. கழகத்தின் முயற்சியால்  சேது சமுத்திரத் திட்டம் இடம் பெற்றது மாத்திரமல்லாமல்,   அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் நிதி நிலை அறிக்கையிலும் சேர்க்கப்பட்டு,  அதன் தொடக்க விழாவிற்கு  பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர் களும்,  அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் வழி காட்டும் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்களும், நானும், மற்ற தோழமைக் கட்சித்தலைவர்களும்  மதுரையில் நடைபெற்ற பிரமாண்டமான விழாவிலே கலந்து கொண்டோம்.   சேது சமுத்திரத் திட்டத்தின் தொடக்க விழாவை தடுக்க வேண்டும் என்பதற்காக அப்போது சிலர் நீதிமன்றத்தின் மூலமாக தடை பெற முயன்றனர். அது தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி அவர்களின் பெஞ்ச்,

தேசிய நலனுக்காக கொண்டு வரப்படும் சேது சமுத்திரத் திட்டத்தை தடை செய்யும் நோக்கத்தோடு  மனுதாரர் நீதிமன்றத்துக்கு  விரைந்து வந்து  வழக்கு தொடுத்துள்ளார்.   சேது சமுத்திரத் திட்டம்  நாட்டிற்கு நல்ல பலனை கொடுக்கும் என்பது  எல்லோருக்கும்  தெரிந்த ஒன்றாகும்.   ஏனென்றால்  தற்போது கப்பல்கள்  இலங்கை நாட்டைச் சுற்றி  வங்காள விரிகுடா  கட லுக்கு  வரவேண்டியுள்ளது.    பாக்  ஜலசந்தியிலே  குறுக்காக கப்பல்  கால்வாய்  அமைத்தால்  பெருமளவு  பணமும்,  நேரமும்  சேமிக்கப் பட ஏதுவாகும். இந்தக் கால் வாய்த் திட்டம் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும். ஆகவே விழாவுக்கு  தடை கிடையாது – என்று கூறி தீர்ப்பளித்தது. அவ்வாறு; தொடங்கி வைக்கப்பட்ட சேது சமுத்திரத் திட்டம், அப்போது அமைச்சராக இருந்த தம்பி டி.ஆர்.பாலுவின் நல்ல முயற்சி யின் காரண மாக வேகமாக முன்னேற்றம் அடைந்து கொண்டிருந்த நேரத்தில், மதவாதச் சக்திகள் எப்படியும் அந்தத் திட்டத்திற்கு முட்டுக் கட்டைகளை உருவாக்கிட வேண்டும் என்ற நோக்கத்தோடு நீதிமன்றத்திற்கு இந்தப் பிரச்சினை எடுத்துச் சென்றிருக்கின்றனர்.   உச்ச நீதி மன்றம் விரைவில் இதுகுறித்து நல்ல முடிவெடுத்து தீர்ப்பளிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டுமென்றும், நல்ல தீர்ப்பினைப் பெற்று சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றி தென் தமிழக மக்களின் வாழ்வாதாரம் உயருவதற்கு வழி வகுத்திட வேண்டுமென்றும் வலியுறுத்துகிறேன்.

அன்புள்ள,
மு.க.

சேதுசமுத்திர திட்ட கப்பல் உதிரிபாகங்களும், ரோமிலா தாபர் போன்ற சரித்திர ஆசிரியர்களின் உளறல்களும்!சரித்திர ஆசிரியர்களின் போலித்தனம்[2]: சேதுசமுத்திர திட்டத்தை இந்துக்கள் சார்பாக எதிர்த்தபோது, பலர் அதற்கு எதிராகக் கிளம்பினர். அயோத்யாவை விட்டுவிட்டு, “ராமர் பாலம்” என்றதற்கு சீறி பாய்ந்து வந்தனர், புதிய சித்தாந்தத்தைத் திரித்தனர்[3]. ரோமிலா தாபர் போன்ற சரித்திர ஆசிரியர்கள், ஏதோ தமக்குத்தாம் எல்லாமே தெரியும் என்பது போல பேசினர்[4]. மைக்கேல் விட்செல் போன்ற ஹார்வார்ட் பேராசிரியர்கள், பாகிஸ்தானிற்கு வக்காலத்து வாங்கினர்[5]. அதற்கு உடனே “தி ஹிந்து” போன்ற நாளிதழ்கள் வக்காலத்து வாங்கிக் கொண்டு வந்தன. கருணாநிதி வாய்க்கு வந்தபடி உளறிக்கொட்டியபோது, அந்த ஆளின் வக்கிரம் வெளிப்பட்டது[6]. ஆனால், திட்டமே கிடப்பில் போட்டவுடன், எல்லோரும் அடங்கிவிட்டனர். இருப்பினும் நம்பிக்கையாளர்கள் தொடர்ந்து ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி வரைச் சென்று வழிபாடு செய்து கொண்டுதான் இருக்கின்றனர். அதாவது அவர்களின் உளரல்கள் அல்லது அதி மேதாவித்தனமான கேள்விகள், விமர்சனங்கள் முதலியன குப்பையிலே போடப்பட்டன. அதுபோலவே, இப்பொழுது, “சேதுசமுத்திர திட்ட கப்பல் உதிரிபாகம் பழைய இரும்பு கடையில் விற்பனை” என்று செய்திகள் வருகின்றன.

2008ல் சொன்னது – நம்மால் (கருணாநிதியால்)கண்டுபிடிக்க முடியாதது வேதனை தருகிறது[7]பல  லட்சம் ஆண்டுகளுக்கு  முன்பு  பிறந்ததாக  கூறப்படும்  ராமரின் பிறந்த இடத்தைக் கண்டு பிடித்து  விட்டார்களாம்.  ஆனால்  ஆயிரம் ஆண்டுகளுக்கு  முன்பு  தென்னகத்தையே  ஆட்சி  புரிந்து  வந்த  மாமன்னன் ராஜராஜ  சோழன்  மறைந்த  இடத்தையோ,  அவனது உடல்  புதைக்கப்பட்ட  இடத்தையோ,  அதன்   நினைவாக  அமைக்கப்பட்ட  நினைவிடத்தையோ  நம்மால்  கண்டுபிடிக்க முடியாதது  வேதனை தருகிறது  என்று  கூறியுள்ளார்  முதல்வர் கருணாநிதி.

தம்மை அறியாத “தமிழர்கள்”: தமிழர்கள் 100-150 ஆண்டுகளுக்கு முன்னர், ஆரியமாயையில் திளைத்து, திராவிட மாயையில் சிக்குண்டு, தமது அடையாளத்தைத் தொலைத்தனர். “தமிழர்கள்” என்று சொல்லிக் கொள்பவர்கள் இத்தகைய போலித்தனமான நாத்திகர்கள், இந்துவிரோதிகள் கூறுவதை, எழுதுவதை கவனித்து உண்மையறியாமல் இருந்து வந்தால், நிச்சயமாக அவர்கள் தங்களது மூலங்களை இழக்க நேரிடும், குறிப்பாக பத்துப்பாட்டு-எட்டுத்தொகை நூல்களையும், அவை காட்டும் தமிழர்களின் வாழ்க்கை முறையினையும் மறந்து விடுவர்.

© வேதபிரகாஷ்

28-02-2013


தமிழைக் காக்கும் அரை நிர்வாண நடிகைகள், கவர்ச்சி பெண்கள், “தமிழச்சி” போர்வையில் உலா வரும் மகளிர்!

ஜனவரி 27, 2012

தமிழைக் காக்கும் அரை நிர்வாண நடிகைகள், கவர்ச்சி பெண்கள், “தமிழச்சி” போர்வையில் உலா வரும் மகளிர்!

திராவிடச்சியா, தமிழச்சியா? இனி தமிழ்தான், வேறொதுவுமில்லை என்று திராவிடர்கள் தங்களது போர்வாட்களை ஏந்தி கிளம்பி விட்டார்கள். அடலேறுகள், மடலேறுகள் போரில் குதித்துவிட தயாராக இருக்கிறார்கள். திக, திமிக, அதிமுக, தேமுக, என்று அதுவாக இருந்தாலும், தமிழ்தான். நடிகை ஒன்றை வைத்துக் கொண்டு பேச விடுகிறர்கள், முன்னோட்டமாக! அவள் திராவிடச்சியா என்றால், தமிழச்சி என்று சொல்லிக் கொண்டால் போதும் என்ற நிலையையும் வைத்து விட்டார்கள். முதுகைக் காட்டி நடித்தவர்கள், இன்று புறமுதுகிடாமல் எதிர்த்து நிற்பார்களா? அரைகுறையாக மார்பைக் காட்டியர்வர்கள், மார்பில் விழிப்புண் பெறுவார்களா, இல்லையா? திராவிட சிங்கங்கள் தாம் பதில் சொல்லியாக வேண்டும். மாம், முறத்தையல்ல, முதுகையும், மார்பையும் காட்டியவர்கள் புறப்பட்டு விட்டார்கள்! புலி வருகிறதா, சிங்கம் வருகிறதா என்று தெரியவில்லை!

அதிமுக ஆட்சியில் தான் தமிழ் மொழி வளர்கிறது நடிகை விந்தியா: காஞ்சிபுரம் மத்திய மாவட்ட மாணவர் அணியின் சார்பில் மொழிபோர் தியாகிகளுக்கான வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் மதுராந்தகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.கூட்டத்தில், தலைமை கழக பேச்சாளரும்,நடிகையுமான விந்தியா பங்கேற்று பேசியது: “அறிஞர் அண்ணா உலக தமிழ் மாநாடு நடத்தினார்.அவர் வழியில் வந்த எம்ஜிஆர் மதுரையில் 5-வது உலக தமிழ்மாநாடு நடத்தினார். எம்ஜிஆரின் வழி வந்த ஜெயலலிதா தஞ்சையில் 1995-ஆம் ஆண்டு 8-வது உலக தமிழ் மாநாடு நடத்தினார். தமிழ் மொழிக்காக போராடும் இயக்கம் அதிமுகதான் அதிமுக ஆட்சியில் தான் தமிழ் மொழி வளர்க்கிறது[1]. தமிழோடு ஆங்கிலம் கலந்து பேசாமல் தமிழ் மொழியில் மட்டுமே பேசி பழகுவோம்”, என்றார். ஆமாம், தமிழிலே பேசி பழக வேண்டியதுதான்!

குச்பு தமிழ் வளர்த்த / வளர்க்கும் விதம்: குச்பு என்றால் நாற்றம்,றஆனால், சூடு-சுரணையுள்ளா திடராவிடன் யாரும் குச்பு என்று சொல்வதில்லை. மாறாக, குஷ்பு என்று சொல்லி, கோவில் கட்டி கும்பிடுகிறான். அந்த குச்பு, இன்று தமிளைக் காக்க புறப்பட்டு விட்டாள், தமிழச்சியாக! ஒருமுறை, கருணாநிதி மேடையில் இருக்கும் போது, குச்பு தமிழ் பேசி நாறடித்த போது, கருணாநிதியே “அம்மாடி போதும்டி” என்ற அளவிற்கு வந்து கண்டித்தார். இன்றோ, ஈரோட்டில், குச்பு நாறடித்துக் கொண்டிருக்கிறது. இன்றுள்ள குழந்தைகளுக்கு தமிழ் மொழி குறித்துத் தெரியவில்லை என்று தமிழில் புலமை பெற்ற திமுக நடிகை குஷ்பு ஈரோட்டில் நடந்த மொழிப் போர் தியாகிகள் வீர வணக்க நாள் கூட்டத்தில் கவலை வெளியிட்டார். கூட்டத்தில் அவர் பேசுகையில், இன்றைய குழந்தைகளுக்கு தமிழ் மொழி பற்றி தெரிவது இல்லை. ஆங்கிலம் படிப்பது அவசியம் தான். ஆனால் தமிழ் மொழியை மறக்க கூடாது. பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு தமிழ் மொழியை கற்று கொடுக்க வேண்டும்[2].

சமஸ்கிருதத்திற்குப் பிறகு செம்மொழி ஸ்தானத்தை தமிழுக்கு வாங்கிக் கொடுத்தவர் கருணாநிதி: நான் வேறு மாநிலத்தை சேர்ந்தவர். எனக்கு தமிழ் மொழி பற்றி என்ன தெரியும் என்று நீங்கள் நினைக்கலாம். நான் கடந்த 25 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் வசித்து வருகிறேன். தமிழ் மொழியை பேசுகிறேன். தமிழ் மொழியை நேசிக்கிறேன். தமிழ் உணர்வு – நரம்புக்கும், நாடிக்கும் ஒரு புத்துணர்வை ஊட்டுகிறது. இந்தியாவில் மொத்தம் 42 மொழிகள் உள்ளன. இதில் சமஸ்கிருதம் மட்டுமே செம்மொழி அந்தஸ்து பெற்றிருந்தது. இந்த மொழிக்கு அடுத்தபடியாக தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து பெற்று கொடுத்தவர் தி.மு.க. தலைவர் கலைஞர்தான். இதனால் உலகம் முழுவதும் தமிழன் தலை நிமிர்ந்து நிற்கிறான். தமிழன் என்று சொல்வதில் பெருமைப்படுகிறான். இந்த பெருமையை நமக்கு பெற்று கொடுத்தவர் கலைஞர் தான் என்றார் அவர்.

மொழிப்போரில் மொத்தத் தமிழர்களும் குதிப்போம்: இனி கருணாநிதி சும்மா இருப்பாரா? கருணாநிதி அழைப்பு[3] இப்படி உள்ளது! தமிழை மத்திய ஆட்சி மொழியாக கொண்டு வர அனைத்து கட்சியினரும் ஒன்று சேர்ந்து பாடுபட வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி கூறினார்[4]. காஞ்சிபுரம் மாவட்ட திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் நாள் பொதுக்கூட்டம் காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில் அருகில் நேற்று மாலை நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத் தலைவர் சுந்தர், மாவட்ட துணை செயலாளர்கள் பொன்மொழி, எட்டியப்பன், மல்லிகா மோகன், மாவட்ட பொருளாளர் சுகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர் சன் பிராண்ட் ஆறுமுகம்[5] ஆகியோர் முன்னிலை வகித்தனர். காஞ்சிபுரம் நகர செயலாளர் அ.சேகர் வரவேற்றார்.  கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி கலந்து கொண்டு பேசியதாவது: “ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டுள்ளனர். இதனை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். ஏராளமான தியாக உள்ளங்கள், நம்முடைய தமிழ் தலை நிமிர உயிர் நீத்தார்கள். இவர்களால் தலைக்கு வந்த ஆபத்து நீங்கி விட்டது. தமிழுக்காக அவர்கள் உயிரையும், மூச்சையும் இழந்ததால் பின்னுக்கு தள்ளப்பட்டது இந்தி மொழி. 1938ம் ஆண்டு 14 வயது பள்ளி மாணவனாக, நான் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டேன். இன்றைக்கு எனக்கு வயது 88. ஆகவே, தமிழ் மொழிக்காக 74 ஆண்டுகள், நான் போராடி வருகிறேன்[6]. பெரியார் வழியில் அண்ணா கை பிடித்து போராடினேன். அந்த போராட்டங்கள் நடந்து முடிந்து விட்டது”.

இன்றைக்கும்இந்திமொழிஆதிக்கம்வேண்டுமா? என்ற விவாதம் எழுந்த போது சிறைப்பட்டோம், சித்ரவதை பட்டோம். மொழி போருக்காக போராடிய ஒரே கட்சி திமுக என்று, இங்கு சிலர் பேசினார்கள். ஆனால், எல்லா கட்சிகளும் உரிமை எடுத்து கொண்டு ஒன்று சேர்ந்து போராட வேண்டும். அண்ணா வழியில் வந்தவர்கள் என்ற உணர்வுகளோடு, முல்லை பெரியாறு பிரச்னையில் மொத்த தமிழகமும் போராடினால் நிச்சயம் வெற்றி பெறுவோம். இந்தியாவில் தமிழ் மொழியை ஆட்சி மொழியாக கொண்டு வர வேண்டும். இந்தியை மற்ற மாநிலங்களில் ஆட்சி மொழியாக கொண்டு வர முயற்சிகள் நடக்கின்றன. இதனை கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்கள் ஏற்று கொள்வார்களா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

நாங்கள் தோற்கவில்லை[7] மக்கள்தான் தோற்றார்கள்! நாம் ஆட்சியை இழந்தாலும் தோற்றுப்போனாலும், மக்கள் நம்பக்கம்தான் இருக்கிறார்கள், அவர்கள் என்னை மாத்திரம் அல்ல எனது தலைமையில் உள்ள இந்த கழகத்தையும் கைவிட மாட்டார்கள் என்ற உறுதியோடு உங்கள் முன்னால் நிற்கிறேன். கடையில் போய் சாமான் வாங்கும்போது அந்தத் தோல்வியின் கனம் உங்களுக்குத் தெரியும்[8]. ஆகவே தோற்றது கழகம் அல்ல. தோற்றது வாக்காளர்கள். தாங்கள் தவறு செய்ததை உணர்ந்த பிறகு வாழ்க்கையில் தவறே செய்ய மாட்டார்கள், வாழ்க்கை முழுவதும். அப்படிப்பட்ட ஒரு படிப்பை காஞ்சிபுரத்தில் உள்ள உங்களுக்கு மட்டுமல்ல, தமிழக மக்கள் அனைவருக்கும் கிடைத்துள்ளது.  அந்த பாடத்தை பெற்றுக் கொண்டிருக்கிற நீங்கள், அந்தப் பாடத்துக்கு மதிப்பளித்து எதிர்காலத்திலாவது இப்போது செய்த தவறை இனியும் செய்யமாட்டோம் என்ற உறுதியோடு உங்களையும் காப்பாற்றிக் கொண்டு, இந்த சமுதாயத்தின் எதிர்கால தலைமுறையையும் காப்பாற்றுங்கள்.

திராவிடம்என்றசொல்லைதற்போதுஏற்றுக்கொள்ளமறுக்கிறார்கள்: திமுகவின் நோக்கம், மூத்த மொழியான தமிழை மத்திய ஆட்சி மொழியாக்க வேண்டும். அதற்காக அனைத்து கட்சியினரும் ஒன்று சேர்ந்து இந்த விஷயத்தில் பாடுபட வேண்டும். திராவிடம் என்ற சொல்லை தற்போது ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். திராவிடம் என்பது கலாசாரம், இனம், பண்பாடுகளை கொண்டது. திராவிடர்கள், இந்த நாட்டின் பூர்வீக குடிமக்கள். ஆரியர்கள் வருவதற்கு முன்பே, இங்கு வாழ்ந்தவர்கள் திராவிடர்கள். திராவிடம் என்பது நீயும், நானும் ஏற்படுத்தியது அல்ல[9].

திராவிடம்என்பதுகற்பனைஅல்ல:. நம்முடைய முப்பாட்டன் கண்டுபிடித்த இனத்தின் பெயரை, நாம் பெற்றுள்ளோம்[10]. பேரறிஞர் அண்ணாவே திராவிட நாடு என்ற கைப்பட புத்தகம் எழுதியுள்ளார். அதில், அவர் திராவிட நாடு என்ற கொள்கையை கைவிடவில்லை. திராவிடம் என்பது கற்பனை அல்ல. ஒரு இனத்தின் தாகம், எழுச்சி, மானத்தை உரமாக கொள்கின்ற லட்சியத்தின் அடித்தளம் திராவிடம். ஆகவே, நாம் யாரையும் நம்பி ஏமாந்து விட வேண்டாம்.  தேர்தலுக்கு முன்பு, இந்த எழுச்சி இல்லை. இப்போது, இந்த கூட்டத்தை பார்க்கும் போது, மிக எழுச்சியை காண்கிறேன். எப்படி வந்தது, இந்த எழுச்சி. அடிபட்டால் தான் தெரியும் என்று நீங்கள் சொல்லாமல் சொல்லும் எழுச்சி இது. அறிஞர் அண்ணா, ஒரு முறை தேர்தலின் போது வாக்குகளை சேகரிக்க சென்றார். அப்போது பலர் முகத்தை திருப்பி கொண்டு சென்றார்கள். அண்ணா அடுத்த முறை முதல்வரானதும், சென்னை ராஜ்ஜியம் என்பதை தமிழ்நாடு என்று பெயர் மாற்றினார்[11].

தமிழர்கள்பகுத்தறிவோடு, அண்ணாவின்தம்பிகளாக, கழகத்தின்உடன்பிறப்புகளாகசிந்தித்துவாக்களிக்கவேண்டும்:. அதே அண்ணா தமிழ்நாட்டில் இந்தி மொழி கட்டாயம் இல்லை. தமிழ்நாட்டில் தமிழ் மொழி மட்டும் தான் ஆட்சி மொழி என்று முழங்கினார். தோல்வி என்பது திமுகவிற்கு இல்லை. உங்களுக்கு தான். இப்போது தான் உங்களுக்கு தோல்வியின் கணம் தெரிகிறது. தோற்றது கழகம் அல்ல. தோற்றது வாக்காளர்கள் தான். ஆகவே, எதிர்காலத்தில் மன உறுதியோடு, எதிர்கால தலைமுறையை காக்கும் வகையில், தமிழர்கள் பகுத்தறிவோடு, அண்ணாவின் தம்பிகளாக, கழகத்தின் உடன் பிறப்புகளாக சிந்தித்து வாக்களிக்க வேண்டும். தமிழகத்தை காப்பாற்ற வேண்டும். இவ்வாறு கருணாநிதி பேசினார். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பூங்கோதை, முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா, இளைஞர் அணி அமைப்பாளர் விஸ்வநாதன், காஞ்சிபுரம் திருவள்ளூர் வேளாண் விற்பனை குழு முன்னாள் தலைவர் வி.எஸ்.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர். காஞ்சிபுரம் ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார் நன்றி கூறினார்.


[5] எதற்கெல்லாம் சன் பிராண்டு உள்ளதோ தெரியவில்லை. குச்பு கூட சன் பிராண்ட் தான், அக்மார்க் முத்திரை மாதிரி. பச்சைக் குத்துவது விட்டுவிட்டு, இப்பொழுது பிராண்ட் என்று சொல்லிக் கொள்கிறார்கள் போல!

[6] இப்படியே, அவரவர் வயதை சொல்லிக் கொண்டு, இத்தனை ஆண்டுகள் தமிழுக்காக போராடுகிறேன் என்று சொல்லலாம். குச்பு கூட நாளைக்கு சொல்வார். திராவிடர்கள் ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்!

[8] 2ஜியின் கனத்தை விட அதிகமா, குறைவா என்று கனியும், ராஜாவும், பூங்கோதையும், ராஜாத்தியும் மற்றவர்களும் சொல்ல வேண்டும்.

[9] ஆங்கிலேயர்கள் ஏற்படுத்தினார்கள் என்று சொல்லமல் சொல்கிறார் போலும்!

[10] அதாவது, முப்பாட்டன் காலத்தில், கால்டுவெல் கண்டுபிடித்ததை, அப்படி நாஜுக்காக சொல்கிறார் போலும்! திராவிடர்கள் புரிந்து கொண்டால் சரிதான்.

[11] ஆனால் உதய சூரியன், ராஜாத்தி, மற்ற சமஸ்கிருத பெயர்களை மாற்றவில்லை.

தியான பீடம் மீதான தாக்குதல் மத ரீதியானது: நித்யானந்தா பேட்டி!

ஜூலை 17, 2011

தியான பீடம் மீதான தாக்குதல் மத ரீதியானது: நித்யானந்தா பேட்டி

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=274899

நித்யானந்தாவைப் பற்றிய விவகாரங்கள் ஏற்கெனவே பல பதிவுகளில் விவாதிக்கப்பட்டுவிட்டது. மறுபடியும் இப்பொழுது பழைய புகாருடன் வெளிவந்துள்ளார். ஊடகங்கள், டிவிக்கள், போலீஸார் என அனைவரும் பாரபட்சமாக அல்லது ஒருதலைப்பட்சமாகவே அப்பொழுது செயல்பட்டனர்[1]. அதாவது மற்ற மதத்தினர் இதைப்போன்ற அல்லது இதைவிட கொடூரமான குற்றங்கள் செய்திருந்த போதிலும் அடக்கி வாசிக்கப் பட்டன. ஆனால், இவ்விஷயம் பிரபலமாக்கப் பட்டது[2].

பிரச்சினையை அரசியலாக்கித் திசைத் திருப்பும் போக்கில் ஈடுபடவேண்டிய அவசியம் இல்லை. தவறு / குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படவேண்டியவர்களே.

நித்யானந்தாவின் புகார்: முன்னரே இத்தகைய புகார் கொடுக்கப்பட்டுள்ளது, செய்திகளும் வெளிவந்துள்ளன. ஆனால், அப்பொழுது, பிரச்சினையை அரசியல் ரீதியில் திசைத்திருப்ப, வழக்குகளை பெங்களூருக்கு மாற்றி விட்டனர். ஆனால், அதே நேரத்தில் சில வழக்குகள் இங்கேயே பதிவு செய்தாலும், எதிர்-புகார்களைக் கண்டுக்கொள்ளவில்லை. இப்பொழுது நித்யானந்தா சொல்வது, “நில அபகரிப்பில் ஈடுபடும் நோக்கில், “மார்பிங்முறை வீடியோவை ஒளிபரப்பி, என் மீது, சன்,”டிவியினர் பழி சுமத்தினர். அவர்கள் ராட்சதர்கள். தியான பீடங்கள் மீது நடந்த தாக்குதல், தனிப்பட்ட தாக்குதல் அல்ல; மத ரீதியான தாக்குதல். ராட்சதர்கள் மீது, தமிழக முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது,” என, நித்யானந்தா கூறினார்.

இப்படி எதிர்-குற்றச்சாட்டுகளை எழுப்புவதால் மக்களிடம் / பக்தர்களிடம் ஏற்ப்பட்டுள்ள சந்தேகங்கள் நீங்கி விடாது. உண்மையை வெளிக்கொணர்ந்தால் ஒழிய, அந்நிலை மாறாது.

நித்யானந்தா, சென்னையில் நேற்றுநிருபர்களுக்கு அளித்த பேட்டி: சன், “டிவி’யில் வெளியான வீடியோ காட்சிகளில் இருப்பது நான் அல்ல. அது உண்மையானது அல்ல. முற்றிலும், “மார்பிங்’ முறையில் சித்தரிக்கப்பட்ட காட்சிகள் தான். தினகரன் மதுரை அலுவலக எரிப்பு சம்பவத்தில், சன், “டிவி’ எடுத்த காட்சிகள் கொண்ட வீடியோவை சி.பி.ஐ., கோர்ட்டில் தாக்கல் செய்தது. அந்த வீடியோவையே, கோர்ட் தூக்கி வீசிவிட்டது. தயாரித்ததும், ஒளிபரப்பியதும் தான் குற்றம். இது தவிர, எந்த குற்றமும் அதில் இல்லை. அது ஒரு சதி வேலைதான். சமூக விரோத செயல்களில் ஈடுபட்டவர்கள் அதிலிருந்து தப்பிக்க, தங்களைக் காப்பாற்றிக் கொள்ள, மக்களை திசை திரும்பும் வகையில், மீடியாக்களை ஆயுதமாக பயன்படுத்தி, என் மீது பழியைச் சுமத்தினர். அந்த நேரத்தில், மிகவும் சமூகப் பொறுப்போடு, ஆழ்ந்த, தெளிந்த நிலையில், “தினமலர்’ போன்ற நாளிதழ்கள், “டிவி’க்கள் செயல்பட்டன. பழித்தவர்களைப் பார்த்து, சில, “டிவி’க்கள் தங்கள், “ரேட்டிங்’கை கூட்டும் விதமாக செயல்பட்டன. அவ்வாறு பழித்தவர்கள் மீதும் தவறில்லை. அழிக்க நினைத்தவர்கள் சன், “டிவி’ ராட்சதர்கள். வீடியோ காட்சிகளை ஒளிபரப்பக் கூடாது என, ஐகோர்ட் தடை போட்டும், அதன் பெஞ்ச் அதை உறுதி செய்தும், அதைப் பற்றி கவலைப்படாமல், வீடியோ காட்சிகளை வெளியிட்டனர். வீடியோ காட்சிகளை வெப்சைட் மூலம் விற்று, பிழைப்பு நடத்துகின்றனர்.

முன்பு போலீஸ் துறை கருணாநிதியின் கீழ் இருந்ததால், புகார்கள் கொடுக்கப்பட்ட நிலையில் பாகுபாட்டுடன், போலீஸார் செயல்பட்டுள்ளனர் என்றால், அதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், மக்களின் நம்பிக்கை இவ்விஷ்யங்களில் தகர்ந்து விடும்.

சன், “டிவிதரப்பில் 100 கோடிரூபாய்கேட்டனர்: ஊடகங்களுக்கு இருக்கும் மரியாதையை அழிக்கின்ற இவர்கள், மீடியாக்கள் அல்ல. வீடியோவை வெளியிடாமல் இருக்க, சன், “டிவி’ தரப்பில் 100 கோடி ரூபாய் கேட்டனர். பின், 60 கோடி ரூபாய் கேட்டு மிரட்டினர். வார இதழ் ஒன்றின் மீடியேட்டராக சுரேஷ் வந்து மிரட்டினார். சன், “டிவி’ சக்சேனாவின் சார்பில், அவரது உதவியாளர் அய்யப்பனும் பணம் கேட்டு மிரட்டினார்; சக்சேனாவும் போனில் பேசினார். என் ஆசிரம நிர்வாகிகள் அதற்கு அடிபணியாததால், “மார்பிங்’ முறையில் சித்தரிக்கப்பட்ட காட்சிகளை வெளியிட்டனர். அதன் பின்பும் என் பக்தர்களை மிரட்டி, பணம் பிடுங்கிக் கொண்டனர். அப்போது, தியான பீட நிர்வாகிகள் போலீசில் புகார் செய்தனர்; புகார்கள் ஏற்கப்படவில்லை. தமிழகத்தில் 120 தியான பீடங்களை ரவுடிகள், கூலிப்படையினரை வைத்து, அடித்து நொறுக்கினர். அங்குள்ள இந்து விக்ரகங்களை நொறுக்கினர்.

முன்பு போலீஸ் துறை கருணாநிதியின் கீழ் இருந்ததால், புகார்கள் கொடுக்கப்பட்ட நிலையில் பாகுபாட்டுடன், போலீஸார் செயல்பட்டுள்ளனர் என்றால், அதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், மக்களின் நம்பிக்கை இவ்விஷ்யங்களில் தகர்ந்து விடும்.

மதரீதியான தாக்குதல்: இது எங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல; மத ரீதியான தாக்குதல். அமெரிக்காவில் உள்ள, “இந்து பெடரேஷன்’ வீடியோ காட்சிகளை, மத அமைப்புகளுக்கான கூட்டமைப்பிடம் ஒப்படைத்துள்ளது. இதை ஆய்வு செய்த கூட்டமைப்பு, வீடியோ காட்சிகள், உயர்தர யுக்திகள் கையாண்டு, “மார்பிங்’ முறையில், சித்தரிக்கப்பட்ட காட்சிகள் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது. இதனடிப்படையில், கூட்டமைப்பின் மூத்த வழக்கறிஞர், “இந்த புகார்கள் மீதான குற்றப்பத்திரிகை நகல்களை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்’ என, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

 ஆட்சி மாற்றத்தால் குற்றங்கள் மாறிவிடாது. சட்டங்களும் மாறிவிடாது. ஆனால், சட்டங்களும் சட்டங்களை அமூல் படுத்த வேண்டிய துறைகள், அதிகாரிகள், அவற்றை ஆட்டி வைக்கும் அரசியல்வாதிகள் சித்தாந்தங்களால் ஊறி செயல்பட்ட நிலை மாறவேண்டும்.

பெண்-சன்யாசிகளின் புடவைகளை உருவியுள்ளனர்: 17 இடங்களில் பெண் சன்யாசிகளின் புடவைகளை உருவியுள்ளனர். ஏழு இடங்களில் கொலைவெறித் தாக்குதல் நடந்தது. அதற்கான வீடியோ ஆதாரம் உள்ளது. எங்கள் ஆசிரமத்தில் மூன்று சன்யாசிகளை ஒரு அறையில் வைத்து பூட்டி, பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். மற்றொரு புறமாக வந்த பக்தர்கள், கதவை உடைத்து அவர்களை மீட்டுள்ளனர். பெங்களூரில் நடந்த சம்பவத்திற்கு, சென்னை, எழும்பூர் போலீஸ் நிலையத்தில், என் மீது எப்.ஐ.ஆர்., போட்டனர். சம்பந்தப்பட்டவர் பெயர் இல்லாமல் போடப்பட்ட இந்தியாவின் முதல் எப்.ஐ.ஆர்., அதுவாகத் தான் இருக்கும். எங்களிடம் பலவற்றை பறிக்க முயற்சி நடந்தது. நாங்கள் பறி கொடுக்கவில்லை. நீதித்துறை மீதும், தமிழக முதல்வர் மீதும், பத்திரிகைகள் மீதும் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. புகார்கள் மீது முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறேன். ஆளும் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க நேரம் கேட்பேன். அழைப்பு வந்தால் சூழ்நிலைகளைப் பார்த்து முடிவு செய்வேன். முதல்வர் மீது முழு நம்பிக்கை உள்ளது. இவ்வாறு நித்யானந்தா கூறினார்.

இத்தகைய செய்திகள் முன்னரே வெளிவந்தன. அப்பொழுது  போலீஸ் துறை பாரப்பட்சமாகத் தான் செயல்பட்டுள்ளது. குறிப்பாக பெண்ணுரிமைகள் பேசும் கூட்டங்கள் கண்டுகொள்ளாமல் இருந்தது அதிசயம்! ஒரே ஒருமுறை கம்யூனிஸ கட்சி பெண்மணி ரஞ்சிதாவிற்கு ஆதரவாக பேசினார், அறிக்கை விட்டார். புவனேஸ்வரி விஷயத்தில் கொதித்தெழுந்த நடிக-நடிகையர், ரஞ்சிதா விஷயத்தில் அடங்கிவிட்டனர் அல்லது அடக்கப்பட்டனர் போலும்!

நாய்கடித்தால் வைத்தியம் செய்து கொள்ள வேண்டும். திருப்பி கடிக்கக் கூடாது: ஆசிரம், தியான பீடம் மீதான தாக்குதல் குறித்து குறிப்பிட்ட நித்யானந்தா, “என் ஆசிரமம், தியான பீடங்கள் மீது நடந்த தாக்குதலால், என் பக்தர்கள் எந்த அளவுக்கு வேதனைப்பட்டிருப்பர். அவர்கள் உங்கள் சிலைகளை ஆசிரமம் முன் வைத்து, செருப்பால் அடிக்க வேண்டும் என்று துடித்தனர். நான் தான், “நாய் கடித்தால் வைத்தியம் செய்து கொள்ள வேண்டும். திருப்பி கடிக்கக் கூடாது என்று, அவர்களை சமாதானப்படுத்தினேன்’ என்றார்.

கண்டுகொள்ளாத மாஜிமுதல்வர் கருணாநிதி? : அப்போதைய முதல்வர் கருணாநிதிக்கு எழுதிய கடிதம் குறித்து நித்யானந்தா கூறியதாவது: கடந்த ஆண்டு டிச.,29ல், அப்போதைய முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் எழுதினேன். தியான பீடங்கள் மீதான தாக்குதல் குறித்த நடவடிக்கை எடுக்கக் கோரியும், உணர்வளவில் மிகவும் காயப்பட்டு, தமிழக மக்கள் இழந்த மத சுதந்திரத்தையும், மனித உரிமைகளையும் மீட்டுத் தர வேண்டுமென, 60 ஆயிரம் பக்தர்கள் ரத்தக் கையெழுத்துடன், நீதிகேட்டு சந்திக்க வாய்ப்பு கேட்டிருந்தேன். ஆனால், எந்த பதிலும் இல்லை. பின், தேர்தல் பிரசாரத்தின் போது,”நான் ஆன்மிகவாதிகளுக்கு எதிரி அல்ல. நடந்த சம்பவத்திற்கும், எங்களுக்கும் தொடர்பில்லை’ என்று பேசியுள்ளார். இவ்வாறு நித்யானந்தா கூறினார்.

ரூ.35 கோடி கேட்டு மிரட்டிய பிரசன்னா? : நித்யானந்தா தனது பேட்டியின் இடையே பணம் கேட்டு மிரட்டியது தொடர்பாக, ஆடியோ உரையாடல் ஒன்றை நிருபர்களுக்கு போட்டுக் காட்டினார். அதில், லெனின் கருப்பனின் உதவியாளர் பிரசன்னா, ஆசிரம நிர்வாகியுடன் போனில் பேசுகிறார். “டேபிளில் 25 கோடி ரூபாயை தூக்கிப் போட்டால் போதும். அதில் எல்லாவற்றையும் மூட்டை கட்டி தூக்கிப் போட்டு விடுகிறேன். அவர்கள் எல்லாம் சாதாரணமானவர்கள் அல்ல. மற்ற செலவுகள் எல்லாம் சேர்த்து 35 கோடியைக் கொடுங்கள்’ என்கிற ரீதியில் பேச்சு தொடர்கிறது.

நித்யானந்தா ஒன்பதா…? : பேட்டியின் போது, வார இதழ் ஒன்றின் நிருபர், நித்யானந்தரைப் பார்த்து, “ஒன்பது’ என்று கூறி, சைகை காட்டினார். இதைப் பார்த்து சிரித்த நித்யானந்தா, “ஆம்’ என்று கூறிவிட்டு தொடர்ந்தார். “ஆன்மிகத்தில் இருக்கும் எனக்கு பேச வாயும், ஆசிர்வதிக்க கையும் செயல்பட்டால் போதும். நான் ஆண், பெண், அலி, குழந்தை நிலைகளைக் கடந்து, ஆன்மிக மார்க்கத்தில் வாழ்பவன். அதனால் அவர், “ஒன்பது’ என்று சொன்னதால் வருத்தப்படவில்லை. ஆனால், அவர், பாலியல் சிறுபான்மை இனத்தை (அரவாணிகளை) இழிவுபடுத்தியதை ஏற்க முடியாது’ என்றார்.

நான்அவள்இல்லை…! : “வீடியோவில் இருப்பது நான் இல்லை’ என நித்யானந்தா கூறியதும், “அதில் இருப்பது ரஞ்சிதாவும் இல்லையா?’ என நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த ரஞ்சிதா, “வீடியோ காட்சியில் உள்ளது நான் இல்லை என்று, திரும்பத் திரும்ப பலமுறை கூறிவிட்டேன். எத்தனை முறைதான் இதை கேட்பீர்கள். கும்பிடுகிற கடவுளுடன், என்னைச் சேர்த்து கொச்சைப்படுத்தினால் எனக்கு எப்படிப்பட்ட நிலை இருக்கும்’ என்றார்.

 நாத்திகம், இந்து-விரோதம், செக்யூலரிஸம் முதலிய சக்திகள் இவ்விவகாரத்தில் ஈடுபட்டிருந்தால், அத்தகைய சக்திகள் அடையாளங்காணப் படவேண்டும். கிருத்துவர்கள் பின்னணியில் இருப்பது சாத்தியமே, ஏனெனில் அவர்களில் பெரும்பாலோர் அந்நேரத்தில் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு சிக்கினர்.

கருணாநிதி குடும்பத்தினர் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கி விவரங்கள் அப்போது வெளிவர ஆரம்பித்தது உண்மை. அவற்றை செந்தமிழ் மாநாடு, நித்யானந்தா, காஞ்சிபுரம் ஐயர் என்று பரபரப்புகளினால் திசைத் திருப்ப அவர்கள் முயன்றிருக்கலாம்.

ஆனால், இப்படி மற்ற காரணங்களுக்காக, இந்து மதம், இந்துமத நிறுவனங்கள், சின்னங்கள், யோகா முதலியவை கேலிக்குள்ளாவது, கேவலப்படுத்துவது, அவதூறு செய்வது என்ற முறையில் இருந்தால், நிச்சயம் அவை கண்டிக்கப்பட வேண்டும். நடவடிக்கையும் எடுக்கப்படவேண்டும்.