Archive for திசெம்பர், 2010

கருணாநிதியின் ஆரிய-திராவிட போரும், ஜெயலலிதாவின் தர்மயுத்தமும்!

திசெம்பர் 28, 2010

கருணாநிதியின் ஆரிய-திராவிட போரும், ஜெயலலிதாவின் தர்மயுத்தமும்!

கருணாநிதியின் ஆரிய-திராவிட போர்: கருணாநிதி சமீபத்தில் இரண்டு-மூன்று தடவை ஆரிய-திராவிட போராட்டம், போர் என்று பேசியுள்ளது வேடிக்கைதான். இதையேதான் வேலூர், நாகை நகரங்களிலும் (முறையே 27.11.2010, 10.10.2010) நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்களும் வழிமொழிந்து பேசும் வகையில் கருத்துத் தெரிவித்துள்ளார். ஏனெனில், உலகத்திலேயே, இன்னும் சரித்திர ஆதாரமில்லாத ஆரியர்கள் / திராவிடர்கள் என்ரு நம்பிக்கையோடு உளறிக்கொண்டு, அரசியல் செய்து வரும் கூட்டம் இங்கு தமிழ்நாட்டில்தான் உள்ளார்கள். சிந்து சமவெளி நாகரிகம் எங்களுடையது – திராவிட நாகரிகம் என்றால், பாகிஸ்தான்காரன் மறுக்கிறான். ஆனால், இங்குள்ள் முஸ்லீம்களுடன் சேர்ந்து கஞ்சி குடிக்கிறான் ஏமாளி தமிழன்! இலங்கையில் கூட தமிழர்களுக்கு குல்லாதான் மாட்டியிருக்கிறார்கள். இருப்பினும் இங்கு ஆரியர்கள் / திராவிடர்கள் என்ரு பேசி ஏமாற்றித் திரிகிறார்கள். இதே மாதிரித்தான் திராவிடர்களுடைய பௌத்தர்களுடன் காதல்-ஊடல் இங்கு, ஆனால், தமிழன் என்றால் கொல்வது அங்கு! அவர்களிடமும் பருப்பு வேகவில்லை. பிறகு ஏன் தமிழகத்தில் மட்டும் இந்த கூப்பாடு? தமிழர்களுக்கு சரித்திர அறிவே இல்லையா?

இதோ வீரமணி தலையங்கமே போட்டுவிட்டார் இன்று – 28-12-2010: தலைப்பு, “ஆரியர் – திராவிடர் போர்”[1] முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் வேலூரிலும், நாகப்பட்டினத்திலும் ஆற்றிய உரை நேரு கூறிய ஆரியர் – திராவிடர் போர் – நேற்றும் – இன்றும் எனும் தலைப்பில் திராவிடர் கழகம் நூலாக வெளியிட்டுள்ளது. அந்நூல், சென்னைப் பெரியார் திடலில், தந்தை பெரியார் நினைவு நாளில் வெளியிடப்பட்டது. 32 பக்கங்களைக் கொண்ட இந்நூலுக்கான நன்கொடை ரூபாய் பத்து மட்டும்தான். இந்நூல் பட்டிதொட்டியெல்லாம் பரவும் வகை செய்ய தமிழர்கள் போதிய முயற்சிகளை மேற்கொள்வார்களாக! இன்றைய சூழலில் இந்நூல் கடைகோடி மனிதர்க்கும் கொண்டு போய் போய் சேர்க்கப்படவேண்டியது அவசியம் ஆகும்[2].

இலவசமாகக் கொடுத்தது: தி.மு.க. ஆட்சியைப் பொறுத்த அளவில் மக்கள் நல அரசு (றுநடகயசந ளுவயவந) என்ற சொல்லாக்கத்திற்குப் பொருத்த மானதாகும். தேர்தல் அறிக்கையில் எவற்றையெல்லாம் குறிப்பிட்டுச் சொல்லப்பட்டுள்ளனவோ – என்னென்ன வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டுள்ளனவோ, அவையெல்லாம் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டது மட்டும் அல்லாமல், தேர்தல் அறிக்கையில் கூறப்படாத பலவும்கூட நிறைவேற்றப்பட்டுள்ளன. 2 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்று சொல்லப்பட்டது. அவ்வாறே அளிக்கப்பட்டும் வந்தது. அடுத்தகட்டமாக ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி அளிக்கப்பட்டு வருகிறது. இந்தியத் துணைக் கண்டத்தில் வேறு எந்த மாநில அரசும் நினைத்துப் பார்க்கப்பட முடியாத ஒன்று இது. இதற்காக கிலோ ஒன்றுக்கு அரசுக்கு ரூபாய் 21 இழப்பு என்று கணக்கிடப் பட்டுள்ளது. இருந்தாலும், மக்களின் பசிப்பிணி என்ற நோயைத் தீர்க்கும் இந்தத் திட்டத்தை வெறும் ரூபாய் அணா பைசா எனும் தராசு தட்டில் போட்டு நிறுத்துப் பார்ப்பது – மனிதாபிமானமற்ற மனத்தையே சுட்டிக்காட்டும். அதேபோல, மனிதனுக்கு மிக முக்கியமானது உடல் நோய் தீர்க்கும் பிரச்சினையாகும். கலைஞர் உயிர் காக்கும் திட்டம்; 108 ஆம்புலன்ஸ் உதவி – இவை எல்லாம் அடித்தட்டு மக்களின் நல்வாழ்வைத் தன் அடிமனத்தில் கொண்ட ஓர் அரசால்தான் செயல்படுத்த முடியும். அதேபோல குடியிருக்கக் கான்கிரீட் வீடு 21 லட்சம் மக்களுக்கு என்பது – எண்ணிப் பார்க்கவே மலைப்பாக இருக்கக் கூடியதாகும்.

விளம்பரமாகக் கொடுத்தது: வேலை வாய்ப்பும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு மாத உதவித் தொகை – இது சில வெளிநாடுகளில் உண்டே தவிர, இந்தியாவுக்குள் கிடையாது. சமூக மறுமலர்ச்சித் திசையில், பெரியார் நினைவு சமத்துவபுரம், தமிழ் செம்மொழி, தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு அறிவிப்பு என்பன காலத்தைக் கடந்து கம்பீரமாக நிற்கக் கூடியவையாகும். இவ்வளவு நடந்தும் ஒரு சிறு கும்பல் இந்த ஆட்சியின் மீது மண்ணை வாரி இறைக்கிறது. இந்தக் கும்பலிடம் ஊடகம் என்பது வசதியாக, வளமாகச் சிக்கிக்கொண்டு இருக்கிறது. அந்தக் கும்பல் எண்ணிக்கையில் சிறுபான்மையான பார்ப் பனர்களாக இருந்தாலும்கூட, ஆதிக்கக் சக்திகளாகத்தான் நங்கூரம் பாய்ச்சி நிற்கிறது.

நேரு – விவேகானந்தர் போன்றவர்களே சொல்லிவிட்டார்களாம்!: தூசைத் துரும்பாக்கிக் காட்டுகின்றன. பெரும்பான்மை மக்களான பார்ப்பனர் அல்லாத மக்களுக்கு, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களுக்கான அரசாக இது அமைந்துள்ளதால், அதனை இந்தச் சிறு நரிக் கூட்டத்தால் சீரணித்துக் கொள்ள முடியவில்லை. இந்தச் சிறு கும்பலுக்கும், இந்த நாட்டுக்குரிய மக் களுக்கும் நீண்ட காலமாகப் போராட்டம் நடந்துகொண்டே இருக்கிறது. இராமாயணம் என்பதேகூட இந்த அடிப்படை யில்தான் என்று நேரு – விவேகானந்தர் போன்றவர்களே எழுதி வைத்துவிட்டுச் சென்றுள்ளனர்.

 

ஆரியர் – திராவிடர் போராட்டமே – தேவாசுர யுத்தமே: நாட்டில் நடப்பது வெறும் அரசியல் போராட்டம் அல்ல; ஆரியர் – திராவிடர் போராட்டமே – தேவாசுர யுத்தமே என்று அறுதியிட்டுக் கூறியிருக்கின்றார் தந்தை பெரியார் (விடுதலை, 22.5.1967). சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாரும் இதனை ஒப்புக் கொண்டுள்ளார். தேவர்கள், அரக்கர்கள் போராட்டமே இன்றைய தமிழ்நாட்டின் நிலை (18.9.1953 இல் முதல மைச்சராக இருந்த நிலையில், திருவான்மியூரில் பேசியது) என்று ஒப்புக்கொண்டுள்ளார்.

1971 ஆம் ஆண்டு தந்தை பெரியார்: இப்பொழுது நடைபெறுவது திராவிட – ஆரிய யுத்தம் என்று சொன்னார். பெரியார் என்ன? இராமாயணத்தைப்பற்றி எழுதிய பண்டித ஜவகர்லால் நேரு அவர்களே, தேவாசுர யுத்தம் என்பது தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் நடந்த யுத்தம் என்று எழுதியிருந்தாலும்கூட, இது திராவிடர்களுக்கும், ஆரியர்களுக்கும் நடந்த போராட்டம்தான் என்று ஜவகர்லால் நேரு தனது மகளுக்கு எழுதிய கடிதம் என்ற புத்தகத்திலே எழுதியிருக்கிறார்.

தேர்தல் முடிவுகள் நிர்ணயிக்கும்: இதையேதான் வேலூர், நாகை நகரங்களிலும் (முறையே 27.11.2010, 10.10.2010) நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்களும் வழிமொழிந்து பேசும் வகையில் கருத்துத் தெரிவித்துள்ளார். இப்பொழுது அரசியல் ரீதியாக அந்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதைத் தாங்கவேண்டிய பெரும் பொறுப்பு நம்முடைய தோள்களுக்கு வந்திருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார் முதலமைச்சர். சிலர் குழப்புவதுபோல பிரச்சினையைத் திசை திருப்பு வதற்குக் கூறப்பட்ட ஒன்றல்ல இது. நாட்டு நடப்பும், பார்ப்பனர் களும், அவர்கள் கையில் சிக்குண்டு கிடக்கின்ற ஊடகங்கள் மேற்கொண்டிருக்கிற அடாவடித்தனமான பிரச்சாரங்களும் முதலமைச்சர் கூறுவது – கணித்திருப்பது மிகச் சரியானது தான் என்பதை வெளிப்படுத்துகின்றன. இது ஒன்றும் இராமயண காலம் அல்ல; திராவிடர் இயக்கமும், தந்தை பெரியார் அவர்களும் எழுப்பியிருக்கிற தன்மான உணர்ச்சி தலைதூக்கி நிற்கும் காலகட்டம். 1971 பொதுத் தேர்தல் அதனை நிரூபித்தும் உள்ளது. 2011 தேர்தலும் அதற்கு மேலாகவும் திராவிடர்கள் தங்கள் ஆளுமையைக் காட்டுவார்கள் என்பது கல்லின்மேல் எழுத்தாகும். தமிழா, தமிழனாக இரு! தமிழா, இன உணர்வு கொள்!!

ஜெயலலிதாவின் தர்மயுத்தம்[3]: இந்நிலையில்தான் ஜெயலலிதா அதே மாதிரி எம்.ஜி.ஆர் பெய்ரைக் குறிபிட்டு தர்மயுத்தம் என்று பேசியுள்ளார்.. அதிமுக நடத்தும் ஆர்ப்பாட்டமானது திமுகவுக்கு எதிராக நடத்தும் தர்மயுத்தம் என முன்னாள் அமைச்சரும், அதிமுக பொருளாளருமான ஓ.பன்னீர்செல்வம் அக்டோபரில் கூறினார்[4].
மதுரையில் அதிமுக சார்பில் திங்கள்கிழமை நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் அவர் ஆற்றிய வரவேற்புரை:  தமிழக மக்களோடு இரண்டறக் கலந்தவர் ஜெயலலிதா. மக்கள் நலனுக்காகவும், மக்கள்விரோத ஆட்சிக்கு எதிராகவும் அவர் கூட்டம் நடத்துவதை பொறுக்காதவர்கள் மிரட்டல் கடிதம் அனுப்புகின்றனர்.
தடைகளுக்கும், மிரட்டல்களுக்கும் அஞ்சாமல் திமுக ஆட்சிக்கு எதிரான குரல் எழுப்பும் வகையில் ஆர்ப்பாட்டத்துக்கு வந்துள்ளார். ஆணவத்துடன் செயல்படும் ஆட்சியாளர்களுக்கு பாடம் புகட்டவேண்டும். மதுரையில் செயல்படும் சமூக விரோதக் கும்பலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினால் மிரட்டல் விடுக்கிறார்கள். இந்த மிரட்டல் குறித்து அளித்த புகார்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைதான் என்ன? திமுகவை எதிர்த்து நடத்தும் இந்த ஆர்ப்பாட்டம் அதிமுக நடத்தும் தர்மயுத்தமாகும். இதில் அதிமுகவுக்கு கிடைக்கும் வெற்றி மக்கள் வெற்றியாக அமையும் என்றார்.


 

இந்து அமைப்புகள் ராகுலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போது, மற்றவர்கள் ஏன் ஓடி ஒளிய வேண்டும்?

திசெம்பர் 24, 2010

இந்து அமைப்புகள் ராகுலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போது, மற்றவர்கள் ஏன் ஓடி ஒளிய வேண்டும்?

“தமிழ்-தமிழ் என்று பேசும் வீரர்கள் ஏன் அடங்கி இருக்க வேடும்? தமிழர் நலனுக்காக என்ன வேண்டுமானலும் செய்வேன், ரத்தம் சிந்துவேன், உயிரை விடுவேன், தியாகம் செய்வேன் என்றேல்லாம் சவடால் விட்டவர்கள் ராகுல் வந்து பேசித்திரியும் போது, ஜாலியாகத்தன் இருக்கிறார்கள் போலும்!  ராகுல் காந்திக்கு எதிராக கருப்புக் கொடி காட்ட, எதிர்ப்புத் தெரிவிக்க ஏன் சீமான், வைகோ, நெடுமாறன் மற்றும் அடலேறுகள், வீராதி வீரர்கள், போரராளிகள், வீரமணி போன இனமான தலைவர்கள் எல்லாம் ஏன் வரவில்லை? எப்பொழுதும் காங்கிரஸுக்கு விரோதமாக பேசியும், எழுதியும் வருகின்ற சித்தாந்திகளும் ஏன் ஊமையாகி விட்டார்கள்? அப்படி எதிர்ப்புத் தெரிவித்தால் பரிசுகள், பட்டங்கள், பதவிகள், ஆதாயங்கள் எல்லாம் கிடைக்காமல் போய்விடும் என்ற பயமா? கூட்டணி ஊடைந்து விடும் என்ற நடுக்கமா? இதெல்லாம் பேடித்தனமா அல்லது வீர-சூரத்தனமா?

கருப்புகள்-சிகப்புகள் பொத்திக் கொண்டு இருக்கும்போது காவிகள் கருப்பு கலர் காட்டுகிறதாம்: இலங்கைத்தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு காங்கிரஸ்தான் காரணம் என்று எழுதி-பேசும் சித்தாந்திகள் இப்பொழுது ஏன் போராட வரவில்லை? கருஞ்சட்டை மாவீரர்கள், போராளிகள், தளபதிகள்……..எல்லோரையும் காணவில்லை. ஒருத்துவம் பேசும் சித்தாந்திகள் நிறபேதங்களை இங்கும் காட்டுகின்றனர் போலும். போயும் போயும் இந்து அமைப்புகளுக்கா அத்தகைய வீரம் வரவேண்டும்?  ராகுல் நேற்று (23-12-2010) நெல்லை சென்று இருந்தபோது வீரவநல்லூரைச் சேர்ந்த 7 பேர் கருப்புக்கொடி காட்ட பேருந்தில் புறப்பட்டனர். அவர்ளைப் போலீசார் கைதுசெய்தனர்.

திருப்பூரில் பாஜகவினர் கறுப்பு பலூன்களை பறக்கவிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்: இளைஞர் காங்கிரஸ் தொண்டர்களுடன் ஆலோசனை நடத்த திருப்பூர் வந்த காங்கிரஸ் அகில இந்திய பொதுச் செயலாளர் ராகுல் காந்திக்கு எதிர்ப்புத் தெரிவித்து பாஜகவினர் கறுப்பு பலூன்களை பறக்கவிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்[1]. நைட்ரஜன் வாயு நிரப்பப்பட்ட கறுப்பு மற்றும் சிகப்பு நிற பலூன்களை கொத்து கொத்தாக கட்டி, அதில் கறுப்புக் கொடியை தொங்க விட்டு, ஊர்வலமாக ரோட்டில் ஓடி வந்தனர். அவர்களை போலீசார் பிடிக்க முயன்ற போது, அவர்கள் 15-க்கும் மேற்பட்ட பலூன்களை மொத்தமாக பறக்கவிட்டனர்[2]. காவித் தீவிரவாதம் குறித்து அவர் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்தப் போராட்டம் நடந்தது[3]. இதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததோடு, கறுப்பு பலூனை பறக்கவிட்டவர்களை கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்[4]. இதனால் 93 பேரை போலீசார் கைது செய்தனர்.

 

மதுரையில் ராகுலுக்கு எதிராக போராட்டம் நடத்தின: முன்னதாக மதுரையில் இருந்து தூத்துக்குடி, நெல்லை சென்ற ராகுல் அங்கிருந்து திருப்பூர் செல்வதற்காக ஹெலிகாப்டர் மூலம் கோவை வந்தார். அங்கு சிவசேனா, இந்து மக்கள் கட்சியினர் அவருககு எதிராக போராட்டம் நடத்தின. அங்கு தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற சிவசேனாவைச் சேர்ந்த 36 பேர் கைது செய்யப்பட்டனர். அதே போல நேற்று மதுரை வந்த ராகுலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து புறாக்களின் கால்களில் கறுப்புத் துணியை கட்டி பறக்க விட்டனர் இந்து இளைஞர் பேரவையினர்[5].