Archive for the ‘கருணாநிதியும் ஔரங்கசீபும்’ Category

கருணாநிதிக்கு உயிரோடு இருக்கும் போது வைக்கப் பட்ட சிலையும், இறந்த பிறகு கட்டப் படும் கோவில்களும்! (1)

ஒக்ரோபர் 21, 2022

கருணாநிதிக்கு உயிரோடு இருக்கும் போது வைக்கப் பட்ட சிலையும், இறந்த பிறகு கட்டப் படும் கோவில்களும்! (1)

சிலையுடைப்பவருக்கு கோவில்: கருணாநிதிக்கு கோவில், கலைஞருக்கு கோயில் என்று அவ்வப்போது செய்திகள் வந்து கொண்டே இருக்கும். பிறகு, அமைதியாகி விடும், ஊடகங்களும் செய்திகளை அப்படியே முடக்கிவிடும். அதாவது, அவ்வாறு கோவில் எல்லாம் கட்டக் கூடாது, சிலைகள் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள் என்று தீர்மானம் போட்டிருக்கலாம், அவ்வாறே அறிவுருத்தப் பட்டிருக்கலாம். கோவிலை எதிர்த்தவருக்கு, கோவிலைத் தூற்றியவருக்கு, இந்துமதத்தை தூஷித்தவருக்கு, இந்துவிரோதிக்கு அப்படி செய்வார்களா என்பதே விசித்திரமானது.  கருணாநிதி இறந்த பிறகு, பிள்ளைகள் முறையாக இறுதி சடங்குகள் செய்தார்களா இல்லையா என்றெல்லாம் தெரியாது, ஆனால், துர்கா ஸ்டாலின், காசி, கயா எல்லாம் சென்று ஏதோ சடங்குகள் செய்ததாக செய்திகள் வந்துள்ளன. தனது பூஜை அறையில் தனது பெற்றோர், கணவனின் பெற்றோர், கருணாநிதியின் பெற்றோர் என்று அவர்களது படங்களை வைத்து பூஜித்து வருகிறார்.

சிலையுடைப்பவருக்கு சிலை (Iconoclast) மற்றும் கோவில்: கருணாநிதிக்கு உயிருடன் இருக்கும் பொழுதே, மவுண்ட் ரோடில் சிலை வைக்கப் பட்டது. அதற்கு குன்றக்குடி அடிகள், பெரியார் எல்லாம் ஒப்புக் கொண்டார்களாம். செப்டம்பர் 21, 1975 அன்று அண்ணா சாலை – ஜெனரல் பேட்டர்ஸ் ரோடு சந்திப்பில், அன்னை மணியம்மையார் தலைமையில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் கலைஞர் சிலையைத் திறந்து வைத்தார்கள். இப்பொழுது அவர்கள் இல்லாதலால், வீரமணி மற்ற ஆதினம் அதே போல ஒப்புக் கொள்வர்களா என்று தெரியவில்லை. ஆனால், 1987ல் எம்ஜிஆர் இறந்தபொழுது, இறுதி ஊர்வலம் சென்ற நிலையில் (24-12-1987), தொண்டர்கள், கருணாநிதி சிலையை உடைத்து எரிந்தனர். கருணாநிதி, எம்ஜிஆரை வசைப் பாடியது தெரிந்த விசயமே. அதனால், தொண்டர்கள் அச்சிலைப் பார்த்ததும், கோபம் கொன்டு, கொதித்த நிலையில் அவ்வாறு செய்தனர். திராவிடர்களே திராவிடனின் சிலையை உடைத்தது பகுத்தறிவு சித்தாந்தத்தில் யோசித்துப் பார்க்க வேண்டிய விசயம். பிறகு அதே இடத்தில் சிலை வைக்க வேண்டும் என்று முயற்சிகள் நடந்தன. பிறகு, அவர் காலமாகியப் பிறகு, சிலை வைக்கப் பட்டது. இப்பொழுது தொடர்ந்து சிலைகள் வைப்பது நடந்து வருகிறது. பேனா சின்னம் வைப்போம் என்றும் திட்டத்துடன் உள்ளார்கள்.

திராவிடியன் மாடலில் திராவிட ஸ்டாக்குகளின் இந்துவிரோதம் (2020-2022): சிலையுடைப்பவன் (Iconoclast) என்று ஈவேரா பிள்ளையார் சிலைகளை உடைத்தது, நிறையப் பேருக்குத் தெரிந்திருந்தாலும், உச்சநீதி மன்றத்தில் டோஸ் வாங்கிக் கொண்டது ஒருசிலருக்கேத் தெரியும், உருவம், சிலை, விக்கிரகம் (Idol) கூடாது, விக்கிரக ஆராதனை (Idoltary) கூடாது, உருவ வழிபாடு (Idol worship) கிடையாது என்றெல்லாம் பறைச்சாற்றும், கொக்கரிக்கும், ஊளையிடும் பகுத்தறிவு கூட்டங்கள், இப்பொழுது தாங்கள் திராவிட ஸ்டாக் (Dravidian stock) என்று இனவெறியுடன் சொல்லிக் கொள்கின்றன. திராவிடியன் மாடல் (Dravidian Model) என்றும் ஏதோ ஒரு புதிய சித்தாந்தத்தைக் கண்டு பிடித்து விட்டதை போல ஆர்பாட்டம் செய்து வருகிறார்கள். பெரியாரிஸம் (Periyarism) என்றாலும், நாத்திகம் என்றாலும், இறுதியில் தாக்கப் படுவது இந்து மதமே. போதாகுறைக்கு இக்கூட்டங்கள் கோலோச்சும் போது, இந்துஇரோத அக்கிரமங்களும் அதிகமாகும். ஒழுங்காக ஆட்சி செய்து, மக்களுக்கு வேண்டிய காரியங்களை செய்யாமல், தினம்-தினம் இவ்வாறு கோவில், கோவில் சொத்து விவகாரங்களை வைத்து காலம் தள்ளிக் கொன்டிருக்கிறார்கள்.

20-10-2022 அன்று கருணநிதிக்கு கோவில் கட்ட அடிக்கல் நாட்டு விழா: அந்நிலையில் காஞ்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் க. சுந்தர் தலைமையில், கோவில் கட்ட மறுபடியும் 20-10-2022 அன்று பூமிபூஜை போட்டுள்ளார்கள்.  செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் அடுத்துள்ள ஆட்டுபட்டி கோட்டை புஞ்சை கிராமத்தில் ஸ்ரீ வனதுர்கை அம்மன் சித்தர் பீடத்திற்கு சொந்தமான நிலத்தில் 7 அடி உயரத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் வெண்கல சிலையுடன் கூடிய கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது[1]. இந்நிகழ்ச்சியில் திமுக காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க. சுந்தர் எம். எல். ஏ, ஒன்றிய பெருந் தலைவர்கள் ஆர். டி. அரசு, ஏழுமலை, மாவட்ட கவுன்சிலர் டைகர்குணா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அங்கு வைக்கப் பட்டிருந்த முத்தமிழ் அறிஞர் கலைஞரின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி வணங்கினார்[2]. அதனை தொடர்ந்து கோயில் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டினார். விழா ஏற்பாடுகளை வனதுர்க்கை அடிகளார் வினோத் செய்திருந்தார்.

மே 2022 – கருணாநிதி சமாதியில் கோபுர வடிவம் வைத்தது: தமிழக சட்டசபையில் இந்து சமய அறநிலையத்துறை மீதான மானிய கோரிக்கை நடைபெற உள்ள நிலையில் திமுக முன்னாள் தலைவரும், முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்தில் கோவில் கோபுரம் போன்ற அலங்காரம் செய்யப்பட்டுள்ளது[3]. தமிழ்நாட்டில் ஒரு முறை கூட தோல்வி அடையாத சட்டமன்ற உறுப்பினர் என்றால் அது திமுக முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதிதான். அதுவும் தொடர்ந்து 13 முறை சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று இருக்கிறார்[4]. அதுமட்டுமல்லாமல் ஐந்து முறை தமிழகத்தின் முதலமைச்சராகவும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும் சுமார் முப்பத்தி ஒன்பது ஆண்டு காலம் பதவி வகித்துள்ளார்.கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வயது முதிர்ந்த நிலையில் உடல்நலக் கோளாறு காரணமாக கலைஞர் கருணாநிதி காலமானார். இது எடுத்து பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்டது.

மே 2022 – வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இந்து சமய அறநிலையத்துறை: மேலும் நாள்தோறும் கலைஞரின் நினைவிடம் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, கலைஞரின் செல்ல குழந்தை என வர்ணிக்கப்படும் முரசொலி நாளிதழ் அங்கு வைக்கப்படுவது வழக்கம். இது குறித்த சில விமர்சனங்கள் எழுந்த போதிலும், தற்போது வரை அந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது வருகிறது. இதேபோல் திமுக தலைவராகவும், முதல்வராகவும் பதவியேற்ற போது முதலில் கலைஞர் நினைவிடத்துக்குச் சென்ற பிறகே மற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார் முதல்வர் ஸ்டாலின். இதேபோல், திமுகவைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் கலைஞர் நினைவிடத்தில் நாள்தோறும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.இந்நிலையில் இந்து சமய அறநிலையத் துறை மானிய கோரிக்கை விவாதத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் கருணாநிதியின் நினைவிடம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இந்து சமய அறநிலையத்துறை என வெள்ளைப் பூக்களால் எழுதப்பட்டுள்ளது.

மே 2022 – கருணாநிதியும்கோவில்களும்: மேலும் கலைஞரின் உருவப்படத்திற்கு எதிரே பல வண்ணங்களில் கோவில் கோபுரம் ஒன்றும் எழுப்பப்பட்டுள்ளது. இதனை அங்கு வரும் திமுக தொண்டர்களும் சுற்றுலா பயணிகளும் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர். மேலும் அதனுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.கடவுள் மறுப்பு கொள்கை இருந்தபோதிலும் கோவில்கள் மீதும் இந்து சமய அறநிலையத்துறை மீது தனி கவனம் செலுத்தியவர் கலைஞர் கருணாநிதி. பல ஆண்டுகள் ஓடாத திருவாரூர் தேரை ஓட வைத்தவர் என்ற பெருமை அவருக்கு உள்ளது. இதேபோல பல்வேறு கோவில்களில் குடமுழுக்கு விழாக்கள், நூற்றுக்கணக்கான கோயில்களை புணரமைப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் திமுக ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இந்த ஊடகம் விவரித்தாலும், நடந்தது, நடப்பது பொது மக்களுக்கு, நன்றாகவே தெரியும். இந்துவிரோதத் தன்மை புரியும்.

© வேதபிரகாஷ்

20-10-2022.


[1] தமிழ்.கெட்,லோக், முத்தமிழ் அறிஞர் கலைஞருக்கு கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, By Rajasekar, Oct 20, 2022, 08:10 IST

[2] https://tamil.getlokalapp.com/tamilnadu-news/kanchipuram/seiyur/ground-breaking-ceremony-for-the-construction-of-a-temple-for-muthamizh-scholar-artist-7908939

[3] தமிழ்.ஒன்.இந்தியா, கருணாநிதி நினைவிடத்தில் திடீர்கோவில்ஒரு நிமிடம் திடுக்கிட்ட உடன்பிறப்புகள்.. ஆனால் மேட்டரே வேற!, By Rajkumar R Updated: Wednesday, May 4, 2022, 12:34 [IST]

[4] https://tamil.oneindia.com/news/chennai/a-temple-tower-like-decoration-has-been-erected-at-the-memorial-of-former-kalaignar-karunanidhi-457034.html

ஜான் பென்னிகுக் வைத்து கட்டுக்கதை உண்டாக்குவதேன் – திராவிடத்துவ சிலைஅரசியல் முதல் சமாதி அரசியல் வரை! (3)

ஜனவரி 18, 2022

ஜான் பென்னிகுக் வைத்து கட்டுக்கதை உண்டாக்குவதேன் திராவிடத்துவ சிலைஅரசியல் முதல் சமாதி அரசியல் வரை! (3)

உயிருடன் இருக்கும் போதே சிலை வைத்துக் கொள்ளும் திராவிட சம்பிரதாயத்தை ஈவேரா ஆரம்பித்தார்.

தமிழகத்திற்கு சிலைவைப்பு, சிலையுடைப்பு, சிலைஅரசியல் எல்லாம் புதியதல்ல: ஈவேராவால் தமிழகத்தில் சிலையுடைப்பு அரசியல் ஆரம்பிக்கப் பட்டது. இங்கு பிள்ளையார் / விநாயகர் சிலைகள் தேர்ந்தெடுக்கப் பட்டதால், அது இந்துவிரோதமாகி அந்த போலி நாத்திகர்களை வெளிப்படுத்தியது. உச்சநீதி மன்றம் வரை அவர் மீதான வழஜக்குச் சென்றாலும், ஈவேரா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை, நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டார். இருப்பினும் சிலையுடைப்பு அக்கிரமங்களை செய்து வந்தார். 1968ல் இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டிலிருந்தே சிலைவைத்தல்[1], அதிலும் மெரினா பீச்சில் சிலை வைத்தல் என்ற அரசியல் ஆரம்பித்தது. அப்பொழுதே, அண்ணா பலதரப் பட்ட அழுத்தங்களுக்குட் பட்டார். வெளிநாட்டு, உள்நாட்டு அழுத்தம்-ஆதிக்கங்கள் அதிலிருந்தன. இதனால், சில சிலைகள் தேவையில்லாமல் சேர்க்கப் பட்டன, அதாவது, சில நீக்கவும் பட்டன. 1970களில் ஈவேராவின் பிள்ளையா சிலையுடைப்பு / ராமர் பட அவமதிப்பு உச்சங்களுக்குச் சென்றன[2].

உயிருடன் இருக்கும் போதே சிலை வைத்துக் கொள்ளும் திராவிட சம்பிரதாயத்தை ஈவேரா ஆரம்பித்தார். கருணாநிதியும் அந்த சடங்கை முறையாக செய்தார். ஆனால், அது உடைப்பு கிரியையில் முடிந்ததது. உடைப்பு சம்பிரதாயத்தையும் ஈவேரா தான் ஆரம்பித்து வைத்தார்.

ஈவேராஅண்ணாகருணாநிதி சிலைகள்: அதேபோல, பிறகு மவுண்ட் ரோடில் சிலைவைப்பதில், வைத்துக் கொள்வதில் போட்டி ஏற்பட்டது. ஈவேரா (இந்து அலுவகத்து அருகில்), அண்ணா என்றாகி (மவுண்ட் ரோடு-வாலாஜா ரோட் சந்திப்பு), உயிரோடு இருக்கும் போதே கருணாநிதி தனக்கும் சிலை வைத்துக் கொண்டார் (மவுண்ட் ரோட்-பாட்டுலஸ் ரோட் சந்திப்பு). ஆனால், 1987ல் அது உடைக்கப் பட்டது. அது அரசியலாகி, திராவிடத்துவமாகி, ஒரு நம்பிக்கையாகவும் மாறியது. அதாவது, அது அபசகுனமாகக் கருதப் பட்டது. திமுக ஆட்சி அதிகாரம் இழந்தது. எம்ஜிஆருக்கு ஸ்பென்சர் சந்திப்பில் சிலை வைக்கப் பட்டது. இனி மவுண்ட் ரோடில் எங்கு, யாருக்கு வைப்பார்களோ தெரியாது.

மவுண்ட் ரோடில் முதலில் ஈவேரா, பிறகு அண்ணா, கருணாநிதி என்று வரிசையாக சிலைகள் வைக்கப் பட்டது.

அம்பேத்கர் சிலை வைத்தலும், போராட்டமும்: இதற்குள் அம்பேதகருக்கு சிலை வைக்கும் அரசியல் ஆரம்பித்து, அது தீவிரமாகி, அதிகமாகியது. முதலில் இந்துக்களைத் தாக்க அது உதவும் என்று நினைத்து ஊக்குவிக்கப் பட்டது, ஆனால், அது திராவிட உயர்ஜாதியினருக்கே எதிராக அமைந்தது. இது நிச்சயமாக திராவிடத்துவவாதிகளுக்குப் பிடிக்கவில்லை[3]. அதனால், திக ஈவேரா சிலை வைக்கும் அதிரடியை ஆரம்பித்தது. அந்த தீவிரம் ஶ்ரீரங்கம் கோவில் வாசலுக்குச் சென்ற போது பிரச்சினையாகியது[4]. இடையில் கண்ணகி சிலை வைத்தும் கருணாநிதி அர்சியல் நடத்தினார். ரஜினி 2021ல் பேசியதும் எதிர்க்கப் பட்டது, ஆனால், விவரங்கள் வெளியே வந்து விட்ட போது, திராவிட நாத்திக-இந்துவிரோத முகங்கள் எல்லோருக்கும் தெரிந்து விட்டது.

சிலைகளுக்குப் பிறகு கோவில்களும் கட்டப் பட்டது. இப்பொழுது சமாதிகள் கோவில்களாக மாறி அங்கு தினம்-தினம் பூஜைகள், படையல்கள், ஆராதனைகள், அலங்காரங்கள்-வாத்தியங்கள் சகிதம் நடந்து கொடிருக்கின்றன…

வள்ளுவர் கோட்ட அரசியல்: கடந்த 1971- 76 ல் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, சென்னை நுங்கம்பாக்கத்தில் பிரம்மாண்டமான முறையில் வள்ளுவர் கோட்டம் கட்டினார்[5]. அதன் திறப்பு விழாவை 1976ம் ஆண்டு பிரவரி மாதம் 1,2,3 ஆகிய தேதிகளில் மூன்று நாட்களுக்கு சிறப்பாக நடத்த முடிவு செய்து எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. விழா தொடர்பாக வானொலியில் விளம்பரம்கூட ஒலிபரப்பப்பட்டது. அப்போது இந்திரா காந்தி பிரதமர். நெருக்கடிநிலை (மிசா) அமலில் இருந்தது. நெருக்கடி நிலையை கருணாநிதி கடுமையாக எதிர்த்தார். இதனால் கோபமடைந்த இந்திராகாந்தி, பிப்ரவரி ஒன்றாம் தேதி, 1976 வள்ளுவர் கோட்டம் திறப்புவிழா நடக்க இருந்த நிலையில், ஜனவரி 30ம் தேதி, திமுக அரசை டிஸ்மிஸ் செய்தார்[6]. அப்போதைய குடியரசுத்தலைவர் பக்ருதீன் அலி அகமது வந்து, வள்ளுவர் கோட்டத்தை திறந்து வைத்தார். முன்னாள் முதல்வர் என்ற முறையில், வள்ளுவர் கோட்டம் திறப்புவிழாவில் பார்வையாளராகக் கலந்து கொள்ள கருணாநிதிக்கு அரசு சார்பில் அழைப்பு அனுப்பப்பட்டது. பத்தாவது வரிசையில் அவருக்கு இடம் ஒதுக்கப்பட்டது. விழா நடக்கும் இடத்தில் இருந்து அரை கி.மீ. தூரத்தில் காரை நிறுத்த இடம் ஒதுக்கப்பட்டது. அங்கிருந்து விழாவுக்கு கருணாநிதி நடந்து வரவேண்டும். விழாவைப் புறக்கணித்தார் கருணாநிதி[7].

ஈவேரா இந்த வழக்கில் தான் உச்சநீதி மன்றத்தில் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டார். ஆனால், நாங்கள் பார்க்காத கோர்ட்டா என்றெல்லாம் பேசுவார்கள். ஈவேரா இவ்வழக்கில் கோர்ட்டில் ஆஜராகவில்லை..

முதல்வராக இருந்த கருணாநிதி நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு, கடற்கரைச் சாலையில் சிலை வைத்தார். 2011ல் அந்த சிலை அகற்றப்பட்டு, சிவாஜி மணிமண்டபத்தில் இப்போது வைக்கப்பட்டது. சிலை திறப்பு விழாவின்போது, சிலையின் பீடத்தில் இருந்த கருணாநிதியின் பெயர் பொறித்த கல்வெட்டு, சிவாஜி சிலை பீடத்தில் இப்போது அகற்றப்பட்டது. இது சர்ச்சையை கிளப்பியது.

அங்கில அடிவருடித்தனம் கட்டுக்கதைகளால் இவ்வாறெல்லாம் பகுத்தறிவு திராவிடத்துவ போதை கொண்டு, புதிய பக்தர்கள் உருவாகி வருகிறார்கள்!

எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது, ஒரு போராட்டத்தில் கலந்துகொள்ளும் முன், சென்னையில், அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கச் சென்றார் கருணாநிதி, சிலைக்கு மாலை அணிவிக்க இயலாதபடி, அங்கே வைக்கப்பட்டிருந்த படிக்கட்டை ஆட்சியாளர்கள் அகற்றிவிட்டனர். உலகத்தமிழ் மாநாட்டின்போது, அரசு சார்பில், அண்ணா முதல்வராக இருக்கும்போதே வைக்கப்பட்டதுதான் அந்தசிலை. ஆனால், அந்த சிலை நிறுவுவதற்கான தொகையை நன்கொடையாகக் கொடுத்தவர் எம்ஜிஆர். படிக்கட்டு அகற்றப்பட்டதையடுத்து,சிலையின் பீடத்தில் மாலையை வைத்துவிட்டுச் சென்றார் கருணாநிதி. இந்த நிகழ்வைத் தொடர்ந்து திமுகவுக்கென்று தனியாக அண்ண சிலை நிறுவ முடிவு செய்தார் கருணாநிதி. இதற்காக அண்ணா சாலையில் இடம் ஒதுக்கும்படி அரசுக்குக் கோரிக்கை வைத்தார். எம்ஜிஆர் அரசு மறுத்துவிட்டது. வள்ளுவர் கோட்டம் எதிரே அண்ணா சிலை வைக்க திமுகவுக்கு அனுமதி தரப்பட்டது. இதையும் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டார் கருணாநிதி. வள்ளுவர்கோட்டம் நுழைவாயில் அருகே அண்ணாசிலையை திறந்தார் கருணாநிதி. சிலையின் பீடத்தில், “சிலை திறப்பாளர், வள்ளுவர் கோட்டம் கண்ட கலைஞர் கருணாநிதி” என்று கல்வெட்டில் பொறித்து வைத்தார். வள்ளுவர் கோட்டம் கட்டியது கருணாநிதி என்பதை அங்கே பதிவு செய்தனர். அண்ணா பிறந்த நாளில், இந்த சிலைக்குதான் திமுகவினர் மாலை அணிவிப்பார்கள். அதிமுகவினர், அண்ணா சாலையில் உள்ள சிலைக்கு மாலை அணிவிப்பார்கள்.

கட்டுக் கதையைப் பரப்பும் திராவிடத்துவம், அதை அரசு ரீதியில், 2022ல் முதலமைச்சரே பரப்புகிறார்! சரித்திரம் பற்றி எந்த கவலையும் இல்லை.

1969 முதல் 2018 வரை – மெரினாவில் சமாதி அரசியல்: முதலில் 1969ல் அண்ணா இறந்தபோது, அவருக்கு சமாதி கட்டப் பட்டது. அப்பொழுது, அதைப் பற்றி யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பிறகு, 1987ல் எம்ஜிஆருக்கு சமாதி வைத்த போது, திமுகவினர் சில சலசலப்பு காட்டினாலும், கருணாநிதி சிலையுடைப்பு, வன்முறை முதலியவற்றை கவனித்து அமைதியாகினர். 2016ல் ஜெயலலிதாவுக்கு சமாதி வைக்க்ப்பட்டது. ஜெயலலிதாவுக்குப் பிறகு 2018ல் கருணாநிதி இறந்தபோது, மெரினாவில் சமாதி அரசியலும் உண்டானது. வழக்கும் தொடரப் பட்டது, ஆனால், முடித்து வைக்கப் பட்டது, சமாதி வைக்கப் பட்டது. இனி, திராவிடத்துவவாதிகள், மெரினாவில் தங்களுக்கு சமாதி வைக்க “ரிசர்வ்” செய்துகொண்டு இடத்தைப் பிடித்து வைத்துக் கொண்டாலும் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

Stuart Sampson – ஸ்ய்ரௌட் சாம்ப்ஸன் மதுரையின் பென்னிகுக்கிற்கு வீடு இருந்தற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்றார்.

2021ல் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சிலை அரசியலை ஆரம்பித்து விட்டது: இப்பொழுது 2022ல் திமுக ஆட்சிக்கு வந்தவுடம் அதைவிட தீவிரமான சிலை / மணிமண்டபம் அரசியல் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. அயோத்தி தாசர், வ.உ.சிதம்பரம், ஈவேரா, வள்ளலார், ஜான் பென்னிகுக் என்று நீள்கிறது. இதற்கெல்லாம் கோடிகளில் திட்டங்கள்! பிறகென்ன கட்டுக்கதைகளுக்கு குறைவா? இட்டுக்கட்டுவதில் வல்லவர்களான, தமிழ் செப்படி வித்தை[8] வல்லுனர்கள் சதுரங்க வேட்டையிலும் இறங்கி விடுவர். ஆனால், சரித்திர ஆதாரம் இல்லாத கட்டுக்கதைகளை வளர்க்க முன்படும் போது, உண்மைகள் வெளிவரத்தான் செய்யும். இவ்விதமாகத்தான், இப்பொழுது ஸ்டாலின் மாட்டிக் கொண்டுள்ளார். நிச்சயமாக யாரோ அவருக்கு இந்த ஸ்கிரிப்டை எழுதி கொடுத்துள்ளார்கள். அது நாகநாதன், ஜகதீசன், கருணானந்தம் போன்ற ஆஸ்தான சரித்திராசியர்களாக இருக்கலாம்.

© வேதபிரகாஷ்

18-01-2022.


[1] World Tamil Conference (WTC) என்பது முதலில் 1966ல் கோலாலம்பூர் மற்றும் 1968ல் சென்னையில் நடத்தப் பட்டது.

[2] 1971ல் ராமர் போன்ற படங்களுக்கு செருப்பு மாலை போடப் பட்டது மற்றும் இந்து கடவுளர்களை நிர்வாணமாக, ஆபாசமாகச் சித்தரித்து திக-திமுகவினர் துருச்சியில் ஊர்வலம் நடத்தினர்.

[3] தமிழனே இல்லாத நபருக்கு, தமிழகத்தில் சிலை ஏன் என்று கூட கேள்விகள் எழுப்பப் பட்டன.

[4] One.India, Life-size Bronze statue of ‘Periyar’ was unveiled at Srirangam, By Staff | Published: Monday, December 18, 2006, 3:51 [IST]

https://www.oneindia.com/2006/12/16/life-size-bronze-statue-of-periyar-was-unveiled-at-srirangam-1166394083.html

Srirangam, Tamilnadu, Dec 16 (UNI) In an event preceded by controversy, a life-size bronze statue of late Rationalist leader and Founder of Dravidar Kazhagam (DK) Periyar E V Ramasamy Naicker,was formally unveiled near the Sri Ranganatha temple by DK General Secretary K Veeramani, here .  the statue mounted on a 12-feet high pedestal,was installed near the ‘Rajagopuram’ (temple tower). Union Minister for Environment and Forests A Raja, State Ministers K N Nehru and N Selvaraj, also participated in the event.

[5] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், சிலை அரசியல், Written by WebDesk, Updated: October 2, 2017 11:06:36 am.

[6] https://tamil.indianexpress.com/opinion/statue-politics/

[7] இதில் முக்கியமானது என்னவென்றால், வள்ளுவர் கோட்டத்துக்கு கருணாநிதி அடிக்கல் நாட்டியதற்கான கல்வெட்டு அகற்றப்பட்டதுதான். வள்ளுவர் கோட்டத்தை கருணாநிதிதான் கட்டினார் என்ற தகவல் அங்கு எந்த வகையிலும் இடம் பெறவில்லை. இது இந்திரா காங்கிரஸ்காரர்கள் செய்த வேலை.

[8] பிறரறியாவகை செப்புக்களுள் உருண்டைகள் வந்துபோகுமாறு அவற்றைத் தரையில் அடித்துக் காட்டுவது முதலிய தந்திரவித்தை.

ரஜினியும் இக்கட்டுக்கதை வைத்து படம் எடுத்ததால், இரண்டாம் பெனிகுக் நிலைக்கு உயர்ந்துள்ளாறா அல்லது தள்ளப் பட்டாரா என்று தெரியவில்லை.

ஜான் பென்னிகுக் வைத்து கட்டுக்கதை உண்டாக்குவதேன், சிலைஅரசியல் செய்வதேன்? ஆங்கில அடிவருடித் தனமா? திராவிடத்துவ திசைத்திருப்பு அரசியலா? (2)

ஜனவரி 18, 2022

ஜான் பென்னிகுக் வைத்து கட்டுக்கதை உண்டாக்குவதேன், சிலைஅரசியல் செய்வதேன்? ஆங்கில அடிவருடித் தனமா? திராவிடத்துவ திசைத்திருப்பு அரசியலா? (2)

கருணாநிதி மதுரையில் சிலை வைத்தால், ஸ்டாலின் இங்கிலாந்தில் சிலை வைப்பார்: ஆங்கிலேயே அரசு இத்திட்டத்திற்கு தொடர்ந்து நிதியுதவி செய்ய இயலாத சூழ்நிலையில், கர்னல் ஜான் பென்னிகுயிக் இங்கிலாந்து சென்று தனது குடும்ப சொத்துகளை விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு எத்தகைய தடைகள் வந்தாலும், இந்த அணையை எப்படியாவது கட்டி முடிக்க வேண்டும் என்ற தன்னம்பிக்கையுடனும், மன உறுதியுடனும், விடா முயற்சியுடனும், துணிவுடன் செயல்பட்டு பெரியாறு அணையைக் கட்டி முடித்தார்[1]. அவருடைய பிறந்த நாளான ஜனவரி 15ஆம் நாளை தமிழர்கள் விமரிசையாகக் கொண்டாடுகின்றனர்[2]. தேனி மாவட்ட மக்கள் கர்னல் ஜான் பென்னிகுயிக்கின் தியாகப் பணிகளை நினைவுகூரும் வகையில் அவருடைய பிறந்த தினத்தில் பொங்கல் வைத்து வழிபாடு செய்கிறார்கள். மேலும், அம்மாவட்ட மக்கள் தொடர்ந்து தங்களுடைய குழந்தைகளுக்கு அவருடைய பெயரை வைத்து நன்றி தெரிவித்து மகிழ்ச்சி அடைகின்றார்கள்[3]. கர்னல் ஜான் பென்னிகுயிக் நினைவைப் போற்றும் வகையில், முத்தமிழறிஞர் கலைஞர் மதுரை, தல்லாக்குளம் பொதுப்பணித்துறை வளாகத்தில் 15.6.2000 அன்று அன்னாருடைய திருவுருவச் சிலையை திறந்து வைத்தார்[4]. தமிழக அரசு, தேனி மாவட்டம் கூடலூர் லோயர் கேம்ப் பகுதியில் வெண்கலத்திலான பென்னிகுயிக் உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் ஒன்றை அமைத்தும், தேனி மாநகரப் பேருந்து நிலையத்திற்கு பென்னிகுயிக்கின் பெயரைச் சூட்டியது[5].

பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த நீதிமன்றத்திற்குச் செல்வோம்: தமிழ்நாடு தனக்குள்ள உரிமையை விட்டுக் கொடுக்காமல் தொடர்ந்து உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும், மத்திய அரசின், நீர் ஆணையம் மற்றும் உயர் அமைப்புகளிடம் சட்டரீதியாக நுணுக்கமான கருத்துகளைத் தெரிவித்து, வாதாடி பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடி உயர்த்த நடவடிக்கை எடுத்து வருகிறது[6]. தென் மாவட்ட மக்களின் நீண்டகாலத் தண்ணீர் பிரச்சினையைக் கருத்தில் கொண்டு பெரும் போராட்டத்தில் பல்வேறு இன்னல்களைக் கடந்து கட்டப்பட்ட முல்லைப் பெரியாற்றின் மீதான தமிழ்நாட்டின் உரிமையை எந்நாளும் விட்டுக் கொடுக்காமல் காப்பதற்கு நமது அரசு தொடர் முயற்சி மேற்கொள்ளும் என்பதனையும் தியாகத் திருவுருவமான கர்னல் ஜான் பென்னிகுயிக் பிறந்த நாளில் உறுதி எடுத்துக்கொள்வோம்” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்...

ஆங்கிலேயர் காலத்திலேயே தெரிந்த உண்மைகளை மறைப்பது: ஆராய்ச்சி செய்பவர்களுக்கு இதெல்லாம் நன்றாகவே தெரியும். ஏனெனில், ஆங்கிலேயர் ஒன்று தங்கள் பணத்தைப் போட்டு, எந்த நன்மையினையும் இங்கு செய்து விடவில்லை. பில்லியன்களில் இந்தியர்களிடம் வரிவசூல் மூலம் கொள்ளையடித்ததில்[7], கொஞ்சம் தங்களது போகுவரத்தி, வசதி போன்றவற்றிற்கு செலவிட்டனர். அணைக் கட்டும் விவகாரங்களிலும், தமது மிஷின்கள், பாகங்கள் முதலியவற்றை விற்பத்தில் கமிஷன் பெறலாம் என்ற நோக்கில் தான் செய்து வந்தனர். முன்னர் பழைய வீடுகளில் சாதாரண ஸ்விட்ச், காக்கடை மூடி / காஸ்ட் அயரன் மூடி முதலியவற்றில் “மேட் இன் இங்கிலாந்து,” என்றிருக்கும். அதனால் தான், அந்நிய பொருட்களை புறக்கணிப்போம் என்று பொராட்டம் நடத்தினார். சுவதேசி பொருட்களை வாங்க வேண்டும் என்று எடுத்துக் காட்டினார். ஏ.டி.மெகன்ஸி என்ற இஞ்சினியர், தமது நூலில் “பெரியாறு திட்டத்தைப் பற்றிய வரலாறு” பற்றி குறிப்பிட்டுள்ளார்[8].

2016 இக்கட்டுகதை எடுத்துக் காட்டப் பட்டது: ஆகஸ்ட் 2016லேயே, தீபா கந்தசாமி என்பவர், இதெல்லம் கட்டுக்கதை என்று எடுத்துக் காட்டியுள்ளார்[9]. சொத்தை விற்று அணை கட்டியது – அதெல்லாம் கட்டுக்கதை, அதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று ஸ்ட்ரௌட் சாம்ப்ஸன், பென்னிகுவிக் பேரன் சொன்னதாக, குறிப்பிட்டார். ஆங்கிலேய கருவூல அதிகாரிகளுக்கு இவரது வேலை திருப்தி அளிக்கவில்லை, அதனால், மாவீரர் பட்டம் (knighthood) அந்தஸ்தும் கொடுக்கப் படவில்லை என்றும் பேரன் வருத்தப் பட்டுக் கொண்டார்[10]. ஏ.டி.மெகன்ஸியின் புத்தகத்தில் உள்ள விவரங்களைக் குறிப்பிட்டுள்ளார். ஜான் பென்னிகுவிக்கின் கல்லறை கல்லில் கூட அவர் கிரிக்கெட் ஆடினார் என்று தான் குறிப்பிடப் பட்டுள்ளதேயன்றி, அணைப் பற்றி ஒன்றும் குறிப்பிடப்ப்டவில்லை. ஆகவே, இந்த அணைக்கும், இவருக்கும் ஏதோ பிரச்சினை உள்ளது என்று தான் தெரிகிறது.

2018 – எஸ்.ராமநாதன் பொறியாளர் எடுத்துக் காட்டியது: எஸ். ராமநாதன் FIE, பென்னிகுவிக்கை நினைவு கொள்வோம் என்ற கட்டுரையில், விவரமாக எழுதியுள்ளார்[11]. ஸ்ட்ரௌட் சாம்ப்ஸன், “பெரியாறின் நீரை தடுத்து திசைத் திருப்ப வேண்டும் என்பது பழைய திட்டமே. (ஆங்கிலேயர்களால் முன்னர்) பல ஆய்வுகள் மேற்கொண்டு அது தேவையில்லை, நடைமுறையில் ஒத்துவராது என்றெல்லாம் குறிப்பிட்டுள்ளார்கள்,”  என்றும் ராமநாத குறிப்பிட்டுள்ளார்[12]. அதாவது, பொருளாதார ரீதியில் ஆங்கிலேயர்களுக்கு இதில் விருப்பம் இல்லை என்று தெரிகிறது. இருப்பினும், வலுக்கட்டாயமாக,இதனைக் கட்டியது, இங்கிலாந்திலிருந்து மிஷின்களை வாங்கி இறக்குமதி செய்தது, முதலியன, வேறெதையோ சுட்டிக் காட்டுகிறது. ஒருவேள நிதி விவகாரங்களில் பிரச்சினை ஏற்பட்டிருக்கலாம். அதனால் தான், கருவூல அதிகாரிகள் இவரது செயல்களில் திருப்தியடைவில்லை என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

2022ல் வெண்ணிலா கூறுவது: அ. வெண்ணிலா என்பவர் விகடனுக்குக் கூறியது[13], “முதல்வரின் செய்திக் குறிப்பில்ஆங்கில அரசு தொடர்ந்து நிதி உதவி செய்து அணை கட்ட முடியாத சூழலில், பென்னி குக் தன் சொத்துக்களை விற்று அணை கட்டினார்என்றுள்ளது. பென்னி குக் பற்றி கடந்த 25 ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட அழகிய கற்பனை இது……[14] முதல்வரின் வார்த்தைகள் அரசாங்க சாசனம். அதுவே எதிர்கால உண்மை. மாண்புமிகு முதல்வர் அவர்கள் எந்த வரலாற்று ஆவணத்திலும் இல்லாத ஒரு செய்தியைக் குறிப்பிட்டுள்ளதைக் கவனத்தில் கொண்டு சரிசெய்ய வேண்டுகிறேன்[15]. ஏற்கெனவே பல ஊடகங்களில் பலர் தனக்குத் தோன்றியதையெல்லாம் எழுதி எழுதி முதல்வரே நம்பும் அளவிற்கு உண்மையாக்கப்பட்டுள்ள கற்பனை இது[16]………. பிரிட்டீஷ் இந்தியா நிதி கொடுக்க முடியவில்லை என்றால் திட்டம் தொடருமா? பிரிட்டீஷ் இந்திய கவர்னரின் உத்தரவை மீறி பென்னி அணை கட்டியிருக்க முடியுமா? அணை கட்ட அரசாங்கம் செய்த செலவுக்கு பைசா விகிதம் அணை கட்டிய உதவிப் பொறியாளர் A.T.Mackenzie எழுதிய ‘History of the periyar project’ நூலில் வரவு செலவு கொடுத்துள்ளார். சில கற்பனைகள் இதமானவை. இனியவை. கலைக்க கூடாதவை. ஆனால் அவை எளிய மக்களின் வாய் வார்த்தைகளில் புழங்கும்வரை ரசிக்கலாம்”. இதை இவர் பேஸ்புக்கிலும் பதிவு செய்துள்ளார்.

© வேதபிரகாஷ்

18-01-2022.


[1] NEWS18 TAMIL, தமிழ்நாடு அரசு சார்பில் இங்கிலாந்தில் பென்னிகுயிக்குக்கு சிலைமுதல்வர் மு..ஸ்டாலின் அறிவிப்பு, Published by: Karthick S, First published: January 15, 2022, 20:35 IST LAST UPDATED : JANUARY 15, 2022, 20:35 IST.

[2] https://tamil.news18.com/news/tamil-nadu/chennai-district-chennai-corporation-mayor-post-allocated-to-schedule-caste-woman-skd-667755.html

[3] தினகரன், தமிழ்நாடு அரசு சார்பில் இங்கிலாந்தில் பென்னி குயிக் சிலை நிறுவப்படும்: முதலமைச்சர் மு..ஸ்டாலின் அறிவிப்பு, 12:07 pm Jan 15, 2022 | dotcom@dinakaran.com(Editor)

[4] https://m.dinakaran.com/article/news-detail/735010

[5] நக்கீரன், இங்கிலாந்தில் தமிழ்நாடு அரசு சார்பில் பென்னிக்குயிக் சிலை” – முதலமைச்சர் மு..ஸ்டாலின் அறிவிப்பு, Published on 15/01/2022 (12:30) | Edited on 15/01/2022 (12:33)

[6] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/tamilnadu-government-will-be-set-penny-kwik-statue-england

[7]  தாதாபாய் நௌரோஜி, அம்பேத்கார் முதலியோர் எடுத்துக் காட்டியுள்ளனர். சமீபத்தில் சசிதரூரும் இதைப் பற்றி பேசி-எழுதியுள்ளார்.

[8] A.T.Mackenzie , Executive Engineer , who later wrote the book “ History of the Periyar Project “..

[9] Th Mint, John Pennycuick: The man who built the Mullaiperiyar dam, 11 min read . Updated: 28 Aug 2016, 12:04 AM IST. Deepa Kandaswamy.

 In the popular narrative, many claim that Pennycuick sold his property and his wife’s jewels to fund the dam’s construction. However, his great-grandson, Stuart Sampson, in an email said, “It is a myth. I have no evidence of this.” 

[10] Another common tale is that Pennycuick was subjected to an inquiry commission by the British government. To this, Sampson said, “I am not aware it. It seems clear that he did not make himself popular with the treasury officers of the Indian government. This is probably the reason why he did not receive a knighthood.” Deepa Kandaswamy is an award-winning freelance writer and author based in India.

https://www.livemint.com/Sundayapp/3PeedgK5bx4Z9uPKEE0KPL/John-Pennycuick-The-man-who-built-the-Mullaiperiyar-dam.html

[11] S. Ramanathan, Let us Remember Colonel John Pennycuick : Birthday Tributes , E-News: 31| January 2018, pp.3-5.

[12] He (Stuart Sampson) boldly uttered “ The idea of thus diverting the waters of the Periyar is probably very ancient. Surveys have been made in a some-what half- hearted manner, to condemn the idea as impracticable”.

http://ieimadurailc.org/images/newsletter/E-News__Jan_2018.pdf?fbclid=IwAR3WM28cWfM3wxS2n83UfehJGA6b5cdQmnP8dPctX5Z7076D_Y-UznIOKbA

[13] விகடன், சொத்துக்களை விற்று அணை கட்டினாரா பென்னி குக்? முதல்வர் ஸ்டாலின் சொல்வது சரியா?, யுவநந்தினி சே, Published: 15th Jan, 2022 at 7:37 PM; Updated: 2 days ago.

[14] https://www.vikatan.com/amp/story/news/tamilnadu/article-about-stalins-announcement-on-john-pennycuick-birthday

[15] தமிழ்.ஏபிபி.லவ்,Writer Vennila on Pennycuick : ‘தன் சொத்தை விற்று முல்லை பெரியாறு அணைக் கட்டினாரா பென்னிகுயிக்?’ இல்லை என்கிறார் எழுத்தாளர் வெண்ணிலா..!, By: இராஜா சண்முகசுந்தரம் | Updated : 17 Jan 2022 12:45 PM (IST)

[16] https://tamil.abplive.com/news/tamil-nadu/did-john-pennycuick-sell-his-property-to-build-mullaperiyar-dam-here-is-writer-vennila-explanation-35663

மணல் மேடு, ராமர் பாலம், ரோமிலா தாபர், கருணாநிதி – சரித்திரத்தைப் புரட்டும் வித்தகர்கள் – உடன் பிறப்புகளுக்கு எச்சரிக்கை!

பிப்ரவரி 28, 2013

மணல் மேடு, ராமர் பாலம், ரோமிலா தாபர், கருணாநிதி – சரித்திரத்தைப் புரட்டும் வித்தகர்கள் – உடன் பிறப்புகளுக்கு எச்சரிக்கை!

வயதாகியும் புத்தி மாறவில்லை என்பது கருணாநிதி விஷயத்தில் மெய்யாகிறது. நாத்திகம் என்ற “லைசென்ஸ்” இருந்தால் இந்துக்களைபற்றி எதுவேண்டுமானாலும் பேசலாம், இந்துமதத்தைப் பற்றி என்ன வேண்டுமானாலும் எழுதலாம், இந்துமதநம்பிக்கைகளைப் பற்றி எப்படியும் விவாதிக்கலாம் என்ற எண்ணம், தைரியம் மிகவும் மோசமானது, கேவலமானது. ஏனெனில், “விஸ்வரூபம்” இவர்களின் போலித்தனத்தை முழுவதுமாகத் தோலுறுத்திக் காட்டி விட்டது. நாத்திக உடையை அவிழ்த்து நிர்வாணமாக்கி விட்டது. பகுத்தறிவை ரணகளமாக்கி விட்டது, இருப்பினும் வெட்கம், மானம், சூடு, சுரணை மேலாக “சுயமரியாதை” கூட இல்லாமல் பேசுகிறார்கள், எழுதுகிறார்கள்.

அன்று மணல்மேடு என்று சொன்னவர்கள் இன்று ராமர் பாலம் என்று சொல்லுவதா? கலைஞரின் அறிவார்ந்த வினாவிடுதலை[1], திங்கள், 25 பிப்ரவரி 2013 15:52

சென்னை, பிப்.25-  அன்று வெறும் மணல் திட்டு என்று சொன்னவர் இன்று ராமர் பாலம் என்று முரண்படுவது ஏன் என்று அறிவார்ந்த வினாவை எழுப்பினர் தி.மு.க தலைவர் கலைஞர். முரசொலியில் இன்று அவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:-

உடன்பிறப்பே, இந்திய  உச்சநீதி மன்றம் 2007ஆம் ஆண்டு  செப்டம்பர் முதல் தேதியன்று சேது சமுத்திரம் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு இடைக்காலத் தடை விதித்ததோடு, மாற்றுப் பாதை பற்றிப் பரிசீலிக்க வேண்டுமென்று மத்திய அரசை அறிவுறுத்தியது.   அதன்படி 20.7.2008 அன்று  டாக்டர் ஆர்.கே. பச்சௌரி தலைமையில்  வல்லுநர் குழு ஒன்றினை மத்திய அரசு அமைத் தது.   வல்லுநர் குழு 12-2-2012 அன்று தனது அறிக்கையை மத்திய அரசுக்கு வழங்கியது. 11 மாதங்கள் கழித்து, இப்போது மத்திய அரசு பச்சௌரி குழு வழங்கியுள்ள  அறிக்கையின் மீது  தனது  கருத்துக் களைத் தெரிவித்து, உச்சநீதி மன்றத்தில் 23-2-2013 அன்று  பதில் ஒன்றினைத் தாக்கல் செய்துள்ளது.   அந்தப் பதிலில், ஆதாம் பாலம் வழியாக மட்டுமே சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற முடியும் என்றும், மாற்றுப் பாதையில் இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவது சாத்தியமில்லை என்றும் பிரபல சுற்றுச்சூழல் நிபுணர் ஆர்.கே.பச்சௌரி தலைமை யிலான குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு தெரிவித்துள்ளது. பச்சௌரி  குழுவின் அறிக்கையை உச்சநீதிமன்றத் திடம் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் ரோகின்டன் நாரிமன்  தாக்கல் செய்தார்.

அதில், சேது சமுத்திர திட்டத்தை செயல் படுத்த மாற்றுப் பாதையை தேர்ந்தெடுப்பது பொருளாதார ரீதியாகவும், பூகோள ரீதியாகவும் சாத்தியமற்றது என்று கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பச்சௌரி கமிட்டியின் அறிக்கையை மத்திய அமைச்சரவை இன்னும் ஆராயவில்லை என்பதால், இதன் மீது முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை என்றும் மத்திய அரசு உச்சநீதி மன்றத்திடம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள இந்தப் பதிலைப் பற்றி பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் திரு. ரவிசங்கர் பிரசாத் என்பவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, சேது சமுத்திரத் திட்டத்திற்காக எந்தவொரு சூழ்நிலையிலும் ராமர் பாலத்தை அழிக்கும் முடிவினை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவித்திருக்கிறார். ஆர்.எஸ்.எஸ். மற்றும் பல்வேறு இந்து மத அமைப்புக்களும்,  சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசும், பா.ஜ.க.வைப் பின்பற்றி இதே கருத்தைத்தான்  உச்சநீதிமன்றத்திலே  வலியுறுத்தி இருக்கின்றது.

8.5.2002 அன்றே நான் அன்றைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் பிரதமர் திரு. வாஜ்பாய் அவர்களுக்கு  எழுதிய கடிதத்திலேயே  சேது சமுத்திரத் திட்டம் பற்றிய விவரங்கள் எல்லாம் அடங்கியிருக்கின்றன.   23.7.1967 அன்று சேது சமுத்திரத்தின் ஒரு பிரி வாக உள்ள தூத்துக்குடித் துறைமுகத் திட்டம், சேலம் இரும் பாலைத் திட்டம்  ஆகியவற்றை நிறைவேற்றக் கோரி அறிஞர் அண்ணா அவர்கள் எழுச்சி நாளை அறி வித்தார்.

தேசிய ஜனநாயக கூட்டணி அரசால் 6 எண் பாதை முடிவு

இத்திட்டம் உலகளவில் உள்ள சூயஸ் கால் வாய், பனாமா கால்வாய் போன்று சிறப்பினைப் பெறும் என்பதை அறிந்து இத்திட்டத்தை ஆராய பல குழுக்கள் அமைக்கப்பட்டும் நீண்ட நாட்களாக கிடப்பிலே போடப்பட்டது.  மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட் டணி அரசு அமைந்ததும்,  சேது சமுத்திரத் திட்டம் பற்றிய சாத்தியக் கூற்றினை ஆராய  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.  சேது சமுத்திரக் கால்வாய் அமைய வேண்டிய வழித்தடம்  மற்றும் அதற்கான விவரங்கள் பா.ஜ.க. பிரதமரான  திரு. வாஜ்பாய் அவர்கள் தலை மையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசினால் பரிசீலிக்கப்பட்டு ஆறாவது எண்  பாதை (ஆடம்ஸ் பாலம் அதாவது பாஜக தற்போது ஏற்க முடியாது என்று கூறுகின்ற  ராமர் பாலம்) முடிவு செய்யப் பட்டது.  இவ்வாறு பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசால் எந்தப் பாதையில் திட்டம் நிறைவேற்ற வேண்டும் என்று ஒப்புதல் அளிக்கப்பட்டதை மறந்து இன்றைக்கு  அது ராமர் பாலம் உள்ள இடம் என்றும், அங்கே திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்றும் பா.ஜ.க. வினர் தற்போது கூறுவது எத்தகைய முரண்பாடு என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

பா.ஜ.க. மட்டுமல்ல;  இங்கே தமிழகத்தில்  ஆளு கின்ற அ.தி.மு.க. வின் சார்பில்  2001  தேர்தல் அறிக்கையில்;  இந்திய தீபகற்பத்தைச் சுற்றி இதுவரை தொ டர்ச்சியான கப்பல் போக்குவரத்திற்கு ஏற்ற பாதைகள் இல்லை.  மேற்கிலிருந்து கடல் வழி யாகக் கிழக்கு நோக்கிக் கப்பல்கள் செல்ல வேண்டுமானால்,  இலங்கையைச் சுற்றிக் கொண்டுதான் செல்ல வேண்டியுள்ளது. இதற் குத் தீர்வாக அமைவதுதான், சேது சமுத்திரத் திட்டம்.  இத்திட்டத்தின்படி ராமேசுவரத்திற்கும், இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையில் ஆடம்ஸ் பிரிட்ஜ் பகுதியில் கப்பல் போக்குவரத் திற்குத் தடையாக உள்ள மணல் மேடுகள் மற்றும் பாறைகளை அகற்றி ஆழப்படுத்தி கால்வாய் அமைப்பது சேதுசமுத்திரத் திட்டத்தின் தலையாய நோக்கம் என்று  ஆடம்ஸ் பாலம் அமைந்துள்ள பகுதியில்,  ராமர் பாலம்  என்று இப்போது சொல்கிறார்களே, அதே இடத்தில் அங்கே இருக்கும் மணல் மேடுகள், பாறைகள் ஆகியவற்றை அகற்றி விட்டு கால்வாய் அமைப்பதுதான் தலையாய நோக்கம் என்று சொன்னவர்கள், இன்று ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டுமென்று சொன்னால்  அது எத்தகைய முரண்பாடு என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.   தி.மு. கழகத்தின் முயற்சி யினால் இந்தத் திட்டம் வந்து விடக் கூடாது என்ற உள் நோக்கம் தானே காரணம்?

தேர்தல் அறிக்கையில் சொன்னது மாத்திரமல் லாமல், அ.தி.மு.க. தலைவி  ஜெயலலிதா  26.6.2005 அன்று விடுத்த நீண்ட அறிக்கை ஒன்றில் என்னுடைய வற்புறுத்தலின் பேரில்தான் 1998ஆம் ஆண்டில் இத் திட்டம் ஒரு முன்னுரிமைத் திட்டமாக மேற் கொள்ளப்பட்டு, தொடக்கச் சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு ஆய்வுப் பணி;  தேசிய சுற்றுச் சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்திடம் 1998ஆம் ஆண்டு மார்ச் திங்களில் ஒப்படைக்கப்பட்டது.  இந்நிறுவனத்தின் அறிக்கையும்,  1998ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்களில் அளிக்கப்பட்டது.  இவ்வாறாக, சேது சமுத் திரக் கால் வாய்த் திட்டம் நனவாவதை உறுதிப்படுத்து வதற்கு நான் முக்கியக் காரண மாக இருந்திருக்கிறேன்” என்று அன்றைக்கு இத்திட்டத்திற்கே தான்தான் காரணம் என்பதைப் போலச் சொல்லிக் கொண்ட வரும் இதே ஜெயலலிதா தான் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். சேது திட்டம்  நிறைவேற்றப் படுமானால், அதன் மூலம் தமிழகத்தில் தொழில், வர்த்தகம் பெருகும்; நாட்டின் அன்னியச் செலாவணி வருவாய் அதிகரிக்கும்; கப்பல்களின் பயண தூரம், நேரம் பெருமளவு குறையும்; தமிழகம் மற்றும் அண்டை மாநிலத் துறைமுகங்களில் சரக்குகள் கையாளும் திறன் அதிகரிக் கும்; ராமேசுவரம் அல்லது மண்டபத்தில் புதிய சிறு துறைமுகம் உருவாகும்; சேதுக் கால்வாய் திட்டத்தின்கீழ்  மீன் பிடித் துறைமுகங்கள் மேம்படுத்தப்படுவதால் கடல் சார் பொருள் வர்த்தகம் பெருகி மீனவர்களின்  பொருளாதாரம், வாழ்க்கைத்தரம் உயரும்; மன்னார் வளைகுடாவிலிருந்து பாக் கடல் சென்று வர மீனவர்களுக்கு இக்கால்வாய் வசதி அளிக்கும்;

இத்திட்டத்தால் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு

இலங்கை உள்ளிட்ட வேறு நாடுகளின் துறை முகங்களில் இந்தியச் சரக்குகள் பரிமாற்றம் செய்யப் படுவது தவிர்க்கப்படும்; நாட்டின் கடலோரப் பாதுகாப்பு வலுப்படுத்தப்படும்; இத்திட்டத்தால் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நேரடி, மறைமுக வேலை வாய்ப்பு தொடர்ந்து கிடைக்கும்; சேது சமுத் திரத் திட்டத் தின் மூலம் ஆண்டுக்கு  8 கோடி மனித நாள் வேலை வாய்ப்பு உருவாக்கப்படும். ஏராளமான நேரடி மற்றும்  மறைமுக வேலை வாய்ப்புகள் உருவாக் கப்படும்;

ராமேஸ்வரம், மற்றும் நாகப்பட்டினம்  துறைமுகங்கள் மேம்படுத்தப் படுவதன் வாயிலாக  சுமார் 10 ஆயிரம் பேருக்கு நேரடி வேலை வாய்ப்பு கிட்டும்; சேது சமுத்திரக் கால்வாயை  பயன்படுத்து வதன்  மூலம்  இந்தியா வின் கிழக்கு மற்றும் மேற்கு  கடல் பகுதி களுக்கு  இடையேயான கப்பல் போக்குவரத்து தூரம்  சுமார் 424 மைல் அளவுக்கு குறையும்.  இதன் மூலம் கப்பல்களின் பயண நேரம் 30 மணி அளவிற்கு குறையும் வாய்ப்புள்ளது.  கணிசமான எரிபொருள் சேமிப்பும், அன்னியச் செலாவணி  சேமிப்பும் ஏற்படும். கப்பல் வாடகை கட்டணத்தில் கணிசமான சேமிப்பு ஏற்படும். பயண நேரம் குறைவதால் கப்பல்கள் கூடுதல் பயணங்களை  மேற்கொள்வதன் மூலம் கூடுதல் சரக்குகளை கையாள இயலும்; தென்னிந்தியாவின் கிழக்கு கடற்கரை துறைமுகங்களில் ஒன்று சரக்கு பெட்டக போக்குவரத்திற்கென  ஒருங்கிணைப்புத் துறை முகமாக மேம்படுத்தப்படும்; தூத்துக்குடி துறை முகமாக பெருமளவில்  வளர்ச்சி அடை யும்; கடற் படை மற்றும் கடலோரப் படை கப்பல்கள் கிழக்குப் பகுதியிலிருந்து மேற்கு பகுதிகளுக்கு அதி விரைவில் செல்ல இயலும்.   இதன் மூலம் இந்தியப் படைத் திறன் பெருமளவில் மேம்படுத்தப்படும்; ராமனாதபுரம், நாகப் பட்டினம், தூத்துக்குடி மாவட்டங்களில் கட்டமைப்பு வளர்ச்சி பெருகும்.

தமிழகத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் துணைபுரியும் இத்தகைய  ஏராளமான பயன் களைக் கருத்திலே கொண்டுதான்,  அய்க்கிய முற்போக்கு கூட்டணி அரசு மத்தியில் உரு வானபோது அதன் குறைந்தபட்சச் செயல் திட்டத்தில் தி.மு. கழகத்தின் முயற்சியால்  சேது சமுத்திரத் திட்டம் இடம் பெற்றது மாத்திரமல்லாமல்,   அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் நிதி நிலை அறிக்கையிலும் சேர்க்கப்பட்டு,  அதன் தொடக்க விழாவிற்கு  பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர் களும்,  அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் வழி காட்டும் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்களும், நானும், மற்ற தோழமைக் கட்சித்தலைவர்களும்  மதுரையில் நடைபெற்ற பிரமாண்டமான விழாவிலே கலந்து கொண்டோம்.   சேது சமுத்திரத் திட்டத்தின் தொடக்க விழாவை தடுக்க வேண்டும் என்பதற்காக அப்போது சிலர் நீதிமன்றத்தின் மூலமாக தடை பெற முயன்றனர். அது தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி அவர்களின் பெஞ்ச்,

தேசிய நலனுக்காக கொண்டு வரப்படும் சேது சமுத்திரத் திட்டத்தை தடை செய்யும் நோக்கத்தோடு  மனுதாரர் நீதிமன்றத்துக்கு  விரைந்து வந்து  வழக்கு தொடுத்துள்ளார்.   சேது சமுத்திரத் திட்டம்  நாட்டிற்கு நல்ல பலனை கொடுக்கும் என்பது  எல்லோருக்கும்  தெரிந்த ஒன்றாகும்.   ஏனென்றால்  தற்போது கப்பல்கள்  இலங்கை நாட்டைச் சுற்றி  வங்காள விரிகுடா  கட லுக்கு  வரவேண்டியுள்ளது.    பாக்  ஜலசந்தியிலே  குறுக்காக கப்பல்  கால்வாய்  அமைத்தால்  பெருமளவு  பணமும்,  நேரமும்  சேமிக்கப் பட ஏதுவாகும். இந்தக் கால் வாய்த் திட்டம் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும். ஆகவே விழாவுக்கு  தடை கிடையாது – என்று கூறி தீர்ப்பளித்தது. அவ்வாறு; தொடங்கி வைக்கப்பட்ட சேது சமுத்திரத் திட்டம், அப்போது அமைச்சராக இருந்த தம்பி டி.ஆர்.பாலுவின் நல்ல முயற்சி யின் காரண மாக வேகமாக முன்னேற்றம் அடைந்து கொண்டிருந்த நேரத்தில், மதவாதச் சக்திகள் எப்படியும் அந்தத் திட்டத்திற்கு முட்டுக் கட்டைகளை உருவாக்கிட வேண்டும் என்ற நோக்கத்தோடு நீதிமன்றத்திற்கு இந்தப் பிரச்சினை எடுத்துச் சென்றிருக்கின்றனர்.   உச்ச நீதி மன்றம் விரைவில் இதுகுறித்து நல்ல முடிவெடுத்து தீர்ப்பளிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டுமென்றும், நல்ல தீர்ப்பினைப் பெற்று சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றி தென் தமிழக மக்களின் வாழ்வாதாரம் உயருவதற்கு வழி வகுத்திட வேண்டுமென்றும் வலியுறுத்துகிறேன்.

அன்புள்ள,
மு.க.

சேதுசமுத்திர திட்ட கப்பல் உதிரிபாகங்களும், ரோமிலா தாபர் போன்ற சரித்திர ஆசிரியர்களின் உளறல்களும்!சரித்திர ஆசிரியர்களின் போலித்தனம்[2]: சேதுசமுத்திர திட்டத்தை இந்துக்கள் சார்பாக எதிர்த்தபோது, பலர் அதற்கு எதிராகக் கிளம்பினர். அயோத்யாவை விட்டுவிட்டு, “ராமர் பாலம்” என்றதற்கு சீறி பாய்ந்து வந்தனர், புதிய சித்தாந்தத்தைத் திரித்தனர்[3]. ரோமிலா தாபர் போன்ற சரித்திர ஆசிரியர்கள், ஏதோ தமக்குத்தாம் எல்லாமே தெரியும் என்பது போல பேசினர்[4]. மைக்கேல் விட்செல் போன்ற ஹார்வார்ட் பேராசிரியர்கள், பாகிஸ்தானிற்கு வக்காலத்து வாங்கினர்[5]. அதற்கு உடனே “தி ஹிந்து” போன்ற நாளிதழ்கள் வக்காலத்து வாங்கிக் கொண்டு வந்தன. கருணாநிதி வாய்க்கு வந்தபடி உளறிக்கொட்டியபோது, அந்த ஆளின் வக்கிரம் வெளிப்பட்டது[6]. ஆனால், திட்டமே கிடப்பில் போட்டவுடன், எல்லோரும் அடங்கிவிட்டனர். இருப்பினும் நம்பிக்கையாளர்கள் தொடர்ந்து ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி வரைச் சென்று வழிபாடு செய்து கொண்டுதான் இருக்கின்றனர். அதாவது அவர்களின் உளரல்கள் அல்லது அதி மேதாவித்தனமான கேள்விகள், விமர்சனங்கள் முதலியன குப்பையிலே போடப்பட்டன. அதுபோலவே, இப்பொழுது, “சேதுசமுத்திர திட்ட கப்பல் உதிரிபாகம் பழைய இரும்பு கடையில் விற்பனை” என்று செய்திகள் வருகின்றன.

2008ல் சொன்னது – நம்மால் (கருணாநிதியால்)கண்டுபிடிக்க முடியாதது வேதனை தருகிறது[7]பல  லட்சம் ஆண்டுகளுக்கு  முன்பு  பிறந்ததாக  கூறப்படும்  ராமரின் பிறந்த இடத்தைக் கண்டு பிடித்து  விட்டார்களாம்.  ஆனால்  ஆயிரம் ஆண்டுகளுக்கு  முன்பு  தென்னகத்தையே  ஆட்சி  புரிந்து  வந்த  மாமன்னன் ராஜராஜ  சோழன்  மறைந்த  இடத்தையோ,  அவனது உடல்  புதைக்கப்பட்ட  இடத்தையோ,  அதன்   நினைவாக  அமைக்கப்பட்ட  நினைவிடத்தையோ  நம்மால்  கண்டுபிடிக்க முடியாதது  வேதனை தருகிறது  என்று  கூறியுள்ளார்  முதல்வர் கருணாநிதி.

தம்மை அறியாத “தமிழர்கள்”: தமிழர்கள் 100-150 ஆண்டுகளுக்கு முன்னர், ஆரியமாயையில் திளைத்து, திராவிட மாயையில் சிக்குண்டு, தமது அடையாளத்தைத் தொலைத்தனர். “தமிழர்கள்” என்று சொல்லிக் கொள்பவர்கள் இத்தகைய போலித்தனமான நாத்திகர்கள், இந்துவிரோதிகள் கூறுவதை, எழுதுவதை கவனித்து உண்மையறியாமல் இருந்து வந்தால், நிச்சயமாக அவர்கள் தங்களது மூலங்களை இழக்க நேரிடும், குறிப்பாக பத்துப்பாட்டு-எட்டுத்தொகை நூல்களையும், அவை காட்டும் தமிழர்களின் வாழ்க்கை முறையினையும் மறந்து விடுவர்.

© வேதபிரகாஷ்

28-02-2013


கருணாநிதியின் துணைவி பொட்டு வைத்துக் கோண்டு கோவிலில் வழிபாடு நடத்தினாராம்!

செப்ரெம்பர் 28, 2011

கருணாநிதியின் துணைவி பொட்டு வைத்துக் கோண்டு கோவிலில் வழிபாடு நடத்தினாராம்!

 

உடுப்பி கிருஷ்ணன் கோவிலில் வழிபாடு நடத்தினார் ராஜாத்தி[1]: 28-09-2011 அன்றைய தினமலரில், புகைப்படத்துடன் இப்படியொரு செய்தி வந்துள்ளது.  பிறகு இணைத்தளத்தில் தேடி பார்த்தபோது, ஆங்கில நாளிதழ்களில் அதிகமாகவே செய்திகள் வந்துள்ளன என்று தெரிகிறது. தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., கனிமொழியின் தாயாரும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் துணைவியாருமான ராஜாத்தி, கர்நாடக மாநிலம் உடுப்பி கிருஷ்ணன் கோவிலில், நேற்று முன்தினம் வழிபாடு நடத்தினார். பிறகு விசாரித்ததில் உண்மையிலேயே, நாத்திக கருணாநிதியின் துணைவி, சிறிதும் வெட்கம், மானம், சூடு, சொரணை எதுவும் இல்லாமல் சாமி கும்பிட சென்றுள்ளனர். இதற்காக பெங்களூருவில் இருக்கும் செல்வம் முதலியோர் பிரத்யேகமாக ஏற்பாடுகளை செய்துள்ளனர். காவேரியுடன் பிரசித்தி பெற்ற கிருஷ்ணன் கோவில் அமைந்துள்ள உடுப்பி நகருக்கு வந்த ராஜாத்தி, சுமார் ஒரு மணி அளவில் கிருஷ்ணன் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார்[2]. கன்னத்தில் போட்டுக் கொண்டு நமஸ்காரம் செய்தார்.

சிரூர் மடத்தின் சுவாமிகளை ராஜாத்தி தரிசித்தது: பொதுவாக மத்வ சம்பிரதாயத்தில் இருக்கும் மதகுருமார்கள், ஆச்சார்யர்கள் மிகவும் ஆசாரமாக இருப்பார்கள். சம்பிரதாயங்களிலிருந்து சிறிதும் விலக மாட்டார்கள். இந்நிலையில் நாத்திக துனைவி அத்தகைய சூவாமிகளை பிரத்யேகமாக தரிசித்து, ஆசிகளைப் பெற்று, தங்க விக்கிரத்தைப் பெறுவது என்றெல்லாம் உள்ள விஷயங்கள், மத்வ சம்பிரதாய பக்தர்களுக்கு வியப்பையும், அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. சுவாமியை வழிபட்ட அவர், சிறிது நேரம் பிரார்த்தனை செய்ததாக, சிரூர் மடத்தின்[3] திவான் பி.லாதவ்ய ஆச்சாரியா, நிருபர்களிடம் தெரிவித்தார். கோவிலில், லட்சுமி வராஹ தீர்த்த சுவாமி, சிரூர் மடத்தின் பர்யாய சுவாமி ஆகியோர், மந்திரங்கள் ஓதி, அட்சதை தூவி, ராஜாத்தியை ஆசீர்வதித்தனர். “மந்திராட்சதையை” பவ்யமாக வாங்கி வைத்துக் கொண்டாராம்[4]. கோவிலில் வழங்கப் பட்ட பிரசாதத்தையும் அவர் சாப்பிட்டார். தினசரி நிகழ்ச்சிகள் மற்றும் புகைப்படங்கள் இந்த மடத்தின் இணைதளத்தில் அதிகமாகவே வெளியிட்டு வருகின்றனர். ஆனால், அவற்றில் (26-09-2011 அன்றைய) ராஜாத்தியைக் காணவில்லை[5]. ஆகவே, ராஜாத்தி விசேஷமாகத்தான் வது சந்தித்துள்ளார் என்று தெரிகிறது. 48 தினங்களில் கனிமொழி எல்லா குற்றச்சாட்டுகளிலிலிருந்தும் விடுபடுவார் என்று ப்ர்யாய லட்சுமிவர் தீர்த்தர் ராஜாத்தி அம்மாவிடம்[6] உறுதியளித்தாராம்!

48 தினங்களில் கனிமொழி எல்லா குற்றச்சாட்டுகளிலிலிருந்தும் விடுபடுவார்! இப்படி ப்ர்யாய லட்சுமிவர் தீர்த்தர் ராஜாத்தி அம்மாவிடம் உறுதியளித்தாக வந்துள்ள செய்திகளையும், புகைப்படங்களையும் பார்த்த மத்வர்கள் ஆடிபோயுள்ளனர். ஒருவேளை, ஏதாவது குழப்பத்தை ஏற்படுத்த, இவ்விதமாக நாத்திகர்கள் திட்டமிட்டு செய்துள்ளனரா அன்று கூட அவர்கள் வெளிப்படையாக பேசுகின்றனர். சுவாமிகள் அவர்களை அறைக்குள் அனுமதித்தே இருக்கக் கூடாது என்றும் பொறுமுகின்றனர். பல பக்தர்களுக்கே கிடைக்காத அத்தகைய ஆசி, எப்படி நாத்திக-இந்து-விரோத கருணநிதியின் துணைவிக்கு அளிக்கப்பட்டது என்றும் கேட்கிறார்கள்.

கர்நாட தீர்த்த யாத்திரை செய்யும் கருணநிதி துணைவி: இந்து கடவுளர்களை தூஷித்துக் கொண்டே பிழைப்பு நடத்தி வரும், இந்த கேடு கெட்ட இந்து விரோதிகள், எப்படி இப்படி எதுவும் இல்லாமல் கோவில்-கோவில்களாகச் சுற்றி, சாமியார்களிடம் சென்று வேண்ட வேண்டும்? பெரியார் ஏன் கைவிட்டு விட்டார் இந்த பகுத்தறிவி சிற்பிகளை, நாத்திக பக்தர்களை? உடுப்பி மாவட்டம் கொல்லூரில் அமைந்துள்ள தாய் மூகாம்பிகை கோவிலுக்கும் ராஜாத்தி சென்று சாமி தரிசனம் செய்ததாக தெரியவந்துள்ளது. அவர், திகார் சிறையில் உள்ள தன் மகள் கனி மொழிக்காக, கர்நாடக மாநில கோவில்களுக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்து பிரார்த்தித்து கொண்டதாகத் தெரிகிறது.

வெட்கம், மானம், சூடு, சொரணை இருந்தால் தூக்கில் தொங்குவார்களா? திராவிட நாத்திகர்கள் ஏதேதோ பேசி வந்துள்ளனர். மூன்று நாட்கள் முன்பு கூட, வீரமணி கோஷ்டியினர், இந்துக்களுக்கு எதிராக பேசி “அடி வாங்கி” உள்ளனர், அதாவது, வெளிப்படையாக இந்துக்கள் அந்த போலித்தனமான, இந்து விரோதிகளை, மக்கள் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில், இப்படி பல மனைவி-துணைவிகளை வைத்துக் கொண்டு, அவர்களை இப்படி கோவில்-குளம் சுற்ற அனுமதிக்கலாமா? பெரியார்ன் ஆவி என்ன செய்து கொண்டிருக்கிறது? திராவிட புரோகிதர்களுக்கு என்னவாயிற்று? வெட்கம், மானம், சூடு, சொரணை இருந்தால் தூக்கில் தொங்குவார்களா? நாங்கள் கவரிமான் இனம் என்று பேசுவார்களா அல்லது, கவரி வீசிக் கொண்டு, வெட்கங் கெட்டு வாழ்வார்களா?

வேதபிரகாஷ்

27-09-2011


[1] தினமலர், உடுப்பிகிருஷ்ணன்கோவிலில்வழிபாடுநடத்தினார்ராஜாத்தி, பதிவு செய்த நாள் : செப்டம்பர் 28,2011,01:05 IST, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=322042

[4] The Hindu, Udipi, September 26, 2011, http://www.thehindu.com/news/national/article2487890.ece

ராஜராஜசோழனைப் பற்றி கருணாநிதியோ, திராவிடர்களோ எப்பொழுது கவலைப்பட்டார்கள்?

ஒக்ரோபர் 4, 2010

ராஜராஜசோழனைப் பற்றி கருணாநிதியோ, திராவிடர்களோ எப்பொழுது கவலைப்பட்டார்கள்?

ராஜராஜ சோழன் கல்லறையை அறிய முடியவில்லை[1]: கருணாநிதி சொல்கிறார், “பதினேழு லட்சம் ஆண்டுகளுக்கு முன் ராமர் பிறந்த இடத்தை உறுதிப்படுத்த முடிகிறது. ஆனால், 1,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து, தென்னகத்தை கட்டி ஆண்ட மாமன்னன் ராஜராஜ சோழன் மறைந்த விதத்தையோ, அவன் கல்லறையையோ, அவனுக்கு நினைவுத் தூண் அமைத்த இடத்தையோ நம்மால் இன்னமும் அறிய முடியவில்லையே என அகம் நொந்து வருந்தத்தானே வேண்டியுள்ளது’ என, முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

ராஜராஜசோழனைப் பற்றி கருணாநிதியோ, திராவிடர்களோ எப்பொழுது கவலைப்பட்டார்கள்? கருணாநிதி சொல்வதைப் பார்த்தால், ஏதோ பாவம், திராவிடர்கள் எல்லாம் அப்படியே ராஜராஜ சோழனைப் தேற்றியே சிந்தித்துக் கொண்டு, தெடியலைந்து ஓய்ந்துவிட்டது போல பேசியுள்ளது, இன்னொரு ஜோக் எனலாம். ஒருவேளை, அண்ணா நூலகத்தில் குண்டு வெடித்ததை மறைக்க[2], இப்படியொரு குண்டு விடுகிறாரா என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும்! திராவிடர்களுக்கு / தமிழர்களுக்கு தங்களது கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிகம், பண்பாடு பற்றி கவலையே இல்லை. திராவிட சித்தாந்தம், அவர்களின் அறிவை மழுங்கடித்து விட்டது. எப்பொழுதும் இந்த பொய்யான ஆரிய-திராவிட இனவாதங்களை பேசியே காலந்தள்ளும் கோஷ்டியாக இருப்பதனால் தான், யாரும் இவர்களைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. உண்மையைச் சொல்லப் போனால், ராஜராஜ சோழன் மற்றும் மற்ற மன்னர்களைக் கண்டால் இவர்கள் “ஆரியர்”, ஆரியர் கைக்கூலி என்றெல்லாம் துவேஷம் பேசி வசவு பாடுவார்கள்[3]. ஆனால், இன்றைக்கு, தமக்கு விளம்பரம் கிடைக்குமே என்று வெட்கமில்லாமல், ராஜராஜ சோழன் பெயரில் வியாபாரம் நடத்துகிறார்கள்.

ராஜராஜ சோழனைப் பற்றி கருணாநிதி சொல்லித்தான் எல்லொருக்கும் தெரியுமாம்: அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “அண்மையில் நடைபெற்ற இரண்டு, மூன்று நிகழ்ச்சிகளை இணைத்துப் பார்க்கும்போது  எனக்கு ஒரு பக்கம் பிரமிப்பாகவும், பெருமையாகவும் உள்ளது; இன்னொரு பக்கம் ஆச்சரியமாகவும் உள்ளது[4]. நாகர்கோவிலில் நடந்த தி.மு.க., முப்பெரும் விழாவில் நான் பேசும்போது, திராவிட பாரம்பரியத்தின் பரிணாம வளர்ச்சியைக் அயோத்தி விவகாரத்தில் வழங்கபட்டுள்ள தீர்ப்பு நாட்டின் அமைதி காண்பது என்ற அடிப்படையில் இரு தரப்பினரும் திருப்தி அடைய கூடிய தீர்ப்பு அதிலே பேசும்போது, லெமூரியா கண்டம் இருந்த பகுதியில்தான் இப்போது கூடியுள்ளதாகவும், இது ஆதி தமிழன் தோன்றிய இடம் என்றும் தெரிவித்தேன்[5]. மூன்றாயிரம் ஆண்டுகள் அல்லது 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றிய[6] திராவிடப் பாரம்பரியத்தின் பரிணாம வளர்ச்சியையும் இந்தக் கூட்டத்தில் குறிப்பிட்டு பேசினேன்.

அதைப் போலவே, தமிழரின் கலை, பண்பாடு, கலாசாரத்திற்கு எடுத்துக்காட்டாகத் திகழும் தஞ்சை பெரிய கோவில் ஆயிரமாவது ஆண்டு விழாவில் பேசும்போது, ராஜராஜ சோழன் காலத்திய நிர்வாக முறை பற்றி தெரிவித்தேன். இவை அனைத்திற்கும் ஆதாரமாக ராஜராஜன் எழுப்பியிருக்கும் தஞ்சை பெரிய கோவிலும், பொறித்து வைத்திருக்கும் கல்வெட்டுகளும் நீடித்து நிலைக்கும் சான்றுகளாக காட்சியளிக்கின்றன. அதில் சோழர்களின் வெளிநாட்டு வணிகம், கடல் வணிகம் ஆகியவற்றின் நுணுக்கங்களை எடுத்துரைத்தேன்[7]. தென்னகத்தில் சோழப் பேரரசு 176 ஆண்டுகள் நீடித்திருந்தது என்பதற்கான ஆதாரங்களை நீலகண்ட சாஸ்திரி, காத்யாயனர்[8] போன்ற ஆய்வாளர்களின் கருத்துகள் எடுத்து வைக்கப்பட்டது. ராஜராஜ சோழனின் நிர்வாகத்தில் அறிமுகம் செய்து வைத்த நில அளவை முறை, ஊராட்சிக்கான குடவோலை முறை ஆகியவற்றுக்கு தஞ்சை பெரிய கோயிலும், கல்வெட்டுகளும் ஆதாரங்களாக உள்ளன“[9].

அயோத்தி விவகாரத்தில் வழங்கபட்டுள்ள தீர்ப்பு நாட்டின் அமைதி காண்பது என்ற அடிப்படையில் இரு தரப்பினரும் திருப்தி அடைய கூடிய தீர்ப்பு என்று கூறியவர், இன்று கூறுவது: “அயோத்தி சம்பந்தமான வழக்கில் சர்ச்சைக்குரிய நிலத்தை மூன்றாகப் பிரித்து, இரண்டு இந்து அமைப்புகளுக்கும், ஒன்று முஸ்லிம் அமைப்பிற்கும் சமமாக வழங்க வேண்டுமென்று தீர்ப்பு சொல்லப்பட்டது. நீதிபதி சர்மா தனது தீர்ப்பில், “சர்ச்சைக்குரிய இடம் ராமர் பிறந்த இடம் தான். ராமர் ஒரு கடவுள். அவர் தெய்வாம்சம் பொருந்தியவராக வழிபடப்பட்டிருக்கிறார். அங்கு பாபரால் கட்டடம் எழுப்பப்பட்டது. எந்த ஆண்டு என்பது நிச்சயமாகத் தெரியவில்லை“.

கற்பனைக்கு எட்டாத எண்ணிக்கை கொண்ட நிகழ்ச்சியைப் பற்றி, ராமர் பிறந்த இடம் இதுதான் என அறுதியிட்டு உறுதியாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதைப் பார்க்கும்போது, ராமர் பிறந்த இடத்தை உறுதிப்படுத்த முடிகிறது:  “சர்ச்சைக்குரிய இடத்தில் 1949ம் ஆண்டில் டிசம்பர் 22ம் தேதி நள்ளிரவில், சிலைகள் வைக்கப்பட்டன.சர்ச்சைக்குரிய இடத்தை ராமர் பிறந்த இடமாகக் கருதி, இந்துக்கள் வழிபட்டு வந்துள்ளனர். நினைவு தெரிந்த நாளிலிருந்தே, அதை புனிதத் தலமாகக் கருதி, ஆன்மிகப் பயணம் சென்று வருகின்றனர்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். ராமர் கிருதயுகத்தில் பிறந்ததாகச் சொல்லப்படுகிறது. கிருதயுகம் என்பது 17 லட்சத்து 28 ஆயிரம் ஆண்டுகள் கொண்டது. இப்படி கற்பனைக்கு எட்டாத எண்ணிக்கை கொண்ட ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சியைப் பற்றி, ராமர் பிறந்த இடம் இதுதான் என அறுதியிட்டு உறுதியாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதைப் பார்க்கும்போது, 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன் ராமர் பிறந்த இடத்தை உறுதிப்படுத்த முடிகிறது“[10].

அகம் நொந்து வருந்தத்தானே வேண்டியுள்ளது எனும் கருணாநிதி தான் அகழ்வாய்வே வேண்டாம் என்று சொன்ன உத்தமரும் ஆவர்: “ஆனால், 1,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து, தென்னகத்தை கட்டி ஆண்ட மாமன்னன் ராஜராஜ சோழன் மறைந்த விதத்தையோ, அவன் கல்லறையையோ, அவனுக்கு நினைவுத் தூண் அமைத்த இடத்தையோ நம்மால் இன்னமும் அறிய முடியவில்லையே என அகம் நொந்து வருந்தத்தானே வேண்டியுள்ளது[11] (முன்பு எஸ். ஆர். ராவ் என்பவர் பூம்புகாரில் கடலடி அகழ்வாய்வு செய்தால் ஆதாரங்கள் கிடைக்கும் என்றபோது, வேண்டாம் என்று மறுத்தார் கருணாநிதி). திராவிட இனத்தின் வரலாறு, நிரல்படுத்தி முறையாக எழுதப்படவில்லை என்றாலும் கூட, லெமூரியா கண்டத்தைப் பற்றிய ஆராய்ச்சி, சிந்து சமவெளி நாகரிகத்தைப் பற்றிய ஆராய்ச்சி, தமிழ் மொழியைப் பற்றிய மூல ஆராய்ச்சி ஆகிய ஆராய்ச்சிகளின் மூலமாக வெளிநாடுகளைச் சேர்ந்த தொல்லியல், மொழியியல் வல்லுனர்கள், திராவிட நாகரிகம் குறைந்தது 3,000 ஆண்டுகளுக்கு முந்தையது என்று கருத்து தெரிவித்துள்ளனர்“.

“திராவிட இனம் அறிவியல் ரீதியாக வாழ்ந்துள்ள உண்மை வரலாறு” என்று இன்றும் பேசும் அறிவிலிகள்: “இந்த அடிப்படையில், நம்முடைய திராவிட இனத்தின் வரலாறு பற்றிய ஆதாரங்களை, பிற வரலாறுகளுடன் ஒப்பிட்டு நோக்கும் போது, திராவிட இனம் அறிவியல் ரீதியாக வாழ்ந்துள்ள உண்மை வரலாற்றை தெளிவாக உலகம் அறிந்து கொள்ள முடியும். ஆனால், திராவிட இனத்தைப் புறந்தள்ள முயற்சித்த ஆரிய நாகரிகம், அடிப்படை ஆதாரம் இல்லாமலேயே வெறும் மூட நம்பிக்கையை மக்களிடம் வளர்ப்பதில் மட்டும் முனைப்பாகச் செயல்பட்டிருக்கிறது என்பதை அறிந்து கொண்டால் போதும்”, இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்[12].

கருணாநிதியும், சரித்திரமும், அகழ்வாய்வும்: முன்பு தேசிய கடலாய்வு மைத்தின் தலைவர் எஸ். ஆர். ராவ் என்பவர் பூம்புகாரில் கடலடி அகழ்வாய்வு செய்தால் ஆதாரங்கள் கிடைக்கும் என்றபோது, வேண்டாம் என்று மறுத்தார் கருணாநிதி. “அப்படி ஆராய்ச்சி செய்தால் என்ன கிடைக்கும்” என்றதற்கு, “சங்க இலக்கியத்தின் தொன்மைக்கு ஆதாரங்கள் கிடைக்கும்”, என்று பதில் சொன்னபோது, “அதுதான் தெரிந்த விஷயமாயிற்றே, அதற்கு எதற்கு ஆராய்ச்சி, அகழ்வாய்வு?” என்றார், தமக்கேயுரிய புன்சிரிப்பு- நக்கலுடன்[13]. பாவம், தமிழ்நாடு தொல்துறை பிரிவு இயக்குனர் மற்றவர், வாயைப் பொத்திக் கொண்டு வெளியே வர வேண்டியதாயிற்று. ஆனால், இவர் தாம் இன்று தென்னகத்தை கட்டி ஆண்ட மாமன்னன் ராஜராஜ சோழன் மறைந்த விதத்தையோ, அவன் கல்லறையையோ, அவனுக்கு நினைவுத் தூண் அமைத்த இடத்தையோ நம்மால் இன்னமும் அறிய முடியவில்லையே என அகம் நொந்து வருந்தத்தானே வேண்டியுள்ளது என்று சோககீதம் பாடுகிறார்!


[1] தினமலர், ராஜராஜ சோழன் கல்லறையை அறிய முடியவில்லை: முதல்வர், பதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2010,23:55 IST; மாற்றம் செய்த நாள் : அக்டோபர் 04,2010,00:06 IST; http://www.dinamalar.com/News_Detail.asp?Id=98615

[2] காங்கிரஸ் திடலில் (காமராஜர் அரங்கத்தின் பின்புறம்) முன்பு ஒரு பொது கூட்டத்தில் மூப்பனார், கருணாநிதி முதலியோர் பேசினார்கள். அப்பொழுது, ஆர்.எஸ்.எஸ். காரர்கள் அவர்களே குண்டு வைத்துக் கொண்டு மற்றவர்கள் மீது பழி போடுகிறார்கள் என்று நக்கலாக பேசினார்கள். இப்பொழுது, அம்மாதிரி சொல்லலாமா?

[3] இவர்கள் பேசி-எழுதியுள்ளதை திரும்பச் சொல்வதே “வேஸ்ட்”, ஏனென்றால், பொய் சொல்வதிலும் இவர்களுக்கு வெட்கமே இல்லை.

[4] தினமணி, ராமர் பிறந்த இடத்தை உறுதிப்படுத்த முடிகிறது; ராஜராஜன் மறைந்த இடத்தை அறியமுடியவில்லையே! – முதல்வர், First Published : 04 Oct 2010 01:01:45 AM IST; Last Updated : 04 Oct 2010 03:36:30 AM IST;

http://www.dinamani.com/edition/story.aspx?Title=……….312892&SectionID=129&MainSectionID=129&SEO=&SectionName=Tamilnadu

[5] ஏதோ, இவரே கண்டு பிடித்து சொன்னது போல பேசுவதைப் பாருங்கள்.

[6] “மூன்றாயிரம் ஆண்டுகள் அல்லது 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றிய” – இதென்னா காலக்கணக்கு? அதாவது 1000 அல்லது 3000 BCEக்கு முன்னால்தான் திராவிட பாரம்பரியம் தோன்றியது என்றால், லெமூரியாவின் கதை அடிபட்டுப் போகிறதே? பாவம், கருணாநிதிக்கு கணக்கை சரியாக சொல்லிக் கொடுக்கவில்லை போலும்!

[7] அதாவது, இப்பொழுது, இவர் இஞ்சினியர் ஆகிவிட்டார் போலும், எந்த காலேஜில் படித்தாய் என்று கேட்டுவிட முடியாது!

[8] யாரிந்த காத்யாயனர்? வந்தேரிகளில் ஒருவனா, ஆரியக்கைக்கூலியா? ஏன் சாஸ்திரியாரே ஒரு பார்ப்பனர் தானே, ஆரியர்தானே? அவர் சொல்வதை ஏன் ஏற்றுக் கொள்ளவேண்டும்?

[9] ஆனால் சட்டம், நீதுத்துறை முதலியற்றில் அவர்களுடைய யோக்கியதை முறை சொல்லப்பட்டிருப்பது பற்றி மூச்சு விடாததை கவனிக்க வேண்டும். அதை படித்தால், இவரது தண்டவாளம் வண்டவாளத்தில் ஏறிவிடும்!

[10] இல்லையென்றால், இதற்காக கருணாநிதி, வீரமணி, திருமா போன்றோர் மேல் முறையீட்டிற்கு போகலாமே?

[11] http://www.deccanchronicle.com/chennai/karuna-condemns-lack-info-chola-king-613

[12] http://timesofindia.indiatimes.com/india/Aryan-culture-is-planting-superstitions-Karunanidhi/articleshow/6680639.cms

[13] அதாவது, அதற்கென சில லட்சங்களை செல்வழிக்க மனமில்லை. ஆனால், இன்றோ கோடிகளை செலவழித்து, செந்தமிழ் மாநாடு நடத்தியுள்ளார்!

நந்தனார் இருந்தாரா, இல்லையா? பெரியாரைத் தான் கேட்க வேண்டும்: கதை சொல்லும் கருணாநிதி!

ஜூலை 16, 2010

நந்தனார் இருந்தாரா, இல்லையா? பெரியாரைத் தான் கேட்க வேண்டும்: கதை சொல்லும் கருணாநிதி!

சிதம்பரம் கோயில் பிரச்னை: கருணாநிதி சொல்லிய கதை: “சிதம்பரம் கோவில் தீட்சிதர்களின் கோட்டையாக இருந்தது. அவர்களுக்கு மட்டுமே சொந்தமாக இருந்த கோட்டை என்பதை மாற்றி அரசாங்கத்தின் பிடியில் நம்முடைய அறநிலையத் துறையின் பொறுப்பில் அது வந்து விட்டது.அப்போது, எல்லோரும் மகிழ்ந்தார்கள். பாராட்டினார்கள். அந்த மகிழ்ச்சி நீடித்ததா என்றால் இல்லை. இப்போது ஒரு போராட்டம். எதற்குப் போராட்டம் தெரியுமா?”

நந்தனார் நடந்து வந்த அந்தக் கோயிலுக்குள் புகுந்த பாதையில் நடக்கவேண்டும்:  கருணாநிதி தொடர்கிறார், “நந்தனார் நடந்து வந்த அந்தக் கோயிலுக்குள் புகுந்த பாதை இதுதான்-அந்தப் பாதையை மதில் வைத்து அடைத்து விட்டார்கள்-அதைத் திறக்க வேண்டும் என்று ஒரு போராட்டம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸட் கட்சி நடத்துகிறது. கோவிலையே திறந்து விட்டாகிவிட்டது.நந்தனார் நடந்த பாதை என்று சொல்லி அதற்காக ஒரு போராட்டம்”.

நந்தனார் இருந்தாரா இல்லையா – அதை பெரியாரைத் தான் கேட்க வேண்டும்: நந்தனார் இருந்தாரா இல்லையா என்பது வேறு விவகாரம். அதை பெரியாரைத் தான் கேட்க வேண்டும்.நந்தனாரை உள்ளே போகவே விடவில்லை. எப்படி அவர் பாதையிலே போயிருக்க முடியும்? இவர் உள்ளே போக வந்த போது நந்தி மறைத்தது. வழி மறைத்திருக்கிறதே நந்தி என்று பாடிய பாட்டெல்லாம் இருக்கிறது.நந்தி மறைத்தது; ஆகவே நந்தனார் உள்ளே போகவில்லை. நந்தி மறைத்ததால் நந்தனை காண்பதற்காக உள்ளேயிருந்த சாமி, நந்தா நீ விலகி வா என்று சொன்னாரே தவிர, அவர் விலகி வந்து இவரைப் பார்த்தாரே தவிர, நந்தா உள்ளே வா, கவலைப்படாதே என்று சொல்லவில்லை.சாமியும் சொல்லவில்லை. நந்தனும் போகவில்லை. இதுதான் கதை”.

கதையை மாற்றும் கம்யூனிஸ்ட்டுகாரர்கள்: “இந்தக் கதையை மாற்றி இந்த வழியாகத்தான் நந்தனார் போனார், போகும் போது நான் பார்த்தேன் என்னிடம் கூட வெற்றிலை பாக்கு வாங்கிப் போட்டுக் கொண்டு போனார் என்றெல்லாம் சொல்லி…ஆகவே நந்தன் பாதையை அடைக்கக் கூடாது. அது தீண்டாமை சுவராகி விடும் என்று சொல்லி இன்றைக்குப் போராடுகிறார்கள். எதற்கு? நந்தனுக்காவா? அல்ல. வேண்டுமென்றே இவர்கள் இந்த ஆட்சியின் நல்ல திட்டங்களுக்கு நந்தியாக இருந்து கெடுக்க வேண்டும் என்பதற்காகப் போராடுகிறார்கள் அல்லாமல், நந்தனுக்காக அல்ல என்பதை மறந்து விடக் கூடாது.

சிதம்பரம்.கோவில்.நுழைவு.கலாட்டா.2010

சிதம்பரம்.கோவில்.நுழைவு.கலாட்டா.2010

உண்மையில் நந்தனார் சிதம்பரம் கோவிலுக்கு வரவில்லை. திருப்புங்கூர் என்ற இடத்தில்தான் சென்றார்.

செபாஸ்டியன் சீமானின் அசிங்கமான வேலை!

மே 30, 2010

முன்பு சீமானின் படத்தில் இப்படி ஒரு காட்சி!

அப்பொழுது திராவிட நம்பிக்கையாளர்கள், தமிழ் சமயிகள், செம்மொழி ஆத்திகர்கள்……………….எவருக்குமே ரோஷம் வரவில்லை போலும்!

Vanakkamma still - Rama-Anjaneya urinating- 2014

Thanks to Hindu Munnani the launch of this movie “Vanakkammaa” has been stopped. Police say that it is postponed.

The poster of this movie shows Hindu Gods attending to nature”s call in public place.

This movie is supposed to contain characters posed as Hindu Gods (Rama ” Hanuman) will be smoking and drinking alcohol.

Producer Anbu Thenarasan is atheist and close to DK. Director is Seemaan.

Hero Saravanan claims that there is no scene denegrating any God and this movie doesnt affect sentiments of any religion. He also says that a group is protesting against this movie to create problems to this Govt.(nallaatchi)

Questions:

1. Can our CM come forward to ban this movie just as he did for Da Vinci Code?

2. An atheist doesnt beleive in God. Does it mean that they have to denigrate God?

3. Can Rajnikanth voice for this issue?

குஷியில் வீரமணி, பயத்தில் கருணாநிதி: கோபுரங்கள் சாய்கின்றன!

மே 28, 2010

குஷியில் வீரமணி, பயத்தில் கருணாநிதி: கோபுரங்கள் சாய்கின்றன!

தனது கோபுரத்தையே காக்க முடியாத கடவுளா- உனது வேண்டுதலை நிறைவேற்றுவான்? சிந்தித்தீர்களா?

http://www.viduthalai.com/20100528/news03.html

ஆந்திர மாநிலம் காளஹஸ்தி ராஜகோபுரம் நேற்று முன்தினம் அடியோடு இடிந்து விழுந்துவிட்டது. ஏற்கெனவே இது இரண்டாக விரிசல் விட்டு பிளந்த நிலை காரணமாக, எச்சரிக்கையாக சுமார் 50 அடி தூரத்திற்கு வளைவுப் பாதுகாப்பு அமைத்து யாரும் அருகில் செல்லக்கூடாது என்று அதிகாரிகள் செய்த ஏற்பாட்டினால், உயிர்ச்சேதம் எதுவும் இல்லை. குரங்குகள் _ அனுமார்கள்தான் சுமார் 200_க்கும் மேல் இறந்துவிட்டிருக்கலாம் என்றும் செய்தி வெளியாகியுள்ளது. அனுமன் மிகவும் பலசாலி என்ற பித்தலாட்டக் கதையும், இதன்மூலம் அம்பலமாகிவிட்டது! இதனால் ஏதோ நாட்டிலுள்ள மக்களுக்கே பேரபாயம் ஏற்படும் என்று பல பார்ப்பன மற்றும் மூடநம்பிக்கை வியாபாரிகளான பத்திரிகைகள் கயிறு திரித்து, மக்களை தேவையற்ற பீதிக்கு ஆளாக்கி, தங்களது மூடநம்பிக்கை வாணிபத்தை _ பரிகார தோஷம் செய்ய வாருங்கள் என அழைத்து வருவாய் சுரண்டும் வக்ரபுத்தியுடனே செயல்படுகின்றனர்!

சிவபெருமான் இங்கு வாயு லிங்கேசுவரன், ஞான பிரசன்னா அம்பிகையுடன் காட்சியளித்தவர் என்று கதைக்கிறார்களே _ அப்படிப்பட்ட கடவுள் ஏன் இதைத் தடுக்கவில்லை? அவன் எல்லாம் வல்லவன், எங்கும் நிறைந்தவன் _ அவனின்றி ஓரணுவும் அசையாது என்ற கதையெல்லாம் பச்சைப் புளுகு_ புருடா என்பதை இன்னமும் பகுத்தறிவுள்ளவர்கள் விளங்கிக் கொள்ளாவிட்டால், 21 ஆம் நூற்றாண்டில் வாழ அம்மனிதர்களுக்குத் தகுதி உண்டா? அரசுமீது, அதிகாரிகள்மீது ஏனோ பாமர மக்கள் _ கோபுரம் இடிந்து விழுந்தமைக்கு கோபப்படுவதில் பொருள் உண்டா? எல்லாம் அவன் செயல் என்கிறபோது இது மட்டும் எவன் செயலோ? எவரோ கவனஞ்செலுத்தி பழுது பார்க்காததால் ஏற்பட்ட விளைவு என்கிறார்களே, இதில் பெரியார் வெற்றி பெற்றுள்ளாரா இல்லையா?

கடவுளை மற, மனிதனை நினை என்றார் தந்தை பெரியார். கோபுரம் இடிந்ததற்குக் காரணம் கடவுள் அல்ல; ஏனெனில், அவர் வெறும் கற்சிலை _ பொம்மை _ பக்தி வியாபாரத்தின் முதல் அவ்வளவே! என்று உணர்ந்ததால்தானே மற்றவர்கள் ஏன் இதைப் பாதுகாக்கவில்லை என்று கேள்வி எழுப்புகின்றனர் பக்த கோடிகள். அவர்கள் சொல்வது _ கடவுளை மறந்து மனிதனை (அதிகாரிகளை) நினைத்துதானே, ஏன் இந்நிலை என்று கேள்வி கேட்கின்றனர்! இதற்குப் பரிகார தோஷம் என்று மூடத்தனத்தில் மூழ்கியுள்ள ஏமாந்த பாமர பக்தர்கள் வசூல் செய்துகொள்ள ராகு, கேது _ சனி விலக்கு பயன்படுமா? தன்னுடைய கோபுரத்தைக் காக்கத் தெரியாத சிவனா உன்னுடைய தோஷத்தைப் போக்கப் போகிறான்? அட மவுடீக மண்டுகளே, சிந்திக்க மாட்டீர்களா? பக்தி மாற, பகுத்தறிவு கொள்!

அடுத்த ஆபத்து ஏழுமலையானுக்கா? கோயில் கோபுரம் இடியப் போகிறது என்று பக்தர்கள் போடும் புலம்பல்- கூக்குரல்!

http://www.viduthalai.com/20100528/news28.html


திருப்பதி, மே 28-_ காளஹஸ்தி கோயில் கோபுரம் குப்புற வீழ்ந்த நிலையில், திருப்பதி ஏழு-மலையான் கோயில் கோபுரமும் இடியும் ஆபத்து ஏற்பட்டுள்ளது, உடனே சரி செய்யவேண்-டும் என்று பக்தர்கள் புலம்ப ஆரம்பித்துவிட்-டனர். ஆலமர செடிகள் அதிகமாக வளர்ந்துள்-ளதால் திருப்பதி ஏழு-மலையான் கோவில் கோபுரத்திலும் விரிசல் விழும் அபாயம் ஏற்பட்-டுள்ளது. உடனடியாக இந்த செடிகளை அகற்றி கோபுரத்தை சீரமைக்கும்-படி பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனராம்.

ஆந்திர மாநிலம் சித்-தூர் மாவட்டத்தில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட காள-ஹஸ்தி கோவில் ராஜ-கோபுரம் இடிந்து விழுந்து தரை மட்டமானது. இந்த கோவில் கோபு-ரம் இடிந்து விழ பல காரணங்கள் சொல்லப்-பட்ட போதிலும் கோவில் கோபுரங்களில் வளர்ந்த ஆலமர செடிகள் காரண-மாகவே கோபுரத்தில் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழுந்ததாக இந்த பகுதி பக்தர்கள் கூறுகின்றனராம்.

கோபுரத்தில் செடிகள்…திருப்பதி ஏழுமலை-யான் கோவில் கருவறை மீதுள்ள ஆனந்தநிலையம் கோபுரத்தை சுற்றி தங்க முலாம் பூசப்பட்ட தக-டுகள் பொருத்தப்பட்டுள்-ளன. இந்த தகடுகளையும் மீறி கோபுரத்தில் உள்ள விமான வெங்கடாஜலபதி சிலைக்கு அருகில் சுமார் ஒரு அடி நீளமான ஆல-மர செடிகள் பச்சைபசே-லென்று வளர்ந்து காட்சி அளிக்கின்றன. 50 அடி உயரமுள்ள மகா வாயில் கோபுரம் 5 அடுக்குகளாக கட்டப்பட்-டுள்ளது. இந்த கோபுரத்-தின் உச்சியில் 7 தங்க கவ-சங்கள் பொருத்தப்பட்-டுள்-ளன. இந்த கோபுரத்-திலும் ஆலமரச்செடிகள் வளர்ந்துள்ளன. இதே-போல 30 அடி உயரம் கொண்ட வெள்ளி வாயில் கோபுரத்திலும் ஆலமரச்-செடிகள் உள்ளன. இந்த செடிகள் வளர வளர கோபுரத்தில் விரிசல் விழுந்து கோபுரங்களுக்கு அபாயம் ஏற்படலாம்

காளஹஸ்தீஸ்வரர் கோவில் கோபுரத்தில் வளர்ந்த ஆலமரசெடி-களை உடனுக்குடன் அகற்றியிருந்தால் கோபுரத்-தில் இவ்வளவு பெரிய விரிசல் ஏற்பட்டி-ருக்காது. கோவில் கோபுர-மும் இன்னும் பல ஆண்டுகள் நிமிர்ந்து நின்-றிருக்கும். அதிகாரிகள் மற்றும் கோவில் நிருவாகி-களின் அலட்சியத்தா-லேயே இந்த கோபுரம் இடிந்து விழுந்தது. எனவே உடனடியாக திருப்பதி ஏழுமலையான் கோவில் கோபுரங்களில் உள்ள ஆல மரச்செடிகளை அகற்றி கோவில் கோபுரங்-களை காப்பாற்ற நட-வடிக்கை எடுக்க வேண்-டும் என்று இந்த பகுதி பொதுமக்களும், பக்தர்-களும் கோரிக்கை விடுத்-துள்ளனர். சாதாரண ஆலமரச் செடி சிவனின் காள-ஹஸ்தி கோயிலை தரை-மட்டமாக்கியது. அடுத்து திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கும் ஆலமரச் செடியால் ஆபத்து. ஏழு-மலையானே ஆட்டம் கண்டு போயுள்ளான். எப்படியாவது ஏழுமலை-யானை காப்பாற்றுங்கள் என்று ஏமாந்த பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்-ளனர்.

குஷியில் வீரமணி, பயத்தில் கருணாநிதி: கோபுரங்கள் சாய்கின்றன! ஆனால், கருணாநிதியோ கலங்கி போய்விட்டாராம். உடனே மனைவி-துணைவி, ஆஸ்தான சோதிடருக்கு போன் செய்ய, அவர் ஜாக்கிரதையாக இருக்குமாறு கூறியுள்ளாராம். முன்பு மாதிரி சாந்தி ஹோமம் செய்ய வேண்டும் என்ரு கூறியதும்,  ஆடிபோய் விட்டனராம். பொறுக்கவில்லை, வீரமணிக்கு. கயிறுதிரிக்க ஆரம்பித்துவிட்டார்.

அடுத்த வரப்போகின்ற செய்தி: ஜெயலலிதா காளாஸ்தி சென்றதால் தான், கோபுரம் விழுந்தது, என்று கருணாநிதி நக்கல் அடித்தாராம், ஆனால், மனைவி-துணைவி சொன்னதும் அடங்கிவிட்டாராம்.

தமிழ்நாட்டில் ஔரங்கசீப் ஆட்சி நடக்கிறதா?

ஏப்ரல் 15, 2010

தமிழ்நாட்டில் ஔரங்கசீப் ஆட்சி நடக்கிறதா?

தடையை மீறி பஞ்சாங்கம் வாசித்த இந்து முன்னணி நிர்வாகிகள் கைது
ஏப்ரல் 15,2010,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=17813

Important incidents and happenings in and around the world

பஞ்சாங்கம் வாசிப்பதற்கு நிர்வாகம் தடை: பஞ்சாங்கத்தையே நம்பாத பரதேசிகளுக்கு, பஞ்சாங்க வாசிப்புப் பற்றி ஏன் கவலை? முதலில் நாத்திகம் பேசும் இந்த கேடு கெட்ட திமுக-திக வகையறாக்களுக்கு “நம்பிக்கையாளர்களை” ஆளவே தகுதியில்லை. இந்து விரோதியக இருந்து, ஏற்கெனெவே பல கிரிமினல் வழக்குகள் பதிவாகி நிலுவையில் இருக்கின்ற நிலையில், வெட்கம்-மானம்-சூடு-சுரணை இல்லாமல் முதல்வராக ஆட்சி செய்து கொண்டு, தொடர்ந்து இந்துக்களை, இந்துக்களின் மனங்களை புண்படசெய்து வஎஉவது கருணாநிதி. ஏற்கெனவே கோவில் மண்டபங்களை இடித்தாகி விட்டது; கோவில் நிலங்களை பட்டாப் போட்டு விற்றாகி விட்டது;…………………….இத்தகைய கேடு கெட்ட நிலையில், இதெல்லாம் தேவையா?

இந்துக்களின் நம்பிக்கைகளில் தளையிடுதல்: ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில், தடையை மீறி பஞ்சாங்கம் வாசிக்க வந்த இந்து முன்னணி நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்தமிழக அரசு, தை மாதம் முதல் தேதியை தமிழ் புத்தாண்டாக அறிவித்ததை தொடர்ந்து, சித்திரை முதல் நாளில் கோவில்களில் பஞ்சாங்கம் வாசிப்பதற்கு நிர்வாகம் தடை விதித்துள்ளது. சித்திரை முதல் தேதியான நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் பஞ்சாங்கம் வாசிப்பதற்கு, இந்து முன்னணி மாவட்ட செயலர் ராமமூர்த்தி தலைமையில் கண்ணன்சிவா, சிவராஜன், ஆர்.எஸ்,எஸ்.,பொறுப்பாளர் தெட்சிணாமூர்த்தி, மண்டபம் ஒன்றிய செயலர் பிரபு உள்ளிட்டோர் கோவிலுக்குள் செல்ல ஊர்வலமாக வந்தனர். இவர்களை கோவில் வாசலில் தடுத்த போலீசார், உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதைத் தொடர்ந்து, கோவில் வாசலில் பஞ்சாங்கத்தை வாசித்ததால், அவர்களை போலீசார் கைது செய்தனர்.

இந்துக்கள் வழக்குத் தொடர வேண்டும்: தங்களது மத நம்பிக்கைகளில் தலையிடும் கருணாநிதியின் மீதும், அரசு மீதும் வழக்குத் தொட்ரவேண்டும். மடாதிபதிகள் உடனடியாக, இப்பிரச்சினையை எடுத்துக் கொண்டு அறிவுரை வழங்கவேண்டும்.