Posts Tagged ‘கருணாநிதி புராணம்’

கருணாநிதிக்கு உயிரோடு இருக்கும் போது வைக்கப் பட்ட சிலையும், இறந்த பிறகு கட்டப் படும் கோவில்களும்! (2)

ஒக்ரோபர் 21, 2022

கருணாநிதிக்கு உயிரோடு இருக்கும் போது வைக்கப் பட்ட சிலையும், இறந்த பிறகு கட்டப் படும் கோவில்களும்! (2)

2019ல் கோவில் கட்டுகிறோம் என்ற செய்தி: ராசிபுரம் அருகேயுள்ள குச்சிகாடு என்ற கிராமத்தைச் சேர்ந்த பட்டியிலின மக்கள் 10 பேர், தங்களுடைய சொந்த நிலத்தில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கருணாநிதிக்கு கோயில் கட்டும் பணியைத் தொடங்கியுள்ளனர்[1]. கோயில் பணிக்காக நேற்று அடிக்கல் நாட்டப்பட்டது[2]. இதில் தி.மு.க மற்றும் ஆதித்தமிழர் பேரவையை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்[3]. இதுபற்றி அப்பகுதி மக்களிடம் பேசியபோது[4], ‘2008ல் எங்கள் இனமக்களுக்கு 3 சதவிகித இடஒதுக்கீடு தந்த குலதெய்வம் கருணாநிதி. பல்வேறு உதவிகளை எங்கள் மக்களுக்கு செய்த அவருக்கு நன்றி தெரிவிக்கவும், அவரை போற்றுவதற்கும் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கோயில் கட்டுகிறோம். அண்ணா அறிவாலயம், கலைஞர் அறிவாலயம் போல் இந்தக் கோயில், மக்களிடைய பகுத்தறிவை எடுத்துச்செல்ல, உதவ வேண்டிய பணியை சிறப்பாகச் செய்ய வேண்டும். மக்களுக்கு கருணாநிதி செய்த உதவிகள் காலம் கடந்து நிற்கும். அவரது சாதனைகளைச் சொல்வதற்கு, நாங்கள் ஒரு நினைவாலயம் போல் கட்டுவது எங்களுக்குக் கிடைத்த பாக்கியம்,” என்றனர்[5]. ரூ.30 லட்சம் மதிப்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு கட்டப்படும் கோயிலில் கருணாநிதியின் உருவச்சிலை, பூங்கா மற்றும் நூலகம் அமைக்கப்பட உள்ளதாக அருந்ததியர் முன்னேற்றப் பேரவை அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்தனர்[6].

திமுக தலைவர் கொடுத்த விளக்கம்: இந்தத் தகவல் சமூக ஊடகங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது. பகுத்தறிவுவாதியான கருணாநிதிக்குக் கோயில் கட்டுவதை பலரும் கிண்டல் செய்தனர். இந்நிலையில் குச்சிக்காடு கிராமத்துக்கு நாமக்கல் மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான காந்திசெல்வன் நேரில் வருகை தந்தார். அங்கே கருணாநிதிக்குக் கோயில் கட்டப்படுகிறதா என்பது குறித்து விசாரித்தார்[7]. இதன்பிறகு அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். “குச்சிக்காடு கிராம மக்கள் கருணாநிதிக்குக் கோயில் கட்டவில்லை. இங்கே பகுத்தறிவாலயம்தான் எழுப்பப்படுகிறது. நினைவிடத்தில் இருப்பது போலவே கருணாநிதியின் சிலை இருக்கும். மேலும் போட்டித் தேர்வுக்கு மாணவர்களைத் தயார் செய்யும் வகையில்  இணைய வசதியும்கூடிய நூலகமும் அமைக்கப்பட உள்ளது. கணினி வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளது,” என்று காந்திச்செல்வன் தெரிவித்தார்[8]. 2019ல் இவ்வாறு எல்லாம் சப்பைக் கட்டினாலும், 2022 வரை ஒன்றும் நடக்கவில்லை போலும். ஏனெனில், 2022ல் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

2022ல் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்ற கோரிக்கை: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ளது குச்சிகாடு என்ற கிராமம். 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இந்த ஊரில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு கோவில் கட்டுவதற்காக பூமி பூஜை செய்து கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது[9]. கலைஞர் பகுத்தறிவு ஆலயம் என்று பெயரிடப்பட்ட இந்த கோவிலுக்கு பேரரூராட்சி துணை தலைவர் நல்லதம்பி என்பவர் தன்னுடைய நிலத்தை இலவசமாக கொடுத்து உள்ளார்[10]. மேலும், இவ்வூரை சேர்ந்த அரசு ஊழியர்கள் கலைஞர் கருணாநிதிக்கு கோவில் கட்டும் முயற்சியில் ஈடுபட்டள்ளனர்[11]. இந்த நிலையில் பூமிபூஜை செய்து 3 ஆண்டுகள் கடந்த நிலையிலும் கோவில் கட்டும் பணி பாதியிலேயே நின்று உள்ளது[12]. குச்சிகாடு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கோவில் கட்டும் பணியில் ஆர்வம் காட்டிய போதிலும் மேற்கொண்டு ஆதரவு கிடைக்காததால் கோவில் பணி பாதியிலேயே நின்றுள்ளது. தற்போது பாதியில் நிற்கும் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று இவ்வூர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பிறகு, 2019-2022 காலகட்டத்தில் என்ன நடந்தது, கோவில் கட்டமுடியாமல் யார் தடுத்தது, அதற்கு யார் காரணம் போன்ற விவரங்கள் தெரியவில்லை.

2010ல் கருணாநிதிக்கு கோவில் கட்ட திட்டம் போட்ட ஜி.ஆர்.கிருஷ்ணமூர்த்தி: முதல்வர் கருணாநிதி பெயரில் செம்மொழி விருது ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவரது பெயரில் வீட்டு வசதித் திட்டம், உயிர் காப்பீட்டுத்திட்டம் ஆகியவை உள்ளன. முதல்வர் பெயரில் டிவி சானலும் கூட உள்ளது. இந்த நிலையில் முதல்வர் பெயரில் ஒரு கோவில் வரவுள்ளது வேலூரில். வேலூர் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலராக இருக்கும் ஜி.ஆர்.கிருஷ்ணமூர்த்திதான் இந்தக் கோவிலை கட்ட முனைந்துள்ளார்[13]. முதல்வர் கருணாநிதியின் ஏழை மக்கள் நலத் திட்டங்களால் கவரப்பட்டு இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறியுள்ளார்[14]. இந்தக் கோவிலுக்கு கலைஞர் திருக்கோவில் என அவர் பெயரிட்டுள்ளார். குடியாத்தம் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட சாமிரெட்டிப்பள்ளி கிராமத்தில் இந்தக் கோவில் வருகிறது.ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் இந்தக்கோவில் உருவாகிறது. கிரானைட்டால் ஆன முதல்வர் கருணாநிதியின் சிலை இங்கு வைக்கப்படுகிறது. வெளியில் உள்ள தூண்களில் மு.க.ஸ்லாடின், துரைமுருகன், மாவட்ட திமுக செயலாளர் ஆர்.காந்தியின் படங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து கிருஷ்ணூ்ர்த்தி கூறுகையில், முதல்வர் கருணாநிதி அரசால் அறிவிக்கப்பட்டுள்ள கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தால் எனது கிராமத்தில் மட்டும் 13 பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. முதல்வரை தாங்கள் கடவுள் போல கருதுவதாக அவர்கள் கூறினர். இதையடுத்தே எனக்கு கோவில் கட்டும் ஐடியா வந்தது என்றார்.

2010 அக்கோவில் இடிக்கப் பட்டது: அனுமதியில்லாமல் கட்டிய கோவிலை இடித்தனராம்: இந்நிலையில், குடியாத்தத்தைச் சேர்ந்த வருவாய்த் துறையினர் 02-07-2010 அன்று காலை 10 மணிக்கு கோவில் இருந்த இடத்துக்கு வந்து மார்பளவு இருந்த கருணாநிதியின் சிலையை அகற்றினர்[15]. மேலும், கோவிலின் முகப்புத் தோற்றம் உள்ளிட்ட அனைத்தையும் அகற்றினர்[16]. இது குறித்து தகவல் அறிந்த கிருஷ்ணமூர்த்தி விரைந்து வந்து காரணம் கேட்ட போது, “அனுமதியில்லாமல் கட்டிய கோவிலை இடிக்கிறோம்’ என, கூறினர்[17]. இங்குதான் விவகாரம் இருக்கும் போலிருக்கிறது. சமீபத்தில், “அனுமதியில்லாமல் கட்டிய கோவிலை இடிக்கிறோம்”, என்று பெரும்பாலும் இந்துக் கோவில்கள் இடிக்கப்பட்டன[18]. இதை திசைத் திருப்ப, ஒருவேளை கருணாநிதி, இப்படியொரு யுக்தியைக் கையாண்டாரா என்று தெரியவில்லை. நாளைக்கு சொல்வார், “பார் எனக்குக் கட்டிய கோவிலையே, நான் இடிக்க ஆணையிட்டு விட்டேன்”, என்று பீழ்த்திக் கொள்ளலாம்.

© வேதபிரகாஷ்

20-10-2022.


[1] விகடன், `3% இடஒதுக்கீடு தந்த குலதெய்வம் அவர்!’- கருணாநிதிக்கு கோயில் கட்டும் கிராம மக்கள், ர.ரகுபதி, Published:26 Aug 2019 6 PMUpdated:26 Aug 2019 6 PM

[2] https://www.vikatan.com/news/tamilnadu/rasipuram-village-people-to-construct-temple-for-karunanidhi

[3] தமிழ்.சமயம், ராசிபுரம் அருகே கலைஞர் கருணாநிதிக்கு கோயில் கட்ட அடிக்கல் நாட்டுவிழா!, Samayam TamilUpdated: 26 Aug 2019, 12:09 pm

[4] https://tamil.samayam.com/latest-news/state-news/villagers-to-build-temple-for-dmk-leader-karunanidhi-near-rasipuram/articleshow/70837912.cms

[5] தமிழ்.இந்து, மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு கோயில்: ராசிபுரம் அருகே அடிக்கல் நாட்டு விழா,  செய்திப்பிரிவு, Published : 26 Aug 2019 07:59 AM’ Last Updated : 26 Aug 2019 07:59 AM

[6] https://www.hindutamil.in/news/tamilnadu/512919-temple-for-karunanidhi.html

[7] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், கருணாநிதிக்குக் கட்டுவது பகுத்தறிவாலயமாம்கோயில் இல்லை என திமுக மா.செ. அறிவிப்பு,  Asianet Tamil, Rasipuram, First Published Aug 31, 2019, 8:53 AM IST ,  Last Updated Sep 6, 2019, 10:54 PM IST.

[8] https://tamil.asianetnews.com/politics/temple-of-karunanidhi-bulid-in-rasipuram-px303z

[9] தினத்தந்தி, முன்னாள் முதல்அமைச்சர் கருணாநிதிக்கு கோவில்வியப்பில் ஆழ்த்திய ஊர் மக்கள்…! , ஆகஸ்ட் 7, 12:52 pm (Updated: ஆகஸ்ட் 7, 12:52 pm).

[10] https://www.dailythanthi.com/News/State/former-chief-minister-karunanidhis-temple-amazed-town-people-763645

[11] தமிழ்.வெப்.துனியா, முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு கோவில்! – எந்த ஊரில் தெரியுமா?, Written By Prasanth Karthick, Last Modified, ஞாயிறு, 7 ஆகஸ்ட் 2022 (13:37 IST).

[12] https://tamil.webdunia.com/article/regional-tamil-news/peoples-build-a-temple-for-former-cm-karunanithi-122080700031_1.html

[13] தமிழ்.ஒன்.இந்தியா, கருணாநிதிக்கு கோவில் கட்டும் வேலூர் திமுக கவுன்சிலர், By Sutha Published: Thursday, July 1, 2010, 14:39 [IST]

[14] https://tamil.oneindia.com/news/2010/07/01/dmk-councillor-karunanidhi-temple.html?story=2

[15] தினமலர், முதல்வருக்கு கட்டிய கோவில் அகற்றம், Added : ஜூலை 03, 2010  01:22 |

[16] http://www.dinamalar.com/News_Detail.asp?Id=31199

[17] வேதபிரகாஷ், கருணாநிதிக்கு கோயில் கட்டியுள்ள கவுன்சிலர், 01-07-2010.

[18]https://rationalisterrorism.wordpress.com/2010/07/01/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D/

கருணாநிதிக்கு உயிரோடு இருக்கும் போது வைக்கப் பட்ட சிலையும், இறந்த பிறகு கட்டப் படும் கோவில்களும்! (1)

ஒக்ரோபர் 21, 2022

கருணாநிதிக்கு உயிரோடு இருக்கும் போது வைக்கப் பட்ட சிலையும், இறந்த பிறகு கட்டப் படும் கோவில்களும்! (1)

சிலையுடைப்பவருக்கு கோவில்: கருணாநிதிக்கு கோவில், கலைஞருக்கு கோயில் என்று அவ்வப்போது செய்திகள் வந்து கொண்டே இருக்கும். பிறகு, அமைதியாகி விடும், ஊடகங்களும் செய்திகளை அப்படியே முடக்கிவிடும். அதாவது, அவ்வாறு கோவில் எல்லாம் கட்டக் கூடாது, சிலைகள் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள் என்று தீர்மானம் போட்டிருக்கலாம், அவ்வாறே அறிவுருத்தப் பட்டிருக்கலாம். கோவிலை எதிர்த்தவருக்கு, கோவிலைத் தூற்றியவருக்கு, இந்துமதத்தை தூஷித்தவருக்கு, இந்துவிரோதிக்கு அப்படி செய்வார்களா என்பதே விசித்திரமானது.  கருணாநிதி இறந்த பிறகு, பிள்ளைகள் முறையாக இறுதி சடங்குகள் செய்தார்களா இல்லையா என்றெல்லாம் தெரியாது, ஆனால், துர்கா ஸ்டாலின், காசி, கயா எல்லாம் சென்று ஏதோ சடங்குகள் செய்ததாக செய்திகள் வந்துள்ளன. தனது பூஜை அறையில் தனது பெற்றோர், கணவனின் பெற்றோர், கருணாநிதியின் பெற்றோர் என்று அவர்களது படங்களை வைத்து பூஜித்து வருகிறார்.

சிலையுடைப்பவருக்கு சிலை (Iconoclast) மற்றும் கோவில்: கருணாநிதிக்கு உயிருடன் இருக்கும் பொழுதே, மவுண்ட் ரோடில் சிலை வைக்கப் பட்டது. அதற்கு குன்றக்குடி அடிகள், பெரியார் எல்லாம் ஒப்புக் கொண்டார்களாம். செப்டம்பர் 21, 1975 அன்று அண்ணா சாலை – ஜெனரல் பேட்டர்ஸ் ரோடு சந்திப்பில், அன்னை மணியம்மையார் தலைமையில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் கலைஞர் சிலையைத் திறந்து வைத்தார்கள். இப்பொழுது அவர்கள் இல்லாதலால், வீரமணி மற்ற ஆதினம் அதே போல ஒப்புக் கொள்வர்களா என்று தெரியவில்லை. ஆனால், 1987ல் எம்ஜிஆர் இறந்தபொழுது, இறுதி ஊர்வலம் சென்ற நிலையில் (24-12-1987), தொண்டர்கள், கருணாநிதி சிலையை உடைத்து எரிந்தனர். கருணாநிதி, எம்ஜிஆரை வசைப் பாடியது தெரிந்த விசயமே. அதனால், தொண்டர்கள் அச்சிலைப் பார்த்ததும், கோபம் கொன்டு, கொதித்த நிலையில் அவ்வாறு செய்தனர். திராவிடர்களே திராவிடனின் சிலையை உடைத்தது பகுத்தறிவு சித்தாந்தத்தில் யோசித்துப் பார்க்க வேண்டிய விசயம். பிறகு அதே இடத்தில் சிலை வைக்க வேண்டும் என்று முயற்சிகள் நடந்தன. பிறகு, அவர் காலமாகியப் பிறகு, சிலை வைக்கப் பட்டது. இப்பொழுது தொடர்ந்து சிலைகள் வைப்பது நடந்து வருகிறது. பேனா சின்னம் வைப்போம் என்றும் திட்டத்துடன் உள்ளார்கள்.

திராவிடியன் மாடலில் திராவிட ஸ்டாக்குகளின் இந்துவிரோதம் (2020-2022): சிலையுடைப்பவன் (Iconoclast) என்று ஈவேரா பிள்ளையார் சிலைகளை உடைத்தது, நிறையப் பேருக்குத் தெரிந்திருந்தாலும், உச்சநீதி மன்றத்தில் டோஸ் வாங்கிக் கொண்டது ஒருசிலருக்கேத் தெரியும், உருவம், சிலை, விக்கிரகம் (Idol) கூடாது, விக்கிரக ஆராதனை (Idoltary) கூடாது, உருவ வழிபாடு (Idol worship) கிடையாது என்றெல்லாம் பறைச்சாற்றும், கொக்கரிக்கும், ஊளையிடும் பகுத்தறிவு கூட்டங்கள், இப்பொழுது தாங்கள் திராவிட ஸ்டாக் (Dravidian stock) என்று இனவெறியுடன் சொல்லிக் கொள்கின்றன. திராவிடியன் மாடல் (Dravidian Model) என்றும் ஏதோ ஒரு புதிய சித்தாந்தத்தைக் கண்டு பிடித்து விட்டதை போல ஆர்பாட்டம் செய்து வருகிறார்கள். பெரியாரிஸம் (Periyarism) என்றாலும், நாத்திகம் என்றாலும், இறுதியில் தாக்கப் படுவது இந்து மதமே. போதாகுறைக்கு இக்கூட்டங்கள் கோலோச்சும் போது, இந்துஇரோத அக்கிரமங்களும் அதிகமாகும். ஒழுங்காக ஆட்சி செய்து, மக்களுக்கு வேண்டிய காரியங்களை செய்யாமல், தினம்-தினம் இவ்வாறு கோவில், கோவில் சொத்து விவகாரங்களை வைத்து காலம் தள்ளிக் கொன்டிருக்கிறார்கள்.

20-10-2022 அன்று கருணநிதிக்கு கோவில் கட்ட அடிக்கல் நாட்டு விழா: அந்நிலையில் காஞ்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் க. சுந்தர் தலைமையில், கோவில் கட்ட மறுபடியும் 20-10-2022 அன்று பூமிபூஜை போட்டுள்ளார்கள்.  செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் அடுத்துள்ள ஆட்டுபட்டி கோட்டை புஞ்சை கிராமத்தில் ஸ்ரீ வனதுர்கை அம்மன் சித்தர் பீடத்திற்கு சொந்தமான நிலத்தில் 7 அடி உயரத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் வெண்கல சிலையுடன் கூடிய கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது[1]. இந்நிகழ்ச்சியில் திமுக காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க. சுந்தர் எம். எல். ஏ, ஒன்றிய பெருந் தலைவர்கள் ஆர். டி. அரசு, ஏழுமலை, மாவட்ட கவுன்சிலர் டைகர்குணா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அங்கு வைக்கப் பட்டிருந்த முத்தமிழ் அறிஞர் கலைஞரின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி வணங்கினார்[2]. அதனை தொடர்ந்து கோயில் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டினார். விழா ஏற்பாடுகளை வனதுர்க்கை அடிகளார் வினோத் செய்திருந்தார்.

மே 2022 – கருணாநிதி சமாதியில் கோபுர வடிவம் வைத்தது: தமிழக சட்டசபையில் இந்து சமய அறநிலையத்துறை மீதான மானிய கோரிக்கை நடைபெற உள்ள நிலையில் திமுக முன்னாள் தலைவரும், முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்தில் கோவில் கோபுரம் போன்ற அலங்காரம் செய்யப்பட்டுள்ளது[3]. தமிழ்நாட்டில் ஒரு முறை கூட தோல்வி அடையாத சட்டமன்ற உறுப்பினர் என்றால் அது திமுக முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதிதான். அதுவும் தொடர்ந்து 13 முறை சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று இருக்கிறார்[4]. அதுமட்டுமல்லாமல் ஐந்து முறை தமிழகத்தின் முதலமைச்சராகவும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும் சுமார் முப்பத்தி ஒன்பது ஆண்டு காலம் பதவி வகித்துள்ளார்.கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வயது முதிர்ந்த நிலையில் உடல்நலக் கோளாறு காரணமாக கலைஞர் கருணாநிதி காலமானார். இது எடுத்து பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்டது.

மே 2022 – வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இந்து சமய அறநிலையத்துறை: மேலும் நாள்தோறும் கலைஞரின் நினைவிடம் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, கலைஞரின் செல்ல குழந்தை என வர்ணிக்கப்படும் முரசொலி நாளிதழ் அங்கு வைக்கப்படுவது வழக்கம். இது குறித்த சில விமர்சனங்கள் எழுந்த போதிலும், தற்போது வரை அந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது வருகிறது. இதேபோல் திமுக தலைவராகவும், முதல்வராகவும் பதவியேற்ற போது முதலில் கலைஞர் நினைவிடத்துக்குச் சென்ற பிறகே மற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார் முதல்வர் ஸ்டாலின். இதேபோல், திமுகவைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் கலைஞர் நினைவிடத்தில் நாள்தோறும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.இந்நிலையில் இந்து சமய அறநிலையத் துறை மானிய கோரிக்கை விவாதத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் கருணாநிதியின் நினைவிடம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இந்து சமய அறநிலையத்துறை என வெள்ளைப் பூக்களால் எழுதப்பட்டுள்ளது.

மே 2022 – கருணாநிதியும்கோவில்களும்: மேலும் கலைஞரின் உருவப்படத்திற்கு எதிரே பல வண்ணங்களில் கோவில் கோபுரம் ஒன்றும் எழுப்பப்பட்டுள்ளது. இதனை அங்கு வரும் திமுக தொண்டர்களும் சுற்றுலா பயணிகளும் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர். மேலும் அதனுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.கடவுள் மறுப்பு கொள்கை இருந்தபோதிலும் கோவில்கள் மீதும் இந்து சமய அறநிலையத்துறை மீது தனி கவனம் செலுத்தியவர் கலைஞர் கருணாநிதி. பல ஆண்டுகள் ஓடாத திருவாரூர் தேரை ஓட வைத்தவர் என்ற பெருமை அவருக்கு உள்ளது. இதேபோல பல்வேறு கோவில்களில் குடமுழுக்கு விழாக்கள், நூற்றுக்கணக்கான கோயில்களை புணரமைப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் திமுக ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இந்த ஊடகம் விவரித்தாலும், நடந்தது, நடப்பது பொது மக்களுக்கு, நன்றாகவே தெரியும். இந்துவிரோதத் தன்மை புரியும்.

© வேதபிரகாஷ்

20-10-2022.


[1] தமிழ்.கெட்,லோக், முத்தமிழ் அறிஞர் கலைஞருக்கு கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, By Rajasekar, Oct 20, 2022, 08:10 IST

[2] https://tamil.getlokalapp.com/tamilnadu-news/kanchipuram/seiyur/ground-breaking-ceremony-for-the-construction-of-a-temple-for-muthamizh-scholar-artist-7908939

[3] தமிழ்.ஒன்.இந்தியா, கருணாநிதி நினைவிடத்தில் திடீர்கோவில்ஒரு நிமிடம் திடுக்கிட்ட உடன்பிறப்புகள்.. ஆனால் மேட்டரே வேற!, By Rajkumar R Updated: Wednesday, May 4, 2022, 12:34 [IST]

[4] https://tamil.oneindia.com/news/chennai/a-temple-tower-like-decoration-has-been-erected-at-the-memorial-of-former-kalaignar-karunanidhi-457034.html

ஜான் பென்னிகுக் வைத்து கட்டுக்கதை உண்டாக்குவதேன் – திராவிடத்துவ சிலைஅரசியல் முதல் சமாதி அரசியல் வரை! (3)

ஜனவரி 18, 2022

ஜான் பென்னிகுக் வைத்து கட்டுக்கதை உண்டாக்குவதேன் திராவிடத்துவ சிலைஅரசியல் முதல் சமாதி அரசியல் வரை! (3)

உயிருடன் இருக்கும் போதே சிலை வைத்துக் கொள்ளும் திராவிட சம்பிரதாயத்தை ஈவேரா ஆரம்பித்தார்.

தமிழகத்திற்கு சிலைவைப்பு, சிலையுடைப்பு, சிலைஅரசியல் எல்லாம் புதியதல்ல: ஈவேராவால் தமிழகத்தில் சிலையுடைப்பு அரசியல் ஆரம்பிக்கப் பட்டது. இங்கு பிள்ளையார் / விநாயகர் சிலைகள் தேர்ந்தெடுக்கப் பட்டதால், அது இந்துவிரோதமாகி அந்த போலி நாத்திகர்களை வெளிப்படுத்தியது. உச்சநீதி மன்றம் வரை அவர் மீதான வழஜக்குச் சென்றாலும், ஈவேரா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை, நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டார். இருப்பினும் சிலையுடைப்பு அக்கிரமங்களை செய்து வந்தார். 1968ல் இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டிலிருந்தே சிலைவைத்தல்[1], அதிலும் மெரினா பீச்சில் சிலை வைத்தல் என்ற அரசியல் ஆரம்பித்தது. அப்பொழுதே, அண்ணா பலதரப் பட்ட அழுத்தங்களுக்குட் பட்டார். வெளிநாட்டு, உள்நாட்டு அழுத்தம்-ஆதிக்கங்கள் அதிலிருந்தன. இதனால், சில சிலைகள் தேவையில்லாமல் சேர்க்கப் பட்டன, அதாவது, சில நீக்கவும் பட்டன. 1970களில் ஈவேராவின் பிள்ளையா சிலையுடைப்பு / ராமர் பட அவமதிப்பு உச்சங்களுக்குச் சென்றன[2].

உயிருடன் இருக்கும் போதே சிலை வைத்துக் கொள்ளும் திராவிட சம்பிரதாயத்தை ஈவேரா ஆரம்பித்தார். கருணாநிதியும் அந்த சடங்கை முறையாக செய்தார். ஆனால், அது உடைப்பு கிரியையில் முடிந்ததது. உடைப்பு சம்பிரதாயத்தையும் ஈவேரா தான் ஆரம்பித்து வைத்தார்.

ஈவேராஅண்ணாகருணாநிதி சிலைகள்: அதேபோல, பிறகு மவுண்ட் ரோடில் சிலைவைப்பதில், வைத்துக் கொள்வதில் போட்டி ஏற்பட்டது. ஈவேரா (இந்து அலுவகத்து அருகில்), அண்ணா என்றாகி (மவுண்ட் ரோடு-வாலாஜா ரோட் சந்திப்பு), உயிரோடு இருக்கும் போதே கருணாநிதி தனக்கும் சிலை வைத்துக் கொண்டார் (மவுண்ட் ரோட்-பாட்டுலஸ் ரோட் சந்திப்பு). ஆனால், 1987ல் அது உடைக்கப் பட்டது. அது அரசியலாகி, திராவிடத்துவமாகி, ஒரு நம்பிக்கையாகவும் மாறியது. அதாவது, அது அபசகுனமாகக் கருதப் பட்டது. திமுக ஆட்சி அதிகாரம் இழந்தது. எம்ஜிஆருக்கு ஸ்பென்சர் சந்திப்பில் சிலை வைக்கப் பட்டது. இனி மவுண்ட் ரோடில் எங்கு, யாருக்கு வைப்பார்களோ தெரியாது.

மவுண்ட் ரோடில் முதலில் ஈவேரா, பிறகு அண்ணா, கருணாநிதி என்று வரிசையாக சிலைகள் வைக்கப் பட்டது.

அம்பேத்கர் சிலை வைத்தலும், போராட்டமும்: இதற்குள் அம்பேதகருக்கு சிலை வைக்கும் அரசியல் ஆரம்பித்து, அது தீவிரமாகி, அதிகமாகியது. முதலில் இந்துக்களைத் தாக்க அது உதவும் என்று நினைத்து ஊக்குவிக்கப் பட்டது, ஆனால், அது திராவிட உயர்ஜாதியினருக்கே எதிராக அமைந்தது. இது நிச்சயமாக திராவிடத்துவவாதிகளுக்குப் பிடிக்கவில்லை[3]. அதனால், திக ஈவேரா சிலை வைக்கும் அதிரடியை ஆரம்பித்தது. அந்த தீவிரம் ஶ்ரீரங்கம் கோவில் வாசலுக்குச் சென்ற போது பிரச்சினையாகியது[4]. இடையில் கண்ணகி சிலை வைத்தும் கருணாநிதி அர்சியல் நடத்தினார். ரஜினி 2021ல் பேசியதும் எதிர்க்கப் பட்டது, ஆனால், விவரங்கள் வெளியே வந்து விட்ட போது, திராவிட நாத்திக-இந்துவிரோத முகங்கள் எல்லோருக்கும் தெரிந்து விட்டது.

சிலைகளுக்குப் பிறகு கோவில்களும் கட்டப் பட்டது. இப்பொழுது சமாதிகள் கோவில்களாக மாறி அங்கு தினம்-தினம் பூஜைகள், படையல்கள், ஆராதனைகள், அலங்காரங்கள்-வாத்தியங்கள் சகிதம் நடந்து கொடிருக்கின்றன…

வள்ளுவர் கோட்ட அரசியல்: கடந்த 1971- 76 ல் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, சென்னை நுங்கம்பாக்கத்தில் பிரம்மாண்டமான முறையில் வள்ளுவர் கோட்டம் கட்டினார்[5]. அதன் திறப்பு விழாவை 1976ம் ஆண்டு பிரவரி மாதம் 1,2,3 ஆகிய தேதிகளில் மூன்று நாட்களுக்கு சிறப்பாக நடத்த முடிவு செய்து எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. விழா தொடர்பாக வானொலியில் விளம்பரம்கூட ஒலிபரப்பப்பட்டது. அப்போது இந்திரா காந்தி பிரதமர். நெருக்கடிநிலை (மிசா) அமலில் இருந்தது. நெருக்கடி நிலையை கருணாநிதி கடுமையாக எதிர்த்தார். இதனால் கோபமடைந்த இந்திராகாந்தி, பிப்ரவரி ஒன்றாம் தேதி, 1976 வள்ளுவர் கோட்டம் திறப்புவிழா நடக்க இருந்த நிலையில், ஜனவரி 30ம் தேதி, திமுக அரசை டிஸ்மிஸ் செய்தார்[6]. அப்போதைய குடியரசுத்தலைவர் பக்ருதீன் அலி அகமது வந்து, வள்ளுவர் கோட்டத்தை திறந்து வைத்தார். முன்னாள் முதல்வர் என்ற முறையில், வள்ளுவர் கோட்டம் திறப்புவிழாவில் பார்வையாளராகக் கலந்து கொள்ள கருணாநிதிக்கு அரசு சார்பில் அழைப்பு அனுப்பப்பட்டது. பத்தாவது வரிசையில் அவருக்கு இடம் ஒதுக்கப்பட்டது. விழா நடக்கும் இடத்தில் இருந்து அரை கி.மீ. தூரத்தில் காரை நிறுத்த இடம் ஒதுக்கப்பட்டது. அங்கிருந்து விழாவுக்கு கருணாநிதி நடந்து வரவேண்டும். விழாவைப் புறக்கணித்தார் கருணாநிதி[7].

ஈவேரா இந்த வழக்கில் தான் உச்சநீதி மன்றத்தில் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டார். ஆனால், நாங்கள் பார்க்காத கோர்ட்டா என்றெல்லாம் பேசுவார்கள். ஈவேரா இவ்வழக்கில் கோர்ட்டில் ஆஜராகவில்லை..

முதல்வராக இருந்த கருணாநிதி நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு, கடற்கரைச் சாலையில் சிலை வைத்தார். 2011ல் அந்த சிலை அகற்றப்பட்டு, சிவாஜி மணிமண்டபத்தில் இப்போது வைக்கப்பட்டது. சிலை திறப்பு விழாவின்போது, சிலையின் பீடத்தில் இருந்த கருணாநிதியின் பெயர் பொறித்த கல்வெட்டு, சிவாஜி சிலை பீடத்தில் இப்போது அகற்றப்பட்டது. இது சர்ச்சையை கிளப்பியது.

அங்கில அடிவருடித்தனம் கட்டுக்கதைகளால் இவ்வாறெல்லாம் பகுத்தறிவு திராவிடத்துவ போதை கொண்டு, புதிய பக்தர்கள் உருவாகி வருகிறார்கள்!

எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது, ஒரு போராட்டத்தில் கலந்துகொள்ளும் முன், சென்னையில், அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கச் சென்றார் கருணாநிதி, சிலைக்கு மாலை அணிவிக்க இயலாதபடி, அங்கே வைக்கப்பட்டிருந்த படிக்கட்டை ஆட்சியாளர்கள் அகற்றிவிட்டனர். உலகத்தமிழ் மாநாட்டின்போது, அரசு சார்பில், அண்ணா முதல்வராக இருக்கும்போதே வைக்கப்பட்டதுதான் அந்தசிலை. ஆனால், அந்த சிலை நிறுவுவதற்கான தொகையை நன்கொடையாகக் கொடுத்தவர் எம்ஜிஆர். படிக்கட்டு அகற்றப்பட்டதையடுத்து,சிலையின் பீடத்தில் மாலையை வைத்துவிட்டுச் சென்றார் கருணாநிதி. இந்த நிகழ்வைத் தொடர்ந்து திமுகவுக்கென்று தனியாக அண்ண சிலை நிறுவ முடிவு செய்தார் கருணாநிதி. இதற்காக அண்ணா சாலையில் இடம் ஒதுக்கும்படி அரசுக்குக் கோரிக்கை வைத்தார். எம்ஜிஆர் அரசு மறுத்துவிட்டது. வள்ளுவர் கோட்டம் எதிரே அண்ணா சிலை வைக்க திமுகவுக்கு அனுமதி தரப்பட்டது. இதையும் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டார் கருணாநிதி. வள்ளுவர்கோட்டம் நுழைவாயில் அருகே அண்ணாசிலையை திறந்தார் கருணாநிதி. சிலையின் பீடத்தில், “சிலை திறப்பாளர், வள்ளுவர் கோட்டம் கண்ட கலைஞர் கருணாநிதி” என்று கல்வெட்டில் பொறித்து வைத்தார். வள்ளுவர் கோட்டம் கட்டியது கருணாநிதி என்பதை அங்கே பதிவு செய்தனர். அண்ணா பிறந்த நாளில், இந்த சிலைக்குதான் திமுகவினர் மாலை அணிவிப்பார்கள். அதிமுகவினர், அண்ணா சாலையில் உள்ள சிலைக்கு மாலை அணிவிப்பார்கள்.

கட்டுக் கதையைப் பரப்பும் திராவிடத்துவம், அதை அரசு ரீதியில், 2022ல் முதலமைச்சரே பரப்புகிறார்! சரித்திரம் பற்றி எந்த கவலையும் இல்லை.

1969 முதல் 2018 வரை – மெரினாவில் சமாதி அரசியல்: முதலில் 1969ல் அண்ணா இறந்தபோது, அவருக்கு சமாதி கட்டப் பட்டது. அப்பொழுது, அதைப் பற்றி யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பிறகு, 1987ல் எம்ஜிஆருக்கு சமாதி வைத்த போது, திமுகவினர் சில சலசலப்பு காட்டினாலும், கருணாநிதி சிலையுடைப்பு, வன்முறை முதலியவற்றை கவனித்து அமைதியாகினர். 2016ல் ஜெயலலிதாவுக்கு சமாதி வைக்க்ப்பட்டது. ஜெயலலிதாவுக்குப் பிறகு 2018ல் கருணாநிதி இறந்தபோது, மெரினாவில் சமாதி அரசியலும் உண்டானது. வழக்கும் தொடரப் பட்டது, ஆனால், முடித்து வைக்கப் பட்டது, சமாதி வைக்கப் பட்டது. இனி, திராவிடத்துவவாதிகள், மெரினாவில் தங்களுக்கு சமாதி வைக்க “ரிசர்வ்” செய்துகொண்டு இடத்தைப் பிடித்து வைத்துக் கொண்டாலும் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

Stuart Sampson – ஸ்ய்ரௌட் சாம்ப்ஸன் மதுரையின் பென்னிகுக்கிற்கு வீடு இருந்தற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்றார்.

2021ல் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சிலை அரசியலை ஆரம்பித்து விட்டது: இப்பொழுது 2022ல் திமுக ஆட்சிக்கு வந்தவுடம் அதைவிட தீவிரமான சிலை / மணிமண்டபம் அரசியல் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. அயோத்தி தாசர், வ.உ.சிதம்பரம், ஈவேரா, வள்ளலார், ஜான் பென்னிகுக் என்று நீள்கிறது. இதற்கெல்லாம் கோடிகளில் திட்டங்கள்! பிறகென்ன கட்டுக்கதைகளுக்கு குறைவா? இட்டுக்கட்டுவதில் வல்லவர்களான, தமிழ் செப்படி வித்தை[8] வல்லுனர்கள் சதுரங்க வேட்டையிலும் இறங்கி விடுவர். ஆனால், சரித்திர ஆதாரம் இல்லாத கட்டுக்கதைகளை வளர்க்க முன்படும் போது, உண்மைகள் வெளிவரத்தான் செய்யும். இவ்விதமாகத்தான், இப்பொழுது ஸ்டாலின் மாட்டிக் கொண்டுள்ளார். நிச்சயமாக யாரோ அவருக்கு இந்த ஸ்கிரிப்டை எழுதி கொடுத்துள்ளார்கள். அது நாகநாதன், ஜகதீசன், கருணானந்தம் போன்ற ஆஸ்தான சரித்திராசியர்களாக இருக்கலாம்.

© வேதபிரகாஷ்

18-01-2022.


[1] World Tamil Conference (WTC) என்பது முதலில் 1966ல் கோலாலம்பூர் மற்றும் 1968ல் சென்னையில் நடத்தப் பட்டது.

[2] 1971ல் ராமர் போன்ற படங்களுக்கு செருப்பு மாலை போடப் பட்டது மற்றும் இந்து கடவுளர்களை நிர்வாணமாக, ஆபாசமாகச் சித்தரித்து திக-திமுகவினர் துருச்சியில் ஊர்வலம் நடத்தினர்.

[3] தமிழனே இல்லாத நபருக்கு, தமிழகத்தில் சிலை ஏன் என்று கூட கேள்விகள் எழுப்பப் பட்டன.

[4] One.India, Life-size Bronze statue of ‘Periyar’ was unveiled at Srirangam, By Staff | Published: Monday, December 18, 2006, 3:51 [IST]

https://www.oneindia.com/2006/12/16/life-size-bronze-statue-of-periyar-was-unveiled-at-srirangam-1166394083.html

Srirangam, Tamilnadu, Dec 16 (UNI) In an event preceded by controversy, a life-size bronze statue of late Rationalist leader and Founder of Dravidar Kazhagam (DK) Periyar E V Ramasamy Naicker,was formally unveiled near the Sri Ranganatha temple by DK General Secretary K Veeramani, here .  the statue mounted on a 12-feet high pedestal,was installed near the ‘Rajagopuram’ (temple tower). Union Minister for Environment and Forests A Raja, State Ministers K N Nehru and N Selvaraj, also participated in the event.

[5] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், சிலை அரசியல், Written by WebDesk, Updated: October 2, 2017 11:06:36 am.

[6] https://tamil.indianexpress.com/opinion/statue-politics/

[7] இதில் முக்கியமானது என்னவென்றால், வள்ளுவர் கோட்டத்துக்கு கருணாநிதி அடிக்கல் நாட்டியதற்கான கல்வெட்டு அகற்றப்பட்டதுதான். வள்ளுவர் கோட்டத்தை கருணாநிதிதான் கட்டினார் என்ற தகவல் அங்கு எந்த வகையிலும் இடம் பெறவில்லை. இது இந்திரா காங்கிரஸ்காரர்கள் செய்த வேலை.

[8] பிறரறியாவகை செப்புக்களுள் உருண்டைகள் வந்துபோகுமாறு அவற்றைத் தரையில் அடித்துக் காட்டுவது முதலிய தந்திரவித்தை.

ரஜினியும் இக்கட்டுக்கதை வைத்து படம் எடுத்ததால், இரண்டாம் பெனிகுக் நிலைக்கு உயர்ந்துள்ளாறா அல்லது தள்ளப் பட்டாரா என்று தெரியவில்லை.

ஜான் பென்னிகுக் வைத்து கட்டுக்கதை உண்டாக்குவதேன், சிலைஅரசியல் செய்வதேன்? ஆங்கில அடிவருடித் தனமா? வேறெந்த காரணமா? (1)

ஜனவரி 18, 2022

ஜான் பென்னிகுக் வைத்து கட்டுக்கதை உண்டாக்குவதேன், சிலைஅரசியல் செய்வதேன்? ஆங்கில அடிவருடித் தனமா? வேறெந்த காரணமா? (1)

இட்டுக்கதை, கட்டுக்கதை, மாயைகள் முதலியவற்றை உருவாக்குவதில் வல்லவர்கள் திராவிடத்துவ வாதிகள்: கட்டுக்கதைகளை உருவாக்குதில் திராவிடத்துவவாதிகள் கைத் தேர்ந்தவர்கள் ஆவர்.  அவற்றில் அரசியல் ஆதாயம், பணம், கான்ட்ராக்ட் கிடைக்கும் என்றால், பெரிதாக்கி ஊதுவார்கள்! சம்பந்தமே இல்லாத ஆட்கள் எல்லாம் திடீரென்று தோன்றி அதில் அதி-தீவிரமான விருப்பம் கொண்டிருப்பதைப் போலவும், அதற்கு உயிரையே கொடுப்பேன் என்ற ரீதியில் உழைப்பது போலவும் நாடகம் ஆடுவர். விவகாரங்கள் தெரிய வந்தால், சமாளித்துப் பார்ப்பார்கள், மாட்டிக் கொண்டால் அடங்கி விடுவார்கள், வழக்கு என்றெல்லாம் ஆகி விட்டால், எல்லாவற்றையும் அடியோடு மறைக்கப் பார்ப்பர்கள். திராவிடத்துவ சரித்திரம் என்றதே கடந்த 70 ஆண்டுகளில் உருவாக்கப் பட்டதே. எல்லாமே, ஒருதலைப் பட்ட கதைகள், அவர்களே வெளியிட்டுள்ள புத்தகங்கள், முதலியன…. அவற்றை சரிபார்க்க முடியாது, அவர்கள் சொல்லியுள்ளதை, எழுதியுள்ளதை அப்படியே ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று தான் எழுது முறை ஆராய்ச்சி நெறிமுறை எல்லாமே நடந்து வருகிறது. சரித்திராசிரியர்கள் என்று பிரகடப் படுத்திக் கொள்பவர்களும், அவ்வாறே ஆதரித்து, விருதுகள், பட்டங்கள், நிதியுதவிகள் பெற்றுக் கொண்டு காலந்தள்ளி வருகின்றனர். உண்மையுரைக்க அவர்களுக்கு திராணி இல்லை, மன்னசாட்சியும் கிடையாது. அப்படி செய்தால், தூக்கியெறியப் படுவர்.

திராவிடத்துவ வாதிகளின் பதினெண் புராணங்கள் உருவாக்கும் முறைகள்: பெரியார் புராணம், நாகம்மை புராணம், பெரியம்மை புராணம், பெஸ்கி புராணம், அண்ணா புராணம், கருணாநிதி புராணம், வீரமாமுனிவர் புராணம், தத்துவ போதகர் புராணம், எல்லீஸர் புராணம், ஜி.யு.போப் புராணம், வரிசையில் பென்னி குக் புராணமும் சேர்ந்துள்ளது. “நதிமூலம், ரிஷி மூலம் கேட்கக் கூடாது,” என்றால், இங்கும் மூலங்கள் கேட்கக் கூடாது, காண்பிக்கப் படாது. எழுதி வைத்ததைப் படி, ஒப்புக்கொள், பிரச்சரம் செய், கேள்விகள் கேட்காதே – என்பவை தான் ஆணைகள், ஏற்றுக் கொள்ளப் படவேண்டும். ஒருவர் முதலில் எழுதுவார், இன்னொருவர் விரிவாக்குவார், இன்னொமொருவர் இன்னும் கொஞ்சம் சேர்ப்பார், புத்தகங்கள் வெளிவரும், பிஎச்.டிக்களும் உருவாக்கப் படும், விழா எடுப்பர், விருதுகள்-பட்டகள் கொடுக்கப் படும், அவ்வளவு தான், பொற்றாமரைக் குளத்தில், பூமேடையில் வைத்து, தமிழ் சங்கத்தில் ஏற்றுக் கொள்ளப் பட்டது போன்ற ரீதியில் அரங்கேற்றப் படும். கலைமாமணி, பெரியார் விருது என்றெல்லாமும் கொடுக்கப் படும்.

2018 – முல்லைப்பெரியாறு அணை கட்டிய பென்னி குக்கின் பெயரால் நூதன மோசடி அரங்கேறி வருவதாக திடுக்கிடும் புகார் எழுந்துள்ளது:. முல்லைப்பெரியாறு அணை என்பது தமிழகத்தின் ஐந்து மாவட்டங்களின் வாழ்வாதாரம். இந்த அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னி குக் ஏறத்தாழ 125 ஆண்டுகளுக்கு முன்பு இராணுவப் பணிப் பொறியாளராகப் பணியாற்ற இந்தியா வந்தவர். அப்போது ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தில் ஒருபுறம் தென் மாவட்ட மக்கள் தண்ணீர்ப் பிரச்னையால் வாடுவதையும் மறுபுறம் பெரியாற்று நீர் வீணாகக் கடலில் கலப்பதையும் பார்த்து, ஆற்றின் குறுக்காக ஒரு அணையைக் கட்டலாம் என்று ஆங்கில அரசிடம் அனுமதி பெற்றார். பின் பாதி கட்டப்பட்ட நிலையில் காட்டாற்று வெள்ளத்தில் அணை உடைந்து ஆங்கில அரசு திட்டத்தை மூட்டை கட்டினாலும் இங்கிலாந்து சென்று தன் சொத்துக்களையெல்லாம் விற்று அணையைக் கட்டி முடித்தார். இன்றளவும் அவர் பெயரைச் சொல்லி பொங்கல் வைக்கும் அளவுக்கு அன்பும் நன்றியும் பாராட்டுகிறார்கள் தென்மாவட்ட மக்கள். இந்நிலையில், கடந்த பொங்கல் பண்டிகை சமயத்தில் பென்னி குக்கின் கொள்ளு பேரன் பேத்திகள் என டயானா ஸிப், ஸானி மற்றும் உறவினர்கள் என்று சிலர் தேனிக்கு வந்தனர்.ஆனால், இவர்கள் யாரும் பென்னி குக்கின் நேரடி வாரிசுகள் அல்ல என்பதும் இவர்களில் ஒருவர் மட்டும் பென்னிகுக்கிற்கு தூரத்து சொந்தம் என்றும் தற்போது தெரியவந்துள்ளது.

சந்தன பீர் ஓலி ஈடுபடுள்ளதாக, கோவிந்தன் என்ற சுதந்திர போராட்டத் தியாகி குற்றம் சாட்டுகிறார்: கம்பம் அருகே உத்தமப்பாளையம் பகுதியைச் நேர்ந்த சந்தன பீர் ஓலி என்பவர், லண்டனைச்சேர்ந்த டயானா ஸிப் உள்ளிட்ட 3 பேரும் பென்னிகுக்கின் கொள்ளு பேத்திகள் என்று கூறி அறிமுகப்படுத்தி அழைத்து வந்ததோடு, லண்டனில் உள்ள பென்னிகுக் அடக்கம் செய்யப்பட்டுள்ள கல்லறையை சீர்செய்யவும் அங்கு பென்னிகுக்கிற்கு நினைவுச்சிலை எழுப்பவும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரிடம் பணம் வசூலித்து மோசடி செய்துள்ளதாக கூறுகிறார்கள் கம்பம் பகுதி மக்கள். இந்நிலையில்  பென்னிகுக்கின் பேத்திகள் என்று நம்பி தாங்கள் உதவி செய்ததாக கூறுகிறார்கள் அந்த நிகழ்ச்சிக்கு உதவி புரிந்தவர்கள்.  ஒரு பக்கம் பேரன், இன்னொரு பக்கம் பேத்திகள் என்று வருவதும் விசித்திரமாக இருக்கிறது.

கம்ப – கோவிந்தன் என்பவர் வழக்கு தொடர்வதாகக் கூறியது: இதனைதொடர்ந்து கோவிந்தன் என்ற சுதந்திர போராட்டத் தியாகி தேனி கம்பம் பகுதியில் பென்னி குக்கின் பெயரில் நிதி வசூல் செய்தநிலையில், கொடைக்கானலில் பென்னிகுக் ட்ரஸ்ட் என்ற பெயரில் இதே சந்தன பீர் ஒலி என்பவர் பென்னிகுக்கின் நிலத்தை அபகரிக்க, முயல்வதாகவும் குற்றம் சாட்டுகிறார்[1]. மேலும் 1‌980 வரை பென்னி குக் பெயரில் கொடைக்கானலில் இருந்த 21 ஏக்கருக்கும் அதிக நிலம் தற்போது ஆக்கிரமிப்பில் இருப்பதாக அதிர்ச்சித்தகவலை கூறுகிறார்[2]. இச்சுழலில் கம்பம் பகுதி மக்களின் புகார்கள் குறித்து லண்டனில் வசிக்கும் சந்தன பீர் ஒலியிடம் கேட்டபோது இந்த புகார்களுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இவர் மறுப்பு தெரிவித்தாலும், பென்னிகுக்கின் நில ஆக்கிரமிப்பு தொடர்பாக நீதிமன்றத்தை நாட உள்ளார் கோவிந்தன். ஆனால், பிறகு என்னவாயிற்று என்று தெரியவில்லை.

ஜனவரி 2022 – ஸ்டாலின் – பென்னி குயிக்கிற்கு இங்கிலாந்தில் சிலை வைக்கப் படும்: முல்லை பெரியாறு அணையை கட்டிய பென்னிகுயிக்குக்கு இங்கிலாந்தில் தமிழக அரசு சார்பில் சிலை நிறுவப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக-கேரள எல்லையில் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது முல்லைப்பெரியாறு அணை. தமிழக-கேரள எல்லையில் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது முல்லைப்பெரியாறு அணை. தன்னிடம் இருந்த சொத்தை எல்லாம் விற்று அரும்பாடு பட்டு 1895-ம் ஆண்டு இந்த அணையை கட்டியவர் இங்கிலாந்தை சேர்ந்த கர்னல் ஜான் பென்னிகுயிக். இந்த நிலையில் இங்கிலாந்தில் பென்னிகுயிக்குக்கு தமிழக அரசு சார்பில் சிலை நிறுவப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்[3]. இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்[4], “தென் தமிழகத்தின் உயிர்நாடியாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையைப் பல இடையூறுகளுக்கு இடையில் தனது சொந்தப் பணத்தை செலவு செய்து அமைத்த, கர்னல் ஜான் பென்னிகுயிக்கின் புதிய சிலையை, அவர் பிறந்த ஊரான இங்கிலாந்து நாட்டின் கேம்பர்ளி நகர மையப் பூங்காவில் தமிழக அரசு சார்பில் நிறுவப்படுவது குறித்து அவருடைய பிறந்த நாளான இன்று (ஜனவரி 15) அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்[5].

கர்னல் ஜான் பென்னிகுயிக்கின் புதிய சிலையை அவரின் சொந்த ஊரான இலண்டன்-கேம்பர்ளி நகரத்தில் அமைக்கப் படும்: கர்னல் ஜான் பென்னிகுயிக்கின் புதிய சிலையை அவரின் சொந்த ஊரான இலண்டன்-கேம்பர்ளி நகர மையப் பூங்காவில் நிறுவ அனைத்து லண்டன் வாழ் தமிழர்களால் முயற்சிகள் எடுக்கப்பட்டு, சிலை நிறுவ இங்கிலாந்து சட்டப்படி, செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தின் ஒப்புதலைப் பெற்றுள்ளார்கள்[6]. ஆங்கிலேயப் பொறியாளரான கர்னல் ஜான் பென்னிகுயிக், தமிழக மக்களுக்காக கடின தியாகமான உழைப்பினாலும், தொழில்நுட்ப நிபுணத்துவத்தினாலும் பெரியாற்றின் குறுக்கே, பெரியாறு அணையை 1895ஆம் ஆண்டு கட்டி முடித்து, தமிழகத்திற்கு குறிப்பாக தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்ய வழிவகை செய்தார்[7]. அம்மாவட்ட மக்களின் வாழ்வாதாரமே முற்றிலும் செழுமையடைந்து மாற்றங்கள் பெற்றுள்ளன. இம்மாவட்ங்களில் தற்பொழுது சுமார் 2,19,840.81 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றுள்ளன[8].

© வேதபிரகாஷ்

18-01-2022.


[1] புதிய தலைமுறை, பென்னி குக்கின் பெயரில் நூதன மோசடி: திடுக்கிடும் புகார் , NewsPT, Published :07,Dec 2018 08:14 AM.

[2] https://www.puthiyathalaimurai.com/newsview/39312/Fraud-in-the-name-of-PennyCuick-at-theni

[3] தமிழ்.ஒன்.இந்தியா, தமிழக அரசு சார்பில் இங்கிலாந்தில் பென்னிகுயிக்குக்கு சிலை நிறுவப்படும்.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு, By Rayar A, Updated: Saturday, January 15, 2022, 13:29 [IST].

[4] https://tamil.oneindia.com/news/chennai/a-statue-of-john-pennycuick-will-be-erected-in-england-on-behalf-of-the-government-of-tamil-nadu-say/articlecontent-pf640795-445443.html

[5] தினத்தந்தி, இங்கிலாந்தில் பென்னிகுவிக் சிலைமுதல் அமைச்சர் மு..ஸ்டாலின் அறிவிப்பு, பதிவு: ஜனவரி 15,  2022 12:25 PM.

[6] https://www.dailythanthi.com/News/State/2022/01/15122526/Statue-of-Pennywick-in-the-UK–Announcement-by-Chief.vpf

[7] புதியதலைமுறை, இங்கிலாந்தில் பென்னிகுயிக்கிற்கு சிலை நிறுவப்படும்” – முதலமைச்சர் மு..ஸ்டாலின் அறிவிப்பு, தமிழ்நாடு,  கலிலுல்லா,  Published :15,Jan 2022 12:33 PM.

[8] https://www.puthiyathalaimurai.com/newsview/127124/John-Pennycuick-statue-will-be-installed-in-uk