Archive for the ‘ஜைன ராமாயணம்’ Category

ராஜராஜசோழனைப் பற்றி கருணாநிதியோ, திராவிடர்களோ எப்பொழுது கவலைப்பட்டார்கள்?

ஒக்ரோபர் 4, 2010

ராஜராஜசோழனைப் பற்றி கருணாநிதியோ, திராவிடர்களோ எப்பொழுது கவலைப்பட்டார்கள்?

ராஜராஜ சோழன் கல்லறையை அறிய முடியவில்லை[1]: கருணாநிதி சொல்கிறார், “பதினேழு லட்சம் ஆண்டுகளுக்கு முன் ராமர் பிறந்த இடத்தை உறுதிப்படுத்த முடிகிறது. ஆனால், 1,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து, தென்னகத்தை கட்டி ஆண்ட மாமன்னன் ராஜராஜ சோழன் மறைந்த விதத்தையோ, அவன் கல்லறையையோ, அவனுக்கு நினைவுத் தூண் அமைத்த இடத்தையோ நம்மால் இன்னமும் அறிய முடியவில்லையே என அகம் நொந்து வருந்தத்தானே வேண்டியுள்ளது’ என, முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

ராஜராஜசோழனைப் பற்றி கருணாநிதியோ, திராவிடர்களோ எப்பொழுது கவலைப்பட்டார்கள்? கருணாநிதி சொல்வதைப் பார்த்தால், ஏதோ பாவம், திராவிடர்கள் எல்லாம் அப்படியே ராஜராஜ சோழனைப் தேற்றியே சிந்தித்துக் கொண்டு, தெடியலைந்து ஓய்ந்துவிட்டது போல பேசியுள்ளது, இன்னொரு ஜோக் எனலாம். ஒருவேளை, அண்ணா நூலகத்தில் குண்டு வெடித்ததை மறைக்க[2], இப்படியொரு குண்டு விடுகிறாரா என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும்! திராவிடர்களுக்கு / தமிழர்களுக்கு தங்களது கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிகம், பண்பாடு பற்றி கவலையே இல்லை. திராவிட சித்தாந்தம், அவர்களின் அறிவை மழுங்கடித்து விட்டது. எப்பொழுதும் இந்த பொய்யான ஆரிய-திராவிட இனவாதங்களை பேசியே காலந்தள்ளும் கோஷ்டியாக இருப்பதனால் தான், யாரும் இவர்களைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. உண்மையைச் சொல்லப் போனால், ராஜராஜ சோழன் மற்றும் மற்ற மன்னர்களைக் கண்டால் இவர்கள் “ஆரியர்”, ஆரியர் கைக்கூலி என்றெல்லாம் துவேஷம் பேசி வசவு பாடுவார்கள்[3]. ஆனால், இன்றைக்கு, தமக்கு விளம்பரம் கிடைக்குமே என்று வெட்கமில்லாமல், ராஜராஜ சோழன் பெயரில் வியாபாரம் நடத்துகிறார்கள்.

ராஜராஜ சோழனைப் பற்றி கருணாநிதி சொல்லித்தான் எல்லொருக்கும் தெரியுமாம்: அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “அண்மையில் நடைபெற்ற இரண்டு, மூன்று நிகழ்ச்சிகளை இணைத்துப் பார்க்கும்போது  எனக்கு ஒரு பக்கம் பிரமிப்பாகவும், பெருமையாகவும் உள்ளது; இன்னொரு பக்கம் ஆச்சரியமாகவும் உள்ளது[4]. நாகர்கோவிலில் நடந்த தி.மு.க., முப்பெரும் விழாவில் நான் பேசும்போது, திராவிட பாரம்பரியத்தின் பரிணாம வளர்ச்சியைக் அயோத்தி விவகாரத்தில் வழங்கபட்டுள்ள தீர்ப்பு நாட்டின் அமைதி காண்பது என்ற அடிப்படையில் இரு தரப்பினரும் திருப்தி அடைய கூடிய தீர்ப்பு அதிலே பேசும்போது, லெமூரியா கண்டம் இருந்த பகுதியில்தான் இப்போது கூடியுள்ளதாகவும், இது ஆதி தமிழன் தோன்றிய இடம் என்றும் தெரிவித்தேன்[5]. மூன்றாயிரம் ஆண்டுகள் அல்லது 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றிய[6] திராவிடப் பாரம்பரியத்தின் பரிணாம வளர்ச்சியையும் இந்தக் கூட்டத்தில் குறிப்பிட்டு பேசினேன்.

அதைப் போலவே, தமிழரின் கலை, பண்பாடு, கலாசாரத்திற்கு எடுத்துக்காட்டாகத் திகழும் தஞ்சை பெரிய கோவில் ஆயிரமாவது ஆண்டு விழாவில் பேசும்போது, ராஜராஜ சோழன் காலத்திய நிர்வாக முறை பற்றி தெரிவித்தேன். இவை அனைத்திற்கும் ஆதாரமாக ராஜராஜன் எழுப்பியிருக்கும் தஞ்சை பெரிய கோவிலும், பொறித்து வைத்திருக்கும் கல்வெட்டுகளும் நீடித்து நிலைக்கும் சான்றுகளாக காட்சியளிக்கின்றன. அதில் சோழர்களின் வெளிநாட்டு வணிகம், கடல் வணிகம் ஆகியவற்றின் நுணுக்கங்களை எடுத்துரைத்தேன்[7]. தென்னகத்தில் சோழப் பேரரசு 176 ஆண்டுகள் நீடித்திருந்தது என்பதற்கான ஆதாரங்களை நீலகண்ட சாஸ்திரி, காத்யாயனர்[8] போன்ற ஆய்வாளர்களின் கருத்துகள் எடுத்து வைக்கப்பட்டது. ராஜராஜ சோழனின் நிர்வாகத்தில் அறிமுகம் செய்து வைத்த நில அளவை முறை, ஊராட்சிக்கான குடவோலை முறை ஆகியவற்றுக்கு தஞ்சை பெரிய கோயிலும், கல்வெட்டுகளும் ஆதாரங்களாக உள்ளன“[9].

அயோத்தி விவகாரத்தில் வழங்கபட்டுள்ள தீர்ப்பு நாட்டின் அமைதி காண்பது என்ற அடிப்படையில் இரு தரப்பினரும் திருப்தி அடைய கூடிய தீர்ப்பு என்று கூறியவர், இன்று கூறுவது: “அயோத்தி சம்பந்தமான வழக்கில் சர்ச்சைக்குரிய நிலத்தை மூன்றாகப் பிரித்து, இரண்டு இந்து அமைப்புகளுக்கும், ஒன்று முஸ்லிம் அமைப்பிற்கும் சமமாக வழங்க வேண்டுமென்று தீர்ப்பு சொல்லப்பட்டது. நீதிபதி சர்மா தனது தீர்ப்பில், “சர்ச்சைக்குரிய இடம் ராமர் பிறந்த இடம் தான். ராமர் ஒரு கடவுள். அவர் தெய்வாம்சம் பொருந்தியவராக வழிபடப்பட்டிருக்கிறார். அங்கு பாபரால் கட்டடம் எழுப்பப்பட்டது. எந்த ஆண்டு என்பது நிச்சயமாகத் தெரியவில்லை“.

கற்பனைக்கு எட்டாத எண்ணிக்கை கொண்ட நிகழ்ச்சியைப் பற்றி, ராமர் பிறந்த இடம் இதுதான் என அறுதியிட்டு உறுதியாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதைப் பார்க்கும்போது, ராமர் பிறந்த இடத்தை உறுதிப்படுத்த முடிகிறது:  “சர்ச்சைக்குரிய இடத்தில் 1949ம் ஆண்டில் டிசம்பர் 22ம் தேதி நள்ளிரவில், சிலைகள் வைக்கப்பட்டன.சர்ச்சைக்குரிய இடத்தை ராமர் பிறந்த இடமாகக் கருதி, இந்துக்கள் வழிபட்டு வந்துள்ளனர். நினைவு தெரிந்த நாளிலிருந்தே, அதை புனிதத் தலமாகக் கருதி, ஆன்மிகப் பயணம் சென்று வருகின்றனர்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். ராமர் கிருதயுகத்தில் பிறந்ததாகச் சொல்லப்படுகிறது. கிருதயுகம் என்பது 17 லட்சத்து 28 ஆயிரம் ஆண்டுகள் கொண்டது. இப்படி கற்பனைக்கு எட்டாத எண்ணிக்கை கொண்ட ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சியைப் பற்றி, ராமர் பிறந்த இடம் இதுதான் என அறுதியிட்டு உறுதியாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதைப் பார்க்கும்போது, 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன் ராமர் பிறந்த இடத்தை உறுதிப்படுத்த முடிகிறது“[10].

அகம் நொந்து வருந்தத்தானே வேண்டியுள்ளது எனும் கருணாநிதி தான் அகழ்வாய்வே வேண்டாம் என்று சொன்ன உத்தமரும் ஆவர்: “ஆனால், 1,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து, தென்னகத்தை கட்டி ஆண்ட மாமன்னன் ராஜராஜ சோழன் மறைந்த விதத்தையோ, அவன் கல்லறையையோ, அவனுக்கு நினைவுத் தூண் அமைத்த இடத்தையோ நம்மால் இன்னமும் அறிய முடியவில்லையே என அகம் நொந்து வருந்தத்தானே வேண்டியுள்ளது[11] (முன்பு எஸ். ஆர். ராவ் என்பவர் பூம்புகாரில் கடலடி அகழ்வாய்வு செய்தால் ஆதாரங்கள் கிடைக்கும் என்றபோது, வேண்டாம் என்று மறுத்தார் கருணாநிதி). திராவிட இனத்தின் வரலாறு, நிரல்படுத்தி முறையாக எழுதப்படவில்லை என்றாலும் கூட, லெமூரியா கண்டத்தைப் பற்றிய ஆராய்ச்சி, சிந்து சமவெளி நாகரிகத்தைப் பற்றிய ஆராய்ச்சி, தமிழ் மொழியைப் பற்றிய மூல ஆராய்ச்சி ஆகிய ஆராய்ச்சிகளின் மூலமாக வெளிநாடுகளைச் சேர்ந்த தொல்லியல், மொழியியல் வல்லுனர்கள், திராவிட நாகரிகம் குறைந்தது 3,000 ஆண்டுகளுக்கு முந்தையது என்று கருத்து தெரிவித்துள்ளனர்“.

“திராவிட இனம் அறிவியல் ரீதியாக வாழ்ந்துள்ள உண்மை வரலாறு” என்று இன்றும் பேசும் அறிவிலிகள்: “இந்த அடிப்படையில், நம்முடைய திராவிட இனத்தின் வரலாறு பற்றிய ஆதாரங்களை, பிற வரலாறுகளுடன் ஒப்பிட்டு நோக்கும் போது, திராவிட இனம் அறிவியல் ரீதியாக வாழ்ந்துள்ள உண்மை வரலாற்றை தெளிவாக உலகம் அறிந்து கொள்ள முடியும். ஆனால், திராவிட இனத்தைப் புறந்தள்ள முயற்சித்த ஆரிய நாகரிகம், அடிப்படை ஆதாரம் இல்லாமலேயே வெறும் மூட நம்பிக்கையை மக்களிடம் வளர்ப்பதில் மட்டும் முனைப்பாகச் செயல்பட்டிருக்கிறது என்பதை அறிந்து கொண்டால் போதும்”, இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்[12].

கருணாநிதியும், சரித்திரமும், அகழ்வாய்வும்: முன்பு தேசிய கடலாய்வு மைத்தின் தலைவர் எஸ். ஆர். ராவ் என்பவர் பூம்புகாரில் கடலடி அகழ்வாய்வு செய்தால் ஆதாரங்கள் கிடைக்கும் என்றபோது, வேண்டாம் என்று மறுத்தார் கருணாநிதி. “அப்படி ஆராய்ச்சி செய்தால் என்ன கிடைக்கும்” என்றதற்கு, “சங்க இலக்கியத்தின் தொன்மைக்கு ஆதாரங்கள் கிடைக்கும்”, என்று பதில் சொன்னபோது, “அதுதான் தெரிந்த விஷயமாயிற்றே, அதற்கு எதற்கு ஆராய்ச்சி, அகழ்வாய்வு?” என்றார், தமக்கேயுரிய புன்சிரிப்பு- நக்கலுடன்[13]. பாவம், தமிழ்நாடு தொல்துறை பிரிவு இயக்குனர் மற்றவர், வாயைப் பொத்திக் கொண்டு வெளியே வர வேண்டியதாயிற்று. ஆனால், இவர் தாம் இன்று தென்னகத்தை கட்டி ஆண்ட மாமன்னன் ராஜராஜ சோழன் மறைந்த விதத்தையோ, அவன் கல்லறையையோ, அவனுக்கு நினைவுத் தூண் அமைத்த இடத்தையோ நம்மால் இன்னமும் அறிய முடியவில்லையே என அகம் நொந்து வருந்தத்தானே வேண்டியுள்ளது என்று சோககீதம் பாடுகிறார்!


[1] தினமலர், ராஜராஜ சோழன் கல்லறையை அறிய முடியவில்லை: முதல்வர், பதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2010,23:55 IST; மாற்றம் செய்த நாள் : அக்டோபர் 04,2010,00:06 IST; http://www.dinamalar.com/News_Detail.asp?Id=98615

[2] காங்கிரஸ் திடலில் (காமராஜர் அரங்கத்தின் பின்புறம்) முன்பு ஒரு பொது கூட்டத்தில் மூப்பனார், கருணாநிதி முதலியோர் பேசினார்கள். அப்பொழுது, ஆர்.எஸ்.எஸ். காரர்கள் அவர்களே குண்டு வைத்துக் கொண்டு மற்றவர்கள் மீது பழி போடுகிறார்கள் என்று நக்கலாக பேசினார்கள். இப்பொழுது, அம்மாதிரி சொல்லலாமா?

[3] இவர்கள் பேசி-எழுதியுள்ளதை திரும்பச் சொல்வதே “வேஸ்ட்”, ஏனென்றால், பொய் சொல்வதிலும் இவர்களுக்கு வெட்கமே இல்லை.

[4] தினமணி, ராமர் பிறந்த இடத்தை உறுதிப்படுத்த முடிகிறது; ராஜராஜன் மறைந்த இடத்தை அறியமுடியவில்லையே! – முதல்வர், First Published : 04 Oct 2010 01:01:45 AM IST; Last Updated : 04 Oct 2010 03:36:30 AM IST;

http://www.dinamani.com/edition/story.aspx?Title=……….312892&SectionID=129&MainSectionID=129&SEO=&SectionName=Tamilnadu

[5] ஏதோ, இவரே கண்டு பிடித்து சொன்னது போல பேசுவதைப் பாருங்கள்.

[6] “மூன்றாயிரம் ஆண்டுகள் அல்லது 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றிய” – இதென்னா காலக்கணக்கு? அதாவது 1000 அல்லது 3000 BCEக்கு முன்னால்தான் திராவிட பாரம்பரியம் தோன்றியது என்றால், லெமூரியாவின் கதை அடிபட்டுப் போகிறதே? பாவம், கருணாநிதிக்கு கணக்கை சரியாக சொல்லிக் கொடுக்கவில்லை போலும்!

[7] அதாவது, இப்பொழுது, இவர் இஞ்சினியர் ஆகிவிட்டார் போலும், எந்த காலேஜில் படித்தாய் என்று கேட்டுவிட முடியாது!

[8] யாரிந்த காத்யாயனர்? வந்தேரிகளில் ஒருவனா, ஆரியக்கைக்கூலியா? ஏன் சாஸ்திரியாரே ஒரு பார்ப்பனர் தானே, ஆரியர்தானே? அவர் சொல்வதை ஏன் ஏற்றுக் கொள்ளவேண்டும்?

[9] ஆனால் சட்டம், நீதுத்துறை முதலியற்றில் அவர்களுடைய யோக்கியதை முறை சொல்லப்பட்டிருப்பது பற்றி மூச்சு விடாததை கவனிக்க வேண்டும். அதை படித்தால், இவரது தண்டவாளம் வண்டவாளத்தில் ஏறிவிடும்!

[10] இல்லையென்றால், இதற்காக கருணாநிதி, வீரமணி, திருமா போன்றோர் மேல் முறையீட்டிற்கு போகலாமே?

[11] http://www.deccanchronicle.com/chennai/karuna-condemns-lack-info-chola-king-613

[12] http://timesofindia.indiatimes.com/india/Aryan-culture-is-planting-superstitions-Karunanidhi/articleshow/6680639.cms

[13] அதாவது, அதற்கென சில லட்சங்களை செல்வழிக்க மனமில்லை. ஆனால், இன்றோ கோடிகளை செலவழித்து, செந்தமிழ் மாநாடு நடத்தியுள்ளார்!

சிசுபாலன் கிருஷ்ணரை தூஷித்ததை விடவா, அம்பேத்கர் தூஷித்து விட்டார்? அம்பேத்கரின் இந்து விரோத உளறல்களும், அரைவேக்காடு நாத்திக பச்சோந்திகளின் அறிவுஜீவித்தனமும்- 2

செப்ரெம்பர் 2, 2010

சிசுபாலன் கிருஷ்ணரை தூஷித்ததை விடவா, அம்பேத்கர் தூஷித்து விட்டார்? அம்பேத்கரின் இந்து விரோத உளறல்களும், அரைவேக்காடு நாத்திக பச்சோந்திகளின் அறிவுஜீவித்தனமும்- 2

சிசுபாலன் தூஷித்ததன் பின்னணி: தருமர் எல்லா நாட்டு அரசர்களையும் அழைத்து ராஜசூய யாகம் நடத்துகிறார். அப்பொழுது, கிருஷ்ணருக்கு முதல் மரியாதை செய்ய தருமர் தீர்மானித்தபோது, பீஷ்மர் ஆமோதிக்கிறார். இதனால் கோபமடைந்த சேதி நாட்டு மன்னன் சிசுபாலன் கோபம் கொள்கிறான்.

100 பிழைகளை பொறுத்த கிருஷ்ணர்: மஹாபாரதத்தில் சபா பருவத்தில், சிசுபால வத பர்வம் என்றதில் (அத்தியாயம் 63 முதல் 74 வரை), சிசுபாலன் எப்படி பீஷ்மரையும், கிருஷ்ணரையும் வாய்க்கு வந்தபடி கிண்டலாகத் திட்டுகிறான், வசைபாடுகிறன், தூஷிக்கிறான் என்றுள்ளது. அதில் 100 வகையான தூஷணங்கள் உள்ளன. அதையெல்லாம், இங்கு பட்டியல் இட்டுக் காண்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. கிருஷ்ணர், சிசுபாலனின் தாயாருக்கு கொடுத்த வாக்கின் படி, பொறுத்திருந்து, எல்லைகளைக் கடந்தபோது, அதாவது 100 பிழைகளை மீறிய போது, எல்லா அரசர்களின் முன்னாலேயே, சிசுபாலன் தனியாக போருக்கு அழைத்தபோது, கிருஷ்ணர் சக்கராயுதத்தால் சாகடிக்கிறார்.

இலக்கிய ரீதியில் இந்த தூஷணங்கள் எல்லாம் உயர்வு நவிர்ச்சி அணியில், இரட்டை அர்த்தங்களில் இருக்கும். எப்படி குறிப்பிட்ட செய்யுட்களை தமிழில் படித்தல்தான், அதனை ரசிக்க முடியுமோ, அதுபோல சமஸ்கிருத மொழியை அறிந்தால்தான், அதன் நெளிவு-சுளிவு, அதாவது வார்த்தை பிரயோக முறையை அறிந்து ரசிக்கலாம்.

ஆக அந்த 100 தூஷணங்களிலிருந்து சிலவற்றை எடுத்துக் கொண்டு,

  1. ஒன்றும் தெரியாதவன் (படிக்காதவன்) [பிரஹஸ்பதி என்றால் அதிமேதாவி என்ற பொருள், ஆனால் தமிழில் இப்பொழுது தூஷணமாக உபயோகிக்கப்படுகிறது]
  2. திருடன் (பால், தயிர் முதலியவற்றை) [கருணாநிதி சொன்னது போல “உள்ளங்கவர் திருடன்”]
  3. பறவையைக் கொன்றவன் [எறும்புகளைக் கொல்வது]
  4. குதிரையைக் கொன்றவன் (சண்டையை அறியாத மிருகம்)
  5. காளையைக் கொன்றவன்
  6. பெண்ணைக் கொன்றவன் (பூதனை)
  7. அசேதனமான சடகத்தைக் கொன்றவன் (உயிரற்ற ஜடம்).
  8. சின்ன மரங்களைத் தள்ளியவன் (உரலை இழுத்து).
  9. சின்ன எறும்புப் புற்றளவில் இருந்த மலையை ஏழு நாட்கள் தூக்கி வைத்திருந்தவன்

10.  மலைமேல் உட்கார்ந்து கொண்டு சாதம் சாப்பிட்டவன்.

11.  சாப்பிட்டுக் கொழுத்தவன் (கம்சனைக் கொன்று)

12.  எல்லாவற்றையும் அறிந்தவன்.

13.  மாடுகளை மேய்த்தவன்.

14.  பிராமண வேஷம் போட்டவன் (ஜராசந்தனை சந்திக்க).

15.  திருட்டுத்தனமாக உள்ளே நுழைந்தவன் (ஜராசந்தனின் அரண்மனைக்குள்).

16.  தாய் தந்தை இல்லாதவன்

17.  மதுசூதன் –மது என்ற அரக்கனைக் கொன்றவன்.

18.  போட்டியாக ருக்மணியை திருமணம் செய்துகொள்ள வந்தவன்.

19.  ஜனார்த்தனன் (மக்களை அறியாதவன்)

20.  கேசவன் (மனிதன் இல்லாதவன்)

……………………………………..

இதில் சில முன்னுக்கு முரணகவும் இருப்பதைக் காணலாம். ஏனெனில், ஒருவன் கோபத்துடன் மற்றவனைத் திட்டும் போது அப்படித்தான் இருக்கும்.

இதைத் தவிர, ஆயர்பாடி பெண்களே, கிருஷ்ணனை பலவாறுத் திட்டியுள்ளனர்.

அதுமட்டுமல்ல, பிறகு ஒரு இடத்தில் பீஷ்மரைக் கொல்ல சக்கராயுதத்தைக் கொண்டு கொல்ல வரும் போதும், பீஷ்மர் நக்கலாக கிருஷ்ணரைப் பார்த்து கேட்கும்போதும், அத்தகைய வார்த்தைகள் உண்டு [கிருஷ்ணர் யுத்தத்தில் ஆயுதம் எடுத்து போராடக் கூடாது என்பது கண்டிஷன்].

மேலும் இங்கு சமஸ்கிருதத்தில் உள்ள கேசவா, ஜனார்த்தனா, முகுந்தா…..போன்ற வார்த்தைகளுக்கு இரண்டு அர்த்தங்கள் உள்ளன. சிசுபாலன் மற்றும் கிருஷ்ணருக்கு எதிராக பேசும் போது, புராணங்களில் அத்தகைய வார்த்தைகள்தான் உபயோகப் படுத்தப் பட்டுள்ளன. இதை, ஆபாசமாக, கொச்சையாக விளக்கம் அளித்து, எழுதியுள்ளதை, அம்பேத்கர் போன்றவர்கள் எடுத்தாண்டுள்ளனர். அதை மறுபடியும் எழுதி, இப்பொழுது அவதூறு பேசுகின்றனர்.

உண்மைக்கு மாறாக பிரச்சாரம் செய்வது கேவலமானது: தமிழ் வார்த்தைகளுக்கு எப்படி அசிங்கமான, ஆபாசமான, கொச்சையான அர்த்ததைக் கொடுத்து இன்று பேசுகிறார்களோ, அதுபோலத் தான், கிருஷ்ணரை மஹாபாரத்ததில் மற்ற புராணங்களில், மற்றவர்கள் திட்டியதை வைத்துக் கொண்டு, கிருஷ்ணரை விமர்சிக்கும் சாக்கில் தூஷிக்கின்றனர் மதி கெட்டவர்கள். அம்பேதகாருக்கு, இந்து மதத்தை இழிவு படுத்தவேண்டும் என்ற எண்ணம் இருந்தபோது, விடாப்படியாக,, அவ்வாறானவற்றை வைத்துக் கொண்டு எழுதினார். ஆக, அதனை உண்மை என்று நினத்துக் கொண்டு, மடத்தனமாக சிலர் எழுதி பிரச்சாரம் செய்வது, மிகவும் கேவலமானது.

ராமன் ஏக பத்தினி விரதன் அல்லன் ஏகப்பட்ட பத்தினிகள் விரதன் – II

பிப்ரவரி 8, 2010

ராமன் ஏக பத்தினி விரதன் அல்லன் ஏகப்பட்ட பத்தினிகள் விரதன் – II

தமிழ் ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், பேச்சார்கள், பகுத்தறிவுவாதிகள், நாத்திகப்போர்வை சித்தாந்திகள், இந்துவிரோதிகள் இத்யாதி கூட்டங்களுக்கு இப்பொழுதுமே மூலங்களைப் படிக்கவேண்டும் என்ற எண்ணமே கிடையாது. அப்படியே சிலர் படித்து உண்மையறிந்தாலும் தமது நிலை, பதவி, பிழைப்பு, அல்லது கிடைக்கும் சலுகைகள், அனுபவிப்புகள் முதலியன போய்விடும் என்ற ஏக்கத்தில் மேலும் பொய்களைப் பரப்ப முனைந்துவிடுகிறார்கள்.

பெரியார் சொன்னார், அம்பேத்கார் எழுதியுள்ளார் என்று போட்டுவிட்டால், யாரும் அதைக் கேட்கக்கூடாது அல்லது அதுதான் நிலைநிறுத்தப்பட்ட உண்மை என்ற ரீதியில் பொய்களின்மீது பொய்களை அடுக்கி, கட்டுக்கதைகளை புனைந்து பெருக்கிக் கொண்டேயிருக்கிறார்கள். ராமாயணம்-மகாபாரதம் என்று வரும்போது, “கிரிடிகல் எடிஷன்” அதாவது மூலங்களை சரிபார்த்து, மூலம் இவ்வாரு தான் இருந்திருக்க வேண்டும், மற்ற பாடல்கள் ஒவ்வாதவை, இடைசெருகல்கள் என்று பரிசோதிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. ஆனால், இந்த விமர்சகர்கள் அவற்றைப் படிப்பதில்லை.

ராமன் ஏக பத்தினி விரதன் புருடா தோன்றியவிதம்: அம்பேத்கர் இந்துமதத்தை குறைகூறவேண்டும் என்ற நிலையில் ஆராய்ச்சி மேற்கொண்டவர். இருப்பினும் அவர், அவர் காலத்தில் உள்ள புத்தகங்களை நிறையப் படித்தவர். ஆகையால் தமது அராய்ச்சி-பாரபட்ச முறையில் மறைப்பதை மறைத்து இந்த “ராமன் மற்றும் கிருஷ்ணனைப் பற்றியப் புதிர்கள்” எழுதியிருக்கிறார். அதனால்தான் அவர் அதில் பலவற்றை அடித்தும், திருத்தியும் எழுதியுள்ளார். பௌத்த ராமாயணத்தை வைத்துக் கொண்டு விமர்சிக்க ஆரம்பித்தார். ஆனல், வால்மீகி ராமாயணம் தான் மேற்கோள் காட்டியாக வேண்டும், ஏனெனில் முதலில் ஜைனர்கள், பிறகு அதே முறையில் “காப்பி”யடித்தே ஒரு மதத்தை உருவாக்கிய பௌத்தர்களும் அதே முறையில் ஒரு ராமாயணத்தை எழுதினார்கள். மேலும் “உத்தரகாண்டம்” என்பது வால்மீகி ராமாயணத்தில் இல்லை என்பது எல்லொருக்கும் தெரிந்த விஷயம். அது பிற்பாடு, பலரால் எழுதி நுழைக்கப்பட்ட இடைச் செருகல் என்பதும் அனைவரும் அறிந்ததே. இதனால்தான், அம்பேத்கர் உண்மையினை அறிந்தும், சித்தாந்த ரீதியில் அதிலும் பௌத்தத்தைத் தழுவ வேண்டும் என்ற நிலையில் இவ்வாறு விமர்சித்திருக்கலாம். ஆனால், அதனை சரித்திர உண்மை போல, நாத்திக அரைவேக்காடுகள் தங்களது எழுத்துகளில் எழுத்தாளுவது தான் வேடிக்கை.

அம்பேத்கர் அதனல்தான் தனது இட்டுக்கட்டிய “ஏகபத்த்னி” கட்டுக்கதைக்கு இந்த உத்தரக் காண்டத்தை எடுத்துக் கொள்கிறார். அதிலும் 42வது சர்க்கத்தின் 27வது வரியை மட்டும் எடுத்துக் கொண்டு மிகவும் தவறான பொருளையேற்றி எழுதுகிறார்.

“Zenana” என்ற ஆங்கில வார்த்தையை உபயோகப்படுத்தி, அத்தகைய கட்டுக்கதையை புனைகிறார். இதோ அந்த 27-28 வரிகள்:

पूर्वहे ध्र्म्कर्यणि क्र्तवा धेमेण शेषम्| दिवासभागर्धमन्तो: पुर्गठोआबावत||

सिटापी डेटापी दैव्कार्याणि क्र्तवा पौवहिलकणी वेई| श्र्स्रुणामक्रोत पूजाम सर्वसममविषेष्यते||

(Uttara kaanda, sarga.42, lines.27-28).

பூர்வே தர்மகார்யாணி கிருத்வா தர்மேன ஸேஷம்| திவஸபாகார்தமந்தஹபுரகதோஆ பவத||

சீதாபி தேவகார்யாணி கிருத்வா பௌர்வாஹிகானி வை| ஸ்ருஸ்ருணாமகரோத் பூஜாம் ஸர்வார்ஸமவிஷேஷியதஹ||

நாளின் முந்தையப் பகுதியை தர்மகாரியங்களுக்கு பயன்படுத்தி, மற்ற பாதி பகுதியை அந்தபுரத்தில் கழித்தான் (வரி.27).

சீதையும் அதே மாதிரி, நாளின் முந்தையப் பகுதியில் தர்மகாரியங்கள் செய்து, தனது மாமியார்களிடம் எந்த வேறுபாடும் இல்லாமல் அவர்களுக்காக மரியாதையுடன் காத்துகொண்டிருந்தாள் (வரி.28).

அதற்குப் பிறகுதான், தன்னை அலங்கரித்துக் கொண்டு ராமனுடன் செல்கிறாள் (வரி.29).

“அந்தபுரத்திற்கு” தனது மனைவியுடன் சென்றான் என்பதை, ஏதோ அந்தபுரத்தில் மேலும் பெண்கள் உள்ளது மாதிரி எழுதியுள்ளது அவருடைய தகுதிக்கேக் கேவலமானது. அதனால்தான், மனசாட்சி குத்தியதுபோலும் – தனது பதிப்பில் சேர்க்காமல்விட்டது / அட்டவணையில் காணப்படாமலிருந்தது, அடித்துத் திருத்தி எழுதியன முதலியவை.

வால்மீகி ராமனை “பெண்களுடைய மனிதர்களில் யுவராஜா” என்று கூறியதாகக் குறிப்பிகிறார் (ப.330). அதை எடுத்துக் கொண்டு, அவனும் “அதே மாதிரி ஒரு மனிதனாக பெண்களுக்குரியவனக இருந்தான்” என்று மொழி பெயர்த்தால்கூட பரவில்லை, ஆனால், “பல பெண்களுடன் இருந்தான்” என்றெல்லாம் மொழிபெயர்த்து இருக்கிறார்.

கட்டுக்கதைகளினின்றே இத்தகைய காட்டுக்கதை புனைந்து, பிறகு ஆங்கிலத்தில் எழுதியுள்ளதை, தமிழில் அரைவேக்காட்டுத் தனமாக மொழிபெயர்த்து, அந்த மொழிபெயர்ப்புடன், தமது கேவலமான சரக்கையும் சேர்த்துக் கொண்டு, இப்படி எழுதினால், யார் இதை ஏற்றுக் கொள்வர்கள்?

ஆகையால்தான் இவர்களது புலமை, அறிவுத்திறன், ஆராய்ச்சித் திறன், இத்தகைய குறுகிய வட்டங்களிலேயே இருந்துவருகிறது. இங்கு சொல்லவே வேண்டாம், இத்தகைய அசிங்கமான விமர்சனங்கள் முதலியவற்றைச் செய்தால், ஒருவரையொருவர் புகழ்ந்து கொள்ளலாம். கட்சி தொடர்பு இருந்தால் அரசுசார்பில் உள்ள நிறுவனங்களில், வாரியங்களில், குழுக்களில் சாகும் வரை ஏதாவது பதவி கிடைத்துக் கொண்டேயிருக்கும் என்ற நிலையில் உள்ளவர்களுக்கு உண்மையில் மூலங்களைப் படித்து எழுத வேண்டும் என்ற எண்ணமே வராது. ஒருவேலை அப்படி அத்தகைய மூல நூலை எடுத்துப் பார்த்திருப்பார்களா என்பது அவர்களுடைய போலித் தனமான, சம்பந்தமே இல்லாத, பேத்தலான எழுத்துகளினின்றே புலப்படுகிறது.

சமஸ்கிருதத்தையும் தெரிந்து கொள்ளாமல், மூலங்களைப் படிக்காமல், மற்றவர்கள் இப்படி சொன்னார்-எழுதியுள்ளார் என்று தவறாக உள்ளவற்றை, உண்மையாகக் கொண்டு, அந்த தவறான விசயங்களை வளர்த்து பிரச்சாரம் செய்வதில் எந்த அர்த்தமும் இல்லை. விசயம் தெரிந்தவர்கள், மூலங்களைப் படித்தவர்கள், என்ன இந்த ஆட்கள் இவ்வாளது கேவலமாக இருக்கிறார்கள், நெறிமுறையில்லாமல் எழுதிகிறார்கள் என்றுதான் நினைத்துக் கொள்வார்கள்.