Archive for the ‘குற்ற உணர்வு’ Category

கால்டுவெல் சிலை ஊழியம் செய்யும் கிறிஸ்தவராலேயே சேதப்படுத்தப்பட்டது!

மே 6, 2013

கால்டுவெல் சிலை ஊழியம் செய்யும் கிறிஸ்தவராலேயே சேதப்படுத்தப்பட்டது!

ஞாயிற்றுக்கிழமைதிருப்பலி நாள்: தூய திரித்துவ ஆலயத்தில் ஆராதனை நடந்து கொண்டிருந்தது. “யூகேரிஸ்ட்” அந்த பலியில் அப்பம் மற்றும் சாராயம் ஏசுகிருஸ்துவின் மாமிசம் மற்றும் ரத்தமாக மாற்றி உண்மை கிருத்துவனுக்கு ஞானத்தைக் கொடுக்கும். அத்தகைய பலியில் பங்கு கொண்டிருந்தபொழுது அருள்ராஜின் மனதில் என்ன எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன என்பது கர்த்தருக்கும், ஏசுவிற்கு, பரித்த ஆவிக்கும் தான் தெரியும். அந்த திரியேகத்துவ சர்ச், கால்டுவெல் நினைவிடத்திற்கு முன்னால் தான் இருக்கிறது. ஆராதனை முடிந்ததும், வெளிவந்த அருள்ராஜுக்கு கால்டுவெல்லின் சிலை தெரிகிறது. ஏதோ தீர்மானம் செய்தது போல வேகமாக நடந்தான்.

கால்டுவெல் சிலையைத் தாக்கி சேதப் படுத்தியது: முன்னர் குறிப்பிரடப்பட்டபடி, காலை 11 மணியளவில் நினைவு இல்லத்தின் முன்பகுதியில் உள்ள தூய திரித்துவ ஆலயத்தில் ஆராதனை நடந்தது. அப்போது இடையன்குடி சேகரம் இலக்கரிவிளையை சேர்ந்த சவரிமுத்து மகன் அருள்ராஜ் (29) என்பவர் நினைவு இல்லத்திற்குள் நுழைந்தார். இந்நிலையில் இடையன்குடி அருகே உள்ள இலக்கரிவிளையை சேர்ந்த சவரிமுத்து மகன் அருள்ராஜ் (29) நேற்று காலை சுமார் 10.15 மணிக்கு பிஷப் கால்டுவெல் சிலையின் பின்புற தலைப்பகுதி, இடது தோள்பகுதி, சிலையின் பீடம் ஆகியவற்றை சுத்தியலால் சேதப்படுத்தினார்[1]. திடீரென சம்மட்டியால் பிஷப் கால்டுவெல் சிலை யின் பக்கவாட்டு பகுதி மற்றும் தலையின் பின்பகுதியை சேதப்படுத்தினார். பீடத்தில் பதிக்கப்பட்ட கிரானைட்டையும் உடைத்தார்.

கிருத்துவமதம் பரப்பிய கால்டுவெல் சிலையை உடைக்கத் தூண்டியது என்ன?: இவர் கிறிஸ்தவ ஊழியம் செய்து வருகிறார். ஆகவே, கிருத்துவமதம் பரப்பிய கால்டுவெல் மீது, கிறிஸ்தவனான அவனுக்கே ஏன் அத்தகைய கோபம் வந்தது, உணர்ச்சி மேலிட சிலையை சேதப்படுத்த, எது தூண்டியது என்று யோசிக்கும் போது வியப்பாக இருக்கிறது. ஆனால், சாணர்களுக்கு, இவர் மீது நிச்சயம் கோபம் இருக்கிறது. ஏனெனில், தனது புத்தகத்தில் அவர்களைப் பற்றி மிகவும் இழிவாக எழுதியிருக்கிறார் தமிழுக்காக பாடுபட்ட கால்டுவெல்.

தானாகவே சுத்தியுடன் சென்று போலீஸில் சரணடைந்தது: சிலை சேதபடுத்தப்பட்டதற்காக, உவரி இடையன்குடி பஞ்சாயத்துத் தலைவர் மற்றும் சி.எஸ்.ஐ. சேகர செயலர், ஜேகர் உவரி போலீசில் புகார் செய்தார்[2]. ஆனால், அருள்ராஜ் தானாகவே உவரி போலீசில் சென்று சுத்தியலுடன் சரணடைந்தார். ஏதோ சாதித்து விட்டது போல, சுத்தியலை வைத்து சரணடைந்தது கண்டு, போலீஸாரே வியஎது போயினர். அவரை உவரி இன்ஸ்பெக்டர் சிவராஜ்பிள்ளை விசாரணை நடத்தி கைது செய்தார்[3]. இந்த சம்பவம் அப்பகுதியில்  பரபரப்பை ஏற்படுத்தியது.

கால்டுவெல் நினைவிடம் வந்த விதம்[4]: இடையன்குடியில் தமிழுக்கு ஓப்பிலக்கணம் எழுதிய பிஷப் கால்டுவெல் (1814–1891) வாழ்ந்த இல்லம் உள்ளது. “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்ற நூலை எழுதியவருமான பிஷப் கால்டுவெல்லின் தமிழ்த் தொண்டைப் பாராட்டி, திசையன்விளை அருகே இடையன்குடியில் அவர் வசித்த வீட்டை தமிழக அரசு நினைவிடமாக அறிவித்தது.  இந்த இல்லத்தில் பிஷப் கால்டுவெல்லுக்கு அரை உருவ வெண்கல சிலை மற்றும் 19 லட்சம் ரூபாய் செலவில் பல்வேறு பணிகள் நடந்தன. கடந்த 2011ம் ஆண்டு அரசு நினைவில்லமாக முன்னாள் முதல்வர் கருணாநிதியால் வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைக்கப்பட்டது[5].

மூத்த, முதிய தமிழ் பண்டிதர்களை ஒதுக்கிய கருணாநிதி: அப்பொழுதே, உண்மையான, நேர்மையான தமிழ் பண்டிதர்களுக்கு மனம் கஷ்டப்பட்டது. ஆனால், 60-90 வயதானவர்கள் இப்பொழுதெல்லாம் ஒன்றும் பேசுவதேயில்லை. அவர்களது கருத்துகளையும் யாரும் கேட்பதில்லை. கருணாநிதியைப் புகழ்ந்து, பாராட்டிப் பேசினால் தான் கௌரவம், பாராட்டு, பட்டம், பதவி என்ற நிலை வந்த பிறகு, அவர்கள் மௌனிகளாக ஆகிவிட்டனர். ஆனால், கால்டுவெல் அப்படியொன்றும் தமிழைக் காக்க வரவில்லை, கெடுக்கவே வந்தான்[6].

சாணார்களை இழிவுபடுத்தி எழுதிய புத்தகங்களைப் பற்றி மறைத்தது: சாணார்களுக்கு அறிவில்லை, மந்தமான புத்தி உடையவர்கள், அவர்கள் படிப்பதர்கு லாயக்கில்லை…..என்றெல்லாம் ஒரு புத்தகத்தில் எழுதினார்[7]. பிரச்சினை எழுந்தவுடன், அப்புத்தகத்தைத் திரும்பப் பெற்றதாக, ஆங்கில அரசு அரிவித்தது. ஆனால், விரிவான மற்றொரு புத்தகத்தை, லண்டனில் வெளியிட்டது. அதாவது, இந்தியாவைப் பொறுத்தவரைக்கும், அது திரும்பப் பெற்றதாக இருக்கலாம், ஆனால், உலகத்தைப் பொறுத்த வரைக்கும், அக்கருத்துதான், படித்தவர்கள் எல்லோரும் கொண்டிருப்பர். கருணாநிதி, நிச்சயமாக, வேண்டுமென்றே அமைதியாக இருந்திருக்கிறார். சாணர்களை இழுவு படுத்திய புத்தகம் முதலில் சென்னையில் 1849ல் வெளியிடப்பட்டது[8]. அப்பொழுதே அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப் பட்டது. அதனால், பிரதிகளை ஆங்கில அரசு பதுக்கிவிட்டது. ஆனால், மறு வருடமே, அதாவது 1850 லண்டனில் அதனை விரிவாக்கி வெளியிடப்பட்டது[9].

© வேதபிரகாஷ்

06-05-2013


[4] வேதபிரகாஷ், கால்டுவெல்வாழ்ந்தவீடுநினைவிடமாகமாற்றம், https://dravidianatheism.wordpress.com/2010/01/30/house-of-caldwell-converted-to-memorial/

[5] வேதபிரகாஷ், சரித்திரத்தைமறைத்தகிருத்துவபாதிரிக்குகருணாநிதி கௌரவம்!, https://dravidianatheism.wordpress.com/2010/01/29/caldwell-honured-without-anyy-remorse-by-tn-government/

[6] வேதபிரகாஷ், கால்டுவெல்புராணம்தொடர்கிறது……………, https://dravidianatheism.wordpress.com/2010/01/30/caldwell-purana-continues/

[7] வேதபிரகாஷ், கால்டுவெல்லைவைத்துக்கொண்டு, தமிழர்களைஇழிவுபடுத்தும்செயல்கள், https://dravidianatheism.wordpress.com/2011/02/18/denigrating-tamils-with-robert-caldwell/

[8] Robert Caldwell, The Tinnevelly Shanars: A Sketch of Their Religion and Their Moral Condition, and Characteristics as a Caste. With Special Reference to the Facilities and Hindrances to the Progress of Christianity Amongst Them, London, 1849.

[9] Michael Bergunder, Heiko Frese, and Ulrike Schröder (Edited by), Ritual, Caste, and Religion in Colonial South India, Verlag der Franckeschen Stiftungen zu Halle, 2010, p.139

ஆபாச வீடியோ புகழ் லெனின் கருப்பன் கைது: நித்யானந்தா-ரஞ்சிதா குற்றச்சாட்டு!

மார்ச் 17, 2012

ஆபாச வீடியோ புகழ் லெனின் கருப்பன் கைது: நித்யானந்தா-ரஞ்சிதா குற்றச்சாட்டு!

நித்தமும் நெருடும் நித்யானந்தா: நித்யானந்தா விஷயத்தை வைத்துக் கொண்டு ஊடகங்கள் மக்களை உசுப்பி வந்தன சென்ற வருடம். பரீட்சை நடந்து கொண்டிருக்கும் போது, ஆளும் கட்சியின் ஆதரவில் இயங்கி வந்த டிவி செனல்கள் ஆபாசப்படங்களை அடிக்கடி போட்டுக் காண்பித்தன. மறுபடியும், பரீட்சை நடக்கும் வேளையில், அதே மாதிரியான செய்திகள் வருகின்றன. அட்சி மாறியுள்ளது, எனவே இதில் உண்மையென்ன என்பதனை மக்களுக்கு தெளிவாக்க்க வேண்டியது அரசு மற்றும் சம்பந்தப் பட்ட நீதி-போலீஸ் மற்ற துறைகளுக்கு பொறுப்புள்ளது. கர்நாடக சட்டமன்றத்தில் 16க்கும் மேலானவர்கள் ஆபாசப் படம் பார்த்தார்கள் என்று செய்திகள் வந்துள்ளன. ஆனால், பிஜேபிகாரர்கள் மட்டும் பதவி விலகியுள்ளார்கள். இங்கு ஆபாச வீடியோ எடுத்தவர்கள், டிவியில் திரும்ப-திரும்ப போட்டுக் காண்பித்தவர்கள்[1], அதை வைத்துக் கொண்டு நன்றாக ஆபாச வியாபாரம் செயத நக்கீரன்[2] முதலியோர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை[3].

கைதான லெனின், சரண்டர் ஆன கருப்பன்: ராமநகரம் கோர்ட் லெனின் கருப்பனை கைது செய்ய உத்தரவிட்டது. அதையடுத்து நித்யானந்தா சாமியாரின் முன்னாள் உதவியாளர் லெனின் கருப்பனை சிபி சிஐடி போலீசார் 14-03-2012 அன்று கைது செய்துள்ளனர். லெனினுக்கு எதிராக – மிரட்டி பணம் பரித்தல், மிரட்டுதல் போன்ற குற்றங்களுக்காக[4] – ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள கிரிமினல் வழக்கில் தற்போது அவர் கைது செய்யப்படுள்ளார்[5]. தமிழகத்தில் இவரை காணாமல், தலைமறைவாக இருந்தாராம். இப்பொழுது சரண்டர் ஆனதும், போலீஸார் கைது செய்து விட்டார்களாம்!

மறுபடியும் வீடியோ, மிரட்டல், பணம் பறிப்பு, குற்றாச்சாட்டுகள்: வேடிக்கை என்னவென்றால் இரண்டு ஆண்டுகளாக ஊடகங்கள் இதே பாட்டைத் தான் பாடி வருகின்றன. படிப்பவர்கள்-பார்ப்பவர்கள் முட்டாள்கள் என்று நினைத்துக் கொண்டு அந்த ஊடக மேதாவிகள் அரைத்த மாவை நிறமேற்றி அரைத்துக் கொதுக்கிறார்கள். ஆக, நித்யானந்தாவும் விடுவதாக இல்லை.

Lenin was wanted by the police in connection with a case of alleged blackmailing and extortion[6]The Nithyananda Dharmapeetam authorities had lodged a complaint with the police that the accused had threatened to leak a videotape purportedly showing Swami Nithyananda with an actor. Lenin Karuppan of Athur in Salem district, a former disciple of the Bangalore-based Nithayananda Dharmapeetam, surrendered before the Crime Branch CID police on Wednesday (14-03-2012).

கடந்த சில நாட்களுக்கு முன்பு நித்யானந்தா ஆசிரமம் சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பான புகார் ஒன்று கொடுக்கப்பட்டது. நித்யானந்தா ரஞ்சிதா தொடர்பான ஆபாச வீடியோ காட்சிகளை வெளியிடாமல் இருக்க ரூ.60 கோடி கேட்டு நித்யானந்தா மிரட்டப்பட்டார். இறுதியில் ரூ.45 லட்சத்தை மிரட்டல் விடுத்தவர்கள் பறித்துக் கொண்டனர் என்று அந்த புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது. இவ்வழக்கில் லெனினின் ஜாமீன் மனு ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டது[7].

வழக்கில் பல முக்கிய திருப்பங்கள் ஏற்படலாம் – ஊடகங்களின் மாபெரும் யேஷ்யம்: அன்று முதல் தலைமறைவாக இருந்து வந்த லெனின் கருப்பன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதால் இவ்வழக்கில் பல முக்கிய திருப்பங்கள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது[8].  இப்படி ஊடகங்கள் உபயோகமில்லாத ஊகங்களை ஊதி விட்டுள்ளன.

Police inaction: “We refused to pay. They confined one of our disciples in a room and forcibly took Rs.42 lakh that was raised through other followers in a short period of time. He was attacked and released in front of a police station in T. Nagar (Chennai). Police took no action on our complaints though we were threatened, attacked and our premises ransacked…”Swamy Nithyananda said that he was happy with the investigation of the Crime Branch CID of Tamil Nadu. “Lenin Karuppan, who surrendered before the CBCID officials on Wednesday, should be imprisoned till the disposal of the cases against him.” நீதிமன்ற மாஜிஸ்டிரேட் ரூபா, ஆர்தி ராவ் என்ற நித்யானந்தருடைய சிஷ்யையும் கைது செய்ய ஆணையிட்டுள்ளார்.முதலில் நித்யானந்தாவிற்கு சாதகமாக சாட்சி சொன்னபிறகு, எதிராக மாறியுள்ளார்[9]. ஆர்தி ராவ் மற்றும் வழக்கறிஞர் ஸ்ரீதர் இரண்டு பேரும் சேர்ந்துதான் அத்தகைய போலிப்படங்களை “மார்ஃபிங்” என்ற முறையில் தயாரித்ததாக ரஞ்சிதாவும் குற்றஞ்சாட்டியுள்ளார்[10]லெனின் கைதைத் தொடர்ந்து, நடிகை ரஞ்சிதாவுடன் இருந்ததாக வெளியிடப்பட்ட காணொளி சித்தரிக்கப்பட்டவை என்று அமெரிக்காவைச் சேர்ந்த 4 தடயவியல் ஏஜன்சிகள் தெரிவித்துள்ளதாக சுவாமி நித்யானந்தா பேட்டியில் கூறியுள்ளார்[11]. சுவாமி நித்யானந்தா, நடிகை ரஞ்சிதாவுடன் இணைந்து இருப்பதாக காணொளி ஒன்று வெளியானது. இந்த காணொளி நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி வந்த நிலையில், சுவாமி நித்யானந்தா இதை மறுத்து வருகிறார்[12]. பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது, நான் கூறிவந்ததை அமெரிக்க ஏஜன்சிகள் உறுதிப்படுத்தியுள்ளன. இது சித்தரிக்கப்பட்டது தான் என்பதற்கு 60 காரணங்களை அந்த அமைப்புகள் கூறியுள்ளன. எனவே தொலைக்காட்சி சேனல்கள் வெளியிட்ட காணொளி முற்றிலும் சித்தரிக்கப்பட்டது என அவர் கூறினார். நவீன முறையைக் கொண்டு அந்த காணொளி மார்பிங் செய்யப்பட்டுள்ளன[13]. அதை இந்தியாவில் உள்ள ஆய்வகங்களில் கண்டுபிடிக்க முடியாது. அமெரிக்க ஏஜன்சிகளால் மட்டுமே கண்டுபிடிக்கமுடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்[14].

ரஞ்சிதாவும் அந்த டேப்புகள் போலியானவை, மேலும் தங்களை தூஷிக்கவே அவ்வாறு திட்டமிட்டு செய்தனர் என்று புகார் கொடுத்திருந்தார். இரண்டாண்டுகளாக இதையேத்தான் சொல்லிவருகிறார்கள். ஆனால், ஏன் உண்மை கண்டுபிடிக்கப்ப்டவில்லை?

ஊடக வீரர்கள் ஏன் காகிதப் புலிகளாக உள்ளனர்? இப்படி பேட்டிகளை வைத்துக் கொண்டு செய்திகளை வெளியிடுவதை விட, ஏன் ஆவணங்களை வைத்து செய்திகளை வெளியிடக்கூடாது? மற்ற விவகாரங்களில், எங்களுக்குத் தான் இந்த ஆவணம் கிடைத்தது, நாங்கள் தாம் முதன்முதலில், இதை வெளியிட்டோம் என்று போட்டோகாப்பி பேப்பரை ஆட்டி காண்பித்து பேசுகிறார்களே? அத்தகைய வீரம், துணிவு ஏன் இந்த விஷயத்தில் வரவில்லை என்று தெரியவில்லை.

வேதபிரகாஷ்

16-03-2012


[10] Ranjitha had submitted that Lenin Karuppan and his friends and fellow conspirators, Aarthi Rao and advocate Sridhar created morphed video images of Nityananda and also that of her.

http://www.deccanherald.com/content/166485/court-issues-summons-lenin-two.html

[13] Advanced technology: A fresh probe into the genuineness of the videotape was essential in the backdrop of the international experts’ conclusion, using advanced technology.

“These experts… are often engaged by the Federal Bureau of Investigation (FBI)… they are willing to give evidence in any court in India or the US,” he said.

Swamy Nithyananda said that some of his disciples, who were pained by the contents of the tape, had sought the experts’ opinion.

“We are taking steps to remove the morphed video clip from websites. Lenin Karuppan (a former aide of Swamy Nithyananda accused of masterminding the videotape scandal) might have taken the assistance of some persons to manipulate this videotape.”

Recalling how his disciples were threatened and blackmailed by some media bigwigs and journalists, he said they (the accused persons) bargained for about Rs.60 crore for not making the videotape public.

கொலை செய்யலாமா, கூடாதா; சிறுவர்களை கடத்தி பணம் கேட்கலாமா, கூடாதா; சிறுமிகளை, இளம் பெண்களை கற்பழிக்கலாமா, கூடாதா? (3)

நவம்பர் 5, 2010

கொலை செய்யலாமா, கூடாதா; சிறுவர்களை கடத்தி பணம் கேட்கலாமா, கூடாதா; சிறுமிகளை, இளம் பெண்களை கற்பழிக்கலாமா, கூடாதா? (3)

குற்ற உணர்வும், குற்றங்கள் பெறுகும் தன்மையும்: மனிதன் பிறக்கும் போதே குற்ற உணர்வுகளோடு, குற்றவாளிகளாகப் பிறப்பதில்லை. பொதுவாக பாரம்பரிய கூறுகள் மற்றும் சுற்றுப்புறச் சூழ்நிலைகள் தாம் (hereditary and environmental factors) பலதரப்பட்ட தாக்கங்களுக்குட்பட்டு மனிதனை உருவாக்குகிறது[1]. இருப்பினும் உலகில் கொலை-கொள்ளை செய்வதையே தொழிலாகக் கொண்ட குடும்பங்கள், குழுக்கள், குடிகள் இருந்துள்ளன. ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில் இந்தியாவில் சில மக்கள் குழுமங்களை / குடிகளை குற்றஞ்செய்யும் குடிகள் (Criminal tribes) என்றே பெயரிட்டு[2] அவ்வாறே நடத்தி வந்தனர்[3]. மேனாட்டவரைப் பொறுத்தவரைக்கும் தங்களைப் போல உருவத்தில், நிறத்தில் மாறியுள்ள அனைவரையும் தாழ்வாகத்தான் பார்த்தனர். அதனால், அதிகம் கருப்பாக உள்ளவர்கள் எளிதில் குற்றச்செயலில் ஈடுபடுவார்கள் என்ற தப்பெண்ணத்திலும் இருந்தனர். இருப்பினும், எப்படி எஞ்சினியரின் பிள்ளை தானாகவே எஞ்சினியராகி விடமுடியாதோ, அதே போல கொலைக்காரனின் பிள்ளை கொலைக்காரனாக இருப்பான் என்று நினைப்பது தவறானதாகும்.

ஒரு குறிப்பிட்ட தவறான செயல் நியாயப்படுத்தப்பட்டால் அது பெரிய குற்றத்தை செய்வதற்கு வழிகோலும்: லஞ்சம் என்பது ஒரு குறிப்பிட்ட செயல், இது ஏதோ காசு கொடுப்பது என்று மட்டும் நினைக்கவேண்டாம், தார்மீகரீதியில் செய்யக்கூடாததை செய்யும் போது தடுக்கும் மனங்களுக்கு எதிராக செய்யும் எல்லாமே ஒழிங்கீனம்தான பெரிய லஞ்சம். அதை ஊக்குவிப்பவன், ஊக்கடத்துடன் செய்பவன் பெரிய குற்றத்தை செய்பவன் ஆகிறான். ஆக ஒருவருக்கு வேண்டிவதை மற்றவன் பறித்துக் கொள்ள உதவினால், அதுவும் மாபெரும் லஞ்சம் தான். அதை நியாயப்படுத்தப்பட்டால் அது பெரிய குற்றத்தை செய்வதற்கு வழிகோலும். இத்தகைய “சிறியதாக” அல்லது “ஏற்றுக்கொள்ளப்பட்டதாக” கருதப்படும் ஊழல்கள் தாம் இன்று கோடிகளில் இந்தியாவை அரித்து வருகிறது[4].

ஊழல் நியாயப்படுத்தப் பட்டுள்ள நிலை: இன்றைய காலக்கட்டத்தில் அரசியல்வாதி யாரும் யோக்கியமானவனாக, லஞ்சம் வாங்காதவனாக, ஒரு தவறு செய்யாதவனாக இருப்பானா என்று சந்தேகிக்கும் நிலைக்கு வந்துள்ளது. மாநில அரசு அலுவலகங்களில் லஞ்சம் என்பது சாதாரணமான விஷயம், அது இல்லாமல், எந்த வேலையும் நடக்காது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு நிலையிலும், ஒருவருடைய விண்ணப்பம், காகிதம் நகர வேண்டுமானால், அதற்குரியவரை நேரில் சென்று பார்த்து கவனிக்க வேண்டியுள்ளது, இல்லையென்றால் அது அப்படியே கிடக்கும். புகார் செய்தால் அதோகதிதான். இந்நிலையில் தான், அவர்கள் மக்களை ஆட்டிப்படைக்கிறர்கள். இதைவிட மோசமான நிலை என்னவென்றால், அத்தகைய அரசு ஊழியத்திற்கு வருவதற்கே லட்சங்களைக் கொடுத்துவிட்டு வருகிறவர்கள், சில ஆண்டுகளில் அதை எடுத்துவிடலாம் என்ற மனப்பாங்குடன் வருகிறான்[5]. அந்நிலையில் அவன் / அவள் மனதில் எந்த இரக்கமும், பட்சதாமமும் வருவதில்லை[6], காசு கொடுத்தால்தான் வேலை என்று உறுதியாக இருக்கிறான்/ள்[7].

குற்றம்: குற்றம் என்பது உள்ள சட்டதிட்டங்களுக்குப் புறம்பாக செய்கின்ற காரியம். அவ்வாறான சட்டமீறல் தண்டனைக்குட் பட்டதாகிறது. சட்டதிட்டங்கள் ஒரு சமூகத்தில், நாட்டில் ஏற்படுத்தப் பட்டுள்ளவையாகும். இதைத்தவிர, தனிப்பட்ட மனிதனுக்கே தான் செய்யும் செயல் தவறு, குற்றமானது என்று அறிந்தே தெரிந்தேயிருக்கிறது.

குற்றம் செய்யக்கூடிய இயல்பு (Culpability): ஒருவன் குற்றம் செய்திருந்தால் மட்டும் போதாது, அதற்கான – அக்குற்றத்தை செய்யக் கூடிய – மனப்பாங்கு, இயல்பு, அவனுக்கு இருந்திருகிறதா என்பதையும் பார்க்க வேண்டும்.

குற்ற உள்நோக்குக் கொண்ட மனப்பாங்கு (criminal motive): குற்றம் செய்யக்கூடிய இயல்பு (Culpability), குற்றம் செய்யக்கூடிய இயல்புள்ள மனப்பாங்கு (culpability of mind and mens rea), குற்றம் செய்வது தவறு (Guilty guilty feelings) என்ற மனப்பாங்கை துடைத்து விடுதல், பிறகு அத்தகைய மனப்பாங்கைப் பெறுவது (Motive), பிறகு அது கொடூரமாகும் போது குற்ற உள்நோக்குக் கொண்ட மனப்பாங்கும் (criminal motive) உருவாகிறது.

குற்றம் செய்வதையே பழக்கமாக, வழக்கமாக, தொழிலாகக் கொண்டுள்ளத் தன்மையினர் (habitual offenders): ஒரு தவறைத் தெரிந்து முதன்முதலாக செய்யும் போதுள்ள தயக்கம், குற்ற உணர்வு, இர்ணடாவதாக செய்யும் போது குறைந்து விடுகிறது. மறுபடி-மறுபடி செய்யும் போது, அதைப் பற்ரிய எண்ணமே இல்லாம், மேன்மேலும் அத்தகைய தவறை / குற்றத்தை எப்படி திறம்பட செய்யலாம் என்ற நிலைக்கே, குற்றவாளிகள் சென்றுவிடுவார்கள். அவ்வாறு அத்தவறு / குற்றம் செய்வது பழக்கமாகி, வழக்கமாகி விடும்போது, மனம் இருகிவிடும்போது அதையே தொழிலாகக் கொண்டுள்ளத் தன்மையினராகி விடுகின்றனர். குடிகாரர்களைப் போல, போதை மருந்துக்கு அடிமையானவனைப் போல சிலர் குற்றஞ்செய்வதையே தொழிலாகக் (habitual offenders) கொண்டிருந்தால், அவ்வாறாக கொண்டுள்ளவர்களை ஒருவேளை மாற்றமுடியாமல் போகலாம். இருப்பினும், இன்றைய சூழ்நிலைகளில் சிறை சீர்திருத்தம், குற்றவாளிகளுக்கு ஆலோசனை, சீர்திருத்தம் முதலிய வழிகள் பின்பற்றப்படுகின்றன.

குற்றம் செய்யக்கூடிய இயல்புள்ள மனப்பாங்கு (culpability of mind and mens rea), குற்றம் செய்வது தவறு (Guilty guilty feelings) என்ற எண்ணங்கள்: குற்றத்தைச் செய்கின்றவனுக்கு நிச்சயமாக முதலில் குற்றம் என்று அறிந்தேயிருக்கிறான். இருப்பினும், செய்வதற்கு முன்பு தனது மனத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு, செய்வதற்கு தன்னை தயார் படுத்திக் கொள்கிறான்.  பிறகு அதை செய்வதற்கு நடைமுறை படுத்துவதற்கு இறங்குகிறான். இங்குதான் திட்டம் திட்டப்படுகிறது. மனத்தில் ஏற்கெனெவே அதை எப்படி வெற்றிகரமாக செய்து முடிக்கலாம் என்று முடிவு செய்து கொள்கிறான். அதில் சில எதிர்பாராத நிலைகளில் ஏற்படும் எதிர்ப்புகள், அவற்றை எதிர்கொள்ளும் விதம், மற்றும் அதை மீறுவதற்கு செய்ய வேண்டிய முடிவான காரியங்கள் முதலியவற்றையும் திட்டமாக்கிக் கொள்கிறான். தன்னால் ஒருவனே செய்யமுடியாது எனும்போது, கூட்டாளியை சேர்த்துக் கொள்கிறான். அபொழுது திட்டம் பெரியதாகிறது. குற்ற உணர்வை பொதுவாக மக்கள் (inferiority complex) என்று பொருள்கொண்டு வேறு விதமாக தமிழில் விளக்கம் அளிக்கிறார்கள்[8]. இது அத்தகைய குற்ற உணர்வு அல்ல, ஆனால், குற்றங்களை செய்ய ஊக்குவிக்கும் உணர்வு. உண்மையில் இது குற்றவாளிகளின் தனித்தன்மையை  அவர்கள் அத்தகைய குற்றங்கள் செய்யும் விதத்தை வெளிக்காட்டும். இங்கு தவறு செய்தல் வாழ்வில் மிக சகஜம் என்றெல்லாம் நியாயப்படுத்த முடியாது, ஏனெனில் அது குற்றச்செயலாகி விடுகிறது.

தமிழ்கத்தில் குற்றங்கள் நடக்கும் விகிதாச்சாரம் / கணக்கீடு: தமிழகத்தில் இப்படி எல்லா வகை குற்றங்களையும் சேர்த்து கணக்கிட்டால், கீழ் காணும் வகையில் மொத்தக் குற்றங்கள் வருகின்றன.

CRIME HEAD 2009 2008 2007 2006 2005
மொத்த கொலை-கொள்ளைகள்[9] 22,941 21,365 19,140 18,858 21,538
பெண்கள் மீதான குற்றங்கள்[10] 5,333 6,524 6,605
சொத்து முதலியவை 2,356 2,783 2,762
மொத்தம் 30,630 30,672 28,507

ஆக மொத்தம் சராசரியாக மொத்தமாக –

*         ஒரு வருடத்திற்கு 30,000 குற்றங்கள் நடக்கின்றன.

*         ஒரு மதத்திற்கு 2500 குற்றங்கள் நடக்கின்றன.

*         ஒரு நாளைக்கு 82-83 குற்றங்கள் நடக்கின்றன.

*         ஒரு மணிக்கு 3-4 குற்றங்கள் நடக்கின்றன.

*         15-20 நிமிடங்களில் ஒரு குற்றம் நடக்கிறது.

இதில் கோவில்களில் நடக்கின்ற திருட்டு செயல்கள், கொள்ளைகளை சேர்க்க வில்லை என்று தெரிகிறது. அதையும் ழ்ச்சேர்த்தாக், இக்கணக்கு இன்னும் அததகமாகும்.

குற்றங்கள் தமிழகத்தில் பெறுக நாத்திகம் காரணமா? குறிப்பாக கடவுள் எதிர்ப்பு, நாத்திக சித்தாந்தங்கள் தமிழர்களுடைய மனங்களை கயந்த 60-70 வருடங்களாக அடியோடு கெடுத்து விட்டது எனலாம். குற்றவிகிதங்கள் இதனுடன் சம்பந்தப்பட்டுள்ளதா என்பது ஆராய்ச்சிக்குரியது. ஆனால், அங்கும் – அதாவது கோவிலை இடிப்பவர்கள், விக்கிரங்கள் / சிலைகளை உடைப்பவர்கள், திருடுபவர்கள், கடத்துபவர்கள்…..அதே மாதிரியான குற்றங்களைத்தான் செய்கிறான். காவலாளியைக் கொல்கிறார்கள்; எளிதான இலக்குகளாக இருக்கும் பூசாரியைக் கொல்கிறார்கள்; அவர்களை பயமுறுத்த சமயம் வரும்போது பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்குகிறார்கள்; பெட்ரோல் குண்டு வீசி பயங்கரவாதத்தை செய்து காட்டுகிறார்கள்;

வேதபிரகாஷ்

© 05-11-2010


[1] J. P. Chaplin, Dictionary of Psychology, Dell Publisjing co., USA, 1968. Any standard book of pasychology or criminology could be referred to.

[2] S. T. Hollins, The Criminal tribes of India, Nidhi Book Centre, 2005, Reprint, 2005

Lectures on some criminal tribes of India and religious mendicants, Nagpur, 1909. Though, much is discussed about the “Abolition of Thuggery” in India, it was actually, the British killing of warrior type people of India who opposed the Britsh.

[3] Criminal Tribes‘ Act, 1871. Act XXVII

[4] 2G / 3G கற்றை, CWG, கார்கில் விதவைகளுக்கு கொடுக்கப்பட்ட நிலைத்தை அபகரித்தது முதலியன இன்றைச் கோடிக்கணக்கான ஊழல்கள். போஃபோர்ஸ், நீர்மூகி கப்பல் ….போன்றவை நேற்றைய ஊழல்கள். கோடிக்கணக்கான பணம் அதில் சம்பந்டப்பட்டிருந்தாலும், யார் மீதும் நடவரிக்கை எடுக்கப்படவில்லை, தண்டிக்கப்படவில்லை. ஆனால், மணம் போனது போனதுதான்!

[5] இன்று இந்து அறநிலையத் துறைக்கே அவ்வாறு வந்துள்ளார்கள், இன்னும் வரத்துடிக்ககறார்கள். அத்தகைய ஔரங்கசீப்புகள், மாலிக்காஃபூர்கள் கோவில்களில் ந்ழைந்து விட்டால் அவ்வளவு தான்!

[6] இறப்பு சான்றிதழுக்கே பணம் வாங்குகிறார்கள் என்றால், பார்த்துக் கொள்ளுங்களேன்!

[7] பெண்கள் ஆண்களைவிட தைரியமாக லஞ்சம் வாங்குவதாக தெரிகிறது. மேலும், அவர்கள் நேரிடையாக விஷயத்திற்கு வந்து விடுகிறார்களாம்.

[8] இணைதளத்தில் நண்பர் ஒருவர், இப்படி விளக்கியுள்ளார்: “குற்ற உணர்வு என்பது ஆத்மாவில் உண்டாகிய புற்றுநோய்.உங்களை எப்போதும் அடிமை நிலையில் வைத்திருக்க,உங்களுடைய தனித்தன்மையை  அழிக்க,இந்தக் குற்ற உணர்வை மதங்களெல்லாம் ஒரு ஆயுதமாக வைத்திருக்கின்றன.ஆகவே எதைக் குறித்தும் குற்ற உணர்வு கொள்ள வேண்டாம்.அப்படி ஏதாவது உங்களை அறியாமல் தவறு செய்து விட்டால்,அதற்காக வருந்த வேண்டாம்.மீண்டும் அதைச் செய்யாமல் விழிப்புணர்வுடன் இருந்தால் போதும்.வீணாக மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம்.தவறு செய்தல் வாழ்வில் மிக சகஜம்.நீங்கள் குற்ற உணர்வு பெற்றால்,உங்களிடம் ஒரு தாழ்வு மனப்பான்மை ஏற்படும்.இதனால் பல செயல்களில் நீங்கள் தோல்வியைத் தழுவ நேரிடும்.இதனால் தாழ்வு மனப்பான்மை இன்னும் அதிகமாகும்”.