Archive for the ‘பதஞ்சலி யோகா சமிதி’ Category

இறைச்சிக்காக மாடு வெட்டுபவர்களை தூக்கில் போட வேண்டும்: தமிழர்களின் நிலை!

ஏப்ரல் 1, 2011

இறைச்சிக்காக மாடு வெட்டுபவர்களை தூக்கில் போட வேண்டும்: தமிழர்களின் நிலை!

தமிழ்-தமிழ் என்று சொல்லிக் கொண்டு, தமிழ் கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு, பாரம்பரியம் எதுவும் தெரியாமல், அவற்றை இழிவு படுத்தி, கொஞ்சம் கொஞ்சமாக சீரழித்து, அழித்தொழித்து வரும் திராவிடக் கூட்டங்களின் போக்கு விசித்திரமாகவே இருந்து வந்துள்ளது. வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்[1] (1839-1898) பசுவதையை எதிர்த்து பல பாடல்களை எழுதியுள்ளார். திருவள்ளுவர் புலால் உண்ணாமையை வலியிருத்தியதுடன், ஆனினம் பெருக, போற்றியுள்ள குறள்கள் உள்ளன. செல்வம் என்பது மாடு என்றே அழைக்கப்பட்டது. பின்னால் வந்த தமிழர்கள் ஆனினம் பெருகச்வேண்டாம், எல்லா மாடுகளையும் கொன்றுக் குவிக்கலாம் என்று சொல்லவில்லை. இந்நிலையில், அந்த தண்டபாணி சுவாமிகளின் கௌமார மடம் உள்ள கோயம்புத்தூரில், “பெரியார் திராவிடர் கழக கட்சி” என்று சொல்லிக் கொள்பவர்கள் கலாட்டா செய்த்ள்ளனர்.

இறைச்சிக்காக மாடு வெட்டுபவர்களை தூக்கில் போட வேண்டும்: பதஞ்சலி யோகா சமிதி நடத்தி வருபவர் சுவாமி பாபா ராம்தேவ். இவரது யோகா நிகழ்ச்சி கோவை வ.உ.சி. மைதானத்தில் இன்று காலை நடைபெற்றது. இதில் சுவாமி பாபாராம் தேவ் கலந்து கொண்டார். இதற்கு பெரியார் திராவிடர் கழகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இறைச்சிக்காக மாடு வெட்டுபவர்களை தூக்கில் போட வேண்டும் என சொன்ன சுவாமி பாபாராம்தேவை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் பெரியார் திராவிடர் கழகத்தினர் அறிவித்து இருந்தனர்.

கோவை : பெரியார் தி.க.வினர் 71 பேர் கைது[2] : அதன்படி இன்று அதிகாலை வ.உ.சி. மைதானம் முன்பு பெரியார் திராவிடர் கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினர் ஆறுச்சாமி, மாவட்ட செயலாளர் சாஜித், மாவட்ட தலைவர் கோபால் ஆகியோர் தலைமையில் பெரியார் திராவிடர் கழகத்தினர் முற்றுகையில் ஈடுபட்டனர்.  இதனால் பரபரப்பு உருவானது.   போலீஸ் துணை கமிஷனர் உமா, உதவி கமிஷனர் முத்துராஜ், இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக 71 பேரை போலீசார் கைது செய்தனர். அதன் பிறகு பரபரப்பு அடங்கியது.

வேதபிரகாஷ்,

01-04-2011