Posts Tagged ‘ரகசியங்கள்’

சிவபிரகாசரின் நூல்களை எரித்த, தமிழை காட்டுமிராண்டி மொழி என்ற பெஸ்கியின், கிருத்துவரின் பிறந்த நாள் கொண்டாடும் தமிழ்நாடு!

நவம்பர் 8, 2019

சிவபிரகாசரின் நூல்களை எரித்த, தமிழை காட்டுமிராண்டி மொழி என்ற பெஸ்கியின், கிருத்துவரின் பிறந்த நாள் கொண்டாடும் தமிழ்நாடு!

beschi, italian suit-Subradipa Kavi

தமிழ் பண்டிதர்களை வேலைக்கு வைத்துக் கொண்டு, புத்தகங்களைத் தொகுத்தல்: ஜோஸப் கான்ஸ்டேன்ஸோ / கான்ஸ்டேனியஸ் பெஸ்கி [Joseph Constanzo (Constantius) Beschi (1680-1742)] என்ற கிருத்துவ பாதிரியார், இத்தாலி நாட்டில் பிறந்து தமிழகத்திற்கு மதம் பரப்ப வந்தான்[1]. அதற்காக, தூத்துக்குடிக்கு 1710ம் ஆண்டு வந்து பண்டிதர் சுப்ரதீப கவிராயரிடம் மதுரையில் தமிழ் கற்றான். அதாவது தமிழ் கற்றது, கிருத்துவ மதம் பரப்பவேயன்றி தமிழ்மீதான பற்று, காதலால் அல்ல. அவர் பெயரில் புழங்கும் பல நூல்கள் அவரால் எழுதப்பட்டதல்ல என்று கிருத்துவர்களே எடுத்துக் காட்டியுள்ளனர். அக்காலத்தில் வருமையில் வாடிய தமிழ் புலவர்களை வைத்து எழுதபட்டவைதாம். கருணாநிதி எப்படி ஒரு தமிழ்பள்ளி ஆசிரியரை வைத்து “கபாலீஸ்வரர் போற்றியில்” தம்மையும் சேர்த்து “போற்றிக் கொண்டாரோ” அந்த மாதிரி சமாசாரம் தான் அது! தஞ்சாவூரில் கிருத்துவ மதம் பரப்புதல் தடை செய்யப் பட்டிருந்ததால், இரவில் அங்கு சென்று கிருத்துவர்களைப் பார்த்து, பகலில் திரும்புவான்.

ziegenblag versus Beschi

கத்தோலிக்கபுரொடெஸ்டென்ட் சண்டைதகராறுகள்: 1706ல் டேனிஷ் கிருத்துவ மிஷினரி தமது சபையை ஆரம்பித்தது. ஜெர்மானிய புரொடெஸ்டென்ட் கிருத்துவர்களும் போட்டிக்கு வந்து விட்டனர். இவர்கள், ஜெசுவைட் பாதிரிகளை பலவிதங்களில் எதிர்த்தனர். ஏனெனில், அவர்கள் ஒற்றர்களாகவும் வேலை செய்தனர். மேலும், தொழிற்நுணுக்கங்கள், ரகசியங்கள், ஓலச்சுவடிகள் முதலியவற்றை ஐரோப்பாவிற்கு எடுத்துச் சென்றனர் மற்றும் அனுப்பி வைத்தனர். உலகம் முழுவதும், ஜெசுவைட்டுகளுக்கு எதிர்ப்பு கிளம்பியதால், கத்தோலிக்க போப்பே, இவர்களுக்கு தடை விதிக்க வேண்டியதாயிற்று. 1773ல் விதிக்கப் பட்ட தடை சொசைடி ஆப் ஜிசஸ் மட்டுமல்லாது, மதுரை மிஷனிக்கும் பொறுந்தும். 1834ல் தான், இத்தடை நீக்கப் பட்டது. தரங்கம்பாடியிலிருந்து, “திருச்சபை பேடகம்,” என்று ரோமில் நடக்கும் ஊழல்களை எடுத்துக் காட்டி, ஒரு குறும்புத்தகத்தை, புரொடெஸ்டென்ட் கிருத்துவர் வெளியிட்டனர்.

Catholic - Protestant fight

ஊழல், சச்சரவுகளில் ஈடுபட்டது: 1713ல் திருநெல்வேலியில் சொத்து அபகரிப்பு வழக்கில் மாட்டிக்கொண்டார். கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படும் நிலையில், (மேலிடத்திலிருந்து தயவு கிடைத்து) அவர் விடுவிக்கப்பட்டார்! 1714ல் கயத்தாரில் இவரது செயல்களால் கலவரம் வெடிக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் அங்கிருந்து விலகி செல்ல முடிவு செய்தார். மைலாப்பூர் பிஷப்புடன் 1727ல், ஓரியூருக்குச் சென்று, பிறகு எலாகுறிச்சிற்கு வந்தார். அங்கும் ஜனங்களைத் தூண்டிவிட்டு இந்த பாதிரி செய்த கொடுமைகள் அநேகம்! உடனே டேனிஸ் (Denmark) மிஷினரிகளுடன் தன்னுடைய இறையியல் சண்டயை ஆரம்பித்துவிட்டார். அதாவது கத்தோலிக்கர்களுக்கும் புரொடெஸ்டென்டுகளுக்கும் ஆகாது என்பதால் அத்தகைய சண்டைகள் அக்காலத்தில் அநேகம்! 1728ம் ஆண்டில் எழுதப்பட்டுள்ள ஒரு கடிதம் பாதிரி டொமினிக் மாட்ரியா [Fr Dominic Madeira] என்பவனின் ஆணைப்படி, இவர் அந்த ப்ரோடஸ்டன்ட் கிருத்துவர்களை எதிர்த்து, மறுத்து வேலை செய்யுமாறு பணித்ததாகக் காட்டுகிறது. அதுமட்டுமல்லாது, அவர்கள் நிறைய அளவில் புத்தகங்களை வெளியிடும்போது, கத்தோலிக்கர்களால் முடியவில்லையே என்று வருத்தப் பட்டதும் தெரிகிறது. 1931ல் ஒரு பசுவைத் துன்புறித்தியதற்காக, குற்றஞ்சாட்டப் படுகிறது. ஆனால், அரியலூர் இளவரசனை சந்தித்து, தப்பித்துக் கொள்கிறான்.

Tamilnadu celebrates the birth day of Beschi 2019

இனவெறி, யதேச்சதிகாரம் காட்டிக்கொண்டது: மேலே எடுத்துக் காட்டியபடி, பெஸ்கி மற்றும் இதர கிருத்துவர்களுக்கு போட்டியும், பொறாமையும் இருந்தன. குறிப்பாக புரொடெஸ்டென்ட் மிஷினரிகளுடம் அதிகமாகவே விரோதம் இருந்தது. அவர்களுக்கு எதிராக புத்தகங்களையும் வெளியிட்டான். அவர்களை சாத்தான்கள் என்று திட்டியதோடு, பேயோட்டுகிறேன் என்றெல்லாம் கூறிவந்தான்[2]. போதாகுறைக்கு, பெஸ்கி எதேச்சாதிகாரத்துடன் நடந்து கொண்டதால், பல விசயங்களில் மற்றவர்களுடன் விரோதம் ஏற்பட்டது. இவர் கூட கத்தோலிக்கத்தைப் போதித்து வந்த சவரி அடியான் என்பவனுக்கும், இவனுக்கும் விரோதம் ஏற்பட்டது. வெள்ளைக் காரனான பெஸ்கிற்கு, உள்ளூர்வாசியான கருப்பனான அவன் ஆசிரியனாக [catechist] இருப்பது பிடிக்கவில்லை. ஒருநிலையில் பெஸ்கி அவனை விலக்கி வைக்க தீர்மானித்தான். அதன்படியே தனது அதிகாரத்தை உபயோகப் படுத்தி, விலக்கினான். இதனால், அவன், கிருத்துவ விரோதி [apostate Christian] ஆனான். தமிழ் மொழியை கேவலமாகக் கருதியது பற்றி கீழே கொடுக்கப் பட்டுள்ளது.

Chanda Sahib, Beschi

சந்தா சாகிபு ராணுவத்தினரிடம் பாட்டிக் கொண்டது, தப்பியது: 1714ல் பெஸ்கி காமநாயக்கன் பட்டி என்ற ஊரில் இருந்தான். குருகுலபட்டியில் கிருத்துமஸ் கொண்டாட ஏற்பாடு செய்தான். டிசம்பர் 21, 1714 அன்று ஒரு கிருத்துவ எதிரி [apostate Christian] இவரை பழிதீர்க்க முடிவு செய்தான். பெஸ்கி ஏற்கெனவே “பேய் ஓட்டும் வேலையில்” ஈடுபட்டிருந்தான்[3]. அதனால், இவன் வடக்கபட்டியிலிருந்து, குருகுலப் பட்டிக்கு வந்து, தனக்கு பேய் வந்தது போலக் காட்டிக் கொண்டான். திடீரென்று தன்னை சட்டையால் அடித்துக் கொண்டு, ரத்தம் வருமாறு செய்து கொண்டான். அருகில், முகமதிய ராணுவம் முகாமிட்டிருந்தது. அவர்களைக் கண்டதும், தான் ஒரு துலுக்கன் போல, தலையில் குல்லா அணிந்து, “ஐயோ, ரே அல்லா, ரே அல்லா, என்னை காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்,” என்று அலறினான். உடனே, அந்த ராணுவப் படையின் தளபதி, இருவரையும் பிடித்து விசாரித்தான். அப்பொழுது பெஸ்கி, கிருத்துவம் தான் சிறந்த மதம் என்று உறுதியாக சொன்னான். இதனால், அவர்களை கைது செய்தான். பிறகு பெஸ்கி, தனது மேலதிகாரிகளுக்கு, அறிவித்து தப்பித்துக் கொண்டான்.

Sivaprakasar vs Beschi, Zieganbalg

ஜீஜன்பால்குபெஸ்கி மோதல்கள்: ஜீஜன்பால்கு மற்றும் இந்த பெஸ்கி இருவருக்கும், கத்தோலிக்க-புரொடெஸ்டென்ட் மோதல் அதிகமாகவே இருந்தது. ஜீஜன்பால்கு, சாதாரணமான பேச்சுத் தமிழ் உபயோகப் படுத்தி, புதிய ஆகமத்தை மொழிபெயர்த்தன். இதை பெஸ்கி கடுமையாக கிண்டலடித்து கலாட்டா செய்தான்.1728ல் “வேத விளக்கம்” என்ற புத்தகம் எழுதும் போது, “தரங்கம்பாடி பைபிள் சேற்றில் எறியப்பட்ட முத்து, அமிர்தத்தில் கலந்த நஞ்சு, அழகிய சித்தரத்தின் மீது வீசப் பட்ட கருப்பு மை,” என்றெல்லாம் சாடி வைதான்[4]. “லூத்தரினத்தியல்பு,” என்ற புத்தகத்தில், “லூத்தர்களின் தமிழைப் படித்தால், பைபிளின் முதல் வரியை வாசித்தால், கண்கள் எரிகின்றன, நாக்கு வரண்டு விடுகிறது, காதுப் பறைக் கிழிகிறது, திரும்பி சுற்றிப் பார்த்தால், சிரிப்பொலி தான் கேட்கிறது,” என்று நக்கலடித்தான்[5].

Beschi, saffronized

தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொன்னவர்களுக்கு அரசுசெலவில் விழா நடத்துவது: ஆக கிருத்துவர்கள் கிருத்துவத்தைப் பரப்ப, தமிழ் கற்றார்கள். பைபிளை மொழிபெயர்க்க தமிழ் கற்றார்கள். ஆனால், தமிழைப் பற்றி மட்டமான கருத்தைத் தான் கொண்டிருந்தனர். தமிழ் வார்த்தைகளை இலத்தீன் மொழியில் உச்சரிக்க முடியாது, தமிழ் வார்த்தைகள் கடுமையாக இருக்கின்றன, காட்டுமிராண்டி மொழி போலிருக்கிறது,…என்றெல்லாம் குறிப்பிட்டுள்ளனர்[6]. நாகரிகமற்ற, கலாச்சாரமற்ற, காட்டு மிராண்டித் தனமான, மனிதத் தன்மையற்ற என்றெல்லாம் விவரித்துள்ளனர்.[7], ஆனால், அவர்கள் தமிழ் வளர்த்தனர் என்றெல்லாம் சொல்லி, அரசு சார்பாக லட்சங்களில் விளம்பரம் கொடுத்து, இன்று பிறந்த / நினைவு நாள் கொண்டாடி வருவது கேவலமாக இருக்கிறது. மேலும், அவரவர் நாட்டுகளில், இவரை ஞாபகம் வைத்துக் கொண்டிருக்கிறார்களா, கொண்டாடுகிறார்களா என்று தெரியவில்லை. அந்த அளவிக்கு தமிழர்கள் அப்பாவிகளாக / ஒன்றும் தெரியாதவர்களாக இருக்கிறார்களா என்று தெரியவில்லை.

© வேதபிரகாஷ்

08-11-2019

ziegenblag versus Beschi-crusade

[1] தமிழ் வழக்கப் படி ராமன் வந்தான், போனான் என்பது போல எழுதப் படுகிறது.

[2] Sweetman, Will, A. Amaladass, and I. G. Županov. The cessation of the oracles: Authenticity and authority in Jesuit reports of possession in South India. in Intercultural encounter and the Jesuit mission in South Asia (16th–18th centuries) (2014): 156-176.

[3] LEC, vol. 9, xv–xvi, my translation. See also the similar statement in an editor’s footnote to Beschi’s account of the possession of an apostate (discussed below): “Nous avons cru devoir conserver ces récits de

possessions, et parce qu’ils sont rapportés avec des preuves qui ne permettent pas d’en douter, et parce qu’on en trouve beaucoup d’exemples dans l’Evangile et dans l’Histoire ecclésiastique.”

We thought we should keep these stories of possessions, and because they are reported with evidence that does not allow no doubt, and because we find many examples in the Gospel and in Ecclesiastical History. “

[4] Ziegenbalg also used the colloquial form of Tamil in his Tamil writings, notably his translation of the New Testament. For this he was ridiculed by his contemporary, the Jesuit Constant Joseph Beschi, whose own reputation as a Tamil stylist earned him the title Vīramāmuṉivar Cuvāmi. In a 1728 polemic work in Tamil entitled Veda Viakkam, Beschi describes the Tranquebar Bible as ‘like a gem thrown in the mud, like poison mixed with ambrosia, like black ink spilt on a beautifully drawn picture’.

Blackburn, Stuart. 2003. Print, Folklore, and Nationalism in Colonial South India. Delhi: Permanent Black.

[5] In another work, Lutterinattiyalpu, (‘The Essence of Lutheranism’), Beschi described the effect of reading the Lutherans’ Tamil: Already in reading the first line the reader’s eyes burn, his tongue dries up and his ears must burst; one looks around and bursts into loud laughter.

Sweetman, Will. The Prehistory of Orientalism: Colonialism and the textual basis for Bartholomäus Ziegenbalg’s account of HinduismNew Zealand Journal of Asian Studies 6.2 (2004): 12-38.

[6] Knowlton, Edgar C. & Xavier S. Thani Nayagam. 1966. Preface to the Tamil–Portuguese dictionary, 1679. In de Proença 1966[1679], pp. 11–20.

[7] They add that Tamil is “tã barbara q͂ alguas dições cõ nenhũs carateres latinos se podẽ pronũciar” [‘so –?– that some words cannot be pronounced with Latin letters’]. In fact, it was the opposite – the Latin script was inadequate to represent the sounds of Tamil. Similarly, in his Tamil–Portuguese dictionary, Antão de Proença (1679) describes Tamil letters as “tam cõtrarias, e barbaras a nosta pronuçia”, which Edgar Knowlton and Xavier Thani Nayagam (1966:14) translate as ‘so contrary and barbarous to our pronunciation’; de Proença also writes of “a uariedade, é barbaria de letra dos tamuis” (‘the variety and barbarity of the letters of the Tamilians’ [K.&T.N., ibid.:15]). From this, developed the senses, ‘outlandish, wild’, later ‘uncivilised, uncultured’, and generally ‘savage, inhuman’