Posts Tagged ‘அரவவாடு’

கொலுடிக்கு வாழ்த்து சொல்லும் அரவவாடு!

மார்ச் 16, 2010

கொலுடிக்கு வாழ்த்து சொல்லும் அரவவாடு!

வேதபிரகாஷ்

தமிழன் தெலுங்கனை தூற்றினான் அன்று கொலுடி என்று!

இன்றோ உகாதிக்கு – தெலுங்குப் புத்தாண்டுக்கு வாழ்த்துச் சொல்கிறான்

தெலுங்கு என்பதனை தலைகீழாக்கிப் புரட்டியதுதான் கொலுடி!!

பாவம் தெலுங்கன், புரியவில்லை அவனுக்கு முதலில், ஆனால்…………………….1

தமிழன் சொல்லிக்கொண்டேயிருந்தான், “அதோ பார்டா கொலுடி போறான்”!

புரிந்தவுடன் தான் தெலுங்கனுக்கு தெரிந்தது தமிழனின் வன்மம்

“அரவவாடு” என்றான் பதிலுக்கு அதாவது தலைக்கீழாகச் செய்பவன் என்று!

தமிழனோ இன்னும் வேகமாக இரைந்தான் “கொலுடி, கொலுடி” என்று…………..2

தெலுங்கனோ சொன்னான் அமைதியாக, “அதான்டா அரவவாடு” என்று!

அதாவது “அரவவாடு” என்றால் அரவநாட்டைச் சேர்ந்தவன் – துலுக்கன்!

துலுக்கன் தான் எல்லாவற்றையும் தலைகீழாகச் செய்வான்

அழுதால் சிரிப்பான், சிரித்தால் அழுவான் என்றெல்லாம் சொல்வார்கள்……………3

இன்றோ உகாதிக்கு – தெலுங்குப் புத்தாண்டுக்கு வாழ்த்துச் சொல்கிறான்

உகாதி என்றால் “யுகத்தின் ஆதி”, அதாவது இந்த கலியுகத்தின் ஆதி.

கலியுகத்தின் ஆதியிலிருந்து நாங்கள் இருந்து காலக்கணக்கீடு செய்கிறோம்

என்று தனது விஞ்ஞானத்தைப் பறைச்சாட்டுகிறான் பெருமையாக!………………….4

ஆனால் தமிழனோ தனது பிறந்த ஆண்டை புத்தாண்டாகப் புரட்டிவிட்டான்!

இங்கும் தலைகீழ் வேலைதான், புரட்டல்தான், அடிக்கடி சொல்ல்லிக்கொள்வது

கல்தோன்றி மண்தோன்றா காலத்தேத் தோன்றிய மூத்தக்குடி என்று, ஆனால்

எப்படி முடியும் அவ்வாறு என்று கேட்க எந்த தமிழனுக்கும் துணிவில்லை……….5

அறுபது ஆண்டுக் கணக்கீட்டை அறியாமல் கொச்சைப் படுத்தினான்

விஞ்ஞானத்தை அறியாமால் ஆபாசம் கலந்து விரசப்படுத்தி பேசினான்

வானியலை சோதிடம் என்று தமிழனின் புத்தாண்டையேக் குழப்பி விட்டான்

ஆனால் அவன் இன்று தெலுங்கனுக்குப் புத்தாண்டு வாழ்த்து சொல்கிறான்!………6

நாங்கள் எங்களது 5112வது புத்தாண்டை கொண்டாடுகிறோம் என்கிறார்கள்

அறியாத, புரியாத திராவிட வானியல்-கணக்கீட்டுப் புரட்டர்களோ

சித்திரையை தையாக்கி தைய்யா தாக்கா என்று ஆடுகிறான், ஆனால்

அந்த அம்பலவாணன் காலத்தை அளந்து கொண்டே சிரிக்கிறான்…………………….7

அவனையும் இவன் விடவில்லை, உண்டியலை எண்ண ஆரம்பித்துவிட்டான்!

திருவள்ளுவர் ஆண்டு என்று சொல்லி 2032 ஆகின்றன என்கிறான் ஆனால்,

எத்தனையாவது புத்தாண்டைக் கொண்டாடுகிறேன் என்று சொல்வதில்லையே?

தமிழன் முன்னோடி என்றால் கணக்காக எண்ணக்கூடவா தெரியவில்லை?………..8

© வேதபிரகாஷ்

16-03-2009