Posts Tagged ‘இரட்டைவேடம்’

பெரியார் சிலைக்கு மாலை போட்டால் “அர்ச்சகர்” வேலை கிடைத்துவிடுமா? (1)

ஒக்ரோபர் 24, 2010

பெரியார் சிலைக்கு மாலை போட்டால் “அர்ச்சகர்” வேலை கிடைத்துவிடுமா? (1)

கபட நாடகம் ஆடும் திராவிட சித்தாந்திகள், மற்றவர்கள்: திராவிட சித்தாந்தம் பேசுபவர்கள், சாதியில்லை என்று உரைப்பவர்கள், இரட்டைவேடம், இரட்டைப் பேச்சு, இரட்டை நாடகம் போடுவதால் தான் பிரச்சினையே வருகிறது. கோவிலை இடித்துக் கொண்டு, சிலைகளை திருடிக்கொண்டு, கோவில் நிலங்களை அபகரித்துக் கொண்டு ……………………இத்தகைய ஆத்திக-விரோத, இந்து-விரோத காரியங்களை செய்து வருவதால் தான், அவர்கள் சட்டரீதியாக பல பிரிவுகளை அவமதிக்கிறார்கள், மீறுகிறார்கள். சொல்லப்போனால், பல சட்டங்களை மதிப்பதேயில்லை. மேலும், இந்துக்கள் அல்லாத கிருத்துவர்-முஸ்லீம்களுடன் சேர்ந்து கொண்டும் அத்தகைய காரியங்களை செய்து வருகின்றனர். இந்நிலையில்தான், இவர்கள் “அனைவரும் அர்ச்சகராகலாம்” என்ற அரசியலில் இறங்கினர். ஆகம சாத்திர முறைகளைக் கொஞ்சம் கூட மதிக்காமல், அவசர-அவசரமாக மாநில அளவில் சட்டத்தை இயற்றி பிரச்சினையை கிளப்பினார்கள். அவர்களுக்கு நன்றாகவே தெரியும், சட்டரீதியாக அவர்கள் செய்வது வெறும் அரசியல்தான் என்பது.

கடவுளே இல்லை எனும்போது குல்லா போட்டு கஞ்சி குடிப்பதேன், இந்துக்களை தூஷிப்பதேன்: இதற்கு எந்த பகுத்தறிவுவாதியும் பதில் சொல்ல மாட்டான். குல்லா போடாமல் கஞ்சி குடித்தால் அல்லா ஏற்றுக் கொள்ள மாட்டாரா? “உதயம் முதல் அஸ்தமனம் வரை” என்ற நோன்பை கடைப்பிடிக்காமல், இப்படி போலிகளை, வைத்துக் கொண்டு இஃபதர் விழா கொண்டாடுவதை அல்லா ஏற்றுக் கொள்வாரா?  ஆக இந்த போலித்தனத்தை, ஏமாற்றுவேலையை இவர்கள் முதலில் நிறுத்தவேண்டும். மத சடங்குகள், சம்பிரதாயங்கள், ………உள்ளன என்றால் அதை அந்தந்த நம்பிக்கையாளர் கடைப்பிடிக்க வேண்டியுள்ளது. அதை மற்ற நம்பிக்கையாளர் அல்லது நம்பிக்கயில்லாதவர்கள் கேட்க முடியாது. நாத்திகர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் கூட பல சம்பிரதாயங்களைக் கடைப்பிடித்துதான் வருகிறார்கள்.

நாத்திக அரசியல் மயமாக்கப் பட்ட அர்ச்சகர் கல்வி,  பணி,  வழக்குகள்! இதை நான் ஏற்கெனெவே, “நாத்திக அரசியல் மயமாக்கப் பட்ட அர்ச்சகர் கல்வி, பணி, வழக்குகள்!” என்ற பதிவில் எடுத்துக் காட்டியுள்ளேன்[1]. திருப்பதிதிருமலை தேவஸ்தானம், பல ஆண்டுகளாக எஸ்.சி, எஸ்.டி முதலிய எல்லொருக்கும் அர்ச்சகர் பயிற்சி அளித்து பூசாரிகள் ஆக்கி வருகிறது. அங்கு எந்தபிரச்சினையும் இல்லை. ஆனால், தமிழகத்தில், தேவையில்லாமல் நாத்திக ஆட்சியாளர்கள் தலையிட்டுக் குழப்பி வருகிறார்கள். போதாகுறைக்கு கிருத்துவர்கள், முஸ்லீம்கள், கம்யூனிஸ்டுகள் மற்ற கடவுள் நம்பிக்கையில்லாத கோஷ்டிகள், எல்லாவற்றிற்கும் மேலாக இந்துவிரோத கயவர் பட்டாளங்கள், இதில் நுழைந்து கெடுக்கப் பார்க்கின்றனர். இன்னும் சொல்லப் போனால், “சான்றிதழ்பெற்றுவிட்டேன் என்ற போர்வையில், அத்தகைய இந்துவிரோதிகளும் உள்ளே நுழையப் பார்க்கின்றனர். இதனால்தான், மற்றவர்கள் எதிர்க்கின்றனர்.

 

சட்டவிரோதமாக படிக்கும் எந்த படிப்பும் செல்லுபடி ஆவதில்லை: “அர்ச்சகர்” படிப்பு இல்லை, மருத்துவர் படிப்பே, அங்கீகாரம் இல்லையென்றால், படிப்பது இல்லை, அல்லது படித்ததும் வீணாகிறது. அந்நிலை தான் இங்குள்ளது. சட்டவிரோதமாக நாத்திக அரசு அமூல் படுத்தி விளம்பரம் தேடியுள்ளது. இதனால், மற்றது போல 3.5% இட-ஒதுக்கீடு செய்தோம் என்றுதான் பேச நன்றாக இருக்குமே தவிர ஏன் கிருத்துவர்கள் மறுத்தார்கள், முஸ்லீம்கள் எதிர்த்தார்கள் என்றெல்லாம் நினைக்கப்போவதில்லை. எனவே, “அர்ச்சகர்” படிப்பு படித்து வேலையில்லாமல் இருக்கிறோம் என்பதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. இதற்கு பெரியார் சிலைக்கு மாலை போட்டால் “அர்ச்சகர்” வேலை கிடைத்துவிடுமா?

 

M. B. B. S  படித்தவர்கள் டாக்டராகி விடுகிறார்களா? அதே போல B.E படித்தவர்கள் இஞ்சினியர், B.L படித்தவர்கள் வக்கீல் ஆவதில்லை. இதுதான் நிதர்சனம், உண்மையான நிலைமை. “இன்ஜினீயரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புகளை விட்டுவிட்டு வந்தவர்கள் எனப் பல வகையினர் உண்டு”, என்று வாதிடுவது பெருமையாகவோ அல்லது அவர்களது திறமையினை காட்டுவதாகவோ இல்லை. அந்தபடிப்பில் இல்லாதது “அர்ச்சகர்” படிப்பில் வரும் என்ற நோக்கத்தில் வந்ததாக தெரியவில்லை. இதே ;போலத்தான் “டாஸ்மாக்” வேலைக்கும் வந்துள்ளார்கள். பிறகு, ஒழுக்கத்தில் எல்லோருமே ஒன்றாகி விடுவார்களா? “எங்கள் ஒழுக்கத்தைச் சோதித்து, சைவ, வைணவ பெரியோர்கள் தீட்சை வழங்கி இருக்கிறார்கள்’ என்றெல்லாம் சொல்லவேண்டிய அவசியமே இல்லை. “டாஸ்மாக்” வேலைக்கும் அவ்வாறு சைவ, வைணவ பெரியோர்கள் இல்லை, மற்றவர்கள் தீட்சை வழங்குவார்களா?

“டாஸ்மாக்” வேலைக்கு என்ன  படிப்பு வேண்டும்? “டாஸ்மாக்” வேலைக்கு இது மாதிரி படிப்பு உள்ளதா, பயிற்சி கொடுத்து “சான்றிதழ்” வழங்குகிறார்களா? “இவன் நன்றாக ஊற்றிக் கொடுக்கிறான், மது, குடி, போதை பற்றியெல்லாம் நன்றாக தெரியும், பற்பல குடிகாரர்களுக்கு ஊற்றிக் கொடுத்த அனுபம் உண்டு…………”, என்றெல்லாம் யாராவது பெருமையாக சொல்ல்லிக் கொள்வார்களா? “டாஸ்மாக்” வேலை ஏன் எல்லோருக்கும் கிடைப்பதில்லை, அதன் மர்மம் அல்லது தீட்டு பற்றி என் யாரும் கேட்பதில்லை? ஆக, இந்த விஷயங்களையெல்லாம் யோசிக்கவேண்டும்.

 

வேதபிரகாஷ்

24-10-2010


[1] வேதபிரகாஷ், நாத்திகஅரசியல்மயமாக்கப்பட்டஅர்ச்சகர்கல்வி, பணி, வழக்குகள்!, http://atheismtemples.wordpress.com/2010/05/13/118/